குணமாக்கும் பணி ஞாயிறு.Healing Ministry Sunday. மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத் தல்.(247) Loving and suffering together.ஏசாயா 42:1-9. திருப் பாடல்:Psalms. 103: 1-14.யாக்கோபு 5: 13-18.மத்தேயு 5:35-38.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத்தல். இயேசு கிறிஸ்துவின் குணப்ப டுத்தும் ஊழியம், அவரது மூன்ற ரை ஆண்டுகாலப் பூமிக்குரிய சேவையின் முக்கிய அங்கமாகு ம். கலிலேயா முழுவதும், அவர் நோயுற்றவர்கள், பேய்பிடித்த வர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிர க்கணக்கானோரை அற்புதமாக குணமாக்கினார். இந்த குணப் படுத்துதல் என்பது உடல் ரீதியா ன சுகத்தை மட்டுமல்லாமல், ஆன்மீகம், உணர்வு மற்றும் உறவுமுறை சார்ந்த முழுமை யான மீட்பையும் உள்ளடக்கியது. இது தேவனுடைய அரசு வந்தி ருப்பதை அறிவிக்கும் அடையா ளமாக இருந்தது. .நோய் வாய்ப் பட்டவர்கள் மீது அவர் கொண்டி ருந்த இரக்கமே ( Compassion ) பல அற்புதங்களுக்கு காரண மாக அமைந்தது.இதனால்தான் அவர் ஓய்வு நாளில் கூட யூத சட்டத்தை மீறி மக்களை குணப் படுத்தினார் மனித நேயமே முக்கியம் என்பதை தெளிவுபடு த்தினார் ஒய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா?என கேள்வி கேட்டார். இயேசு ந...