லெந்து முதல் வெள்ளி. The first Friday on Lent ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். (250) The Lord who comforts. ஏசாயா 40:1-11.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால முதல் வெள்ளியின் தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, "ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். " இறைவாக்கினர் ஏசாயா, இஸ்ரேல் மக்கள் பாபி லோனிய சிறை இருப்பிற்கு பிறகு எருசலேமில் எப்படி இருப்பார்கள் என்பதை குறித்து ஒரு நம்பிக்கையின் வார்த்தை யாக இப்பகுதி அமைகிறது.
கர்த்தர் சகலவிதமான ஆறுத லின் தேவனாய், அவர் துன்பத்தி ல் இருப்போரைத் தேற்றி, நொறு ங்குண்ட இருதயங்களுக்கு சமீபமாயிருந்து, தாயைப் போல ஆறுதல் அளிப்பவர். "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" (ஏசாயா 51:12,) என்று கூறும் அவர், நம் கண்ணீ ரைத் துடைத்து, கவலைகளிலி ருந்து விடுவித்து, அமைதியை யும், தைரியத்தையும் அருளுப வர்.
1.ஆறுதல் அளிக்கும் ஆண்ட வர் .தொடக்கநூல் 16, 21; அதிகாரங்கள்.
நண்பர்களே நம் ஆண்டவர் துன்பத்தில் ஆறுதல் அளிக்கி ன்ற தேவன் தொடக்கநூல் 16,21அதிகாரங்களில் ஆபிரகாம் மனைவி சாராளின் கொடுமை யால் தப்பி ஓடிய ஆகாரைத் பாலைவனத்தில் கைவிடப்பட்டு, தன் மகன் இறப்பதைப் பார்த்து தண்ணீர் தேடிச் சென்றவளின், அங்கலாய்ப்பைக் கடவுள் கேட்டு, ஆகாரின் வேதனையான குரலையும்,குழந்தை இசுமவேலின் அழுகுரலையும் பார்த்து பதிலளித்தார். , அவள் வம்சத் தைப் பெருக்குவதாக வாக்கு றுதி அளித்து தேவன் அவளை தேற்றினார்.
இதனால், ஆகார், ஆண்டவரை "என்னைக்காண்கிற தேவன்" (El Roi) எல்ரோயி) என்கிறாள்.(தொடக்கநூல் 16:13)
இதன் மூலம் கடவுள் நம்மை காண்கிற தேவன் என்றும், நம் கண்ணீரைத் துடைக்கின்ற தேவன் என்றும், நம்மை ஆறுதல் படுத்தும் தேவன் என்றும், மரண பயத்திலிருந்து விடுவிக்கிறவர்.
எதிர்காலத்தை தருகிறவர், நம்மை கைவிடாத தேவன் என்பதை புரிந்து கொள்கிறோம்
ஆகார், சாராளின் அடிமைப் பெண்ணாக இருந்தாலும், தேவன் அவளை ஒருபோதும் கைவிடாமல் அவளது துக்க கால த்தில் தேற்றினார்.
ஆம், அன்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் 2 கொரிந்தியர் 1:3-4-ன்படி, அவர் எல்லாவித மான கஷ்டங்களிலும் நமக்கு ஆறுதல் தந்து, பிறரைத் தேற்ற நமக்கு பலன் தருகிறார். நாம் ஒவ்வொருவரும் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்ற மக்களை தேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. நமக்கு கொடுக் கப்பட்டிருக்கும் தூய ஆவியா னவர்க்கு மறுபெயர் தேற்றரவாளன் ,(Comforter) எனவே நாம் ஒருவரை ஒருவர் இக்கட்டான நாட்களில், நேரங் களில் தேற்றுவோமாக.
யோவான் 14:16ல்," நான் பிதா வை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக் குச் சத்திய ஆவியாகிய வேறொ ரு தேற்றரவாளனை அவர் உங்க ளுக்குத் தந்தருளுவார்.என உறுதியளிக்கிறார்.
.ஏசாயா 66:13-ல், "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல, நான் உங்களைத் தேற்றுவேன்" என்று கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார்.
2.மீட்ப்பளிக்கும் ஆண்டவர்.
ஏசாயா 40:1-11.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர் ஏசாயா, இஸ்ரேல் மக்கள் பாபிலோனிய சிறை இருப்பிற்கு பிறகு எருச லேமில் எப்படி இருப்பார்கள் என்பதை குறித்து ஒரு மீட்பின் வார்த்தையாக இப்பகுதி அமை கிறது.என் ஜனத்தை ஆற்றுங் கள், தேற்றுங்கள்" என்று தேவன் கூறுகிறார். தேவன் தம் ஜனங்களை மென்மையாகத் தேற்றி, அவர்களின் அக்கிரமம் நீங்கியது என்றும், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்றும், அவர்களின் பாவம் மன்னிக்கப்பட்டது என்று அறிவி க்கச் சொல்கிறார். வனாந்த ரத்தில் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணவும், பள்ளங் களை உயர்த்தி, மலைகளைத் தாழ்த்தி, கரடுமுரடானவற்றைச் சமமாக்கவும் கட்டளையிடப்ப டுகிறது.,மேய்ப்பனைப் போல தம்மக்களைச் சுமந்து, தாங்கும் தேவனின் வல்லமையையும் அன்பையும் இது சித்தரிக்கிறது.
மனிதர்கள் புல்லைப் போன்ற வர்கள், அவர்களின் அழகு பூவைப் போல வாடிவிடும். ஆனால், நம்முடைய தேவனுடை ய வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.சீயோனுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. கர்த்தராகிய தேவன் பலத்தோடு வந்து, ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, மடியிலே சுமந்து, மேய்ப்பனைப் போலத் தமது மந்தையை மெதுவாய் வழிநடத்துவார். இந்தப்பகுதி, தீர்க்கதரிசனத்தின் மூலம் இஸ்ரவேலரின் சிறையிருப்பு முடிந்து, கடவுளின் மீட்பு வரும் என்ற நம்பிக்கையைத் தருகிற து. இது, திருமுழுக்கு யோவான் ஊழியத்தாலும், இயேசு கிறிஸ் துவின் வருகையாலும் நிறை வேறியது. லெந்து காலத்தில்,
பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்பி தேவனிடத்திற்குத் திரும்புவது முதன்மையான வழியாகும். கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்பது நம் வாழ்வில் தேவன் செயல்படுவ தைத் தடுக்கும் கெட்ட பழக்கங் கள், தடைகள் மற்றும் கசப்புக ளை நீக்குவதாகும்.
3. இயேசு கிறிஸ்துவே மீட்பர்.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்
களே!
கடவுளால் படைக்கப்பட்ட மானிடர், உலகப் பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித் து பாவம் செய்தனர். அதன் விளைவாக, மானிடருக்கு மீட்பு தேவைப்பட்டது. கடவுள் மனிதகுலம் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் மீட்புத் திட்டம் உருவானது.எனவே உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன."
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை இஸ்ரயேலரின் குலமுதுவராகிய ஆபிரகாம் வழியாக செயல்ப டுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே உலக மீட்பர் தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது தேவதூதர் வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, "உலகின்அனைத்து இனத்தவரும் உன் வழிமரபி ன் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார். அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய இறைவாக்கினர் பலரும், மீட்பரைப் பற்றி முன்ன றிவித்து கடவுளின் வருகைக் காக உலகைத் தயார் செய்தனர்.
இழந்து போனதைத் தேடி மீட்க வே மானிடமகன் வந்திருக்கி றார்.""உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பி னார்."
"நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்."என தான் மீட்பராக வந்ததை உறுதிப்படுத் துவதை நாம் காண்கிறோம்.
இந்த லெந்து காலம் கடவுள் நம்மை மீட்டது போல நம்முடைய செயல்களும் மற்றவர்களுக்கு மீட்பு தரும் செயலாக இருக்க கடவுள் நமக்கு அருள் புரிவா ராக, ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
from sin and to freedom from captivity.[1]
Christ the Redeemer statue in Rio de Janeiro

Comments
Post a Comment