Lent: The second Friday. கடவுளை அறிவோம் - தியானம் 2. நீதி வழங்கும் ஆண்டவர். (252) Let us know God - the Lord of justice. ஏசாயா: 42:1-9
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இரண்டாம் வெள்ளிக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "கடவுளை அறி வோம் - நீதி வழங்கும் ஆண்ட வர்."Let us know God - the Lord of justice.
அன்பர்களே! கடவுளை அறிவோ ம் என்பது முதலில் கடவுளை உள்ளார்ந்த உணர்வோடு துதி க்கும்போதும், இறைவேண்டல் செய்யும் போதும், திருமறையை தியானிக்கும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை, திருத்தூதர்கள் தோமாவு
ம், பிலிப்பும் ஆண்டவரிடம் ,நீர்
எங்கே போகிறிர் என்றே எங்க ளுக்குத் தெரியாது என்று தோமா கூற, பிலிப்பு, "ஆண்டவ ரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என் றார்.நீங்கள் என்னை அறிந்திரு ந்தால் என் தந்தையையும் அறிந் திருப்பீர்கள். (யோவான் 14:9) என்பது இயேசு கிறிஸ்து, பிலிப்புவிடம் கூறிய வார்த்தை யாகும். தேவனைக் காண வேண்டும் என்று கேட்ட சீடருக்கு, தன்னை (இயேசுவை) பார்ப்பது பிதாவாகிய தேவனைப் பார்ப் பதற்குச் சமம் என்று கூறி, இயே சுவும் பிதாவும் ஒன்றே என்ப தையும், பிதாவின் அன்பு மற்றும் குணநலன்களைத் தான்முழுமை யாக வெளிப்படுத்துவதையும் இது உணர்த்துகிறது.
ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையி ல் கடவுளை அறிந்து கொள்வதே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
திருத்தூதர் பவுல், ஆனால் எனக் கு ஆதாயமான இவை அனைத் தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
உண்மையில், என்னைப் பொறு த்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற் றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பா கக் கருதுகிறேன். அவர் பொரு ட்டு நான் அனைத்தையும் இழந் து விட்டேன். கிறிஸ்துவை ஆதா யமாக்கிக்கொள்ள எல்லாவற் றையும் குப்பையாகக் கருகிறே ன் என்கிறார்.
அன்பர்களே! நாம் கடவுளை அறிவதற்கு முன்பாக நாம் யார் என்பதை அறிந்து கொள்வது நலமாக இருக்கும்
"உன்னை நீ அறிந்துகொள்" know thyself என்பது ஒரு பண் டைய கிரேக்க பழமொழி, அது அன்று போலவே இன்றும் பொரு த்தமானது. நமது வேகமான உல கில், நம்மில் பெரும்பாலோருக் கு நம் எண்ணங்களைச் செயல் படுத்தவும், நம் உணர்ச்சிகளை த் தொடர்பு கொள்ளவும் நேரமில் லை.
உன்னை அறிவதே ஞானத்தி ன் ஆரம்பம்" என்று சிறந்ததத்து வஞானி சாக்ரடீஸ் தானே கூறி னார்.
அறிவு என்பது சக்தி. நாம் யார் என்று அறிவது பலம். நம்மை அறிவது நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் தருகி றது.கவியரசு கண்ணதாசன் உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போரா டலாம் இப்பாடல் மனிதன் தன்னைத்தானே உணர்ந்து, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண் டும் என்ற தத்துவத்தை உணர்த் துகிறது. நம்மை அறிகின்ற போது தான் நாம் கடவுளை அறிய முடியும். நாம் நம்மையே பெருமை பாராட்டுக் கூடியதுக்கு ஒன்றுமே இல்லை நாம் மண் ணாய் இருக்கிறோம்.
"மனிதனே! நீ மண்ணாக இருக் கின்றாய், மண்ணுக்கே திரும் புவாய்" என்ற வசனம் தொடக் கநூல் 3:19-ல் காணப்படுகிறது. ஆதாமை கர்த்தர் மண்ணிலி ருந்து உருவாக்கி, அவர் செய்த கீழ்ப்படியாமையினால், மீண்டும் மண்ணிற்கே திரும்புவார் என்று எச்சரிக்கும் சூழலில் இந்த வார் த்தைகள் சொல்லப்பட்டுள்ளன. மனித வாழ்வின் நிலையற்ற தன்மையையும், உடலின் அழி வையும் உணர்த்துகிறது, மேலும் இது தவக்காலத்தில் (Lent days) கடவுளிடத்தில் நெருங்கி வர
உதவுகிறது.
1.நீதி வழங்கும் ஆண்டவர்:
Lord of justice.
அன்பர்களே நம் கடவுள் நீதி வழங்கும் ஆண்டவர் பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்களை முதன் முதலில், நீதித் தலைவர் கள் (Judges) மூலமாக, வழிநடத் தினார். நீதித்தலைவர்கள்' (Book of Judges) காலத்தில், எதிரிகளிட மிருந்து மக்களைக் காத்த வலி மைமிக்க தலைவர்கள்/நீதிபதி கள் இறைவனால் எழுப்பப்ப ட்டனர்.
நீதிவழங்கும் ஆண்டவர் விவிலி யத்தில் அநீதிக்கு எதிராகவும், மக்களுக்கு நேர்மையான தீர்ப்பு களை வழங்கும் இறையாற்ற லைக் குறிக்கும் ஒரு கருத்தா கும். நீதியை நிலைநாட்டும் கடவுள், அநீதிக்கு எதிராகச் செய ல்படுபவர்.முதலில், இஸ்ரேல் மக்களுக்கு நீதி அரசர்களை நிய மித்த ஆண்டவர் இதோ உலகத் தின் இறுதி நாளிலே நீதி அரச ராய் இந்த உலகில் வர இருக் கின்றார். நீதியாய் நமக்கு ஏற்ற பலனை அவர் தர வருகின்றா ர்.எனவே,திருப்பாடல்களில், "நீதி வழங்கும் ஆண்டவரை, முழு இத யத் தோடு புகழ்வேன்" (திருப் பாடல் 9:1-2) என இறைவன் நீதி யின் கடவுளாகக் கொண்டாடப் படுகிறார்.
2.நீதியரசர் சாலமோன்: 1.அரசர்கள் 3:16-28).
அன்பு நண்பர்களே! சாலமோன் மன்னன் மொத்தம்3,000. நீதி மொழிகள், 1,005.பாடல்களை எழுதியவர். இவரிடம் ஒரு வழக் கு வந்தது ஒரே வீட்டில் வாழ்ந்த இரண்டு பெண்கள், தலா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். ஒரு குழந்தை இறந்துவிட, மீத முள்ள உயிருள்ள குழந்தைக்கு இருவரும் உரிமை கொண்டாடி னர்.இரண்டு தாய்மார்கள் ஒரே குழந்தைக்கு உரிமை கோரிய வழக்கில், குழந்தையை வாளால் இரண்டாகப் பிளந்து தலா பாதி யாகக் கொடுக்க உத்தரவிட்டார். உண்மையான தாய் தன் குழந் தை பிழைக்க வேண்டும் என்பத ற்காகப் பங்கிடுவதைத் தடுத் தார், போலித் தாய் ஒப்புக் கொண்டார். இக்கருணை உள் ளம் மூலம் உண்மைத் தாயைக் கண்டறிந்து சாலமோன் நீதி வழங்கினார். நீதி அரசன் சால மோனை போல தமிழகத்திலும் ஒரு நீதி அரசன் இருந்தான் அவன் மனுநீதிச் சோழன்,
அன்பர்களே! நீதி தவறா ஆட்சி செய்தவன் மனுநீதிச் சோழன். இவன் ஆட்சி காலத்தில், நண்பன், எதிரி என எவர் மீதும் பாரபட்சம் காட்டாமல் சமமான நீதியை நிலைநாட்டினார்.
நீதி கோருவோர் அடிப்பதற்கா கத் தன் அரண்மனை வாயிலில் ஒரு ஆராய்ச்சி மணியை (ஆராய்ச்சி மணி) தொங்க விட்டி ருந்தார்.திருவாரூரைத் தலைநக ராகக் கொண்டு ஆட்சி செய்த நீதியும் நேர்மையும் மிக்க சோழ மன்னன். தன் மகனின் தேர்க்கா லில் கன்று இறந்ததற்காக, கன்றை இழந்த பசுவிற்கு நீதி வேண்டி, தன் ஒரே மகன் வீதிவிடங்கனைத் தேர்க்கா லில் இட்டுக் கொன்றது, நீதிக் காகத் தன் உயிரையும், உறவை யும் தியாகம் செய்யும் உயர்ந்த பண்பைக்காட்டுகிறது. மனுநீதி” நிலைநாட்டிய இவர் வரலாற் றுச் சிறப்புமிக்கவர். இந்த வரலாற்று ஆதாரம்: திருவாரூர் கோயிலில் இவரின் கதை சிற்ப ங்களாகக் செதுக்கப்பட்டுள்ளது. இவரைப் போற்றும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற வளா கத்தில் மனுநீதிச் சோழனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
3.Justice delayed is justice denied: அன்பர்களே!தாமதப்படுத்தப் பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி" (Justice delayed is justice denied) என்பது, சரியான நேரத்தில் நீதி வழங்கப்படாவிட்டால், அது நீதி யை முற்றிலுமாக மறுப்பதற்குச் சமம் என்ற சட்டக் கோட்பாடாகு ம். இது தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டவர் இழப்பைச் சந்திப்பதையும், சட்ட அமைப்பி ன் மீதான நம்பிக்கையை இழப் பதையும் குறிக்கிறது. நம் ஆண்டவர் நீதி வழங்க தாமதிப் பார் காரணம் நாம் மனமார வாய்ப்பு கொடுக்கிறார் மனம் திரும்ப நம்மை எதிர்பார்க்கிறார் தண்டிப்பது தண்டனை கொடுப் பது அவர் குணம் அல்ல; மன்னி ப்பதும் மறப்பதுமே ஆண்டவரின் குணம்.
"நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக் குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்" (இணைச்சட்டம் 16:20). என்று கூறப்பட்டுள்ளது
"நீதி வழங்கும் ஆண்டவர் இவ்வுலக மக்களுக்கு நீதி வழங் கட்டும் அவர் அளிக்கும் நீதியா னது அமைதியை ஏற்படுத்தும் நீதியாகும்.Justice without
Peace is futule.
4. நீதியின் படி அழைக்கும் ஆண்டவர்.The Lord calls accordi ng to righteousness.
ஏசாயா 42:1-9,
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர் ஏசாயா
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆவியைப் பெற்ற, தேசங்களு க்கு நீதியையும் ஒளியையும் கொண்டுவரும் “கர்த்தரின் தாசனை” (மேசியா) அறிமுகப் படுத்துகிறார். ஏசாயாவின் இந்தப் பகுதி, இஸ்ரவேலுக்கு மட்டுமல்ல, எல்லா தேசங்களுக் கும் நீதியைக் கொண்டுவரும் ஒரு ஊழியரை(கிறித்து) அனுப் புவதற்காக, பாபிலோனிய நாடு கடத்தலின் வேதனையில் கடவு ள் பேசுவதைக் காட்டுகிறது. அவர்கள்," பாபிலோன் நதிகளி ன் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனைநினைத்துஅழுதோம்" (திருப்பாடல் 137:1) என்று கூறினார்கள். இந்த சூழ்நிலை யில், இறைவாக்கினர் ஏசாயா நீதியின்படி அழைக்கும் ஆண்ட வர் அவர் கனிவானவர், உடைந் ததை உடைக்காதவர், நீதியை நிலைநாட்டுபவர். விக்கிரகங்க ளுக்கு மாறாக, அவர் இருளிலிரு ந்து விடுதலையையும் புதிய உடன்படிக்கையையும் தந்து, உலகிற்கான நம்பிக்கையாகத் திகழ்கிறார். உடைந்த, பலவீன மான மனிதர்களை அவர் அன் போடு கையாளுவார்.
பணி மற்றும் உடன்படிக்கை வானத்தையும் பூமியையும் படை த்த கர்த்தர், இந்தத் தாசனை 'நீதியோடு' அழைத்து, மக்களை மீட்கும் உடன்படிக்கையாகவும், புற இனத்தாருக்கு ஒளியாகவும் அவர் சிறைப்பட்டவர்களை விடு விப்பார். கர்த்தர் தம்முடைய மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டார்;வலிமையைக் காட்டிலும் அன்பாலும், மென்மை யான குணத்தாலும் நீதியை நிலைநாட்டுவார்.இருளில் இருப்பவர்களுக்கு மீட்பையும், சத்தியத்தின் ஒளியையும் தருவார். இது இயேசு கிறிஸ்து வை முன்னறிவிக்கிறது. (மத்தேயு 12:15-21-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது).
அன்பர்களே! நம் கடவுள் நம்மை நீதியின்படி நடத்தாமல், கிருபை யின் படி நடத்த நமக்கு அருள்புரி வாராக ஆமென்
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Comments
Post a Comment