பரிவுள்ளோராய் வாழ அழைப்பு.(251) Call to be Compassionate. ரூத் 2:4-20, திருப்பாடல் 145 எபேசியர் 4:25-32, மாற்கு 1:40-45

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இவ்வார தலைப்பாக நமக்கு  கொடுக்கப்பட்டிருப்பது, "
பரிவுள்ளோராய் வாழ அழை ப்பு".
பரிவு Compassion என்றால் என்ன?
அன்பானவர்களே! பரிவு என்றால் "நாம் பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு வருந்தி, அந்தத் துன்பத்தைப் போக்க உதவும் மனநிலை, கருணை, அருள்,  அன்பு கொண்டு உதவுதல் எனப் பொருள்படும்"
திருத்தூதர் பவுல் அடிகளார் பரிவு என்பதை, "ஒருவருக்கொ ருவர் நன்மைசெய்து பரிவு காட் டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். "என 
(எபேசியர் 4:32) மன்னிபபை
 பரிவின் அடையாளமாக கூறு
கிறார்.
பழைய ஏற்பாட்டில் கடவுளின் பரிவு. God's Compassion in the Old Testament. 
அன்பர்களே! திருவிவலியம்
பரிவு என்பது கடவுளின் மையப் பண்பு, இது பல இடங்களில் காணப்படுகிறது. விடுதலை பயணம் 34:6 இல் , கடவுள் மோசேயிடம்,  "ஆண்டவர்! இரக் கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு ரியவர். (விடுதலைப்  பயணம் 34:6) என்று விவரிக்கிறார். கடவுள்  தம்மைப் பின்பற்றுபவ ர்கள் இரக்கத்தையும் வெளிப்ப டுத்துவார்கள் என்று  அழைக் க்கிறது.
 பழைய ஏற்பாடு இரக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கடி வலியுறுத்துகிறது, குறிப்பாக நீதி மற்றும் பாதிக்கப்படக்கூடிய வர்களுக்கான அக்கறையின் சூழலில்., "அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர் மேல் அன்புகூர்ந்து அவர்களு க்கு உணவும் உடையும் கொடுப் பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியரா ய் இருந்தீர்கள். (இணைச் சட்டம் 10:18,19) கடவுள் இஸ்ரவேலர்க ளுக்கு அந்நியரை நேசிக்கும்படி கட்டளையிடுகிறார்,இதேபோல், இறைவாக்கினர் சகரியா 7:9-10 ,"படைகளின் ஆண்டவர் கூறு வது இதுவே; நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொரு வர் அன்பும் கருணையும் காட்டு ங்கள்;கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரை யோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்; உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதி ராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்." (செக்கரியா 7:9,10)" என்று அறிவுறுத்துகிறது.
புதிய ஏற்பாட்டில் கடவுளின் பரிவு. God's Compassion in the New Testament. 
அன்பர்களே! புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்து தனது ஊழியத் தின்முக்கிய அம்சமாக  இரக் கத்தை முன்மாதிரியாகக் காட்டி கற்பிக்கிறார்.  நற்செய்திகள் இயேசுவை இரக் கத்தால் தூண்டியதை அடிக்கடி சித்தரிக்கின்றன, உதாரணமாக "திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். 
(மத்தேயு நற்செய்தி 9:36) என தன் பரிவான குணத்தை காட்டு
கிறார்.
இயேசுவின் உவமைகள் பெரும் பாலும் இரக்கத்தின் முக்கியத்து வத்தை எடுத்துக்காட்டுகின்றன. நல்ல சமாரியனின் உவமை ( லூக்கா 10:30-37 ) என்பது ஒரு ஆழமான எடுத்துக்காட்டு, அங்கு இயேசு "போய் அவ்வாறே செய்யுங்கள்" என்ற கட்டளை யுடன் முடிக்கிறார். ஆண்டவர் இந்த லெந்து காலங்களில்," இரக்கமுடையோர் பேறுபெற் றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு நற்செய்தி 5:7) என்ற வார்த்தை யின்படி பரிவுடன் வாழ கடவுள் அழைக்கிறார்.
1.இரக்கம் உள்ளவர்களே இறை மக்கள்.The people of God are those who are merciful.ரூத் 2:4-20 .
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுளுடைய இரக்கம் மற்றும் வழிகாட்டுதலை (Providence) அழகாக சித்தரிக்கும் ஒரு பகுதியாகும். ரூத், நகோமி மற்றும் போவாஸ் ஆகியோரின் வாழ்க்கையில் கர்த்தர் எப்படி செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில் உள்ள நீதிப திகளின் காலத்தில் (சுமார் கிமு 1375 - 1050) வாழ்ந்த மோவாபி யப் பெண் ரூத் ஆவார். இந்த பகுதி, ரூத் தன் மாமியாருக்கு உண்மையாகவும், போவாஸ் தயவுடனும், நகோமி கர்த்தரின் மீது நம்பிக்கையுடனும் இருந்த தைக் காட்டுகிறது.
நீதிபதிகள் காலத்தில், பஞ்சத்தி னால் மோவாபு தேசத்திற்கு குடி பெயர்ந்த இஸ்ரவேலர் குடும்பத் தில், மக்லோன் என்ற மகனை ரூத் மணக்கிறார்.கணவர், மாமனார் மற்றும் மைத்துனர் இறந்த பிறகு, தன் மாமியார் நவோமியுடன் பெத்லகேம் திரும்ப ரூத் முடிவெடுக்கிறார். நவோமியிடம் ரூத் கூறியது, "உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என் னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே என து இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய் வமே எனக்கும் தெய்வம். என்ற வாக்கு, அவரது உண்மையான அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறது.
பெத்லகேமில், ரூத் ஒரு வயலில் தானியங்களைச் சேர்க்கும் போது, அந்த வயலின் உரிமை யாளரான போவாஸ் என்ற செல்வந்தருடன் அறிமுகமாகி றார்.போவாஸ் ஒரு செல்வந்தர், ஆனால் அவர் கர்த்தருக்கு பயந்தவர். அறுக்கிறவர்களிடம் "கர்த்தர் உங்களோடே இருப் பாராக" என்று வாழ்த்துகிறார், அவர்கள் பதிலுக்கு ஆசீர்வதிக் கிறார்கள். எந்த எஜமானும் தனக்கு கீழ் வேலை செய்கிற வர்களை வாழ்த்த மாட்டார்கள் ஆனால் போவாஸ் மனிதநேயம் உடையவர், மனிதர்களை நேசிக் கிறவர், இரக்கம் உள்ளவர்.
"தற்செயலாக" ரூத் போவாஸின் வயலில் வந்து சேர்கிறாள். இது மனித பார்வையில் தற்செயல், ஆனால் தேவனுடைய திட்டத் தில் இது ஒரு தெய்வீக அழை ப்பு (Divine Call).
போவாஸ், ரூத் யார் என்று விசாரித்து, அவளுக்கு இரக்கம் காட்டுகிறார்.போவாஸ் ரூத்தை தன் வயலிலேயே கதிர்களைப் பொறுக்கச் சொல்லி, அவள் பாதுகாக்கப்படுவார் என்று உறுதியளிக்கிறார்.ரூத் ஒரு அந் நிய மோவாபிய பெண், ஆனால் போவாஸ் அவளைத் தன் சொந் த மகளைப் போல நடத்துகிறார்.
ரூத் தன் மாமியார் நகோமிக்குச் செய்த உதவியையும், தேவனை நாடி வந்ததையும் போவாஸ் கேள்விப்பட்டு, அவளை ஆசீர்வ திக்கிறார்.
ரூத் கதிர்களைப் பொறுக்கி, சுமார் ஒரு எப்பா (13 கிலோ) (இது ஒரு திட அளவை. தானி யங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரமும் எப்பா என்று அழைக்கப்பட்டது.  இதன் அளவு 22 லிட்டர். (வி.ப 16:36; எசே 45:10)—  .பார்லி தானியத்தை சேகரித்தாள். தானியத்தைக் கண்டு நகோமி ஆச்சரியப்படுகிறாள். ரூத் போவாஸின் வயலில் இருந்த தைச் சொன்னவுடன், நகோமி தேவனை ஸ்தோத்திரிக்கி றாள்.கர்த்தர் உயிருள்ளவர்க ளுக்கும் மரித்தவர்களுக்கும் பரிவு காட்டுவதை விட்டுவிடவி ல்லை" என்று நகோமி கூறுகி றாள்.போவாஸ் எலிமெலேக் கின் (நகோமியின் கணவன்) வம்சத்தைச் சேர்ந்தவர் என்ப தை நகோமி உணர்த்துகிறாள். அவள், "அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவுக்காரன், நம்முடைய மீட்பரில் அவனும் ஒருவன்" என்று ரூத்திடம் கூறு கிறாள். போவாஸ், ரூத்தின் நற்குணத்தையும், நவோமிக்கு அவர் செய்த உதவியையும் கண்டு, அவருக்கு உதவும் நோக் கத்துடன் அவரைத் திருமணம் செய்கிறார்.
ரூத் மற்றும் போவாஸ் தம்பதி க்கு ஓபேத் என்ற மகன் பிறந் தார். ஓபேத், ஈசாயின் தந்தை; ஈசாய் தாவீது மன்னரின் தந்தை. இதனால், ரூத் இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் முக்கிய இடம் பெறுகிறார். 
நம் வாழ்க்கையில் நடக்கும் "தற் செயலான" சம்பவங்கள், தேவனுடைய பெரிய திட்டத்தின் பகுதியாக இருக்கலாம். போவா ஸின் இரக்கம், தேவனுடைய கிருபையை நமக்குக் காட்டுகி றது. அது எல்லையற்றது.
அன்பர்களே!பிற இனத்தவரான ரூத், இஸ்ரவேலரின் கடவுளை முழுமையாக நம்பினார்.
கைவிடப்பட்ட நிலையில் தன் மாமியார் நகோமிக்கு உண்மை யுள்ள மகளாக இருந்தார்.
தன் குடும்பத்தை ஆதரிக்க ரூத் கடினமாக உழைத்தார். 
ரூத்தின் கதை, துன்பங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடனும், அன்புடனும் இருந்தால், தேவன் வழிகாட்டுவார் என்பதை உணர் த்தும் ஒரு வரலாற்றுப் பதிவா கும். போவாசின் இரக்கதன்மை,  இரக்கமுள்ள மீட்பரை அவர் வம்சத்தில் தோன்ற உதவி
யது.
2.கிறித்து போதிக்கும் வாழ்க்கை முறை. The Christian way of life. எபேசியர் 4:25-32,
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுலடிகளார் எபேசுருக்கு எழுதிய திருமுகத் தை ரோமில் சிறையில் இருந்த போது (சுமார் கி.பி. 60-63), தீகிக்கு மூலமாக இந்த நிருபத் தை எபேசு மற்றும் அதைச் சுற்றி யுள்ள சபைகளுக்கு அனுப்பி னார்.எபேசு சபையினரின் ஆவிக்குரிய முதிர்ச்சியை மேம்ப டுத்தவும், யூத-புற இனத்து மக்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலாகிய திருச் சபையின் இரக சியத்தை விளக்கவுமே எழுதி னார். முக்கியமாக கிறித்தவர் கள், கிறிஸ்துவுக்குள் புதிய மனி தர்களாக வாழும் விசுவாசிகள், பழைய சுபாவத்தைக் களைந்து (பொய், கோபம், திருட்டு, நிந்தை, கசப்பு) புதிய சுபாவத்தை (உண்மை, அன்பு, மன்னித்தல், ஆக்கப்பூர்வமான பேச்சு) அணிய வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். இது தூய ஆவியை  துயரப்படுத்தாமல், கிறிஸ்துவைப் போல மற்றவர் களிடம் தயவும் அன்பும் காட்டு வதை வலியுறுத்துகிறார். 
இந்த லெந்து காலத்தில், கிறித் தவர்களாகிய நாம்;
1.பொய்யைக் களைந்து உண் மையைப் பேசுவும் 
2. நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் (கிறிஸ்துவின் சபை) அவயவங்களாக இருக்கிறோம், 3 சக விசுவாசிகளிடமும், மனித ர்களிடமும் உண்மையை பேச வேண்டும்.
4.கோபப்பட்டாலும் பாவம் செய் யாதீர்கள், கோபம் சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாகத் தணிய வேண்டும்; 
5.திருடக்கூடாது, மாறாகத் தன் கைகளால் நல்ல வேலை செய் து, தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்க உழைக்க வேண்டும்.
6  கெட்ட வார்த்தைகளைப் பேசாமல், கேட்பவர்களுக்குக் நன்மை உண்டாக்கும்படியான, ஆக்கப்பூர்வமான வார்த்தைக ளைப் பேச வேண்டும்.
7 தூய ஆவியானவரைத் துயர ப்படுத்தாதிருத்தல்  
8 கிறிஸ்து நமக்கு மன்னிப்பு அளித்தது போல, ஒருவர் மீது ஒருவர் தயவும், மனஉருக்கமும், மன்னிப்பும் கொண்டிருக்க வேண்டும். 
திருத்தூதர் பவுல் அடிகளார் கிறிஸ்துவ வாழ்க்கை என்பது பேச்சில் அல்ல அது செயலில் காட்டவேண்டும் என்பதை நம் வாழ்வில் நாம் கைக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறார்.
3.பரிவை காட்டும் கிறித்து.
Compassionate Christ.மாற்கு 1:40-45, Based on William Barclay's Commentary. 
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!மாற்கு நற்செய்தியாளர் நம்முடைய ஆண்டவரை பரிவை காட்டும் ஆண்டவராய் முதல் அதிகாரத்திலேயே வெளிப்படுத் துகிறார், இயேசு தொழுநோயா ளியை தொட்டு சுகமாக்குவதன் மூலம், தீண்டாமை மற்றும் சமூக விலக்கலை உடைத்து, இரக்கத் தையும் கடவுளின் வல்லமையை யும் வெளிப்படுத்துகிறார்.
இயேசுவின் காலத்தில் தொ ழூ நோயாளிகளின் நிலை.
The status of leprosy on Jesus time.
கிறிஸ்துவுக்குள் பிரியமான வர்களே!இயேசுவின் காலத்தில் தொழுநோய் என்பது உடல்நலப் பாதிப்பைத் தாண்டி, சமூக மற்று ம் மதரீதியான கடும் தீட்டாகக் (Unclean) கருதப்பட்டது. இதனால் நோயாளிகள் ஊரைவிட்டுத் தள்ளி, தனிமைப்படுத்தப்பட்டு, "தீட்டு, தீட்டு" என முழக்கமிட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இயேசு அவர்களைத் தொட்டுச் சுகமாக்கியதன் மூலம், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து கருணை மற்றும் புதுமையின் வல்லமையை வெளிப்படுத் தினார். 
 தொழுநோய் என்பது கடவுளால் தண்டிக்கப்பட்ட பாவம் அல்லது கடும் தீட்டாகவே (ritualistic impurity) பார்க்கப்பட்டது. அக்காலத்தில், தொழூநோய் (தோல் நோய்கள்) வெறும் உடல்நலக்குறைவு மட்டுமல்ல, அது ஒரு சமூக மற்றும் சமயக் குற்றம். அவர்கள் இதனால் நோயாளிகள் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக் கப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ வேண்டும். (Banishment) தொழுநோயாளியைத் தொடு வது தீட்டுப்படுத்தும் செயலாகக் கருதப்பட்டது; நோயாளிகள் தங்களை 'அசுத்தர்' என அறிவி த்துக் கொள்ள வேண்டும். "நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளி யே தனியாகக் குடியிருப்பார். 
(லேவியர் 13:46) என்ற கடுமையான சட்டத்தினை இயேசு மனித நேயத்திற்காக மிறினார் . மேலும் "எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டு ப்பட்ட ஒரு மனிதரை ஒருவர் அறியாமலே தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே. 
(லேவியர் 5:3) இந்த லேவிய
சட்டத்தை அறிந்தும் மீறினார். Jesus breaks the Law of Leviticus for the compassion on humanity. சட்டங்கள் மனிதனை காப்பதற் காக; மாறாக அழிப்பதற்கல்ல என நிருபித்து காட்டினார்.
இக்காலகட்டத்தில், இயேசுவின் அணுகுமுறை அவர்கள்மீது பரிவு காட்டியது.இயேசு தொழு நோயாளிகளைத் தொட்டு, "நான் சித்தமாயிருக்கிறேன், சுத்தமாகு" என்று கூறி, உடன டியாக அவர்களைக் குணப்படு த்தினார் (மத்தேயு 8:3),. அவர்களுக்கு மிக முக்கியமாக சமூக அங்கீகாரம் கிடைக்க, குணமடைந்த பின் ஆசாரியர்க ளிடம் காட்டி, சட்டப்பூர்வமாகப் பிணியிலிருந்து மீண்டதை உறுதி செய்ய வேண்டும் என்பது இயேசுவின் கட்டளையாக இருந்தது. இது யேசுவின்
பரிவான குணத்தை காட்டு கிறது. அதுமட்டுமல்ல லேவியர் சட்டத்தை நிறைவேற்றுகிறார். "குரு அவரைச் சோதித்துப் பார்ப் பார். நோய்த்தழும்பு வெண்மை யாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப் பார்; அவர் தீட்டற்றவர். 
(லேவியர் 13:17) சமூக மறுவாழ் வு (Social Rehabilitation) அடைய, இயேசு அவனை ஆசாரியனிடம் சென்று மோசே கற்பித்த காணி க்கையைச் செலுத்தச் சொன் னார். இது அந்த நபர் சமூகத்தில் மீண்டும் இணைவதை உறுதி செய்தது.
இயேசு தொழுநோயாளியை 
தொட்டார்.
அன்பர்களே!.சட்டம் தொழு நோயாளியை தொட்டால் தீட்டு ஏற்படும் என்றாலும், இயேசு அவனைத் தொட்டார்.இயேசு வின் தொடுதல் நோயாளியைத் தீட்டுப்படுத்தவில்லை, மாறாக அவனுக்குப் புனிதத்தையும், சுகத்தையும் தந்தது. இதுஇயேசு வின் அன்பு மற்றும் இரக்கத்தின் வெளிப்பாடு.
 நாம் ஒன்றை உறுதியாக தெரிந் து கொள்ள வேண்டும் அதாவது அந்த தொழுநோயாளி"உமக்குச் சித்தமானால்" என்று இயேசு வின் வல்லமையை முழுமையா க நம்பி, முழங்கால்படியிட்டு வேண்டினான். அவனுடைய வேண்டுதல் நிறைவேற்றி அவனை குணப்படுத்தினார் ஆனால் அதை விளம்பரப்படுத்த விரும்பவில்லை ஆண்டவர் வணிக ரீதியாக செயல்படுபவர் அல்ல மாறாக அன்பின் ரீதியாக பரிவாக செயல்படும் கர்த்தர் நம் ஆண்டவர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்
எனவே அவர், வெளியே பேச வேண்டாம் என்று கண்டிப் பாய்க் கூறியது, அவர் ஒரு அரசியல் மேசியா அல்ல, அன்பின் மூலம் மீட்பளிப்பவர் என்பதை உணர்த்தியது. 
அன்பர்களே! இயேசு தீண்டத் தகாதவர்களைத் தொட்டு, அவர்களைப் புனிதப்படுத்தி, புதிய வாழ்க்கையைத் தரும் மீட்பராகவும்,   நாம் பரிவுள் 
ளோராய் வாழ ஆண்டவரின் அழைப்பை ஏற்று நடக்க அருள்
புரிவாராக.ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..






Christ cleansing a leper by Jean-Marie Melchior Doze, 1864. Wiki.
Christ cleansing a leper by Jean-Marie Melchior Doze, 1864

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.