சாம்பல் புதன். Ash Wednesday. லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.(249) Lent: A Call to Renewal. எசேக்கியேல் Ezekiel: 37: 24-28. திருப்பாடல் : 51, உரோமையர் 11:33 - 36,12:1,2, மத்தேயு 6:5-18
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால சாம்பல் புதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.
தவக்காலம் என்றால் என்ன? What is Lent) அன்பர்களே! தவக்காலம் என்பது கிறிஸ்தவர் களாகிய நாம் இயேசு கிறிஸ்து வின் சிலுவைப் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவு கூர்ந்து, சாம்பல் புதன் (Ash Wednesday)முதல் ஈஸ்டர் ஞாயிறு வரை அனுசரிக்கும் 40 நாட்கள் கொண்ட புனிதமான ஒருத் தல் மற்றும் தவம் செய்யும் காலமாகும். இக்காலத்தில் இறைவேண்டல், தியாகம், நோன்பு மற்றும் தானதர்மங்கள் மூலம் ஆன்மீகத் தேடலை வலுப்படுத்தி,நம் பாவங்களுக் காக மன்னிப்பு கேட்டு இறை வனுடன் ஒப்புரவா கிற, (Reconciliation)காலமாகும். புத்தாக்கம் என்பது நம்முடைய உடல், ஆன்மா, மனசு அனைத் தையும் புதுப்பித்துக் கொள்வ தாகும் இந்த லெந்து காலத்தில் நம் பாவங்கள் அனைத்தும் விட்டு விடுதல் வேண்டும். புதிய மனிதனாய் உரு எடுப்பதே நம்மை நாமே புத்தாக்கம் செய்யும் செயலாகும்
தவக்காலத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? What are the important features of the Lent?
1. தவக்காகலத்தின் அளவு: சாம்பல் புதன் அன்று தொடங்கி, ஈஸ்டர் ஞாயிறு வரை, இடையில் வரும்ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து மொத்தம் 40 நாட்கள்
அடங்கிய தவ நாட்க்களாகும்.
2. தவக்காலத்தின் நோக்கம்: இயேசு பாலைவனத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்ததை முன்மாதிரியாகக் கொண்டு, தங்களை ஆன்மீக ரீதியாகத் தயார்படுத்துதல்.
3.நாம் செய்ய வேண்டியவை: ஜெபம், உண்ணாவிரதம் (நோன்பு), தானம் செய்தல், பாவம் பற்றி வருந்துதல் மற்றும் இறைநினைவில் நிலைத்திருத் தல்.
4.சுய மறுப்பு:
இது நாம் தன் பாவங்களை உணர்ந்து, இறைவனின் அன்பை நோக்கித் திரும்பி, மனமாற்றம் அடையும் காலமாக கருதப்படுகிறது.
5.பாவங்களை விட்டுவிடுதல்:
நம் பாவங்களை எண்ணிப் பார்த்து ஒவ்வொன்றாக விட்டுவிடுகின்ற காலம் இந்த லெந்துகாலம்
6. அழைப்பு:
லெந்து காலத்தில் நாம் நம்முடைய பாவங்களை விட்டு விட புத்தாக்கத்திற்கான
அழைப்பாகும்.
1. நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.You will be my people and I will be your God.
எசேக்கியேல் 37:24-28,
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர் எசேக் கியேல் அவர்கள் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்தவர். சுமார் 30 வயதில் தீர்க்கதரிசன ஊழியத் தைத் தொடங்கினார்.22 ஆண்டுகள் இறைபணியாற் றினார். கெபார் நதிக்கரையில் பாபிலோனில் இருந்த சிறைப் பட்ட மக்களிடையே ஊழியம் செய்தார்.இவர் எரேமியா மற்றும் தானியேலுக்கு சமகால த்தவர். பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சார் காலத்தவர். இவரின் காலம் கி.மு 623 - 571.
எசேக்கியேல், "மனுபுத்திரன்" (Son of Man) என்று கடவுளால் பலமுறை அழைக்கப்படுகிறார்.
இவரின் முக்கிய செய்தி, இஸ்ரவேலின் பாவங்களுக்காக தண்டனை அவசியம், ஆனால் இறுதியில் தேவன் அவர்களை மீட்டு, புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் கொடுப்பார் என்பதே. இவர் பெயரின் பொருள், "கடவுள் பலப்படுத்து வார்" என்பதாகும்.
இந்த பகுதி, "என் தாசனாகிய தாவீது" என குறிப்பிடப்படுகிறது இது ராஜா தாவீதை அல்ல, மாறாக தாவீதின் வம்சத்தில் வரும் மேசியாவான இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. இவர் இஸ்ரவேலையும் யூதா வையும் ஒன்றாக ஆளுவார். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனி
ய சிறையிருப்பிலிருந்து மீட்கப் பட்டு, ஆவிக்குரிய மற்றும் அரசி யல் ரீதியாக ஒன்றுபட்டு,"தாவீது" (மேசியா/இயேசு கிறிஸ்து) என்னும் ஒரே மேய்ப்பனின் கீழ், நித்திய சமாதான உடன்படிக்கை யுடன், தேவனின் பிரசன்னத்தில் (தேவாலயம்) நிரந்தரமாக வாழும் எதிர்கால ஆசீர்வாதத் தை இறைவாக்கினர் முன்னறி விக்கிறார். கர்த்தர் அவர்க ளோடு சமாதானத்தின் நித்திய உடன்படிக்கையைச் செய்து, அவர்களைத் தம் மக்களாகவும், தாம் அவர்கள் தேவனாகவும் இருப்பார் என்பதை உறுதிப்படு த்துகிறார்.மக்கள் கர்த்தருடைய கட்டளைகளிலும், நியமங்களி லும் நடப்பார்கள், இது கர்த்த ரால் தரப்படும் புதிய இருதயத் தைக் குறிக்கிறது. கர்த்தர் தம் முடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் அவர்கள் நடுவில் வைப்பார், அதாவது தேவன் தம் மக்களுடன் வாசம் செய்வார்.வசனங்கள் 25-28 இல் " "என்றென்றும்" என்ற வார்த்தை ஐந்து முறை வந்து முக்கியத்துவத்தை பெறுவதை நாம் கவனிக்க வேண்டும். நாம் கடவுளின் பிள்ளைகள் அவர் நம்முடைய கடவுள் என்பது இந்த லெந்து காலத்தில் நாம் மிகத் தூய்மையான வாழ்வை வாழ வலியுறுத்துகிறது விடுதலைப் பயணம் முதற்கொண்டு திரு வெளிப்பாடு வரை திருமறை முழுவதும் அவர் நம்முடைய கடவுள் என்பதை 20 to 30 முறை வருகிறது
அவர்கள் நடுவே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் வைப்பேன். என் வாசஸ்தலம் அவர்களோடே இருக்கும்; நான் அவர்களுடைய தேவனாயிருப் பேன், அவர்கள் என் ஜனமாயிரு ப்பார்கள். அப்பொழுது, என் பரிசுத்த ஸ்தலமானது அவர்கள் நடுவே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவே லைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் என்று அனைத்து இனத்தாறும் அறிந்துகொள் வார்கள்" கடவுள் தம் மக்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். "நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" என்ற கொள்கையின் அடிப்படை யில் இந்த உறவு அமைகிறது.. இது கடவுளின் உடன்படிக்கை இந்த உறவு நித்தியமானது. இந்த உறவில் நிலைத்து நிற்க இந்த லெந்து காலம் நமக்கு துணை புரியட்டும்.
2. எது உள்ளார்ந்த வழிபாடு?
What is intrinsic worship?
உரோமையர் 11:33 -36,12:1,2..
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுளின் ஞானத்தைக் குறித்தும், அவர் அறிவைக் குறித்தும் திருத்தூதர் பவுலடிகி றார் வியந்து பாடிய ஒரு துதி பாடலாகும் இப்பகுதி.கடவுளின் தீர்ப்புகளும் வழிகளும் மனித அறிவுக்கு எட்டாதவை, அவரே அனைத்திற்கும் காரணமானவர், அவருக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக என்பது இதன் முக்கிய கருத்து.இது இறைவனி ன் இறைவாண்மையையும் (Sovereignty) கிருபையையும் போற்றுகிறது. தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு மிகவும் ஆழமானவை. அவரு டைய நியாயத்தீர்ப்புகள் அள விட முடியாதவை (un measurable) அவரது வழிகள் ஆராய்ந்து அறிய முடியாதவை (untraceable).
"கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?" என ஏசாயா 40:13-ஐ இங்கு மேற்கோள் காட்டுகிறார் மனிதனால் கடவுளுக்கு ஆலோசனை சொல்ல முடியாது அல்லது அவரது திட்டங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதைப் பவுல் உணர்த்துகிறார்.வசனம் 35-ல் "அவருக்குப் பலனைத் தரும்படி முன்னம் அவருக்குக் கொடுத்தவன் யார்?" என யோபு 41:11-ஐ மேற்கோள் காட்டுகிறார்.
மனிதர்கள் கடவுளுக்கு எதையும் கொடுக்க முடியாது, எல்லாம் அவரிடமிருந்தே வருகின்றன.
எனவே, இந்த லெந்து காலத்தில் மனிதர்கள் தங்கள் அறிவைச் சார்ந்திருக்காமல், கடவுளைப் போற்றி, அவரில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இந்தப்
இந்தப் பகுதி நமக்கு வலியுறுத் துகிறது.
எனவே, சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டு கிறேன்; இந்த லெந்து காலத் தில் கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக நம்மையே படையுங்கள். இதுவே நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறை வானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். உள்ளார்ந்த வழிபாடு என்பது வெளிப்புறச் சடங்குகளைத் தாண்டி, நம் உடல், மனம் மற்றும் வாழ்க்கையைத் தூய, உயிரு ள்ள பலியாகக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகும்.
3. லெந்தின் மூன்று தூண்கள். The Three Pillars of Lent. மத்தேயு 6:5-18
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! லெந்து என்றாலே ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று முக்கிய செயல்களை நமக்கு இங்கு வலியுறுத்துகிறார் நமது ஆண்டவர்.இந்த மூன்றையும் நாம் லெந்து காலத்தில் தவிர்க் கவே முடியாது.
மனம் திரும்புதல், இறை வேண் டல் மற்றும் உபவாசம். Repentance,Prayer and Fasting are the three Pillars of the Lent. இவற்றில் வெளிவேடத்தைத் தவிர்த்து, அந்தரங்கமான, நேர்மையான உறவை கடவுளோ டு கொண்டாடுவதை வலியுறுத் துகிறது.
1. மனம் திரும்புதல்: ,Repente nce.
அன்பர்களே! மனம் திரும்பு தல் என்பது பாவமான வழிக ளில் இருந்து விலகி, கடவுளின் பக்கம் மனதை மாற்றுவதைக் குறிக்கிறது.கிரேக்கப் மொழி யில் "மெட்டானோயா" (Metan oia) என்றால் 'மனதை மாற்றுவ து' என்று பொருள், இது சிந்த னை மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கி றது.மனமாற்றம் பாவத்திலிருந்து விலகுதல்: கடவுளுடனான உறவைப் பாதிக்கும் தவறான நடத்தை மற்றும் மனப்பான்மை யிலிருந்து திரும்புவதாகும்.
2.இறைவேண்டல். Prayer.
அன்பர்களே! இறை வேண்டல் என்பது கடவுளுடன் உரையாடு வது, உறவாடுவது,இது நம் விசுவாசத்தின் வெளிப்பாடு. கடவுளோடு அன்புடன் உரை யாடி, உறவாடும் ஒரு ஆன்மீக அனுபவம். இது மன அமைதி, விசுவாசம் மற்றும் இறைவனின் அருளைப் பெற உதவுகிறது.
இறைவேண்டல் மன்றாட்டு, புகழ்ந்து பாடுதல், நன்றி கூறுதல், சோதனை நேரத்தில் ஜெபித்தல் (எ.கா., "எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதே யும்").பல வழிகள் ஆகும்.ஜெபம் அந்தரங்க அறையில், கதவைப் பூட்டி, தனிமையில் கடவுளோடு பேசுவதாகும்.
3 உண்ணா நோன்பு. Fasting.
அன்பர்களே! கிறிஸ்தவர்க ளாகிய நமக்கு கொடுக்கப்ப ட்டுள்ள மிக முக்கியமான கடமைகளில் ஒன்று உண்ணா நோன்பு ஆகும். ஆனால் பலர் நம்மிடையே உடல் ரீதியான பாதிப்புகளால் உண்ணா நோன்பு இருக்க முடிவதில்லை அது தவறல்ல. ஆரோக்கிய மானவர்கள் உண்ணா நோன்பு இருப்பது இறைவேண்டல் செய்வது கடவுள் நம் வேண்டு கோளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை நமக்கு தருகிறது
கடவுளைத் தேடுவதற்காகவும், ஜெபத்தில் ஆழமாகவும், மனந்தி ரும்புதலை வெளிப்படுத்தவும் உணவை (சில சமயம் நீரையும்) தவிர்த்து, மனப்பூர்வமாகத் தன்னையே தாழ்த்தி செய்யும் ஒரு ஆன்மீக ஒழுக்கம்.spiritual discipline இது உணவைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், தேவனுடன் நெருங்கிய ஐக்கியம் கொள்ளவும், தெய்வீக வழிகாட்டுதலைப் பெறவும் உதவும் ஒரு கருவியாகும்.
பழைய ஏற்பாடு: இஸ்ரவேலர் கள் பாவமன்னிப்புக்காகவும், பாவம் செய்வதை விட்டுத் திரும்பவும், இக்கட்டான சூழ்நிலைகளில் தேவனை நாடவும் உபவாசம் செய்தனர் (எஸ்தர் 4:16). மோசே 40 நாட்கள் சீனாய் மலையில் உபவாசம் இருந்தார்.இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தைத் தொடங் குவதற்கு முன் 40 நாட்கள் உபவாசம் இருந்தார் (மத்தேயு 4:1-2). ஆதி திருச்சபை ஊழியர்களை நியமிக்கும் போதும், முக்கியமான முடிவுகளை எடுக்கும்போதும் ஜெபத்துடன் உபவாசித்தது (தீருத்தூதர் பணிகள் 13:2-3).
உபவாசம் (மத் 6:16-18): உபவாசத்தை வெளியில் காட்டுவதற்காக முகவாட்டமாக இருப்பது வெளிவேஷம். உண்மையான உபவாசம் கடவுளோடு ஆவிக்குரிய நெருக்கத்தை வளர்ப்பதற்காக இருக்க வேண்டும், முகத்தைக் கழுவி, எண்ணெய் பூசி சாதார ணமாய் இருப்பது, அது மறை வாக இருப்பதை உணர்த்தும்.
அன்பானவர்களே இந்த லெந்து காலம் நமக்கு இந்த மூன்று வழிகளில் நம்மை பயிற்றுவிக்க பின்பற்ற, அனுசரிக்க கடவுள் அருள் புரிவாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Comments
Post a Comment