குணமாக்கும் பணி ஞாயிறு.Healing Ministry Sunday. மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத் தல்.(247) Loving and suffering together.ஏசாயா 42:1-9. திருப் பாடல்:Psalms. 103: 1-14.யாக்கோபு 5: 13-18.மத்தேயு 5:35-38.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத்தல்.
இயேசு கிறிஸ்துவின் குணப்ப டுத்தும் ஊழியம், அவரது மூன்ற ரை ஆண்டுகாலப் பூமிக்குரிய சேவையின் முக்கிய அங்கமாகு ம். கலிலேயா முழுவதும், அவர் நோயுற்றவர்கள், பேய்பிடித்த வர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிர க்கணக்கானோரை அற்புதமாக குணமாக்கினார். இந்த குணப் படுத்துதல் என்பது உடல் ரீதியா ன சுகத்தை மட்டுமல்லாமல், ஆன்மீகம், உணர்வு மற்றும் உறவுமுறை சார்ந்த முழுமை யான மீட்பையும் உள்ளடக்கியது. இது தேவனுடைய அரசு வந்தி ருப்பதை அறிவிக்கும் அடையா ளமாக இருந்தது. .நோய் வாய்ப் பட்டவர்கள் மீது அவர் கொண்டி ருந்த இரக்கமே (Compassion) பல அற்புதங்களுக்கு காரண மாக அமைந்தது.இதனால்தான் அவர் ஓய்வு நாளில் கூட யூத சட்டத்தை மீறி மக்களை குணப் படுத்தினார் மனித நேயமே முக்கியம் என்பதை தெளிவுபடு த்தினார் ஒய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா?என கேள்வி கேட்டார்.
இயேசு நோயாளிகளைத் தொட் டு, தன் வார்த்தையினால் அதி காரத்தோடு கட்டளையிட்டு, உடனடியாக குணமளித்தார்.
பேய்களை ஓட்டுதல் (Exorcism) மற்றும் உடல் நலக்குறைவுக ளை அகற்றுதல் (Physical healing) ஆகியவை அவரது வல்லமை யை வெளிப்படுத்தியது, மேலும் இது அவர் தேவனின் குமாரன் என்பதை நிரூபித்தது. 
கண்பார்வையற்றோர், முடக்கு வாதமுற்றோர், தொழுநோயாளி கள், மற்றும் பேய் பிடித்தோர் எனப் பலதரப்பட்ட மக்களை அவர் குணப்படுத்தினார். இயேசு தொட்டு touched சுகம் பெற்றவர்களும் உண்டு, இயேவை தொட்டவர்களும் சுகம்
பெற்றவர்களும் உண்டு.
பழைய ஏற்பாட்டில் குணப்படுத் துதல் என்பது, கர்த்தரைத் தம் மைக் குணமாக்கும் தேவனாக விடுதலைபயணம் Exodus 15:26)ல்,மேலும் அவர், "உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வை யில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண் டால், நான் எகிப்திற்கு வரச் செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வர விடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்" என்றார். (விடுதலைப் பயணம் 15:26) இதற்கு யோகோவா ரஃபா(Jehovah Rapha) என்று பெயர். திருவிவலியத்தில் உள்ள கடவுளின் நாமங்களில் ஒன்று, இதற்கு எபிரேய மொழி யில் "சுகமளிக்கும் கர்த்தர்" அல்லது "குணமாக்கும் தேவன்" என்று பொருள்.  மனிதர்களின் உடல், மனம் மற்றும் ஆத்துமாவை குணப்ப டுத்தும் வல்லமை படைத்தவர் என்பதை இது வெளிப்படுத்து கிறது. இதன் பொருள் = 'யெகோவா' (கர்த்தர்/தேவன்) + 'ரஃபா' என்றால் (குணமாக்குபவர்/சுகமளிப்ப வர்). என்று அழைக்கப்பபடுகி றார். 
இஸ்ரவேலருக்கு கடவுள், "எல்லா நோய்களும் உங்களிட மிருந்து அகலும்படி ஆண்டவர் செய்வார். "நீங்கள் அறிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் எல்லாம் உங்களிடையே இல்லா மல் உங்கள்பகைவர் மேல் வரும் படி செய்வார். (இணைச் சட்டம் 7:15)
அவர் உன் குற்றங்களையெல் லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குண மாக்குகின்றார். 
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 103:3)என்பது, கடவுளின் குணங்
களில் ஒன்று, குணப்படுத்து
வது.
நாமான் சிரியா மன்னனின் படைத்தலைவன் அவனை தொழுநோயிலிருந்து இறை வாக்கினர் எலிசா குணப்படுத் துகிறார் (2 அரசர்கள் Kings 5), எசேக்கியா ராஜா நோய்வாய் பட்டு சாவும் நிலையில் இருக் கும் போது, இறைவாக்கினர் ஏசாயா அவருக்கு 15 ஆண்டு கள் ஆயுசு நீட்டிக்கசெய்கிறார் (2 அரசர்கள் 20) நம் கடவுளின் குணங்களில் ஒன்று, தன் மக்க ளை குணப்படுத்துவது, அது உடல், ஆன்மீகம் அடங்கியது.
1 மெசியானிக் பணிக்கான இறைவாக்கு. Prophecy of the Messianic Mission. ஏசாயா 42:1-9.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர் ஏசாயா என்ற பெயருக்கு "கர்த்தர் இரட் சிக்கிறார்" என்று பொருள், இதுவே ஏசாயாவின்செய்தியின் மையக்கரு.  இறைவாக்கினர் ஏசாயா 42,ல்,"உலகிற்கு நீதியை யும் ஒளியையும் கொண்டுவரும் "வேலையாள்" என உருவகப் படுத்தும்  இயேசு என்ற மேசியா வின் வருகைப் பற்றிய முதல் தீர்க்கதரிசனப் பாடல் ஆகும்.
ஏசாயா புத்தகத்தில் நான்கு "ஊழியக்காரப் பாடல்கள்" தனித்து நிற்கின்றன (42:1–9; 49:1–13; 50:4–9; 52:13–53:12). இந்த ஊழியக்காரன் மேசியா வாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக மட்டுமே இருக்க முடியும்.
இது மெசியானிக் பணிக்கான இறைவாக்கு. இவர் கர்த்தர் ஆதரிக்கும், பிரியமான, ஆவி யைப் பெற்ற மெசியா, வருகிறா ர். இவர் பிற இனத்தாருக்கு  நீதி யை நிலை நாட்டுவார். எனவே, அவர் நீதி அரசர். உலகில் நீதி யை நிலை நாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளர மாட்டார்; அவரது நீதிநெறிக்கா கத் அனைத்து நாட்டினர் காத் திருப்பர். 
கடவுள் மெசியா  என்ற தன் மைந்தனை இவ்வுலகில் அனுப் பிய காரணம், "பார்வை இழந் தோரின் கண்களைத் திறக்க வும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போ ரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன் என ஆண் டவரின் இவ்வுலகவருகையின் நோக்கத்தை வெளிப்படுத்துகி றார். இது இரட்சிப்பின் பணி இயேசு ஒரு இரட்சகர்.அவர் மென்மையானவர், ஆனால் நீதியை நிலைநாட்டுவதில் உறுதியானவர், மேலும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் இரட்சி ப்பைக் கொண்டுவருபவர். 
2. நம்பிக்கையின் இறை வேண்டலே நோயாளியை குணப்படுத்தும்.The prayer of faith heals the sick.யாக்கோபு 5: 13-18.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் யாக்கோபு (செபதேயுவின் மகன்) இயேசு கிறித்துவின் பன்னிரு சீடர்க ளில் ஒருவர், இவர் திருத்தூதர் யோவானின் சகோதரர். கலிலே யாவில் பிறந்தவர், தந்தை செபதேயு, தாய் சலோமி. மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது இயேசுவால் அழைக்கப்ப ட்டார். இடிமுழக்க மக்கள் என அழைக்கப்பட்ட இவர்களில், மூத்த யாக்கோபு என்று அழைக் கப்படும் இவர்,மன்னன் ஏரோது அகிரிப்பாவால் வாளால் வெட் டிக் கொல்லப்பட்டார்.பேதுரு மற்றும் யோவானுடன், இயேசு வுக்கு மிகவும் நெருக்கமான மூவர் குழுவில் இடம்பெற்றிருந் தார் (எ.கா: இயேசுவின் உருமாற் றம்). திருத்தூதர்களுள் முதல் மறைசாட்சியாக கி.பி. 44-இல் கொல்லப்பட்டார். ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலரான இவரின் கல்லறை சான்டியா கோ டி கம்போஸ் டெல்லாவில் உள்ளது. 
துன்பம், மகிழ்ச்சி, மற்றும் நோய் காலங்களில் விசுவாசிகள் செய்ய வேண்டியது இறை வேண்டல் , சபையின் மூப்பர் களின் பங்கு மற்றும் பாவ அறிக் கையிடுதல் ஆகியவற்றின் மூலம் இறைவேண்டலின் வல்ல மையை வலியுறுத்துகிறது. நீதிமானின் இறைவேண்டல் (எலியாவின் உதாரணம்) வல்லமையுள்ளது, அது உடல் நலத்தையும் ஆவிக்குரிய மீட்பை யும் தரும் என்று திருவிவலியம் கற்பிக்கிறது.  துன்பப்படுபவர்  இறைவேண்டல் வேண்டும்; மகிழ்ச்சியாயிருப்பவர் சங்கீதம் பாட வேண்டும். நோயாளிகளுக்காக மூப்பர்களி ன்  இறைவேண்டல் (வசனம் 14-15): வியாதிப்பட்டவர் சபையின் மூப்பர்களை வரவழைத்து, அவர் கள் எண்ணெய்பூசி (பரிசுத்த ஆவியின் அடையாளமாக) இறைவேண்டல் செய்ய வேண் டும். விசுவாசமுள்ள  இறை வேண்டல் பிணியாளியை இரட் சித்து, கர்த்தர் அவனை எழுப்பு வார். குணமடையும்படி, ஒருவரு க்கொருவர் குற்றங்களை அறிக் கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் இறைவேண்டல் வேண்டும்.
எலியா நம்மைப் போன்ற இயல் புள்ள மனுசனாய் இருந்தும், கர்த்தரை விசுவாசித்து   இறை வேண்டல் செய்தபோது, மழை பெய்யாமலும், பின் பெய்யவும் செய்தது. இது நீதிமானின்   இறைவேண்டல் வல்லமையை உணர்த்துகிறது. இந்த பகுதி சரீர சுகத்தை மட்டுமல்ல, பாவம் மன்னிக்கப்பட்டு ஆவிக்குரிய வகையில் எழுப்பப்படுவதையும் குறிக்கிறது. இறைவேண்டல் என்பது ஒரு சடங்கு அல்ல, மாறாக விசுவாசத்தோடு, நம் பலவீனங்களை ஒப்புக்கொடு த்து, தேவனுடைய வல்லமையை நாடுவது என்பதை இது வலியுறு த்துகிறது. 
3.வாய்மையே வெல்லும். Truth alone shall triumph.மத்தேயு 5:35-38.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்! களே சத்யமேவ ஜெயதே (Satyameva Jayate) தமிழில் வாய்மையே வெல்லும் என்பது "சத்தியம் மட்டுமே வெற்றி பெறும்" என்ற பொருள் படும் இந்தியாவின் தேசிய முழக்கமாகும். இது முண்டகா உபநிடதத்தில் இருந்து எடுக்கப் பட்ட மந்திரத்தின் ஒரு பகுதி யாகும். ஜனவரி 26, 1950 அன்று, இந்தியா குடியரசாக மாறிய நாளில் இது ஏற்றுக் கொள்ளப்ப ட்டது. அவ்வாறே,
இயேசு, சத்தியம் செய்வதைத் தவிர்த்து, பழைய ஏற்பாட்டின் பழிவாங்கும் சட்டத்திற்கு (கண்ணுக்குக் கண்) பதிலாக, அன்பையும் பொறுமையையும் வலியுறுத்துகிறார். பூமி, எருச லேம் அல்லது சொந்தத் தலை ஆகியவற்றின் மேல் சத்தியம் செய்யக்கூடாது. ஏனெனில், இவை அனைத்தும் தேவனுடை யவை. (எசாயா 66:1)
சில சந்தர்ப்பங்களில், “கடவுளு டைய பெயரில் உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கி றேன்” என்றோ, “யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்கிறேன்” என்றோ சொல்ல திருச்சட்டம் மக்களை அனுமதித்தது. ஆனால், இயேசுவின் காலத்தில், சத்தியம் செய்யும் பழக்கம் ரொம்பவேசர்வசாதாரணமாகிவிட்டது. தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக யூதர்கள் எதற் கெடுத்தாலும் சத்தியம்
ஒருவர் "ஆம்" என்றால் "ஆம்" என்றும், "இல்லை" என்றால் "இல்லை" என்றும் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையி லேயே நல்ல மனிதன் ஒருபோ தும் சத்தியம் செய்ய வேண்டிய அவசியமில்லை;இயேசுவின் காலத்தில், சத்தியம் செய்யும் பழக்கம் ரொம்பவே சர்வசாதா ரணமாகிவிட்டது. தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக யூதர் கள் எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், கடவுள் ஆபிரகாமிடம், "நான் என் பெயராலேயே சத்தியம் செய்தேன், . . . நான் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப் பேன்" ( ஆதி. 22:16–17 ) என்பதை யும் நாம் காண்கிறோம்.
விசாரணையின் போது,  இயேசு பேசாதிருந்தார். மேலும் தலை மைக் குரு அவரிடம், "நீ கடவு ளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 26:63) அதற்கு இயேசு, "நீரே சொல்லு கிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றி ருப்பதையும் வான மேகங்கள் மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். (மத்தேயு நற்செய்தி 26:64)
 கடவுள் சத்தியமாக  இங்கு உரைக்கிறார்.KJV அவர் சத்தியம் செய்யவில்லை என்றாலும், பிரதான ஆசாரியன் கேட்டபோது மெசியா என்பதை உறுதிப்படுத் தினார்.சட்டம் சத்தியம் செய்ய அனுமதித்தது, இயேசு சத்தியம் செய்வதைத் தடை செய்தார்,
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருத்தூதர் பவுல் அடிக ளார்,சத்தியம் செய்தார், ஆனால் அது இயேசுவின் போதனைக்கு முரணான பாவம் அல்ல. தேவன் அல்லது சத்தியத்தின் மீது ஆணையிட்டு, ஒரு காரியத்தின் உண்மையை உறுதிப்படுத்த அவர் சத்தியத்தைப் பயன்படுத் தினார், குறிப்பாக விசுவாசத் தோடு தொடர்புடைய விசயங்க ளில் அவர் சத்தியம் செய்துள் ளார். தேவனை சாட்சியாக வைத்து ரோமர் 1:9, 2 கொரிந் தியர் 1:23, கலாத்தியர் 1:20 மற்றும் பிலிப்பியர் 1:8 போன்ற பல இடங்களில், "தேவன் சாட்சி", "என் ஆத்துமா மீது சாட்சியாகச் சொல்கிறேன்" என்று பவுல் சத்தியம் செய்து ள்ளார்.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" (விடுத லை பயணம் 21:24) என்ற பழைய சட்டம்,மோசேயின் சட்டம் கண்ணுக்குக் கண், பல்லு க்குப் பல் என்று கற்பித்தது. இயேசு இந்தச் சட்டத்தை மாற்றி, தனிப்பட்ட பழிவாங்கலை முழு மையாகத் தடுக்கிறார். தீமைக் குத் தீமை செய்யாமல், பொறு மையைக் கடைப்பிடிப்பதே கிறிஸ்தவ நீதி.
அன்பின் மூலம் தீமையை வெல் வது மற்றும் பழிவாங்கும் மனப் பான்மையை முழுமையாகக் கைவிடுவதே தீமையை முடிவு க்கு கொண்டு வரும்.சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் அளவுக்கு நாம் நம் வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று இயேசு கற்பிக்கிறார். ஆண்டவரின் குணமாக்கும் பணி மனஇரக்கம், அன்பிலும், துன்பத்திலும் இணைந்திரு த்தல் அடிப்படையாகக் கொண்ட து கிறிஸ்துவில் நாம் உண்மை யாய் வாழ கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்.



Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com.












மத்தேயு 5:35–37

ஃபிரெட்ரிக் பீட்டர்சன் (1927) எழுதிய "சர்மன் ஆன் தி மவுண்ட்" ( பெர்க்பிரெடிக்ட் ).
ஃபிரெட்ரிக் பீட்டர்சன் (1927) எழுதிய "சர்மன் ஆன் தி மவுண்ட்" ( பெர்க்பிரெடிக்ட் ).

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.