ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு.(253) Call to shoulder each other's Burdens.2.சாமுவேல் 9:1-13. திருப்பாடல்: 41. கலாத்தியர் 6:1-10. மாற்கு 2:1-12.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது,"ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு".
இத்தலைப்பு திருத்தூதர் பவுல்
அடிகளார் கலாத்தியர் திருமுகம்
6:2 வசனத்தை அடிப்படையாக கொண்டது. "ஒருவர் மற்றவரு டைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். (கலாத்தி யர் 6:2) கிறித்துவின் சட்டம் அன்பின் அடிப்படையானது
ஒருவருக்கொருவர் அன்பு கூர வேண்டும் என்பது ஒவ்வொரு வரின் சுமைகளை தாங்குவதா கும். அன்பு இல்லாமல் மற்றவர் களின் சுமையை தாங்கவும், சுமக்கவும் முடியாது.
ஒவ்வொரு கிறித்தவனும் சுமைதாங்கியே:Every Christian is a Resting Stone.
அன்பர்களே! சுமைதாங்கி என்பது பாதசாரிகள், சுமை சுமப்போர் தாங்கள் சுமந்து வரும் பாரத்தை, பிறர் உதவியி ன்றி எளிதாக இறக்கி வைத்து இளைப்பாற, கிராமப்புறப்பாதை களின் ஓரத்தில் அமைக்கப்படும் கற்களால் ஆன அமைப்பாகும். பெரும்பாலும் நிழல் தரும் மரங் களுக்கு அருகில் இருதூண்கள் மற்றும் ஒரு குறுக்குக்கல் கொண்டு இது அமைக்கப்படு கிறது, இது முன்னோர்களின் பொது நலனை காட்டுகிறது.
நீண்ட தூரம் சுமை தூக்கிச் செல் வோர், தலைச் சுமையைக் கீழே இறக்காமல் நின்று கொண்டே இளைப்பாற உதவுகிறது.
1.தாவிது இஸ்ரவேலரின் சுமை தாங்கியா.? Was King David a Resting Stone2.சாமுவேல் 9:1-13.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! தாவிது அரசர் ஒரு சுமை தாங்கியாக இஸ்ரவேலருக்கு இருந்தாரா என்பதை நாம் இப்பகுதியில் சிந்திப்போம்.
1.இஸ்ரவேலர்கள் ஒரு உடன் படிக்கை செய்து கொண்டால் அதை உயிர் கொடுத்தாவது காப்பாற்றுவார்கள் என்பது வழக்கம். அவ்வாறு யோனாத்தா னுக்கும் தாவீதுக்கு ஏற்பட்ட உடன்படிக்கின்படி,ஊனமுற்ற யோனத்தானின் மகன் மெவி போசேத்தை, லோதேபார் (ஒன்று மில்லாத இடம்) என்ற இடத்திலிருந்து கொண்டுவரப் பட்டு தாவிது அரசனின் மகனைப் போல ராஜ மேஜை யில் நித்தியமாக உண்ணும் பாக்கியம் பெறுகிறான். அவனு க்கு சவுலின் நிலங்களை அளித் து, தகுதியற்றவனுக்குக் கிருபை பாராட்டியதை விவரிக்கிறது. சவுல் மற்றும் யோனத்தானின் வம்சத்திற்கு நன்மை செய்ய தாவீது தன் வாக்குறுதியைக் காக்கிறார். இது மனித கிருபை யை விட மேலான தேவ கிருபை யின்யின் வெளிப்பாடு.
இதன்மூலம், சவுல்,யோனாத் தான் குடும்பத்திற்கு சுமைதாங்
கியாய் தாவிது இருக்கிறார்.
2.தாவீது படைக்கப்பட்ட நோக்க மே எருசலேமை உருவாக்குவது தான் என்று யூதர்கள் நம்புகிறா ர்கள். எருசலேம் தேவனின் கனவு. அதை பூமிக்கு கொண்டு வந்தவர் தாவீது. தனது 37 வயது முதல், தான் மரிக்கும் 70 வயது வரை அவர் எருசலேமில் தான் இருந்தார். எருசலேமிலிருந்து, முழு 12 கோத்திரத்தையும், இஸ்ரேல் தேசமாக அரசாண்டார். எருசலேமில்தான் அவருக்கு பத்சேபாள் சொந்தமானாள். இங்கு நாத்தான், சாலமோன் என்பவர்கள், தாவீதுக்கு மகனா கப் எருசலேமில் பிறந்தவர்கள்.
தாவிதின் எருசலேம் என்ற சமாதான நகரம்" உலக மக்க ளுக்கு சுமை தாங்கியாகும். முக்கியமாக யூத, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களின் புனித பூமியாகும்.
3.அன்பர்களே! கோலியாத் என்ற பெலிஸ்திய இராட்சத வீர ன் இஸ்ரவேலரை சவாலிட்டு போது, தாவீது என்னும் சிறுவன் தேவ உதவியுடன் ஒரு கவண் மற்றும் 5 கூழாங்கற்களைக் கொண்டு,அவனை வென்றான். இந்தச் சம்பவம், பலமுள்ளவர்க ளை விட தேவனை நம்புகிறவ ர்களே ஜெயிப்பார்கள் என்பதை உணர்த்துகிறது. "நீ பட்டயத்தோ டும் ஈட்டியோடும் வருகிறாய், நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்". என்பதே வெற்றி க்கான காரணம். தாவிது கோலி யாத்தை வென்று இஸ்ரவேல் மக்களுக்கு சுமை தாங்கியாய் விளங்கினார்.பின்னர் 18 முதல் 22 வயதில் கிபியாவில் இருந்தார்.இது சவுலின் ஊர்.
4.அன்பர்களே! தாவீதின் இளமைக் காலத்தில், அவர் வாழ்ந்த இடம் பெத்லகேம். தாவீதின் பிறந்த இடத்தில்தான், நம் கர்த்தராகிய இயேசுவும் பிறந்தார். இந்த பெத்லகேமில் தான் தாவீது ஆடு மேய்த்தார். சாமுவேல் அபிசேகம் செய்ய வந்தது பெத்லகேமுக்கு தான். தாவீது தன் இளமையில் தேவன் மீது அளவுகடந்த அன்பு வைத் திருந்த இடம் பெத்லகேம் தான். இறைவாக்கினர் சாமுவேல், தாவீதை ராஜாவாக 17ம் வயதி ல் அபிசேகம் செய்தது தாவீது இஸ்ரவேலின் அரசராகும்போது, தாவீதுக்கு 37 வயது. கிட்டத்தட்ட 20 வருடங்கள், தாவீது, தன் தரிசன நிறைவேறுதலுக்காக காத்திருந்து ஓன்றுபட்ட இஸ்ர வேலின் அரசராகி யூதா கோத்தி
ரத்தின் சுமை தாங்கியாக 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
5. தாவிது சவுல் அரசருக்கு பயந்து,அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள். ஒடுக்கப்பட்டவர் கள், கடன்பட்டவர்கள், கலகக்கா ர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானா ன்; இந்தப் பிரகாரமாக ஏறக்கு றைய நானூறுபேர் அவனோடிரு ந்த சிறு இரானுவத்திற்கு சுமை
தாங்கியாக விளங்கினான். இந்தக் குகையில் 7 ஆண்டுகள் இருந்தது வனாந்தர வாழ்க்கை யின் அனுபவத்தையும் தலைமை பண்பையும் அவர் வளர்த்து கொண்டார்.
2. ஒவ்வொரு விசுவாசியும் சுமை தாங்கியே.Every believer is a Resting Stone. கலாத்தியர்: 6:1-10.(வில்லியம் பார்க்லே)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருத்தூதர் பவுல் அடிக ளார் கலாத்தியர் திருமுகத்தை கி.பி 52-53ல் சில யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் பவுல் அடிகளாரி ன் போதனைக்கு எதிராக பிரசங் கித்தார்கள். அவர்கள் திருச் சட்டத்தினால் தான் மீட்பு பெற முடியும் என்று வாதிட்டார்கள் புற இனத்து கிறித்தவர்கள்,விசுவா சிகள் மோசேயின் விருத்தசேத னம் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வற்புறத்தினர் இச்சூழ லில் திருத்தூதர் பவுல் அடிகளார் இத்திருமுகத்தை எழுதினார்.
விசுவாசிகள் தவறிழைத்தவர்க ளைக் கனிவுடன் குணப்படுத்த வும், ஒருவரின் பாரங்களை மற்றவர் சுமந்து கிறிஸ்துவின் அன்பை நிறைவேற்றவும், நற்கிரியைகளைச் செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்து கிறார். ஆவிக்குரியவர்கள், தாங்களும் சோதிக்கப்படலாம் என்பதை உணர்ந்து, பெருமை யின்றி, அன்போடு பாவம் செய்தவர்களைச் சீர்பொருத்த வேண்டும்.
தவறு செய்த ஒரு சகோதரனைச் சீர்பொருத்துவது, ஒரு உடைந்த எலும்பைச் சரிசெய்வது அல்லது அறுபட்ட மீன்வலையைச் சரி செய்வது போன்றது. இது கனி வோடும், தகுதியுள்ள ஆவிக்குரி யவர்களாலும் செய்யப்பட வேண்டும். கண்டனம் செய்வ தல்ல, மீட்டெடுப்பதே நோக்கம்.
ஒருவர் மற்றவரின் சுமைகளை (உணர்வுபூர்வமான, ஆன்மீக பாரங்கள்) சுமக்கும்போது, கிறிஸ்துவின் நியமத்தை (அன்பு) நிறைவேற்றுகிறார்கள்.
தன்னை உயர்த்தி நினைப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதா கும். ஒவ்வொருவரும் தங்கள் சொந்தச் செயல்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும், மற்றவர்களைவிடச் சிறந்தவர் என்று மேன்மை பாராட்டக் கூடாது. "அவனவன் தன் சொந் தப் பாரத்தைச் சுமக்க வேண் டும்." இது, ஒவ்வொருவ ரும் கடவுளுக்கு முன்பாக தங் கள் சொந்தச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்ற உண்மையை வலியுறுத்துகிறது.
நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம். ஆவிக் காக விதைப்பவர்கள் நித்திய ஜீனை அறுப்பார்கள். எனவே, நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல், விசுவாசக் குடும்பத் தாருக்கும், அனைவருக்கும் நன்மையைச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு விசுவாசியும் ஒரு சுமத்தாங்கியாய் ஒவ்வொருவ ரையும் தாங்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்
3, சுமை தாங்க அழைப்பு.
Call to bear the burden.
மாற்கு 2:1-12.Barclay Commentary.
கிறிஸ்த்துவுக்குள் பிரியமானவ ர்களே! இயேசு பல ஜெப ஆலய ங்களுக்கு சென்று பிரசங்கித்த ப்பிறகு , அவர் கப்பர்நகூமுக் குத் திரும்பினார். அவர் வந்த செய்தி உடனடியாகப் பரவியது. இயேசுவின் காலத்திய கப்பர் நகூம் (Capernaum), கலிலேயக் கடலோரத்தில் அமைந்திருந்த ஒரு பரபரப்பான மீன்பிடி மற்றும் வர்த்தக நகரமாகும்.. நாசரேத்தை விட்டு வெளியேறி ய பின், இயேசு தனது ஊழியம் மற்றும் அற்புதங்களுக்காக இந்த இடத்தை தனது மையமாக மாற்றினார். இது "அவருடைய சொந்த ஊர்" என அழைக்கப்பட் டது.சுமார் 1,000-1,500 பேர் வாழ்ந் த இந்த ஊரில், பேதுருவின் வீடு, ஜெப ஆலயம் மற்றும் ரோமானி ய சுங்கச் சாவடிகள் முக்கியப் பகுதிகளாக இருந்தன.
இங்கு பேதுருவின் மாமியாரை க் குணப்படுத்துதல் (மாற்கு 1:29-31), நூற்றுக்கு அதிபதியின் சேவகனைக் குணப்படுத்தினார், படுக்கையோடு வந்த முடக்குவா தத்தை (paralytic) குணப்படுத்தி னார். மற்றும் பேய்களைத் துரத்துதல் போன்ற பல அற்புத ங்களை இயேசு இங்கே நிகழ் த்தினார்.. மேலும்,இது சிரியாவி லிருந்து எகிப்துக்குச் செல்லும் "வியா மாரிஸ்" (Via Maris) என்ற சர்வதேச நெடுஞ்சா லையில் இருந்ததால், இது ஒரு முக்கிய சுங்கச் சாவடி நகரமாக வும் இருந்தது.இவ்வளவு அற்புத ங்களைக் கண்டும் கப்பர்நகூம் மக்கள் மனம் திரும்பாததால், இயேசு இந்நகரத்தைக் குறித்து, "நீ வானபரியந்தம் உயர்த்தப் பட்டாயோ? பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்" என சாபம் கொடுத்தார் (மத்தேயு 11:23). பின்னாளில் இந்நகரம் அழிந்து, குடியிருப்பற்ற இடமாக மாறி யது.
இங்கு,பாலஸ்தீனத்தில் வாழ்க் கை மிகவும் பிரபலமாக இருந் தது. காலையில் வீட்டின் கதவு திறக்கப்படும், விரும்பிய எவரும் வெளியே வந்து உள்ளே வரலா ம். ஒரு மனிதன் வேண்டுமென் றே தனிமையை விரும்பாவிட்டா ல் கதவு ஒருபோதும் மூடப்ப டாது; திறந்த கதவு என் பது அனைவரும் உள்ளே வருவதற் கான திறந்த அழைப்பைக் குறிக் கிறது. இது போன்ற எளிய வீடுக ளில், நுழைவு மண்டபம் இல்லை; கதவு நேரடியாக தெரு வுக்குத் திறக்கப்பட்டது. ஒரு பாலஸ்தீன வீட்டின் கூரை தட்டையானது. அது தொடர்ந்து ஓய்வெடுக்கவும் அமைதியாக வும் பயன்படுத்தப்பட்டது. எனவே, சிறிது நேரத்தில், ஒரு கூட்டம் வீட்டை நிரம்பி வழிந்து, கதவைச் சுற்றியுள்ள நடை பாதையில் அடைத்தது; அவர்கள் அனைவரும் இயேசு சொல்வ தை ஆவலுடன் கேட்டுக்கொண் டிருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்குள் நான்கு ஆண்கள் தங்கள் நண்பன் ஒருவனை ஒரு படுக்கையோடு சுமந்து வந்தனர், அவன் பக்கவா தத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். கூட்டத்தின் வழியாக அவர்களா ல் கடந்து செல்லவே முடியவில் லை, ஆனால் அவர்கள் வளமா ன மனிதர்கள்,வீட்டின் கூரையை ப் பிரித்து படுக்கையை இறக்கி இயேசுவிடம் கொண்டு வந்த னர். அவர் அந்த மனிதனைப் பார்த்து, "மகனே," என்று கூறி னார், "உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன."என்றார்.
அன்பர்களே! இயேசுவின் காலத்தில், பாலஸ்தீனத்தில், யூதர்கள் பாவத்தையும் துன்பத் தையும் முழுமையாக இணைத் தனர். ஒரு மனிதன் துன்பப்பட் டால் அவன் பாவம் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். பாவத்தினால்தான்
நோய் தண்டனையாக வருகிறது
நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதன் பாவத்தின் காரணமாக நோய் வாய்ப்பட்டிருக்கிறான். குணம டைய அவருக்கு மன்னிப்பு தேவை, மன்னிக்கப்படும் வரை குணமடைய முடியாது. என்பது அவர்களின் நம்பிக்கை.
இயேசு முதலில் அவரது பாவங் களை மன்னித்து, பிறகு குணமா க்குகிறார். இது இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரமும், நோய்களை நீக்கும் தெய்வீக வல்லமையும் உண்டு என்பதை உணர்த்துகிறது.
சுமை சுமந்த நான்கு பேரின்
கூட்டு முயற்சி;
அன்பர்களே! இந்த நான்கு பே ரின் கூட்டு முயற்சியால், அவர் களின் நண்பர் குணமடைந்தார்,
மன்னிக்கவும்பட்டார்.
இவர்களிடம் காணப்பட்ட சிறப்பு குணங்கள்;
1. இவர்கள் இயேசு மீது நம்பிக் கை, வைத்துனர்,
2, இவர்களின் பிடிவாதமான விசுவாசமே கடவுளை ஆச்சரியப் படுத்தியது.
3,தடைகளை தாண்டி இயேசு விடம் கொண்டுவருதல்.
4.இயேசு இருந்த வீட்டிற்கு அவனை சுமந்தே வந்தனர்.இது கடினமான பணி.
5,இவர்கள் தன் நண்பன் மீது அன்பு கூர்ந்தனர்.
6. இவர்கள், தன் நண்பனை இயேசுவிடம் கொண்டுவந்தனர்.
தன் நண்பனின் மீட்பிற்கு இவர் கள் அவரின் சுமையை சுமந்து, புது வாழ்வை கொடுத்தனர்.
அன்பர்களே! இந்த லெந்து காலம், நாம் ஒவ்வொருவரின்
பாரங்களை இயேசுவின் வழி யில் சுமக்க அழைக்கப்படுகி றோம்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Jesus heals the man with palsy by Alexandre Bida (1875).Wiki.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment