கிறித்து அனைவரையும் மீட்கிற௱ர்: இறையன்பு எல்லாரையும் அரவணைக்கும்.(248)Christ Redeems All : Divine love Embraces Everyone. யோனா 4:1-11.திருப்பாடல் 107:1-20, 1தீமோத்தேயு 2:1-7. மாற்கு 2:13-17.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "கிறித்து அனைவ ரையும் மீட்கிற௱ர்:இறையன்பு எல்லாரையும் அரவணைக்
கும்." இத்தலைப்பு இரண்டு  இணைத் தலைப்பை  கொண் டுள்ளது.              
 அன்பானவர்களே கிறிஸ்து அனைவரையும் மீட்கிறார் என்பது அவரது பெயரிலேயே அடங்கியுள்ளது மீட்பர்  என்ப தன் மிக நெருக்கமான இணை சொற்கள் இரட்சகர் மற்றும் விடுவிப்பவர் ஆகும். பாவம், துன்பம் அல்லது ஆபத்திலிரு ந்து காப்பவர் என்ற அர்த்தத்தில், காப்பவர், பாதுகாவலர், மீட்பு அளிப்பவர் போன்ற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. 
மீட்பர் என்ற சொல் மீட்பு என்ற (கிரேக்கம்: apolutrosis) மொழியில் இருந்து வந்தது.
 Apo ("away from" or "back") and lutrosis ("a ransom"), 
 அதன் பொருள் என்பது "மீண்டும் வாங்குதல்" அல்லது மீட்கும் பொருளைக் குறிக்கிறது,
இது ,"ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளு டைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். "
(உரோமையர் 3:24) என்ற வார்த்தையின் படியும்,
"கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னி ப்புப் பெறுகிறோம். "(எபேசியர் 1:7) என்பதையும் இயேசுவே மீட்பர் என்பதை உறுதிப்படுத்து கிறது அவர் அனைவருக்குமான மீட்பர். கடவுள் தன் ஒரே மைந்த னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார். அவருக்கே நித்திய வாழ்வு அளிக்க அதிகாரம் உண்டு.அவரை ஏற்றுக்கொண் டவர்கள் அத்தனை பேர்களுக் கும் ஆண்டவர் அளிக்கும் நிலை வாழ்வு உண்டு என்பதை தன்னு டைய மீட்பின் மூலம் உறுதிப்படு த்துகிறார். ஆண்டவர் இவ்வுலக மக்களின் மீட்புக்காக விலை மதிப்பிட முடியாத தன் சொந்த இரத்தத்தை கொடுத்து நம்மை மீட்டு இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அன்பர்களே! இயேசுவின் மீட்பு ஒரு வழி பாதை அல்ல. அதில், இயேசுவின் இரத்தமும்,உயிரும், தியாகமும் இணைந்துள்ளன.   மீட்பு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதைக் குறிக்கிறது. மீட்பு தனிநபர்களைப் புதிய படைப்புகளாக மாற்றுகிறது, அவர்களை நீதியால் மூடுகிறது.  மீட்பு Redemption) என்பது இழந்த ஒன்றை, அதற்கான ஈடு அல்லது விலையைச் செலுத்தி மீண்டும் பெறுவதைக் குறிக்கிறது.
பழைய ஏற்பாட்டில், யாவே என்ற கடவுள், இருக்கின்ற வராக இருக்கின்றவர்" (வீடுதலை பயணம் Exodus 3:14). இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கி ன்றார். கடவுளின் மீட்பின் பணி மனிதன் வீழ்ச்சியிலிருந்து ஆரம் பிக்கப்பட்டது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஆண்டவரி ன் மீட்பிற்கு முடிவு இல்லவே இல்லை. 
இயேசு கிறிஸ்து மூலமாக வரும் மீட்பானது அவரையே பலியாக Ransom கொடுப்பதன் மூலம் நமக்கு கிடைக்கிறது.Redemption 
comes through Ransom. மீட்பின்  செயல்கள் விலை கொடுக்கா மல் கிடைக்காது இயேசு கிறிஸ் து தன் இரத்தத்தை மீட்பிற்காக விலையாக கொடுக்கின்றார்.
இயேசு கிறிஸ்து தன் இரத்தத் தை, மனிதகுலத்தைப் பாவத்தி லிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்கும் விலையாகச் தன் விலை யேறப்பட்ட ரத்தத்தால் செலுத்தி னார். இயேசு கிறிஸ்து உலகத் தின் பாவத்தை சுமந்து தீர்க்கி ன்ற செம்மறியாடாக Lamb of the Lord இருப்பதினால் அவர் உலக ரட்சகராக இருக்கிறார் அனைவரையும் மீட்கவே இவ்வுலகில் வந்தார். இயேசு கிறிஸ்து அன்றி மீட்பு யாராலும் கொடுக்க முடியாது இயேசு கிறிஸ்து ஒருவரே மீட்பர், இரட்சகர்.
அன்பர்களே! இறையன்பு எல்லாரையும் அரவணைக்கும்
 என்பது அது தெய்வீக அன்பா கும். Agape is the divine Love என்பது எல்லையற்றது, நிபந் தனையற்றது மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்க ளையும், மனிதர்களையும் பாகுபாடின்றி அரவணைக்கும் தூய பேரன்பாகும். இது மனித அன்பைப் போலப் பிரதிபலன் எதிர்பாராதது; அது கடவுளின் சர்வ தன்மையைக் குறிக்கிறது, இது அனைவரையும் அன்பு செய்யவும், ஒன்றிணைக்கவும் செய்கிறது.  தெய்வீக அன்பு, நல்லவர்-கெட்டவர், தகுதியான வர்-தகுதியற்றவர் என்று பார்க்காமல், அனைவரையும் தழுவிக்கொள்கிறது.
கடவுளின் அன்பு மனித அன்பை விட வலிமையானது, ஆழமானது மற்றும் பரந்தது, இதுவே உண்மையான கடவுளி ன் நிலை.இதுவே, நம்மை
தூய்மைப்படுத்தும் சக்தி: இத்தகைய தெய்வீக அன்பு, தூய ஆனந்தத்தையும் அமைதி யையும் தருகிறது, அகங்காரத் தை நீக்குகிறது. 
தெய்வீக அன்பை உணர்வது, அனைவரிடமும் இறைவனைக் காணும் பரந்த மனப்பான்மை யை வளர்க்கிறது. 
1. அனைவரையும் மீட்கும் அன்பு இறை அன்பு.The divine love that  redeems All.யோனா Jonah 4:1-11.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! , இறைவாக்கினர் யோனா இறைவாக்கினருக்கு ஏற்ற கீழ்ப்படிதல், மன்னிப்பு அன்பு போன்ற நற்குணங்கள் அவரிட த்தில் வெளிப்படவில்லை. அவர் ஒரு யூத வெறியராக காணப்ப டுகின்றார். கடவுள் இஸ்ரேவேல் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வில் பயணிக்கின் றார். ஆண்டவர் அனைத்துக் மக்களுக்குமான கடவுள் என்பதை மறந்து விடுகிறார். நாம் நேர்மையாக ஒன்றை சிந்திப்போம் கடவுளுக்கு கீழ்ப்படிந்தது இஸ்ரேல் மக்களா? நினிவே மக்களா? அப்படி பார்க்கின்ற போது இஸ்ரேலிய மக்கள் பாலை நிலத்தில் மோசேக்கு எதிராக நின்றார்கள் கடவுளுக்கு எதிரான அருவருப் பை செய்தார்கள். ஆனால் ஒரே எச்சரிக்கையில் நினிவே மக்கள் மனம் திரும்பினர், மனமாற்றம் அடைந்தனர். நினிவே மக்களை  கடவுள் மன்னித்து காப்பாற்றிய தால், யோனா மிகுந்த கோபமும் அதிருப்தியும் அடைந்தான் கடவுள் மன்னிக்கின்றவர் மீட்பர் என்பதை மறந்து விடுகிறார். தான் எதிர்பார்த்தபடி நினிவே அழியாததால் கோபமடைந்த அவன், சாகும் அளவுக்குத் தன் கோபம் நியாயமானது என்று கடவுளிடம் வாதிட்டான். கடவுளின் இரக்கத்தை விடத் தன் சொந்த எதிர்பார்ப்புகளு க்கே அவன் முக்கியத்துவம் கொடுத்தான். அவர் கடவுள் "இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபை யும் உள்ளவர்" என்று அறிந்திரு ந்தாலும், அதை பகைவர்களு க்குக் காட்டுவதை விரும்பவில் லை. நினிவே மக்களுக்குப் பதிலாக தான் இறந்துபோவதே மேல் என்று யோனா கூறுகிறார்.
கடவுள் அவர் அப்படி இருந்தும்
 ஒரு ஆமனுக்கு செடியை உருவாக்கி யோனாவுக்கு நிழல் கொடுக்கிறார், யோனா மகிழ்ச்சியடைகிறார். மறுநாள்
பிறகு புழுவை அனுப்பி அதை வாடச் செய்தார். தனக்கு நிழல் தந்த செடி வாடியதற்காக யோனா வருத்தப்பட்டபோது, தேவன் ஒரு பெரிய நகரத்தின் அழிவைக் குறித்து அவருக்குப் பாடம் புகட்டினார்.
யோனா தன் சுயநலத்திற்காகச் செடிக்கு இரக்கம் காட்டியதை விட, இலட்சக்கணக்கான மக்க ளுக்கு தேவன் காட்டிய கருணை பெரியது என்பதை தேவன் உணர்த்துகிறார். பகைவர்கள் மீதும் தேவன் அன்பு கூர்ந்து, அவர்கள் மனந்திரும்ப வாய்ப்ப ளிக்கிறார் என்பதை இந்த அதி காரம் உணர்த்துகிறது. நம்மு டைய குறுகிய மனப்பான்மை மற்றும் தப்பெண்ணங்களை விடுத்து, கடவுளுடைய இரக்க முள்ள குணத்தைப் பின்பற்ற இது அழைப்பு விடுக்கிறது. கடவுளின் அன்பு அனைவரை யும் மீட்கும் அன்பு அதுவே இறை அன்பு.
2.அனைவரையும் அரவணி க்கும் அன்பு இறை அன்பு.The divine love that Embraces All.
1தீமோத்தேயு 2:1-7
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் , திருச்சபை வழிபாட்டில் எல்லா மனிதர்களுக்காகவும் (விசுவாசிகள் மட்டுமின்றி) மன்றாட்டு விண்ணப்பங்களை ஏறெடுக்கவும், துதி, தோத்திரங் களைச் செலுத்தக் கட்டளையிடு கிறார். குறிப்பாக அரசர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவ ர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இதனால் சமாதானமான, அமை தியான வாழ்க்கை வாழ வழிவ குக்கும் என்றார்.எல்லா மனிதர் களும் இரட்சிக்கப்பட வேண்டும், சத்தியத்தை அறிய வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். இது தேவன் எல்லா தரப்பு மக்க ளையும் நேசிக்கிறார் God is a universal God. என்பதைக் காட்டு கிறது. "தேவன் ஒருவரே, தேவ னுக்கும் மனுசருக்கும் மத்திய ஸ்தரும் ஒருவரே". அவர் கிறிஸ் து இயேசு, அனைவருக்காகவும் தம்மை மீட்கும் பொருளாக (Ransom) ஒப்புக்கொடுத்தவர்.
புற இனத்தார்களுக்கு உண்மை யை போதிக்கும் தூதனாகவும், திருத்தூதுவனாகவும் தாம் நியமிக்கப்பட்டதை பவுல் உறுதிப்படுத்துகிறார். அரசியல் அதிகாரிகளுக்காக ஜெபிப்பது, சமாதானமான சூழலில் சுவிசேசம் பரவ வழிவகுக்கும்.: கிறிஸ்து அனைவருக்கும் மீட்பராக தன்னை அளித்தார் (Universal offer of salvation). மீட்ப்புக்கு இயேசு ஒருவரே ஒரே வழி (Unique mediator). அது அனைவரையும் அரவணிக்கும் அன்பு இறை அன்பு. கடல் அனைத்து நீர்களையும் தன்னில் எடுத்துக் கொள்வது போல கடவுள் அனைத்து மக்களையும் தன் மக்களாக நேசிக்கிறார் அனைவரையும் அரவணைக் கிறார்.
3.அனைவரையும் அழைக்கும் இறை அன்பு.God's love that calls All.,Mark: மாற்கு 2:13-17.   Based on William Barclay's Commentary.        கிறிஸ்துவுக்குள் பிரியமான வர்களே ஆண்டவரின் அன்பு அனைவரையும் அழைக்கும் அன்பு என்பதாக மாற்கு நற்செய் தியாளர் இங்கு விளக்குகிறார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் சீடராக மத்தேயு என்கின்ற லேவியை அழைக் கின்றார் இந்த லேவி தான் மத்தேயு நற்செய்தியை எழுதிய வர்.லேவி மற்றும் மத்தேயு ஒரே நபரின் எபிரேய மற்றும் கிரேக் கப் பெயர்களாகக் கருதப்படு கின்றன. 
லேவி ஒரு யூதராக இருந்தாலும், ரோமானிய அரசுக்காக வரி வசூலித்ததால், தன் சொந்த மக்களால் துரோகியாகக் கருதப்பட்டார்.  இயேசு அவரைச்   கப்பர்நகூமி சுங்கச்சாவடியில் பார்த்து, "என்னைப்பார், என்னை ப் பின்பற்றி வா" என்று அழைத்த போது, அவர் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்தார். இது, தகுதியற்ற வர்களாகக் கருதப்படுபவர்களையும் கடவுள் அழைப்பார் என்பதைக் காட்டுகி றது.
தன் வீட்டில் ஆண்டவருக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார்
இயேசு அமர்ந்து, வரிவசூலிப்பா ளர்கள் மற்றும் "பாவிகள்" என முத்திரை குத்தப்பட்டவர்களுடன் உணவருந்தினார். இது இயேசு, பாவியின் குற்றத்தை உணரா மல், அவர்களை பாவியின் வீட்டில்  ஏற்றுக்கொண்டு, சமூக த்தில் அவர்களுக்கு உரிய இடத் தைத் தருகிறார் என்பதைக் காட்டுகிறது.
லேவியின் அழைப்பு மற்றும் பாவியுடனான இயேசுவின் விருந்து, கடவுளின் அன்பின் எல்லையற்ற தன்மையை விளக் குகிறது. இயேசு மதத் தலைவர் களின் சட்டங்களை மதிக்காமல், ஒதுக்கப்பட்டவர்களுடன் இணங் கி, பாவியைக் குணமாக்கும் "ஆன்மீக மருத்துவராக" வந்து ள்ளார். நீதிமான்களை அல்ல, பாவியையே அழைக்க வந்த தாகக் கூறி, பாவிகள் சமூகத் தின் அங்கமாக ஆக்கப்படுகிறா ர்கள். 
பரிசேயர்கள் இயேசு பாவிகளு டன் உண்பதை விமர்சித்தனர். ஏனெனில், பரிசேயர்கள் "தூய் மையற்ற" மனிதர்களுடன் பழகுவதைத் தவிர்த்தனர். ஆனால், பார்க்லேயின் கூற்றுப் படி, இயேசு பாவிகளுடன் உண வருந்துவது என்பது, கடவுளின் மன்னிப்பு மற்றும் அன்பின் விருந்தாளி (Hospitality) என அவர் பாவியின் வீட்டில் விருந் துண்ணும் நிகழ்வு விளங்குகி றது.
இயேசு ஆன்மீக மருத்துவர்  "சுகமுள்ளவர்களுக்கு மருத்து வன் தேவையில்லை, நோயாளி களுக்கே தேவை" என்று கூறி, தான் நீதிமான்களை அழைக்க வரவில்லை, பாவியையே அழை க்க வந்தேன் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். பார்க்லே, இயேசுவை ஒரு ஆன்மீக மருத்து வராக சித்தரிக்கிறார், அவர் ஆன்மீக நோய்வாய்ப்பட்டவர்க ளை (பாவிகளை) குணப்படுத்த வந்துள்ளார். இயேசு மனிதர் களின் நியதிகளுக்கு அப்பாற் பட்ட கடவுளின் அன்பை, பாவியி டம் கொண்டு சேர்த்தார் என்ப தை வலியுறுத்துகிறது. நாம் நம்மைப் பாவிகளாக உணர்ந்து, இயேசுவின் மீட்பைப் பெற்று, அதே நேரத்தில் பிறரைச் சேர்க் கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது கிறிஸ்தவர்களின் கடமை யாக  இருக்கிறது நாம் அனை வரையும் நேசிக்க வேண்டும் என்பதையும் இப்பகுதி நமக்கு விளக்குகிறது.
அன்பர்களே!
அனைவரையும் அழைக்கும் இறை அன்பு என்பது இனம், மதம், கடந்து அனைவரையும் சகோதரத்துவத்துடன் அரவ ணைக்கும் தெய்வீகப் பாச மாகும். இது அன்பின் வழியாக உலக நலனுக்காக ஒருவரை மற்றவர் நேசித்து, இறைவனிடம் வழிநடத்தும் அழைப்பு. இயேசு வின் இதயம் அனைவரின் உறவுக்காகவும் ஏங்குகிறது, மேலும் இந்த அன்பு ஏழைகளு க்குச் சேவை செய்வதிலும், பிறரன்பு செலுத்துவதிலும் வெளிப்படுகிறது. 
"ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு" என அழைக்கப்படும். ("எசாயா 56:7)என்பது கடவுளின் வாக்குத் தத்தம். இது தேவாலயம் மட்டு மல்ல, விசுவாசிகளின் வீடுகளு ம், உடல்களும் தேவனைத் தொழுதுகொள்ளும், ஆசீர்வாதம் மற்றும் அமைதி நிலைத்திருக் கும் இடமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வாறு, நாம் செயல்பட கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..

Note: The Sermon has been prepared to deliver at CSI St.Peter's Church,
Mission Compound, Chengalpattu.on
15/02/26.



Jesus and Matthew, the tax collector who became a disciple.


The Calling of St. Matthew, by Vittore Carpaccio, 1502.





Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.