அரவணைத்து வாழ அழைப்பு.(255) Call to be Inclusive. ஏசாயா: 56:1-8, திருப்பாடல் 86. திருவெளிப்பாடு 7:9-17, மத்தேயு : 15:21-28.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது,"அரவணைத்து வாழ அழைப்பு." இந்த ஞாயிற்றுக் கிழமை மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினத்தில் பெண்களை அரவணித்து வாழவும் ,சமுக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் சம உரிமை களுடன் பங்குபெற செய்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். மோசே (Moses) மூலம் வழங்கப்ப ட்ட பெண்களின் சொத்துரிமை கள், முக்கியமாக எண்கள் 27 மற்றும் 36 ஆகிய அதிகாரங்க ளில் கூறப்பட்டுள்ளன. செலோபெயாத்தின் புதல்விய ரின் வழக்கை விசாரித்த மோசே, ஆண் வாரிசுகள் இல்லாத குடும் பங்களில், பெண்கள் தங்கள் தந்தையின் சொத்துக்களை வாரிசாகப் பெறலாம்  என்ற புதிய சட்டத்தை தந்தை பெயரில் சொத்து இருந்து, மகன் இல்லாத பட்சத்தில், அந்த சொத்து மகள்க ளுக்குச் சொந்தமாகும் எனறு நிறுவினார். 
அன்பர்களே! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழி க்கு ஏற்ப, பிரிவினைகளை மறந் து, சாதி, மத, சமூக வேறுபாடுக ளைக் களைந்து, அன்போடும், சகிப்புத் தன்மையுடனும், ஒற்று மையாக வாழ்வதே அரவணைத் து வாழ்வது.  வேற்றுமையில் ஒற்றுமையே நமது வலிமை; இந்த நல்லுறவுதான் வீட்டின், நாட்டின் சமுகத்தின் அமைதிக் கும், வளர்ச்சிக்கும், மகிழ்ச்சி யான வாழ்விற்கும் அடிப்படை. 
Charity begins at home. என்பது போல, முதலில் நம் குடும்பங் களில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்து, அன்பைப் பகிர்ந்து, ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒற்றுமை யுடன் அரவணைத்து வாழ்வதே
வாழ்வு.வெறுப்புணர்வை விடுத் து, சகிப்புத்தன்மையுடன் சமாதா னமான சூழலை உருவாக்குவ தே குடும்ப உறுப்பினர்களின் கடமை.
1.அரவணைத்து வாழ உடன்படிக்கை.Live together in the concept of the Covenent..
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நமது திரு விவிலியம் பழைய ஏற்பாட்டில் ஏற்படுத்தப் பட்ட உறவு உடன்படிக்கையின் உறவாகும்.
இஸ்ரயேல் மக்கள் கடவுளுடன் உடன்படிக்கை செய்து கொண்ட தால், அவருக்குக் கீழ்ப்படிந்து இணக்கமாக வாழக் கடமைப்பட் டிருந்தனர்.பிறரை நேசிப்பது, அண்டை வீட்டாருடன் சமாதான மாக இருப்பது மற்றும் சமூகத்தி ல் நீதியை நிலைநாட்டுவது வலி யுறுத்தப்பட்டது.. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! (லேவியர் 19:18)
 வலியுறுத்துகிறது, "உன் மக்க ளில் யாரையும் பழிவாங்கவோ அல்லது பகைமை கொள்ளவோ ​​வேண்டாம், ஆனால் உன்னைப் போலவே உன் அண்டை வீட்டா ரையும் நேசிக்கவும். நான் கர்த் தர்." இங்கே, மற்றவர்களை நேசிப்பது கடவுளை மதிப்பத ற்கும் கீழ்ப்படிவதற்கும் சமம் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும்.
"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! (திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 133:1)என சங்கீத க்காரன் சகோதர ஒற்றுமையை  வலியுருத்துகிறார்.
ஒருவர் மற்றவரின் தவறுகளை ப் பொறுத்துக்கொண்டு, மன்னி ப்புடன் வாழ்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.
இதற்கு ஆதாரமாக நாம் பார்ப்
பது, தொடக்கநூல்:16.
ஆபிரகாமின் மனைவியான சாராளின் மலட்டுத்தன்மை யால், ஆபிரகாமுக்குச் சந்த தியை உருவாக்க எகிப்தின் அடிமைப் பெண்ணான ஆகார், ஆபிரகாமின் உடன்படிக்கை மனைவியாக்கப்பட்டார். கர்ப்ப மடைந்த ஆகார் சாராளை அற்ப மாக எண்ணியதால், சாராள் அவளைத் துன்புறுத்தினார்;  சாராளின் கொடுமையால் தப்பி ச் சென்ற ஆகார், வனாந்தரத்தி லிருந்த போது  ஆண்டவரின் தூதரின் கட்டளைப்படி, , "நீ உன் தலைவியிடம் (சாராள்) திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட" என்றார். (தொடக்கநூல் 16:9) பணிந்து நட என்பது அரவணைத்து செல் என்பதாகும். குடும்ப வாழ்வில் அரவணைத்து செல்வது மிக அவசியமானது.
ஆகார்,மீண்டும் சாராளிடம் திரும்பிச் சென்றார். தேவன் அவளுடைய துன்பத்தைக் கண்டு, அவளுக்குப் பெருகும் சந்ததியைப் வாக்குறுதியளித்து, சாராளின் கைக்குள் அடங்கியி ருக்கும்படி பணித்தார், தான் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு இஸ்மவேல் (தேவன் கேட்டார்) என்று பெயரிட வேண்டும் என்ற வாக்குறுதியைப் பெற்று ஆகார் திரும்பினார். இதனால் அவர் 'என்னைக் காண்கிற தேவன்' (எல்-ரோயி) என அறியப்பட் டார். ஆகாருக்குக் கிடை த்த இந்தத் தெய்வீக தலையீடு, கஷ்டப்படுபவர்களைக் கவனிக் கும் தேவனின் தன்மையை வெளிப்படுத்துகிறது. 
2.அரவணைத்துச் செல்லும்
அனைவருக்குமான  இல்லம்.
 My Church is inclusive to All. ஏசாயா 56:1-8.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! கடவுளின் இரட்சிப்பு மற் றும் உடன்படிக்கை யூதர்களுக்கு மட்டுமல்லாமல், வேற்று இனத் தவர் (Gentiles) மற்றும் சமுதாயத் தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் (அண்ணகர்கள் Eunuchs) சொந்த மானது என்பதை வலியுறுத்து வதாகும்.கடவுளின் இரட்சிப்பு உலகளாவியது (Universal Salvat ion) என்பதையும், அவரை உண் மையோடு சேவிக்கிற எவரும் அவரது உடன்படிக்கையில் சேர் க்கப்படுவார்கள் என்பதையும் அறிவிக்கிறது. இம்மக்கள் ஆண்டவரோடு உடன்படிக்கை செய்து, ஓய்வுநாளைக் கடைப் பிடித்து, நீதியுடன் வாழும் அனை வரையும் கடவுளின் மக்கள் குழுவில் ஏற்றுக்கொள்வதாக வாக்களிக்கிறது. கர்த்தருடைய ஆலயம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல,  மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறை மன்றாட்டின் வீடு" என அழை க்கப்படும். புற இனத்தார் ஓய்வு நாளை அனுசரிப்பதன் மூலம் கடவுளின் உடன்படிக்கையின் சொந்தக்காரர்களாக மாறுகி றார்கள் எனவே அவருடைய ஆலயம் அவர்களுக்காக திறக் கப்படுகிறது.
நம் தேவாலயம் என்பது திருச் சபை, மேன்மை பொருந்திய அவை.  இனம், மதம், பாலினம் கடந்து, அனைவரும் வந்து செல் லக்கூடிய, அன்பையும் நற்செய் தியையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு பொதுவான வழிபாட்டுத் தலம். இது இறைவனின் இல்ல மாகவும், ஆன்மீக ஆதரவு, சமூக ம் மற்றும் அமைதியை வழங்கும் இடமாகவும் கருதப்படுகிறது. 
தேவாலயம் பாவிகளுக்கான மருத்துவமனை" என்பது போப் பிரான்சிஸ் The Church is the Hospital for sinners.மற்றும் பிற மதத் தலைவர்களால் வலியுறு த்தப்படும் ஒரு முக்கிய உருவக மாகும், இது பாவ மன்னிப்பு மற்றும் ஆன்மீக ஆறுதல் மூலம் ஆத்துமாவை குணப்படுத்தும் இடமாகக் கருதப்படுகிறது. நம்
தேவாலயங்கள் புனிதர்களின் அருங்காட்சியகம் அல்ல, மாறாக ஆன்மீக ரீதியாக நோயுற்றவர்க ளுக்கு ஆறுதல், மன்னிப்பு மற்றும் ஆன்மீக நலன் தரும் அனைவருக்குமான இடமாகும்.
3.அனைவருக்குமான அழைப்பு. An invitation to all. 
திருவெளிப்பாடு 7:9-17.
கிறிஸ்துவின் அன்பர்களே! திருத்தூதர் யோவான் அவர்களு க்கு பத்மு தீவில் கடவுள் வெளிப் படுத்திய  காட்சி என்னவென்றா ல்,விண்ணுலகில், கடவுளின் அரியனைக்கு முன்பாக இஸ்ர வேலரின் 12 குலத்திற்கு 12 ஆயிரம் வீதம் முத்திரையிடப்பட் டவர்களின் எண்ணிக்கைப் பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். 
(திருவெளிப்பாடு 7:4) கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ் ரேல் மக்களில் இவர்கள் மட்டுமே கடவுளின் அரியணை முன்பாக நின்று இருந்தார்கள்.ஆனால்,
இதன்பின் யாராலும் எண்ணி க்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக் கும் முன்பாக நின்றுகொண்டிரு ந்தார்கள்; இவர்கள் ஆட்டுக்குட் டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்ட  வெண்மையான தொங்கலாடை அணிந்தவர் களாய்க் கையில் குருத்தோ லைகளைக் பிடித்து கடவுளைத் தொழுதுகொள்ளும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. குருத் தோலைகள் என்பது  வெற்றி யின் அடையாளமாகும். மகா உபத்திரவத்தைத் தாண்டி, இயேசுவின் மூலமாக அவர்கள் பெற்ற வெற்றியை இது உணர்த் துகிறது.யோவான் கண்ட கூட்ட த்தினர் எல்லா குலம், மொழி, மக்களினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரட்சிப்பு உலகளாவியது மற்றும் திருச்சபையின் வெற்றி த்தன்மையைக் குறிக்கிறது.
வெண் அங்கிகள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நீதி யையும், குருத்தோலைகள் (Palm branches) வெற்றியையும், மகிழ்ச் சியையும், விழா உணர்வையும் குறிக்கின்றன.
பெரிய உபத்திரவம் (7:13-14): இவர்கள் "மிகுந்த வேதனையின் (Great Tribulation) வழியே வந்த வர்கள்".திரளான கூட்டம் என்பது இது ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிக்காமல், உலகெங்கி லும் உள்ள விசுவாசிகளைக் குறிக்கிறது, அவர்கள் எண்ணிக் கை மிகஅதிகம்.சிங்காசனத்தில் உள்ள ஆட்டுக்குட்டியானவர் (இயேசு) அவர்களைப் பராமரிப் பார்."ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகள்" என்பது நித்திய ஜீவனைக் குறிக்கிறது. கடவுள் அவர்களின் கண்ணீ ரைத் துடைப்பார் என்பது முழுமையான ஆறுதலைக் காட் டுகிறது.விண்ணரசு அனைவரு க்குமானது, என்பதை காட்டுகி றது.
4.அனைவருக்குமான இரட்சிப்பு. Salvation for All. மத்தேயு 15:21-28.
கிறித்துவின் அன்பர்களே!இயேசு யூதப் பகுதியிலிருந்து வெளியேறி, புற இனத்தார் வாழும் தீரு மற்றும் சீதோன் பகுதிகளுக்குச் சென்றார். இது நற்செய்தி அனைவருக்கும் உரியது என்பதைக் காட்டுகிறது
(தீரு மற்றும் சீடோன் (Tyre and Sidon) ஆகியவை மத்தியத் தரை க்கடல் கடற்கரையில் (தற்போ தைய லெபனான்) அமைந்திருந் த மிக பழமையான, வலிமைமிக் க ஃபீனிஷிய வணிக நகரங்கள். விவிலியத்தில், இவை கானானி யப் பெண்களின் தேசமாகவும், இயேசு கிறிஸ்து அற்புதம் செய்த இடங்களாகவும், வர்த்தக சிறப்பு மிக்க பகுதிகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.)
 தன் மகளுக்கு நலம் வேண்டி, இயேசுவைத் தேடிவந்த தாய், சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த ஒரு கிரேக்கப்பெண் என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிட்டிருக்க (மாற்கு 7:26), நற்செய்தியாளர் மத்தேயுவோ, அவரை, ஒரு கானானியப் பெண் (மத். 15:22) என்று குறிப்பிட்டு ள்ளார்

சீதோன் எல்லைக்குச் சென்ற இயேசு, ஒரு கானானியப் பெண்ணின் விடாமுயற்சி மற்றும் விசுவாசத்தைப் பாராட்டி, பிசாசு பிடித்த அவள் மகளைக் குணமாக்குகிறார்.  இது யூதர் அல்லாதவர்களுக்கும் இரட்சிப்பு உண்டு என்பதை உணர்த்துகி றது. இச்சம்பவம் இயேசுவின் பணி இஸ்ரவேலரைத் தாண்டி உலகிற்கானது என்பதை வெளிப்படுத்துகிறது. 
கானானிய பெண் நாய்' என்று யூதர்களால் அழைக்கப்பட்டவள்  இயேசுவின் கடினமான வார்த் தைகளையும் ( "பிள்ளைகளுக் குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். இதை பொருட்படுத்தாமல், உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசை யிலிருந்து விழும் சிறு துண்டு களை நாய்க்குட்டிகள் தின்னு மே" என்று மிகுந்த தாழ்மையுட னும் நம்பிக்கையுடனும் பதிலளி க்கிறாள். இந்த பதில் ஆண்ட வரை தொட்டது, உள்ளத்தை உருக்கியது ஒரு கணம் நின்று போனார்.இயேசு மறுமொழி யாக, "அம்மா, உமது நம்பிக் கை பெரிது. நீர் விரும்பிய வாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. சீடர்கள் புறஜாதியின ரை வெறுத்த நிலையில், இந்த சம்பவம் அவர்களுக்கு அன்பை யும், கிருபை, இரட்சிப்பு எல்லை யற்றது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. 
இந்த உலக மகளிர் தினத்தில்
கானானிய பெண்ணை பாராட்டுகிறேன்.
கானானியப் பெண்ணின் முக்கிய குணங்கள்:
அன்பர்களே! இந்த காணானிய
பெண்ணிடம் காணபாபட்ட முக்கிய குணங்கள்.
1.அளவற்ற விசுவாசம்: Great Faith.
இயேசு யூதர்களுக்கு மட்டுமான மீட்பர் அல்ல, தனக்கும் உதவ வல்லவர் என்று முழுமையாக நம்பினார்.
2.விடாமுயற்சி:Endeavor.
இயேசு ஆரம்பத்தில் மறுத்து, சீடர்கள் அவரை விரட்ட முயன்ற போதும், அவள் சோர்ந்து போகா மல் தொடர்ந்து வேண்டுதல் செய்தார்.
3,தாழ்மை/பணிவு: Humility. தன்னை "நாய்க்குட்டி" என்று உருவகப்படுத்தி இயேசு கூறியபோதும், கோபப்படாமல்,  அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசை யிலிருந்து விழும் சிறு துண்டு களை நாய்க்குட்டிகள் தின்னு மே" என்றார். 
4,புத்திசாலித்தனம் (Emotional Intelligence): இயேசுவின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த உண்மையை உணர்ந்து, ஆழமான பதிலைக் கூறி இயேசு வின் மனதை மாற்றினார்.
5. அன்பு : ,Love. தன் மகளின் துன்பத்தைக் கண்டு, அவளைக் குணமாக்க எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்த தாயுள்ளம் கொண்டவர். அவளுடைய இந்த விசுவாசத்தின் காரணமாக, அவளுடைய மகள் அந்த நிமிட மே குணமடைந்தாள். 
அன்பர்களே!கடவுள் அனைவர் மீதும் இரக்கம் காட்டி, யாரும் கெட்டுப் போகாமல் இரட்சிக் கப்பட வேண்டும் என்று விரும் புகிறார். இரட்சிப்பு உலகளாவி யது.இது அனைவருக்கும் இலவ சமாகக் கிடைக்கும் தேவனின் கிருபை மற்றும் பரிசு. இயேசு வை விசுவாசித்து ஏற்றுக்கொள் ளும் ஒவ்வொருவருக்கும் அது சொந்தமாகிறது.

 Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..


Note: This sermon has been prepared to deliver at CSI Bishop Newbegin Memorial Church, Athur  Chengalpet on 8th March, 2026.



Christ and the Canaanite Woman (1594–1595) by Annibale Carracci. Wiki .



Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).