விடுவித்து வாழ அழைப்பு.(257):Call to be Liberative.ஏசாயா: 1:12-17.திருப்பாடல் 9.எபேசியர் : 6:5-9 லூக்கா 13:10-17.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது,"விடுவித்து வாழ அழைப்பு.
 நமது ஆண்டவர் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்தும் பாவ ம் மற்றும் மரணத்தின் பிடியிலி ருந்தும் மீட்கும் ஒரே சக்தியாக இருக்கிறார்.தமக்கு கீழ்ப்படியா த, பாவம் செய்த மககளை, தம் மீது நம்பிக்கை வைக்கும்போது, தண்டிப்பவராக மட்டுமல்லாமல் , மன்னித்து மீட்கும் அன்புள்ள தந்தையாகத் தம்மை வெளிப்ப டுத்துகிறார்.நீதிபதிகள் புத்தகத் தின்படி, இஸ்ரவேல் மக்கள் கடவுளை மறந்து பாவம் செய்து, அதனால் துன்பங்களைச் சந்தித் து, மீட்பிற்காகக் கதறும்போது, அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும், நீதியை நிலை நாட்டவும், அவர்களை சரியான பாதையில் வழிநடத்தவும் கடவு ள் நீதிபதிகளை நியமித்தார். நீதிபதிகள் பாதுகாவலர்களே,
இவர்கள் கடவுளின் இறைவழி காட்டிகள் அல்ல. நீதிபதிகள் 12 பேர்கள் கடவுள் நியமித்தது இஸ்ரேல் மக்களை அந்நியர்கள் படையெடுப்பில் இருந்துபாது காத்துக் கொள்ளவும், அவர்கள்
கடவுளிடம் மீண்டும் கொண்டு வருவதற்காக தான்.ஆனால், இயேசு கிறிஸ்து நம் பாவத்தின் கட்டுகள், சாபம், மற்றும் அடிமை த்தனத்திலிருந்து முழுமையான விடுதலையை வழங்க அழைக்கி றார். பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை, எனவே இயேசுவின் உண்மையை (சத்தியம்) ஏற்றுக்கொள்ளும் போது மட்டுமே உண்மையான மனநிம்மதியும் விடுதலை வாழ்வும் கிடைக்கும். இயேசுவை ஆண்டவர் என விசுவாசித்து, அவரை நோக்கிக் கூப்பிடும் எவருக்கும் இந்த மீட்பு கிடைக் கும். "நானே கர்த்தர்; என்னைய ல்லாமல் இரட்சகர் இல்லை" (ஏசாயா 43:11).என தீர்க்கர் கூறுகிறார்.
1.மனம் திருந்தி வாழ அழை ப்பு.Call to be Repeanted.ஏசாயா 1:12-17
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர்  எசாயா வின் காலம்,கி.மு. எட்டாம் நூற் றாண்டு.உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் ஆமோட்சின் மகன் எசாயா இறைவாக்குறித் தார்.அவர் கடவுளுக்காக உண்மையுடன் தீர்க்கதரிசனம் உரைத்ததால்,மன்னன் மனாசே யின் ஆட்சிக்காலத்தில், ஒரு மரத்தின் உள்ளே ஒளிந்து கொண்டிருந்தபோது, மனாசே அந்த மரத்தை இரண்டாக அறுத்து அவரைக் கொன்றதாக தல்மூத் (Talmud) கூறுகிறது. தியாகியாக மரணமடைந்தார். 
இறைவாக்கினர் ஏசாயா இஸ்ரவேல் மக்களை உண்மை யான கடவுளின் மக்களாக இருக்க அழைக்கிறார் அவர்கள்
வெளிப்புற ஆராதனை மற்றும் சடங்குகளைக் காட்டிலும், நீதி மற்றும் நேர்மையான வாழ்க்கை யே தேவனுக்கு உகந்தது என்பதை வலியுறுத்துகிறார். 
எது உண்மையான ஆராத னை? What is true worship?
ஏசாயா உண்மையான ஆராத னை என்பது,மனந்திரும்புதல், அநீதியை நீக்குதல், மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவு தல், அதாவது நீதி செய்தலே உண்மையான ஆராதனை என ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார்.
பாவம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு தேவாலயத் திற்கு வந்து பலியிடுவது, ஆராதனை செய்வது  தேவன் அருவருக்கும் செயல் என்கிறார்.
மக்கள் தேவாலயம் வந்து எனக்கு ஆராதனை செய்கிறார் கள்; ஆனால், அவர்களின் இருதயம் பாவம் நிறைந்ததாக உள்ளது. பாவத்தோடு ஆராத னை செய்வது, பரிசுத்தமுள்ள தேவனுக்கு அருவருப்பானது மற்றும் அர்த்தமற்ற சடங்குகளா க கருதப்படுகிறது 
"Worship Without Obedience is Worthless"( William Barclay) .பாவத்துடன் கூடிய ஆராதனை இறைவனுக்கு ஒரு பாரமாக மாறுகிறது. பழிவாங்கும் கை கள்  மக்கள் தங்கள் கைகளை உயர்த்தி ஜெபித்தாலும், அந்த கைகள் ரத்தப்பழி அல்லது அநீதியால் நிறைந்திருப்பதால், தேவன் கண்களை மூடிக்கொண் டு ஜெபத்தைக் கேட்க மறுக்கி றார். இதய மாற்றம் இல்லாத ஜெபம் வெறும் சடங்குகள் வீண்.வழிபாடு என்பது சடங்கு அல்ல, அது நீதியான வாழ்க்கை யோடு இணைந்திருக்க வேண் டும். சமூகத்தில் பாதிக்கப்பட் டோருக்கு நீதி கிடைக்கச் செய்வதே உண்மையான பக்தி. 
எனவே,உண்மையான வழிபாடு என்பது நன்மை செய்வதில், நீதியைத் தேடுவதில், ஒடுக்கப்ப ட்டவருக்கு உதவுவதில் மற்றும் அனாதைகள், விதவைகளின் வழக்கை விசாரிப்பதில் வெளிப் படுகிறது. உண்மையான மனம் திரும்புதலே உண்மையான வழிபாட்டின் அடையாளம். 
மனம் திரும்புதலுக்கான அழைப்பு : 
முதலில் சுத்தமாகுங்கள், தீச் செயல்களைச் செய்வதை நிறுத் தி, தங்களை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். நன்மை செய்யுங்கள், தீமை செய்வதை நிறுத்தி, நன்மையைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். நியாய த்தைத் தேடுங்கள்: ஒடுக்கப்பட்ட வர்களுக்கு நீதியை நிலை நாட்டுங்கள்  அனாதைகள் (திக்கற்ற பிள்ளைகள்) மற்றும் விதவைகளின் வழக்கைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே
உண்மையான வழிபாடாகும்.
அதற்கு, முதலில் மனமாற அழைக்கிறார்.
நன்மை செய்யப் படியுங்கள் (Learn to do good ) என்பது, நற் செயல்களைக் கற்றுக்கொண்டு, அவற்றைச் செய்யப் பழக வேண்டும்.. என்பதே. நாம் கற்கும் கல்வி, பதவி, பட்டங்கள் அனைத்தும் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் மனம் திருந்தி வாழ அழைக்கப்படுகிறோம்.
2.விடுதலை பெற்று வாழ அழைப்பு.A call to live liberated.
 எபேசியர் : 6:5-9 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! தலைவன் - அடிமை உறவு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட பணியாக மாற்றுகி றது.அடிமைகள் தங்கள் தலை வர்களைக் கிறிஸ்துவைப் போல மதிக்க வேண்டும். அதே நேரத் தில் தலைவர்கள், விண்ணகத் தில் அனைவருக்கும் ஒரே ஆண் டவர் இருக்கிறார் என்பதை அறிந்து, அடிமைகளை மிரட்டா மல் அன்புடன் நடத்த வேண்டும். இது சமூக நிலையைத் தாண்டி சமத்துவத்தை வலியுறுத்துகி றது. 
 அடிமைகள் என்பவர்கள் தற்கா
லத்தில் பணிசெய்பவர்கள் அனைவரையும் குறிக்கும். எனவே, இவர்கள் பூமிக்குரிய தலைவர்களுக்கு உண்மையான பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிய வேண்டும்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள், தங்கள் வேலையை வெறும் மனுசருக்குப் பிரியமாக (Eye-service) செய்யாமல், கிறிஸ்துவி ன் உண்மையான ஊழியக்கார ராக, மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.தங்கள் வேலைகளை  தேவனுடைய சித்தத்தின்படி, தாங்கள் கிறிஸ்துவுக்கு ஊழி யம் செய்வது போலச் செய்ய வேண்டும்.
அன்பானவர்களே!எஜமானர்கள்  தங்களின் பணியாளர்களை மிரட்டுவதையும், கொடுமைப்படு த்துவதையும் தவிர்க்க வேண்டு ம்.பணியாளர்களுக்கும் எஜமா னர்களுக்கும் பொதுவான,  ஒரு தலைச்சார்புஇல்லாத ஆண்டவர் விண்ணகத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
திருத்தூதர் பவுல் அடிகளார்
அந்தக் காலத்தில், அடிமைகள் எஜமானரின் உடைமையாகக் கருதப்பட்டனர், ஆனால் பவுல், அவர்கள் கிறிஸ்துவுக்குள்சமமா னவர்கள் என்ற உண்மையை வலியுறுத்தினார்.கிறிஸ்துவுக்கு உண்மையாக சேவை செய்வ தன் மூலம், அந்த அடிமைத்தனத் தையே ஆராதனையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. பணியிடத்தில் (Workplace) கிறித்தவர்களாகிய நாம் செய்யும் வேலைகளும், சக மனிதர்களை நடத்தும் விதமும், நம்முடைய உண்மையான எசமானராகிய கிறிஸ்துவுக் குச் செய்யும் ஊழியமாக இருக்க வேண்டும் என்பது இதன் சாராம்சம்.அக்காலத்தில்,
ரோமானிய உலகில் அடிமை கள் பெரும்பாலும் கொடூரமாக நடத்தப்பட்டனர். அவர்களை சவுக்கால் அடிக்கலாம், முத்திரை குத்தலாம், சிதைக்கலாம் அல்ல து கொல்லலாம். தண்டனையாக ஒரு அடிமையை விற்கலாம், இதனால் அவர் தனது குடும்பத் திலிருந்து என்றென்றும் பிரிக்க ப்படுவார். அகஸ்டஸ் சீசர் (அகஸ்டஸ் சீசர் (கி.மு. 63 - கி.பி. 14) ரோமானியக் குடியரசை முடிவுக்குக் கொண்டுவந்து, முதல் ரோமானியப் பேரரசராக (கி.மு. 27 - கி.பி. 14) ஆட்சி செய் தவர். இவர் ஜூலியஸ் சீசரின் வளர்ப்பு மகன்.கயஸ் ஜூலியஸ் சீசர் ஆக்டேவியன்' என அழைக்கப்பட்டார்.அகஸ்டஸ்' (கண்ணியத்திற்குரியவர்) என்ற பட்டத்தை வழங்கியது.)
தனது செல்லப்பிராணி காடை யை தற்செயலாகக் கொன்ற ஒரு அடிமையை சிலுவையில் அறைந்தார்.இச்சூழலில், திருத்தூதர் பவுல் அடிகளார்,
"இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக் கிறீர்கள். (கலாத்தியர் 3:28)
எனக் கூறுகிறார். ஆனாலும்,
"அடிமை நிலையில் ஆண்டவரா ல் அழைக்கப்பட்டவர் ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர் கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார். (1 கொரிந்தியர் 7:22) என்பதை நாம் மனதில்
கொள்ளவேண்டும்.
3.இயேசுவிடம் விடுதலைப் பெற அழைப்பு:Call to receive freedom in Jesus.லூக்கா 13:10-17.
கிறித்துவுக்கு பிரியமானவர் களே! நமது ஆண்டவர் இயேசு
கிறித்து எருசலேமை நோக்கி
ஒரு ஓய்வுநாளில் சென்றுகொ ண்டிருந்தார். வழியில் தொழு கைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். அங்கே,
பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். ஆண்டவ ரின் கண்கள் அந்த அம்மா மீது
பட்டது.18 ஆண்டுகளாக பாதிக்க ப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இயேசு விடுதலையை அளித்து, சட்டங்களை விட அன்பும் கரு ணையும் முக்கியம் என வலியு றுத்தினார். 
ஜெபக்கூடத் தலைவர்கள் மக்க ளை விட, தங்களின் சிறிய சட்டங்களைக் காப்பதில் அதிக அக்கறை காட்டினர். இயேசு இந்த சட்டவெறித்தனத்தை (Legalism) கண்டித்தார்.
ஓய்வுநாள் என்றால் என்ன?
What is Sabbath?
அன்பர்களே!ஓய்வுநாள் என்பது ஓய்வு எடுப்பதற்காக மட்டுமல்ல, தேவைப்படுபவர்களுக்கு நன் மையைச் செய்வதற்கும், அவர் களை விடுவிப்பதற்கும் உரிய நாளாகும்.
சப்பாத் (Shabbat/Sabbath) என்பது யூத மதத்தில் ஒவ்வொரு வார மும் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி சனிக்கிழமை மாலை வரை கடைப்பிடிக்கப்படும் புனித மான ஓய்வு மற்றும் வழிபாட் டு நாள் ஆகும். இது படைப்பின் ஏழாவது நாளை நினைவுபடுத்து கிறது. இந்த நாளில் வேலைக ளை நிறுத்தி, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு, பிரார்த்த னைகள், நல்ல உணவு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளில் ஈடுப டுவார்கள்
ஒரு மிருகத்தை (மாடு/கழுதை) ஓய்வுநாளில் அவிழ்த்து தண்ணீர் கொடுக்கும்போது, 18 ஆண்டுகளாக பிசாசினால் கட்ட ப்பட்ட ஒரு பெண்ணை ஏன் விடு விக்கக்கூடாது என இயேசு கேள்வி எழுப்புகிறார்.இயேசு
வின் அற்புதத்தைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக, சட்டத் தை மீறியதாக பரிசேயர்கள் கோபமடைந்தனர், இது அவர் களின் கள்ளத்தனத்தை (Hypocrisy) வெளிப்படுத்தியது.
இயேசு அவரைக் கண்டு அவளைத் தொட்டு அருகே கூப் பிட்டு, "அம்மா, உமது நோயிலிரு ந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, உடனடியாக நிமிர் த்தினார், இது சாத்தானின் பிடி யிலிருந்து விடுதலையைக் குறி க்கிறது. 
இந்தப்பகுதி, சட்டத்தின் எழுத் துக்கு அடிமையாகாமல், இயேசு வின் அன்பின் வழியில் நடப்பத ன் முக்கியத்துவத்தை வலியுறுத் துகிறது..சட்டங்களை விட மனித அன்பும் கருணையும் முக்கியம் என வலியுறுத்தினார். Amen.



Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..







Christ healing an infirm woman by James Tissot, 1886–1896
Wiki.

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).