The fifth Friday of Lent. ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர் (258) The Lord who is with the servant. ஏசாயா 50:4-11.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 5ஆம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," "ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர்."
அன்பர்களே! யார் ஊழிலயன்?
ஊழியன் என்பதற்கு ஜான் கால்வின் (1509–1564)(One of the Fathers of Modern Democr acy) கூறும் கருத்துபடி (பதினாறாம் நூற்றாண்டின் ஒரு மிகச்சிறந்த பிரெஞ்சு இறையி யலாளர், போதகர் மற்றும் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஆவார். இவர் கால்வினிசம் (Calvinism) என்றழைக்கப்படும் கிறிஸ்தவ இறையியல் கொள் கையை உருவாக்கினார்) "கிறிஸ்து எவ்வாறு ஒரு "கல்வி மானைப் போல" கர்த்தருக்குச் செவிசாய்த்து, போதனைகளைப் பெற்று, இளைப்படைந்தவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கும் போதகராகச் செயல்பட்டாரோ அவ்வாறு செயல்படுபவரே கர்த்தரின் ஊழியக்காரன்". என்கிறார்.திருவிவலியம் “ஊழியர்” என்பதற்கு "டையக் கோனாஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் அடிக்கடி பயன்படுத்துகிறது. சமய கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூல் இந்த வார்த்தையை இவ்வாறு விளக்குகிறது: “இது உயர்ந்த அந்தஸ்தை குறிப்பதில்லை. மற்றவர்களுக்கு சேவை செய்பவர் என்ற கருத்தையே கொடுக்கிறது; இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றினால் மட்டுமே, . . . ஊழியம் என்ன என்பதை ஒரு கிறிஸ்தவர் சரி யாக புரிந்துகொண்டிருக்கிறார் என்பது உண்மை. ஊழியர் இயேசுவைப்போல, "மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற் கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். (மத்தேயு நற்செய்தி 20:28)
தொண்டு ஆற்றும் ஊழியனே கர்த்தரின் "தாசன்" எனப்படு வர்.ஏசாயா 50:4-11. கர்த்தரின் தாசனின் மூன்றாவது பாடலா கும். தாசன் அல்லது ஊழியக் காரன் என்றால் நம் ஆண்டவர் இயேசு கிறித்துவே.இந்த வசனங்கள் கிறிஸ்து தேவனின் சித்தத்திற்குத் தடையின்றி கீழ்ப் படிந்து, நமக்காக நீதியைப் பெற் றுத்தந்ததை உறுதிப்படுத்துகி ன்றன.
1.தாசன் என்பவர் எப்படி இருப்பார்? How will a servant be?"
அன்பர்களே! தாசன் என்பவர், சோர்ந்துபோனவர்களைத் தேற்றவும், துன்பங்களுக்கு மத்தியிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, உறுதியுடன் சேவை செய்பவர்கள், நிந்தை மற்றும் பாடுகளைச் சந்தித்தாலும், தேவ உதவியை நம்பி, தாழ்மையுடன் தன் பணியை நிறைவேற்றும் முன்மாதிரியை பெற்றவர்கள்.
தேவனுடைய தாசன் 'கல்விமா னின் நாவை' (கற்றறிந்த நாவைப்) பெற்று, இளைப்படைந் தவர்களுக்கு ஆறுதல் வார்த்தை களைச் சொல்கிறார்கள்
தினமும் தேவனுடைய வார்த்தை யைக் கேட்டு, சீடனைப் போலக் கற்றுக்கொள்கிறார்.
அவர் தன் பணியில் துன்பங்க ளைச் சந்திக்கிறார். அடிக்கிறவர் களுக்கு முதுகையும், தாடியைப் பறிக்கிறவர்களுக்குத் தன் முகத் தையும் கொடுக்கிறார்.இது இயேசுவின் பாடுகளை குறிக் கிறது. நிந்தனை மற்றும் துப்புத ல்களிலிருந்து தன் முகத்தை மறைக்கவில்லை.கர்த்தராகிய ஆண்டவர் தனக்குத் துணை யாக இருப்பதால், அவர் வெட் கப்படமாட்டார். அவர் நிந்தை களைத் தாங்கிக் கொண்டு, தன் முகத்தை 'அக்கினிச் சுடர் போல' உறுதியாக வைத்திரு க்கிறார்.
2.தாசனின் பணிகள். Characteristics of Dasan or a Servant
அன்பர்களே! தாசன் என்பவர்
கர்த்தர் நீதிமானாக்குவார் என்ற நம்பிக்கையில், எதிர்ப்புகளைச் சந்திக்கிறார்.ஊழியன் தினமும் தேவனிடம் கற்றுக்கொண்டு, கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுபவன்.துன்பங்களை சுமப்பார். தாசன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்.
சோர்ந்திருப்பவர்களுக்கு வார்த்தையினால் ஆறுதல் அளிப்பவர்.பாடுகள் வந்தாலும் பின்வாங்காமல், தேவ உதவி யுடன் பணியைத் தொடர்கிறார்.
ஊழியக்காரன் தேவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யாமல், தனது துன்பப் பாதையை முழு மையாக ஏற்றுக்கொள்கிறான். "மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. "(மத்தேயு நற்செய்தி 27:12)
கர்த்தராகிய ஆண்டவர் தனக்கு த் துணையாக இருப்பதால், ஊழியக்காரன் வெட்கப்பட மாட்டான், நிந்தைகளைத் தாங்குவான். பாடுகிற ஊழியக் காரனின் (கிறிஸ்துவின்) முன்மாதிரியான கீழ்ப்படிதல், கர்த்தருக்குக் செவிசாய்த்தல் மற்றும் துன்பங்களிலும் தேவ னை நம்பியிருத்தலை விளக்கு கிறது.
இருளில் இருப்பவர்கள் பாடுகிற ஊழியக்காரனை நம்பி, கர்த் தரின் நாமத்தின் மேல் சார்ந்தி ருக்க வேண்டும். தங்கள் சொந்த ஒளியை (சுயநீதி) உருவாக்குப வர்கள் இறுதியில் வேதனையை அறுவடை செய்வார்கள் என எச்சரிக்கிறார்.6 -ஆம் வசனத் தில், அவர் நிந்தனைகளையும், முதுகில் அடிப்பதையும், கன்ன த்தில் அறையும்போது பொறு மையுடன் தாங்கிக்கொண்டதை, பாவம் செய்த மனிதகுலத்தி ற்காக அவர் தாங்கிய நீதியாகக் கால்வின் குறிப்பிடுகிறார்.
எனவே,தேவனைச் சார்ந்திரு ப்பதன் மூலம் வரும் வெற்றி.
இந்த அதிகாரத்தின் மூலம், கிறிஸ்து உண்மையான மேசி யாவாக, பாடுகளின் வழியே இரட்சிப்பைக் கொண்டுவந்தார் என்பது தெளிவாகிறது.
3. ஊழியர்கள் எப்படி இருக்க
வேண்டும்? How should the servants be?
அன்பர்களே! இயேசுவின் காலத் தில் ஊழியர்களான மதத் தலை வர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளா க இருந்தவர்கள் வேதபாரகரும் பரிசேயருமே. மக்களுக்கு ஆன் மீக வழிநடத்துதலையும் அறிவு ரைகளையும் கொடுப்பதற்கு பதிலாக இந்தப்பொய்யான ஊழியர்கள் கடுமையான பாரம் பரியங்களுக்கும் சட்டங்களுக் குமே முக்கியத்துவம் கொடுத் தனர்.சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார் கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.
(மத்தேயு நற்செய்தி 23:4)
இயேசு அவர்களை கடிந்து கொண்டார். அவர்கள் பதவி மோகம் பிடித்தவர்களாக, அந்த ஸ்தை நாடுகிறவர்களாக, சுய நலவாதிகளாக இருந்தனர். அவர்கள் “தங்கள் கிரியைகளை யெல்லாம் மனுஷர் காணவேண் டுமென்று செய்”தார்கள்.
"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீ ர்கள். (மத்தேயு நற்செய்தி 23:15)
ஆனால் நீங்கள் "ரபி" என அழை க்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். (மத்தேயு நற்செய்தி 23:8) என்றார்.
ஆனால், ஆண்டவர் ஊழியக் காரன், "உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். (மத்தேயு நற்செய்தி 23:11)என்றார்.
அன்பர்களே!
உண்மையான ஒரு கிறிஸ்தவ ஊழியனுக்கு பவுல் என்னே ஒரு சிறந்த முன்மாதிரி! அவருடைய மிகச் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றி இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டிய அந்தச் சுயநலமற்ற வாழ்க்கையின்படி வாழ்கிறவர்கள் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவியையும் நற்செய்தியின் ஆறுதலையும் தாராளமாக அளிக்கின்றார்கள்.
ஒவ்வொரு ஊழியனிடமும் ஆண்டவர் உடன் இருக்கிறார்.
"இளைஞனாய் இருந்திருக்கி றேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மை யாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. (திருப்பா டல்கள்(சங்கீதங்கள்) 37:25)
இறுதியாக, கிறித்தவ ஊழியர் கள் இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு, உண்மையும், அன்பும், சேவை மனப்பான்மையும் கொண்டவர் களாக, ஆவியிலே அனலாக, தேவ வார்த்தையை விவேகத்து டன் போதிப்பவர்களாக, தங்களை அற்பணித்துச் சேவை செய்பவர்களாக இருக்க வேண் டும். முக்கியமாக பண ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.அவ்வாரு இருக்க
நம் ஆண்டவர் அருள் புரிவாராக!
ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
நீங்கள் தேவனுக்குப் பங்காளி கள்

Comments
Post a Comment