The fourth week of Lent.எல்லை கடந்து அருட்பொழிவு செய்யும் ஆண்டவர் The Lord who Ordains beyond borders.( 256). ஏசாயா 45:1-9.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 4 -  காம் வெள்ளி தலைப்பாக நமக் கு கொடுக்கப்பட்டிருப்பது," 
எல்லை கடந்துஅருட்பொழிவு 
செய்யும் ஆண்டவர்" என்பதாகும்.
இயேசுவின் அருட்பொழிவு இடங்கள்: The territories of Jesus Ministry.
அன்பானவர்களே நமது ஆண்ட வர் அருட்பணி ஆற்றிய இடங்க ள் 80% to  90% கலிலேயாவை உள்ளடங்கிய வடக்கு இஸ்ரேல்  பகுதியாகும். கிழக்கு யோர்தான் நதிப் பகுதி, யூதேயா, சமாரியா பகுதிகளை உள்ளடங்கியவை. இவைகள் கப்பர்நகூமை தலை மை இடமாக கொண்டு நாசரேத், கானா, நாயின், கோராசின், பெத்சாய்தா, கலிலேயே கடற் கறைப் பகுதி, தெற்கு யூதேயா, எருசலேம், பெத்தானியா, 
மற்றும் யோர்தான் நதிப்பகுதி கள்.இப்பகுதிகளில் அற்புதங்க ள் செய்தார், நற்செய்தி வழங்கி னார், மக்களை நேரிடையாக சந்தித்தார், கிராமங்கள், நகர ங்கள் என பல ஊர்களை கடந் தார். பசியுடனும், களைப்புடனும் அருட்பொழிவு செய்தார்.மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என வருந்தினார்,
1.ஆண்டவர் எல்லைகளை கடந்து அருட்பொழிவு செய்த இடங்கள்: what ate the Gentiles territories Jesus Ministered?
அன்பானவர்களே! நம் ஆண்ட
வரின் 3 1/2 வருட அருட்பணி யில் சில புற இனத்து மக்கள்
வசிக்கும் இடங்களும் குறிப்பி டத்தக்கவை.
1.பொனிசியா என்ற டயர் மற்றும் சீதோன் பகுதிகள். இவைகள் வட மேற்கு கலிலே யாப் பகுதிகளாகும் தற்சமயம் தெற்கு லெபனான் பகுதிகளா கும்.கானானிய பெண்ணின் (A Syrophoenician woman.) மகளை பிசாசின் பிடியிலிருந்து குணப்  படுத்தினார்.
2.தெக்கபோலிஸ். Decapolis: மாற்கு 7:31-37-
தெக்கபொலிஸ் என்றால் பத்து
கிரேக்க ரோமன் நகரங்களை
உள்ளடங்கியவை. இது தென்
கிழக்கு கலிலேயா கடற்பகுதியா கும்.இயேசு ஒரு செவிடு மற்றும் திக்கிப் பேசும் (deaf and mute) மனிதனின் காதுகளில் விரல் வைத்து, எச்சில் தொட்டு, "எப்பாத்தா" (திறக்கப்படு வதாக) என்று கூறி அற்புதமாக  செவிட்டு ஊமையனை (குணப் படுத்தினார்.
3.கெரசேனர் the Gadarenes /Gerasenes. மாற்கு 5:20.
அவர்கள் கடலுக்கு அக்கரை யிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இப் பகுதியில் இயேசு செய்த முதன்மையான அற்புதம், பிசாசு பிடித்திருந்த ஒருவனை குணமாக்கியதாகும். கத்ரேனர் நாட்டில் லேகியோன் எனப்படும் legion" of demons. பல பிசாசுகளை அவனிலிருந்து நீக்கி, இயேசு தன் வல்லமையை வெளிப்படுத்தினார். குணமடை ந்த அந்த மனிதன் தெக்கப் போலி முழுவதும் இயேசுவின் அற்புதங்களை அறிவித்தான். 
4 Caesarea Philippi-சிசேரியா, பிலிப்பி.மத்தேயு 16:16) 
 இது வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பழங்கால  சாத்தானின் கோட்டை என கருதப்பட்டநகரம்.  இது எர்மோன் மலைக்கு கீழே உள்ள இடம். இது பேன் (Pan) என்ற கிரேக்க கடவுளுக்கு அர்ப் பணிக்கப்பட்ட, பாவம் நிறைந்த இடமாகக் கருதப்பட்டது. இங்கு " மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத்தேயு16:16)  என்று 
இயேசு கிறிஸ்துவை, சீமோன் பேதுரு விசுவாச அறிக்கை செய்த இடம்.
5.தெக்கபோலிக்கு அருகில் உள்ளப் பகுதி.மத்தேயு 15:32-39
இயேசு 4000 பேருக்கு உணவளி த்த அற்புதம் (Feeding the 4000) மத்தேயு 15:32-39 மற்றும் மாற்கு 8:1-10 ஆகிய நற்செய்திப் புத்தகங்களில் விவரிக்கப்பட்டு ள்ளது. இது புற இனத்து மக்களு க்கானது. ஆண்டவர் 5000 பேருக் கு உணவளித்த அற்புதம் யூத மக்களுக்கானது.நம் கடவுள் அனைவருக்குமான கடவுள். அவரின் 3 1/2 ஆண்டு அருட்ப ணி அனைத்து மக்களை உள்ள டக்கியது.
2.ஆண்டவர் 3 1/2  ஆண்டுகள்
அருட்பணியாற்றினார் என்பதற்கான விளக்கங்கள்.
Jesus' public ministry lasted approximately three and a half years based on the Gospels and Prophecy.
அன்பானவர்களே! ஆண்டவரின்
அருட்பொழிவு காலத்தை திருமு ழுக்கு முதல் சிலுவை பாடுகள் வறை  கணக்கில் கொண்டு கீழ்கண்ட பகுதிகள் நமக்கு விளக்குகின்றன.
1.நற்செய்தியாளர் யோவான்
அவர்களின்  நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பஸ்கா பண்டிகைகள் (John 2:13, 6:4),11:55) இயேசுவின் மூன்று ஆண்டுகால பொதுப் பணியைக் குறிக்கின்றன. 
1.இயேசு கலந்துகொண்ட   கானா திருமணத்திற்குப் பின் வந்த முதல் பாஸ்கா (யோவான் 2:13), முதல் பாஸ்கா (அதிகாரம் 2): இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்த நிகழ்வை உறுதி படுத்துகிறது.
2.இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்திற்கு முன் வந்த இரண்டாவது பாஸ்கா (யோவான் 6:4), இயேசு 'வாழ்வு தரும் உணவு' என்பதை உறுதி படுத்துகிறது.  
3.இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்புடன் தொடர் புடைய இறுதி பாஸ்கா (யோவான் 11:55, 12:1, 13:1). 
இயேசுவே உண்மையான பாஸ்கா ஆட்டுக்குட்டியாக பலியிடப்பட்டதைக் குறிக்கிறது.
4. வரலாற்றுச் சான்றுகள்: கி.பி. 26 முதல் 36 வரை யூதேயா வின் ஆளுநராக இருந்தவர் மற்றும் திபேரியஸ் சீசரின்ஆட்சி க்காலம், இயேசுவின் ஊழியக் காலத்தையும் மரணத்தையும் கணக்கிட உதவுகிறது.
 4.இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். (லூக்கா நற்செய் தி 3:23)
5. இறைவாக்கினர் தானியேல் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மிகத் தெளிவாகத் தீர்க்கதரிச னம் உரைத்துள்ளார். குறிப்பாக, வானத்தின் மேகங்கள்மீது வரும் "மனுஷகுமாரன்" (தானியேல் 7:13-14) மற்றும் பாடுபட்டு, பலியிடப்பட்டு, முடிவில் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் "மேசியா" (தானியேல் 9:24-26) ஆகிய அடையாளங்கள் இயேசு வை நேரடியாகக்குறிக்கின்றன. 
3.எல்லை கடந்து அருட்பணி யாற்ற அழைக்கும் ஆண்டவர். The Lord calls us to cross borders and serve.ஏசாயா 45:1-9
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுள் தன் பணியை நிறைவேற்ற அந்தந்த காலத்தி ல் தனக்கு ஏற்ற மனிதர்களை மதங்கள்,  இனங்கள், மற்றும்  நாடுகளை  கடந்து அழைக்கின் றார். அவர்கள் மூலம் மாபெரும் காரியங்களை இவ்வுலகில் நடத் தி இருக்கிறார், நடத்தி கொண் டும்  வருகிறார்,இதற்குமுன்னோ டியாக அமைந்ததுதான் சைரஸ் என்ற பாரசீகமன்னனை (பெர்சி யா)அவர் தன்னுடைய மேய்ப்ப னாக அருட்பொழிவு செய்கி றார். இது விந்தையிலும் விந் தை அற்புதத்திலும் அற்புதம்.
பெர்சியாவின் இரண்டாம் சைரஸ் ( கி.மு.  600 – 530), பொது வாக சைரஸ் தி கிரேட் என்று அழைக்கப்படுபவர், அச்செ மேனிட் பேரரசின் (Achaemenid Empire) நிறுவனர் ஆவார் . பெர்சிஸிலிருந்து வந்த அவர், மீடியன் பேரரசை தோற்கடித்து , பண்டைய மத்திய கிழக்கின் முந்தைய நாகரிக மாநிலங்கள் அனைத்தையும் இனைத்து மேற்கு ஆசியாவின் பெரும் பகுதி மற்றும் மத்திய ஆசியா வின் பெரும்பகுதி முழுவதும் பரந்த அளவில் விரிவடைந்து , வரலாற்றில் மிகப்பெரிய பேரரசாக ஒன்றை உருவாக்கி னார். இது கிழக்கில் சிந்து சமவெளி வரை பரவியது.
மகா சைரஸ் என்கிற பாரசீக மன்னன் கோரேசுவை கர்த்தர் தமது "திருமுழுக்கு பண்ணப் பட்டவனாக" (Messiah) அழைத்து, பாபிலோனை வென்று இஸ்ர வேலரை விடுவிக்கப் பயன் படுத்துவார் என்ற இறைவார்த் தையை   ஏசாயா 45:1-9ல் கூறுகி றது. கடவுள் கோரேசுவை பெயர் சொல்லி அழைத்து, உலக நாடு களை அவருக்குக் கீழ்ப்படுத்து வார், இதன் மூலம் கர்த்தரே உண்மையான கடவுள் என்ப து வெளிப்படும். மனிதன் கடவுளின் திட்டத்தை கேள்வி கேட்கக்கூடாது, அவர் குயவன், நாம் களிமண்.என்பதை மறந்து
வீடக்கூடாது.இவர் யூதர்களை பாபிலோனிய சிறையிருப்பிலி ருந்து விடுவித்து, எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்ட உதவி யவர். யூதர் அல்லாதவராக இரு ந்தாலும், கர்த்தர் கோரேசுவை பெயர் சொல்லி அழைத்து, அவருக்கு முன்கூட்டியே வழிக ளைச் சரி செய்து, பாபிலோனின் வெண்கலக் கதவுகளை உடை த்து, இரகசிய இடத்திலுள்ள புதையல்களை அவருக்குத் தருவதாக வாக்குறுதி அளிக்கி றார். இஸ்ரவேலருக்காக கோரேசு பயன்படுத்தப்படுகி றார். கோரேசு கர்த்தரை அறியா திருந்தாலும், கர்த்தர் அவரைப் பலப்படுத்துகிறார். இதனால், கர்த்தரைத் தவிர வேறு தேவன் இல்லை என்பது உலகம் முழுவ தும் அறியப்படும்.
வெளிச்சத்தையும், இருளையும், நன்மையையும், தீமையையும் உண்டாக்குகிறவர் கர்த்தரே. களிமண் குயவனைப் பார்த்து "நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்க முடியாதது போல, படைப் பான மனிதன் சிருஷ்டிகரான கடவுளின் செயல்களைக் கேள்வி கேட்க உரிமை இல்லை. 
இந்தப்பகுதி, வரலாறு கர்த்தரு டைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், புறஜாதி மன்ன ரைக் கூட அவர் தம் விருப்பத் திற்காகப் பயன்படுத்துவார் என்பதையும் வலியுறுத்துகிறது. 
தன் சித்தத்தை நிறைவேற்ற தேவன் இவரைத் தெரிந்து கொண்டார். சைரஸ் கிமு 539-ல் பாபிலோனைக் கைப்பற்றி, சிறைப்பட்டிருந்த யூதர்களை விடுவித்து, அவர்களின் எருச லேம் ஆலயத்தை மீண்டும் கட்ட அனுமதித்தார்.திருமுழுக்கு (அபிஷேகம்"Anointed )என்பது இங்கே ஒரு பணியைச் செய் வதற்காகக் கடவுளால் நியமிக்க ப்பட்டு, அதிகாரமும் வல்லமை யும் அளிக்கப்பட்டதைக் குறிக் கிறது.சைரஸ் ஒரு அறியப்பட்ட கடவுளை வணங்காவிட்டாலும், அவர் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்.
அன்பானவர்களே சைரஸ் போன்ற மக்களை ஆண்டவர் கடல் கடந்து, நாடுகளைக் கடந்து தன் மக்களை அருட்பொழிவாற் ற தேர்ந்தெடுத்து அழைக்கின் றார் அனுப்பப்படுகின்றார்.நம் நாட்டிலும் பல தேசங்களிலிரு ந்து வந்து இறை பணி ஆற்றி னர் அவ்வழியிலும் நம்மை அருட்பொழிவாற்ற கடவுள் இந்த லெந்து காலங்களில் அழைக்கி ன்றார். அழைப்பை ஏற்று செல் வோமாக ஆமென்.




Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..








Vocation of the Apostles (1481) by Domenico Ghirlandaio

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).