புனித வெள்ளி. ஐந்தாம் வார்த்தை. தாகமாயிருக்கிறேன்.(270) I Thirst. யோவான் 19:28
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ஐந்தாம் வார்த்தை, "தாகமாயி ருக்கிறேன்."
இதன்பின், அனைத்தும் நிறை வேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கி றது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
ஆண்டவராகிய இயேசு சிலு வையில் முதல் மூன்று வாக் கியங்களை மற்றவர்களுக்காக சொன்னார். கடைசி மூன்று வாக்கியங்களை தமக்காகச் சொல்கிறார். ‘
1. தாகமாயிருக்கிறேன் என்றால்என்ன?What is I am thirsty?
அன்பானவர்களே! 6ம் மணி (12 மணி) வேளையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரங்கள் கடுமை யான வெயிலில் கழித்தார். பின்பு இருள் சூழ்ந்தது. அதன்பின் தாகமாயிருக்கிறேன் என்றார். உடலில் நீர்ச்சத்து குறைதல் (Dehydration) அல்லது உப்பின் அடர்த்தி அதிகரித்தல் தாகத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தி னர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, "யூதரின்அரசே வாழ்க!" என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலை யில் அடித்து. அவர் மீது துப்பி, முழந் தாள்படியிட்டு அவரை வணங்கினர். அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடை யைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவ தற்காக வெளியே கூட்டிச் சென் றனர்.
(மாற்கு நற்செய்தி 15:17-20)
இத்தகைய பாடுகளுடன்,
இயேசு கொல்கொதா மலைக்கு கடினமான சிலுவை மரத்தைத் தூக்கிச் சென்றாரே. அந்த வேதனையினாலே அவருக்கு
தாகம் ஏற்பட்டது. அவர் உண்மையில், தேவ குமாரன் அதே வேளையில், அவர் மனுச
குமாரன். அவருக்கு பசி, களை ப்பு, தாகம், எல்லாம்இருந்தது.
னவேத வாக்கியமான திருப்பாடல் "என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொ ண்டது; என்னைச் சாவின் புழுதி யிலே போட்டுவிட்டீர்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 22:15) இங்கு நிறைவேறுகிறது.
அவர்கள் என் உணவில் நஞ்சை க் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக் கக் கொடுத்தார்கள்.
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 69:21)இவைகள் நிறைவேற
தாகமாய் இருந்தார்.
2. மனிதத்தன்மே;
இயேசு வெறும் கடவுள் மட்டு மல்ல, அவர் உண்மையான மனிதர். சிலுவையில் கடுமை யான வேதனையையும், உடல் ரீதியான தாகத்தையும் அவர் அனுபவித்தார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.தியாகத்தின் இறுதிக்கட்டத்தையும் காட்டுவதாக விளக்குகிறார். காடி கொடுக்கப்பட்டபோது, தாகம் தணிக்கப்பட்டு, மீட்பின் பணி நிறைவடைந்ததாக அவர் கூறுகிறார்.
இந்த தாகத்திற்குப் பிறகு, அவர் "முடிந்தது" (Tetelestai) என்று கூறி, பாவத்திற்கான விலை முழுமையாக செலுத்தப்பட்டதை அறிவிக்கிறார்.
3.தாகமாயிருக்கிறேன், என்னிடம் வா" என்பது யோவான் 7:37-38-ல், பண்டிகையின் கடைசி நாளில் இயேசு நின்று சத்தமிட்டு இந்த அழைப்பை அனைத்து மக்களு க்காக இந்த அழைப்பை விடுத்தார்.
ஆனால், இங்கு இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய வாக்கியம் இது, மனிதர்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்து, அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் கடவுளின் அழைப் பாகவும், அன்பு மற்றும் இரக்கத்தை பொழிவதற்கான ஆசையாகவும் விவரிக்கப்ப டுகிறது.தாகமாயிருப்பவர் என்னிடம் வந்து குடிக்கட்டும், யார் என்னை நம்புகிறாரோ, அவர்கள் உள்ளிருந்து ஜீவத் தண்ணீரின் ஆறுகள் ஓடும்" என்று அவர் கூறியுள்ளார்.
கல்வாரியில் அவர் பட்ட பாடுகள் மற்றும் அன்பை வெளிப்படுத் துவதே இந்த தாகம்.
4.ஆத்தும தாகம் (Burden for Souls/Thirst of Soul) என்பது, மற்றவர்களின் இரட்சிப்புக்காக அல்லது கடவுளை அறியாத மனிதர்களின் ஆத்துமாக்கள் நித்திய இரட்சிப்பைப் பெற வேண்டும் என்ற ஆழமான ஆன்மீக பாரத்தையும், ஏக்கத்தையும் குறிக்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் அன்பி னால் பிறக்கும், பிறருக்காக ஜெபிக்கும் மற்றும் நற்செய்தி யைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டும் ஒரு பரிசுத்தமான உணர்வாகும்.
இது வெறும் மனித முயற்சி அல்ல, பரிசுத்த ஆவியினால் ஆத்துமாக்கள் மீது வரும் பாரம்
ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் வழிநடத்த வேண்டும் என்ற ஊக்கம், ஜெபம் மற்றும் நற்செய்தி அறிவிப்பாகும்.
எடுத்துக்காட்டு: சமாரியா பெண் தன் ஆத்தும தாகம் தீர்க்கப்பட்ட வுடன், மற்றவர்களையும் இயேசுவிடம் வரவழைத்தாள் (யோவான் 4). அவ்வாறு செயல்பட ஆண்டவர் அருள்புரிவாராக ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Thirst (1886), by William-Adolphe Bouguereau.wiki

Comments
Post a Comment