என் ஆண்டவரே! என் கடவுளே!(274) My Lord and My God. எசாயா 45: 21-25, திருப்பாடல் 35: 18-28, பிலிப்பியர் 3:18-21, யோவான் 20: 21-29
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது,"என் ஆண்டவரே! என் கடவுளே!"
உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட திதிமஸ் Didymus,என்ற தோமா (Thomas) கூறிய புகழ் பெற்ற விசுவாச அறிக்கை. இயேசுவின் உயிர்த் தெழுதலை மற்ற சீடர்கள் கூறியபோது தோமா நம்பவில்லை.தோமா, சீடர்களிடம், "நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி அவர் விலாவில் என் கையை இட்டால ன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.
ஒரு வாரம் கழித்து, அதாவது, எட்டு நாளுக்குப் பிறகு இயேசு தோமாவுக்குக் காட்சி தந்து, தன் காயங்களைத் தொட்டுப் பார்க் கச் சொன்னார், தோமா, "என் ஆண்டவரே, என் கடவுள்" என்று இயேசுவை வணங்கினார். இவ்வார்த்தையே, தோமாவின் கல்லறையில் பொறிக்கப்பட்டு ள்ளன.
"நீ என்னைக் கண்டதால் நம்பி னாய்; காணாமலே நம்புகிறவர் கள் பாக்கியவான்கள்" என்று இயேசு கூறினார்.
விலாவில் என் கையைப் போட்டாலன்றி, நான் நம்பமா ட்டேன்” Unless I see the nail marks , I will not believe.”: Unless என்ற வார்த்தை இல்லையெனில் (Otherwise/Or else) என்பது, “ஒரு செயல் செய்யப்படாவிட்டால், மற்றொரு விளைவு ஏற்படும்” என்பதை உணர்த்தும் இணைப்புச் சொல் (Conjuction.)
போட்டாலின்றி என்பது மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரை க் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடை ய கைகளில் ஆணிகளால் ஏற்ப ட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலா வில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். இதில், வினைச்சொல்லுடன் (verb) எதிர்மறை விகுதிகளை ச் (negative)சேர்த்துப் பயன்படுத் துதல்.
இப்படி கூறிய கூற்று, தோமா
அவர்கள் ஆண்டவர் மீதும்,
அவர் இவ்வுலகில் ஏன் வந்தார்
என்றும், சிலுவை பாடுகள் மீது
நம்பிக்கையற்றவராக பார்க்கி றோம்.இதனால், சந்தேக தோமா என அழைக்கப்படுகி
றார்.(Doubting Thomas)
அன்பர்களே! தோமா அவர்களி
ன் அவி விசுவாசத்திற்கு ஒரு
உதாரணம் ஏற்கெனவே, யோவான் நற்செய்தி 14:5 ல், உள்ளது,
தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்து க்கான வழியை நாங்கள் எப்ப டித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார்.
ஆண்டவரோடு பணியாற்றிய தோமாவிற்கு அவர் எங்கிருந்து வந்தார் எங்கே போகிறார் என்ப து அவர் இன்னும் அறியாது இருப்பதை நாம் பார்க்கிறோம். அவரைப்போலவே, நாமும் அன்பின் ஆண்டவரின் வார்த்தைகளில் உறுதியாக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
தோமாவின் மன தைரியம்: Thomas's courage.
அன்பர்களே! சந்தேக தோமா' என்று அழைக்கப்பட்டாலும், உண்மையை உணர்ந்த பிறகு அவர் காட்டிய உறுதி மற்றும் தைரியம் அவரை ஒரு சிறந்த திருத்தூதுவராக மாற்றியது.
யோவான் 11:16, இயேசு லாசர வை உயிர்ப்பிக்க யூதேயாவுக் குத் திரும்ப முடிவெடுத்தபோது, . அங்கு யூதர்கள் இயேசுவை கல்லெறிந்து கொல்ல முயன் றதால் சீடர்கள் பயந்தனர்.அந்த
நேரத்தில், இயேசுவோடு போனா ல் நாமும் இறக்க நேரிடும் என்ற பயம் இருந்தாலும், அவருக்காக உயிரைத் தியாகம் செய்யவும் தயார் என்று . மற்ற சீடர்களிடம், "அவரோடு மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என்று கூறிய தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
அவர் வாழ்ந்த காலம் ரோம பேர ரசின் காலம். ரோம பேரரசு முழு வதும் சீசர் மட்டுமே கடவுள்
என்பர்.
கி.மு 42 -ல், ஜூலியஸ் சீசர் மற்று ம் அவரது வாரிசுகள் (குறிப்பாக அகஸ்டஸ்) ரோமானியப் பேரரசி ல் கடவுளாகக் கருதப்பட்டனர். ரோம செனட் சீசரை அதிகாரப் பூர்வமாக ஒரு தெய்வமாக (Divus) அறிவித்தது. அதனால்
தான் நம் ஆண்டவர்,"அப்படியா
னால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவ ற்றைக் கடவுளுக்கும் கொடுங்க ள் "என்று சொன்னார். (லூக்கா நற்செய்தி 20:25) அதாவது சீசர் கடவுளால் நியமிக்கப்பட்ட அதி காரம் என்றாலும், அவர்உண்மை யான கடவுள் அல்ல.என்பதை
வெளிப்படுத்தினார்.
அப்படி சீசர் மட்டுமே கடவுள்
என்று வழக்கமாய் இருந்த கால த்தில் தோமா உயிர்த்த ஆண்ட வரை பார்த்து,"என் ஆண்டவரே, என் கடவுள்" என மிக தைரியத்து
டன் அறிவித்து Manifestation தன் பற்றுறுதியை வெளிப்படுத்தி னார்.
"என் ஆண்டவரே! என் கடவு ளே!" என்ன வேறுபாடுகள்.
What is the difference between My Lord and My God.?
அன்பர்களே! திருவிவலியத்தி
ல் யாவே கடவுளை ஆண்டவரே
என்ற LORD ,வார்த்தையை பல
இடங்களில் வருவதை நாம்
காண்கிறோம்.(In the Old Testam ent, Lord (often in all caps, LORD) is used for Yahweh, while "lord" (lowercase) can refer to human authority). உயிர்த்த கிறித்துவை என் தலைவரே, குருவே, நீதியர சரே என அழைக்கிறார்.
பொதுவாக நீதி மன்றங்களில்
My Lord என நீதிபதியை அழை
ப்பதை நாம் காண்கிறோம். நீதிபதிகளை வழக்கறிஞர்கள் 'மை லார்ட்' (My Lord) அல்லது 'யுவர் லார்ட்ஷிப்' (Your Lordship) என்று அழைப்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்து தொடரும் பாரம்பரியமான மரியாதையின் அடையாளமா கும். இது நீதித்துறையின் கௌ ரவத்தையும், நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் நிலை நிறுத்த பயன்படுத்தப்படும் ஒரு சம்பிரதாய முறையாகும்.
என் கடவுளே My God என அழைப்
பது உயிர்த்த கிறித்து படைப் பாளராகவும், தெய்வீக தன்மை யை வெளிப்படுத்தும் தந்தை யாகவும் காட்டப்படுகிறார்.
முக்கியமாக, தோமா ஆண்டவ ரின் காயங்களை பார்த்தவுடன்
அவர் உள்ளத்திலிருந்து வெளிப்
பட்ட உன்னத வார்த்தையாகும்.
1.இரட்சிப்பு: உலகளாவிய அழைப்பு.Salvation: A Universal Call" ஏசாயா 45:21-25.
அன்பர்களே! இறைவாக்கினர் ஏசாயாவின் காலத்தில் இஸ்ர வேலரின் பாபிலோனிய அடிமை த்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரஸை (கோரேசு) கடவுளால் திருப்பொழிவு பண் ணப்பட்டவராகத் தேர்ந்தெடுத்து, தேசங்களைக் கீழ்ப்படுத்தவும், அரசர்களை தோற்கடிக்கவும், வாசல்களைத் திறந்து வைக்க வும் அவனுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்கிறார். கடவுள், யூதர்களைச் சிறையிருப் பிலிருந்து விடுவிக்க சைரஸை ஒரு கருவியாகப் பயன்படுத்து கிறார். பாபிலோனில் அறியப்ப ட்ட இஸ்ரேல் மக்களுக்கு சைரஸ் மன்னன் மூலம் விடுத லை கிடைத்தது. அப்படியே,
மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. இரட்சிப்பு இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் எளிய வழியில், அதாவது கர்த் தரை நோக்கிப் பார்ப்பதன் மூலம் (நம்பிக்கை) கிடைக் கிறது.விக்கிரகங்களை வணங் கும் தேசங்களே! கர்த்தரிடம் திரும்பி வாருங்கள். இரட்சிப்புப் பெறுவீர்கள், கர்த்தர் மட்டுமே உண்மையான ஆண்டவர், இரட்சகர் என்பதை வலியுறுத் துகிறது.
என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்று; அது வீணாகத் திரும்பி வராது; முழங் கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.
பிலிப்பியர் 2:10-11-ன் படி, இயேசு கிறிஸ்து ஆண்டவர் என விண்ணவர், மண்ணவர், கீழுல கோர் அனைவரும் மண்டியிட்டு அறிக்கையிடுவர். கடவுளின் மாட்சிக்காக, ஒவ்வொரு முழங் காலும் இயேசுவின் முன் வளை யும் என திருத்தூதர் பவுல் அடிக ளார் கூறுகிறார்.
இரட்சிப்பும் நீதியும் வல்லமை யும் கர்த்தரிடத்தில் மட்டுமே உண்டு. கர்த்தரை எதிர்ப்பவர் கள் வெட்கப்படுவார்கள்,
ஆனால் இஸ்ரவேலின் சந்ததி யார் கர்த்தருக்குள் நீதிமான்க ளாக்கப்பட்டு மேன்மை பாராட்டு வார்கள் அவர்களுக்கு மட்டும ல்ல. இரட்சிப்பு உலகளாவியது அனைவருக்கும் சொந்தமானது.
எல்லாரும் பணிந்து, கர்த்தரே ஆண்டவர் என்று ஒப்புக்கொள் ளும் காலம் வரும். அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுத லில் வந்துவிட்டது.
2.நாம் விண்ணகத்தின் குடிமக்கள்.We are the citizens of the Heaven.பிலிப்பியர் 3:18-21.
(This part of sermon is based on William Barclay Commentary.)
அன்பர்களே! பிலிப்பி பட்டணம் ஒரு ரோமானியக் குடியேற்றமாக இருந்தது. ரோமானியர்கள், முக்கியத்துவம் வாய்ந்த இரா ணுவ மையங்களில் ஆங்காங் கே தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். அத்தகைய இடங் களில், குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் சேவைக்காலத்தை (இருபத்தொரு ஆண்டுகள்) நிறைய சேவையாற்றி, முழுமை யான குடியுரிமையால் வெகுமா னமளிக்கப்பட்ட வீரர்களாக இருந்தனர். இந்தக் குடியேற்றங் களின் மாபெரும் சிறப்பியல்பு என்னவென்றால், அவை எங்கி ருந்தாலும், ரோமின் கூறுகளாக வே நிலைத்திருந்தன. ரோமானிய உடை அணியப்பட் டது; ரோமானிய நீதிபதிகள் ஆட்சி செய்தனர்; லத்தீன் மொழி பேசப்பட்டது; ரோமானிய நீதி வழங்கப்பட்டது; ரோமானிய ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப் பட்டன. உலகின் கடைக்கோடி யில்கூட அவர்கள் அசைக்க முடியாதபடி ரோமானியர்களா கவே நிலைத்திருந்தனர். இத்தகைய பிலிப்பியர்களிடம், திருத்தூதர் பவுல் அடிகளார், "ரோமானியக் குடியேறிகள் தாங்கள் ரோமைச் சேர்ந்தவர் கள் என்பதை ஒருபோதும் மறக்காததுபோல, நீங்களும் விண்ணகத்தின் குடிமக்கள் என்பதை ஒருபோதும் மறக்க க் கூடாது; உங்கள் நடத்தை உங்கள் குடியுரிமைக்கு ஏற்றதா க இருக்க வேண்டும்," என்கிறார்.
கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் வாழ்ந்து, உலக இச்சைகளில் மூழ்கியிருக்கும் போலி கிறிஸ்தவர்களைக் குறித்து பவுல் கண்ணீருடன் எச்சரிப்பதாக விளக்குகிறார்.
விண்ணரசின் குடியுரிமை கொண்ட விசுவாசிகளாகிய நாம், மாம்ச இச்சைகளை விடுத்து, கிறிஸ்துவின் மகிமை யான வருகையையும், சரீரத்தின் மறுரூபத்தையும் எதிர்நோ க்கி வாழ வேண்டும் என வலியு றுத் துகிறார்.
சிலர், தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு, சிலுவை யின் தியாகத்தைப் புறக்கணித் து, தங்களின் வயிறையே (மாம்ச இச்சைகளை) தெய்வமாகக் கொண்டு வாழ்பவர்கள். இவர்க ள் சிலுவையின் பகைவர்கள்.
எனவே,
அன்பர்களே! இயேசு கிறிஸ்து வரும்போது, விசுவாசிகளின் தாழ்மையான சரீரத்தை, தமது மகிமையான சரீரத்திற்கு ஒப்பானதாக மாற்றுவார். இந்த நம்பிக்கை தற்போதைய துன்ப ங்களை சகித்துக்கொள்ள உதவு கிறது.
3.கிறித்தவர்கள் உலகை மாற்றும் தூதுவர்கள். Christians are the Ambassadors who change the World.யோவான் 20: 21-29.
அன்பர்களே! இயேசுவின் உயிர்த்தெழுதல் சீடர்களின் பயத்தைப் போக்கி, அவர்களுக் கு ஒரு புதிய வாழ்வையும், உலகை மாற்றும் தூதுவர் பணியையும் (An Ambassadorial work that changes the world) அளித் தது. உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்க ளுக்கு அமைதியையும், தூய ஆவியானவரையும் அளித்து, உலகை மீட்கும் பணியை (சபைப்பணி) ஒப்படைத்து, தோமாவின் அவிசுவாசத்தைக் கடிந்துகொண்டு விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். இது சீடர் களின் தூதுத்துவப் பணி மற்று ம் விசுவாசத்தின் முக்கியத்துவ த்தை வலியுறுத்துகிறது.
தோமா இயேசுவின் உயிர்த்தெ ழுதலை நேரில் காணாததால் நம்ப மறுக்கிறான். இது மனித பலவீனத்தையும், தனிப்பட்ட அனுபவத்தின் தேவையையும் காட்டுகிறது.
எட்டு நாட்களுக்குப்பிறகு, மீண்டும் தோமாவுக்குக் காட்சி கொடுத்து, தன் காயங்களைக் காட்டுகிறார். தோமா, "என் ஆண்டவரே! என் தேவனே!" என இயேசுவின் தெய்வீகத்தன் மையை அறிக்கை செய்கிறான்.
பிதா என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகிறேன்" - இயேசுவின் பணி, மீட்பின் நற்செய்தியைப் பரப்புவதும், அன்பைக் காட்டுவ துமாகும். இதுவே, சீடர்கள் இயேசுவின் தொடர்ச்சியாக உலகிற்கு அனுப்பப்படுகிறார் கள்.
அன்பர்களே!
ஆண்டவர் தம் சீடர்கள் மேல் ஊதி, "தூய ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இது புதிய படைப்பி ன் அடையாளம்; உலகபடைப் பில், கடவுள் மனிதனுக்கு உயிர் பெற தன் ஆவியை கொடுத்தார்.
சீடர்கள் நற்செய்தியை அறிவிக் கும்போது, அதைப் ஏற்றுக்கொள் பவர்களின் பாவம் மன்னிக்கப்ப டும், மறுப்பவர்களின் பாவம் மன்னிக்கப்படாது. இது சபைப் பணியின் பொறுப்பு. நற்செய்தி
அறிவிப்பதும், மனிதர்களின் பாவங்களை மன்னித்து மறு வாழ்வளிப்பதும், நிலை வாழ்
விற்கு தொடர் வழி காட்டுவதும்
திருச்சபைகளின் சிறப்பான
பணியாகும்.
தோமாவின் இயல்பு: The nature of Thomas.
அன்பர்களே!
தோமாவின் சிறந்த நற்பண்பு என்னவென்றால், அவர் உறுதி யாக நம்புவதை அதை முழுமை யாக ஏற்றுக்கொள்வார். "என் ஆண்டவரே, என் தேவனே!" என்றார் அவர். தோமாவிடம் அரைகுறை மனப்பான்மை என்ப தே கிடையாது. அவர்
தனக்குப் புரியாத ஒன்றைப் புரிந்துகொண்டதாகவோ, அல்ல து தான் நம்பாத ஒன்றை நம்பு வதாகவோ கூறுவதை அவர் முற்றிலுமாக மறுத்தார். அவரி டம் சமரசமற்ற ஒரு நேர்மை இருந்தது.
ஆனாலும்,
அவர் ஒரு தவறு செய்தார். ஆண்டவர் மறித்தப்பிறகு அவர் சீடர்களின் ஐக்கியத்திலிருந்து விலகினார். அவர் கூட்டணி த்தலைமையை விட தனிமை யை நாடினார். மேலும், அவர் தனது சக கிறிஸ்தவர்களுடன் இல்லாததால், இயேசுவின் முதல் வருகையைத் தவறவிட் டார். நாம் கிறிஸ்தவ ஐக்கியத் திலிருந்து நம்மைப் பிரித்துக் கொண்டு தனியாக இருக்க முயற்சிக்கும்போதும், நாம் நம் திருச்சபையை விட்டு விலகுவ தும் பலவற்றை இழக்கிறோம்.
இறுதியாக ,
தோமாவே,நீ விசுவாசிப்பதற்கு
நேர்கொண்ட பார்வை தேவை.
ஆனால், மனிதர்கள் விசுவாசக் கண்ணால் (the eye of faith) கண்டு விசுவாசிக்கும் நாட்கள் வரும்.”
என் ஆண்டவரே! என் தேவனே! நீரே என் கடவுள்" (யோவான் 20:28) என்று தோமா கூறியது போல, இந்த நம்பிக்கையே கிறித்துவ வாழ்க்கையின் அனைத்துக்கும் ஆணி வேர்.
என்னை தேடி வந்த ஆண்டவரே, உம்மை விட்டு ஒரு போதும் பிரியாத வரம் எனக்கு தாரும். என் நம்பிக்கையைப் பலப் படுத்தும் .என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள். உம் ஆசீர் நிறைய பெற்ற பிள்ளை யாக நான் எல்லாவற்றிலும் சிறப்புற்று வாழ அருள் தாரும். . உயிர்த்த கிறித்து என்றென்றும்
நம்மோடு இருக்க அருள் புரிவாராக. ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
.
திருத்தூதர் புனித தோமா Saint Thomas (Apostle) | |
|---|---|
"தோமாவின் ஐயம்" – கரவாஜியோ |
"ஸ்ரீ
Comments
Post a Comment