உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழைப்பு (275) Come and Dine.An Invitation by the Risen Lord. 1அரசர்கள் 19:1-8, திருப்பாடல் 23, திருத்தூதர் பணிகள் 27: 27-36, யோவான் 21:1-14.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் இரண் டாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது,"
உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழை ப்பு. உயிர்த்த கிறித்து மீண்டு மாக மூன்றாவதுமுறை தன் சீடர் களுக்கு கலிலேய கடற்கரையி ல் காலை நேரத்தில் தோன்றி னார்.
இயேசுவும் கலிலேயா கடலு ம். Jesus and the Sea of Galilee.
அன்பர்களே,
இயேசுவின் ஊழியத்தில் கலிலேயக் கடல் (கெனெசரேத்து ஏரி, திபேரியா கடல் என்றும் அழைக்கப்படும்) கலிலேயக் கடல் இயேசுவின் போதனைக ளுக்கும், அற்புதங்களுக்கும், சீடர்களுடனான நெருக்கமான உறவுக்கும் சான்றாக, இன்றைய இஸ்ரேல் தேசத்தில் 13 மைல் நீளமும் 7 மைல் அகலமும் கொண்ட ஏரியாக உள்ளது. ஆண்டவரின் ஊழியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அக்கடல் ஆண்டவரின்பணியில் நகமும் சதையைப்போல் இணை ந்தது.Like nail and flesh"
சீடர்களை அழைத்தல். இங்குதான் அவர் மீனவர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் இனி மனுசர்களைப் பிடிப்பீர்கள் fishers of men" என தன் மகத்தா னபணிக்கு சீடர்களாக அழை த்தார்.
புயலை அடக்குதல்: சீடர்கள் கலிலேய கடலின் படகில் செல் லும்போது ஏற்பட்ட பெரும் புய லை இயேசு தம் வார்த்தையால் அடக்கினார்.
கடல் மீது நடத்தல்: நடுநிசியில் இந்த கடல் மீது நடந்து வந்து, சீடர்களின் பயத்தைப் போக்கி, பேதுருவை தம்மோடு நடக்க வைத்தார்.
அற்புத மீன்பிடிப்பு: இரவு முழுவதும் மீன் பிடிக்காத சீடர்க ளுக்கு, வலையின் வலதுபுறம் போடச் சொல்லி, மீன்கள் நிறை யக் கிடைக்கச் செய்தார்.
உணவளித்தல்: இநத கடற்க ரையில்தான், ஐந்தப்பம் இரண் டு மீன்கள் மூலம் 5000 பேருக்கு உணவளிக்கிறார்.இது போன்ற முக்கிய அற்புதங்களை இயேசு இந்த கலிலேய கடற்கரையில் நிகழ்த்தினார்.
இறுதியாக,
உயிர்த்தெழுந்தபின் காட்சி: இதே கடற்கரையில், உயிர்த்த
கிறிஸ்து மூன்றாவது முறையாக தன் 7 சீடர்களுக்குக் கடற்கரை யில் மீன் சமைத்து கொடுத்து,
உணவருந்த வாருங்கள் என
அழைத்தார். ஆண்டவரின் முதல் அழைப்பு சீடத்துவமான அழை ப்பு இந்த மூன்றாவது அழைப்பு என்பது அவர்களுக்கு மாபெரும் பணியின் அழைப்பாகும். இந்த கலிலேய கடலின் அழைப்பு
நம்பிக்கை இழந்து, பழைய வாழ் க்கைக்குத் திரும்பியவர்களுக் கு புதிய நம்பிக்கையையும், பணிப் பொறுப்பையும் கொடுக் கும் இடமாகும்.
உணவருந்த வாருங்கள்:
Come and Dine.
அன்பர்களே! சீடர்கள் இரவுமுழு வதும் மீன் பிடித்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை. அவர்கள்
உழைப்பு வீனானது, இது கடவுள்
அவர்களுக்கு கொடுத்த தண்ட னை. அவர்கள் ஆண்டவரின்
அழைப்பை, மறந்தார்கள், திசை
மாறி போனார்கள். இது நமக்குத்
தரும் பாடம். இது ஆண்டவரின் அழைப்பையும் அவர் கொடுத்த பணியையும் நாம் சிறப்பாக செய்யவில்லை என்றால் நமக்கு ம் இந்த ஏமாற்றும் கிடைக்கும். என்பதற்கான பாடமாக அமைந் திருக்கிறது. கடவுள் நம்மை ஒரு திட்டத்திற்கு என்று அழைத்திரு க்கிறார் அந்த திட்டத்திற்கு நாம் உட்பட்டு இவ்வுலகில் பணியா ற்ற வேண்டும். நாம் பாதை மாறி போனால் அது பலனளிக்காது. மனிதர்களின் சொந்த பலத்தி னால் ஒன்றும் செய்ய முடியாது, கிறிஸ்துவின் கட்டளையைச் சார்ந்திருக்கும்போது வெற்றி கிடைக்கும் என்பதை வலியுறுத் துகிறது.
ஆண்டவர் அவர்களை வலப்பக் கத்தில் வலை வீச சொன்னார் அதிகமான மீன் (153 மீன்கள்) பிடித்தார்கள். இதன் மூலம் அவர்கள் ஆண்டவர்தான் என்று உணர்ந்தார்கள். கரை சேர்ந்த மக்களுக்கு ஒரு அற்புதம், தீ மூட்டப்பட்டு தீயில் மீன்கள் வைக்கப்பட்டிருந்தது. சில அப்ப ங்களும் இருந்தன, கடவுள் அவர்களை அழைத்து நீங்கள் இப்போது பிடித்த மீனையும் இதில் வையுங்கள் என்றுஅவர் களின் பங்கையும் சேர்த்துக் கொண்டார். , ஆண்டவர் மனித உழைப்பை மதிக்கிறார் மற்றும் சீடர்களைத் தம்முடைய ஊழியம் மற்றும் தன்னோடு பங்காளிகளாக்குகிறார் partnership in Ministry என்பதைக் காட்டுகிறது.
இது காலை பசியைப் போக்கி, ஆவிக்குரிய உணவை வழங்கி, சமத்துவ உறவில் இணையும் இறையரசின் விருந்தாகக் கருதப்படுகிறது. இறையரசின் விருந்தில் மீன்கள் போன்று மனித ஆத்துமாக்களை கொண் டு சேர்ப்பதை நம் பணி என்பதை கடவுள் வலியுறுத்துகிறார்.
1. யானைக்கும் அடி சறுக்கும்"
Even an elephant can slip". 1 அரச ர்கள் 19:1-8,
அன்பர்களே! யானைக்கும் அடி சறுக்கும் Even Homer sometimes nods" என்ற பழமொழி நம்முடை ய இறைவாக்கினர் எலியா அவர் களுக்கு பொருந்தும்.எலியா என்றால் "யெகோவா "என் கடவுள்" என்று பொருள்படும். கார்மேல் மலையில் பாகால் ( Baal worshipers) தீர்க்க தரிசிக ளை வென்றவர்,
பாகால் தீர்க்கதரிசிகளுடன் போட்டியிட்டு, கர்த்தரே உண்மை யான கடவுள் என்பதை நிரூபி க்க பலிபீடத்தில் வானத்திலிரு ந்து அக்கினியை இறக்கி சுட்டெ ரித்தவர்.கர்த்தருடைய கட்டளை யின்படி 3 1/2 ஆண்டுகள் மழை யைத் தடுத்தார், விதவையின் மகனை உயிர்ப்பித்தார், சாகாவரம் பெற்று, அக்கினி ரதத்தில் பரலோகம் சென்றார் (2 அரசர்கள் 2:11). கிலேயாத்தைச் சேர்ந்தவர். எட்டு அற்புதங்க செய்தவர்,
இத்தகைய வல்லமையான
இறைவாக்கினர் எலியா இஸ்ர வேலை ஆண்ட ஆகாப் அரசனி ன் (The King of Northern Kingdom) பொல்லாத மனைவி யசபேல் (Jezebel) பல இஸ்ரேலிய இறை வாக்கினர்களை கொல்கிறாள். எலியா பெரிய அதிசயங்களை செய்தும் இவளுக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். இது மனித பலவீனத்தைக் காட்டுகிறது.
பெயேர்செபாவில் தன் பணியாளனை விட்டுவிட்டு எலியா தனியாக வனாந்தரத் திற்குச் சென்றார். இது அவர் மிகுந்த மனச் சோர்வுடனும், ஏமாற்றத்துடனும், தனிமையின் உச்சத்திலும் இருந்ததைக் காட்டுகிறது.
அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு,தாம் சாகவேண்டுமெனப் பின் வரு மாறு மன்றாடினார்; "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல; " என்கிறார்.
ஆண்டவருடைய பிள்ளைகளுக் கு சில நேரங்களில் சோர்வுகள் உண்டு, தோல்விகள் உண்டு, சோதனைகள் உண்டு, வேதனை கள் உண்டு, நாம் மனம் தளரக் கூடாது நம்மோடு என்றும் கைவி டாத ஆண்டவர் இருக்கிறார் என் பதை நாம் உணர்ந்துள்ளோம்.
பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் பசியினால் படுத் துறங்கினார். அப்போது வான தூதர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு" என்றார். தன்னுடைய ஊழியக்காரர்கள் பசியாய் இருப்பதை ஒரு போது ம் கைவிடாத ஆண்டவர் ஏற்ற காலத்தில் தேற்றுவார், காப்பார், உணவளிப்பார். அதை தான் செய்தார்.
கடவுள் எலியாவை கண்டிக்கவி ல்லை, மாறாக ஒரு தூதனை அனுப்பி, சூடான அப்பத்தையும் தண்ணீரையும் கொடுத்து ஓய் வெடுக்கச் செய்கிறார். தேவன் உடலையும் மனதையும் கவனித் துக்கொள்கிறார். அந்த உணவி னால் பெலன் பெற்று, எலியா 40 நாட்கள் பிரயாணம் செய்து தேவனுடைய மலை எனப்படும் ஓரேப் வரை செல்கிறார்.
விசுவாசத்தில் சிறந்தவர்களும் சோர்வு மற்றும் பயத்திற்கு உள்ளாகலாம் என்பதையும், மனித பலத்தை நம்பாமல் தேவ னை நம்ப வேண்டியதன் அவசி யத்தையும் இதன்மூலம் உணர்த் துகிறார்.
2..ஆன்மீகவாதியின் தலைமை பண்பு. Leadership Trait of a Mystic"
திருத்தூதர் பணிகள் 27: 27-36
அன்பர்களே! ஒரு ஆன்மீகத் தலைவர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும். சுய ஒழுக்கத்தின் முன்மாதிரியா கத் திகழ வேண்டும். .கடவுளுட னான நெருக்கமான உறவு மற்றும் கிறிஸ்துவைப் போன்ற குணம் கொண்டவராய் இருக்க வேண்டும்சிறந்த மனம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டுத் தலைமை . இதற்கு மிகப் பொருத்தமானவர் திருத்தூதர் பவுலடிகிறார் ஒரு கப்பலையே தன் தலைமையின் கீழ் கொண் டு வந்து கப்பல் தலைவர்களு க்கு ஆலோசனை கூறி தான் ஒரு சிறை கைதியாக இருந்தாலும் அவர்கை மீட்டெடுத்து உணவு அருந்த செய்து ஊக்கப்படுத்திய தலைமை பண்புக்கு ஈடு எதுவு மே இல்லை
நண்பர்களே திருத்தூதர் பவுல் அடிகளார் ஒரு சிறை கைதியாக சிசேரியா பட்டினத்தில் இருந்து ரோமாபுரிக்கு பிற கைதிகளு டன் யூலியு Julias என்னும் நூற்றுக்கு அதிபதியிடம் ஒப்ப டைக்கப்பட்டு, ரோமை நோக்கிப் கப்பல் பயணத்தை மேற்கொள் கிறார்.பவுல் இந்தப் பயணம் ஆபத்தானது என்று எச்சரித் தும், நூற்றுக்கு அதிபதி கப்பல் தலைவனின் பேச்சைக் கேட்டுப் பயணத்தைத் 276 பேருடன் தொடர்கிறார்.
மாலட்டா தீவு அருகே யூரோக் கிலீரோ' (Euroclydon)என்னும் கடுங்காற்று கப்பலைத் தாக்கி யது. அவர்கள் தப்பிப்பிழைக்க நம்பிக்கை இல்லாத அளவுக்கு நிலைமை மோசமானது.சுமார் 14 நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட கப்பல், ஆட்ரியா கடலில் இரவு நேரத்தில் நிலத்தை நெருங்குவ தைமாலுமிகள்உணர்கின்றனர். கப்பல் பாறையில் மோதி உடை யக்கூடும் என்ற பயத்தில், நான்கு நங்கூரங்களைப் போட்டு விடியலுக்காகக்காத்திருக்கின்றனர்.
பவுல், தான் வணங்கும் தேவன் தம்மோடு இருப்பதாகவும், கப்ப லில் இருக்கும் யாருக்கும் தீங்கு வராது என்றும், இராயருக்கு முன் நிற்க வேண்டும் என்றும் தேவதூதன் கூறியதை ஊழியர் களிடம் கூறுகிறார்.
மாலுமிகள் தப்பி ஓட முயற்சி செய்து, சிறுபடகை கடலில்இறக் குகின்றனர். இதை உணர்ந்த பவுல், நூற்றுவர் தலைவனிடம் "இவர்கள் கப்பலில் இல்லாவிட் டால், நீங்கள் பிழைக்க முடியாது" என்று கூறி, மாலுமிகள் தப்பிப்ப தை முறியடிக்கிறார்.
விடியற்காலையில், பவுல்அனை வரையும் தைரியப்படுத்தி, 14 நாட்களாக உணவு உண்ணாத அவர்களுக்கு, நம்பிக்கையுடன் உணவருந்த அறிவுறுத்துகிறார்.
பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்தி (நற்கருணைப் போல), அப்பத்தை உடைத்து உண்ணத் தொடங்குகிறார். எல்லாரும் தைரியமடைந்து, தாங்களும் உணவருந்தினார்கள் இது அனைவரிடமும் நம்பிக்கையை உண்டாக்கி, அவர்கள் உணவரு ந்தி, உற்சாகமடைகின்றனர்.
ஆபத்தான நேரத்திலும், சிறைக் கைதியாக இருந்த பவுல், ஒரு நல்ல தலைவனாக அனைவருக் கும் தைரியம் ஊட்டி, வழிநடத்து கிறார். பவுல் ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல், இக்கட்டான சூழலில் நிதானமாகச் செயல் படும் ஒரு சிறந்த நடைமுறைத் தலைவனாகவும் திகழ்ந்தார் என்பது முக்கியத்துவம் பெறுகி றது. இது அவரின் தலைமைத் துவ பண்பை Leadership காட்டுகி றது.
பவுல் கடவுள் தங்களைக் காப் பார் என்று நம்பினார். அதே வேளையில் மனித முயற்சியை யும் (மாலுமிகள் கப்பலில் இருத் தல்) வலியுறுத்தினார்.
இயற்கையின் சீற்றத்திலும், கடவுள் தனது ஊழியரை காக்கி றார், கூடவே மற்றவர்களையும் பாதுகாக்கிறார்.
பவுல் தேவனுடைய வாக்குறுதி யை (அனைவரும் உயிர் பிழைப்பார்கள்) முழுமையாக நம்பினார், அதே நேரத்தில் அனைவரும் உயிர் பிழைக்க உணவருந்தித் தெம்பு பெற வேண்டும் என்பதையும் உணர்ந் திருந்தார்.
அன்பர்களே!
ஆபத்தான நேரத்திலும், சிறைக் கைதியாக இருந்த பவுல், ஒரு நல்ல தலைவனாக அனைவருக் கும் தைரியம் ஊட்டி, வழிநடத்து கிறார்.
3.கிறிஸ்துவுடன் நாம் வெற்றி யாளர்கள், கிறிஸ்து இல்லை யேல் நாம் ஒன்றுமில்லை..
With Christ, we are heroes, without christ we are zeros .யோவான் 21:1-14.
நண்பர்களே கிறிஸ்துவோடு இருந்த வாழ்க்கை உன் வாழ்க் கையில் ஒரு அமைதியின் வாழ்க்கை அன்பின் வாழ்க்கை கிறிஸ்து இல்லாமல் வாழ்வது வீண் என்பதை இந்த நிகழ்வு மூலம் நமக்கு வெளிப்படுத் துகிறார்
உயிர்த்தெழுந்த இயேசு திபேரி யாக் கடலருகே சீடர்களுக்குத் தோன்றி, இரவு முழுவதும் மீன் பிடிக்க முடியாமல் சோர்வடைந் திருந்த அவர்களுக்கு, வலை நிறைய மீன்களைப் பிடித்துக் கொடுத்து, காலை உணவும் அளித்து, தம்மோடு இணைத் துக் கொண்டு நம்பிக்கை யூட்டுகிறார். இது இயேசுவின் கவனிப்பையும், சீடர்களின் பணியையும் குறிக்கிறது.
வாழ்வின் வழிகாட்டி இயேசு:
அன்பர்கள! நமக்கு தோல்வி ஏற்படும் போதெல்லாம் ஆண்ட வர் நமக்கு அவர் வார்த்தை மூல மாக நல்வழி காட்டுகிறார் என்று மே நம்மை அவர் கைவிடுவதி ல்லை. நம்மோடு இருக்கிறார் நம்மோடு சேர்ந்து பயணிக்கி றார் இதுதான் நமக்கும் கடவுளு க்கும் உள்ள மெய்யான உறவு.
சீடர்கள் 7பேரும், (பேதுரு உட்பட) மீண்டும் மீன்பிடிக்க பழைய தொழிலுக்குச் செல்கிறார்கள், ஆனால் இரவு முழுவதும் ஒன்றுமே கிடைக்கவில்லை. இயேசு இல்லாதபோது ஏற்படும் ஆவிக்குரிய மற்றும் உடல் சார் ந்த சோர்வை இது காட்டுகிறது. கரையில் நின்ற இயேசு, வலை யை வலது பக்கத்தில் போடச் சொல்கிறார். அவரின் வார்த் தைக்குக்கு கீழ்ப்படியும்போது, அதிசயம் நடக்கிறது. கிறிஸ்து வின் ஆலோசனையின்படி செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
உலகளாவிய நற்செய்தி.
அன்பர்களே! இயேசுவின் காலத்தில் 153 நாடுகள் இருந்திருக்கலாம் அவருடைய நற்செய்தி உலகம் முழுதும் பரவ வேண்டும் என்பதற்காக தான் அவர்களுக்கு 153 மீன்கள் கிடைத்தது கிறிஸ்தவர்கள் என்றுமே மனிதர்களை பிடிக்கின்றவர்கள் மனிதர்களை நேசிக்கின்றவர்கள் மனிதர்க ளை விண்ணரசுக்கு அழைக் கின்றவர்கள் என்பதை நாம் மறந்து போகக்கூடாது என்ப தற்கு அடையாளம் தான் இந்த 153 மீன்கள் இது உலகளாவிய நற்செய்தியை குறிக்கிறது அவருடைய விண்ணரசு என்ற வலையில் அனைத்து மக்களும் இணைத்துக் கொள்ள வேண் டும் என்ற மிகப் பெரிய பணியை (The Great Commission ) நமக்கு கொடுக்கிறார்.
153 மீன்கள் என்ற எண்ணிக் கை, உலகம் முழுவதும் இருக் கும் பலதரப்பட்ட மக்களை மீட்கும் நற்செய்தி பணியாகும்.
வாருங்கள்! உணவருந்த ங்கள்.
அன்பர்களே! கரையில் நின்ற
இயேசுசீடர்கள் களைத்துப்போய் வந்தபோது, இயேசு அவர்களுக் காக நெருப்பை மூட்டி, மீன் மற்றும் அப்பத்தை தயார் செய்து வைத்திருந்தார்.சீடர்கள் பிடித்த மீனையும் சேர்த்து கொள்கி றார்.இது நாம் அவரின் விண் ணரசில் அவரோடு பந்தியில் இருப்போம் என்பதை காட்டுகிறது.
ஆண்டவரின் காலை உணவு திட்டம் (Breakfast with Jesus): இது, அவர் தம் சீடர்களின் உடல் மற்றும் ஆவிக்குரிய தேவைக ளை கவனிக்கும் அன்பான மேய்ப்பர் என்பதை உணர்த்து கிறது. வாருங்கள் என அனைவ ரையும் அழைக்கின்றார் விண்ணரசு அனைவருக்குமா னது அது உலகளாவியது. அவரு டைய விண்ணரசை இவ்வுலகில் நிறுவுவது ஒவ்வொரு கிறிஸ்த வர்களின் அடிப்படை உரிமை மற்றும் கடமையாகும்.
இந்த உன்னத பயணத்தில் வழி நடத்த அருள் புரிவாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Hyms:written in 1906 by Charles B. Widmeyer.
"Come and dine," the Master calleth, "Come and dine"
You may feast at Jesus' table all the time;
He Who fed the multitude, turned the water into wine,
To the hungry calleth now, "Come and dine."
Come and dine

Comments
Post a Comment