உயிர்த்த ஆண்டவர்: நமது உடன் பயணி(276) Risen Lord: Co-Traveller.விடுதலைப்பயணம் 33:12-16 திருப்பாடல் 121, திருத்தூதர் பணிகள்18:1-11, லூக்கா 24:13-33.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் மூன்றாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "உயிர் த்த ஆண்டவர்: நமது உடன் பயணி" என்ற தலைப்பாகும்.
அவர் நம்மோடு இருக்கிறார்.
He is with us.
அன்பர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமங்க ளில் ஒன்று இம்மானுவேல் (Immanuel). இறைவாக்கினர் ஏசாயா 7:14 ல்,இயேசுவின் பிறப்பைக் குறிக்கப் பயன்படுத் தப்பட்டது.(மத்தேயு 1:23) 
இம்மானுவேல்" (என்ற எபிரேயப் பெயருக்கு "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்று பொருள். திருவிவிலியப் பொருளாக "இம்மானு" (நம்மோடு) + "எல்" (தேவன்/கடவுள்).குறிக்கிறது.
In Hebrew, it is Immanuel and in
Greek, Emmanuel.
நம்மோடு இருக்கும் ஆண்டவர் நம்மோடு உடன் பயணிக்கும் ஒரு வழிகாட்டியாய் பயணிக் கிறார்.நாம் உயிர்த்தெழுந்த இயேசுவுடன் உடன் பயணிப்பவ ர்கள்" என்பது கிறிஸ்தவ விசுவா சத்தின் ஆழமான அனுபவத்தை உணர்த்தும் ஒரு கூற்றாகும்.
கடவுள் தம் மக்களுடன் பிரசன் னமாக இருக்கிறார் என்பதைக் குறிக்கும், 
நாம் உயிர்த்தெழுந்த இயேசுவு டன் உடன் பயணிப்பவர்கள்" என்பது கிறிஸ்தவ நம்பிக்கை யின் மையப்பொருள். உயிர்த் தெழுந்த இயேசுவோடு பயணி ப்பது என்பது வெறும் வரலாற்று நிகழ்வு அல்ல, அது அன்றாட வாழ்வில் அனுபவிக்கக்கூடிய ஒரு ஆவிக்குரிய பயணமாகும். 
உயிர்த்தெழுந்த இயேசு, இன் றைக்கும் பயத்தில், கவலை யில், மற்றும் நம்பிக்கையற்று இருப்பவர்களோடும், அவரின் அன்பு விசுவாசிகளாகிய நம் மோடும் கூடவே பயணிக்கிறார்.
நற்செய்தியாளர் லூக்கா 24-ல் எம்மாவு சீடர்களுடன் இயேசு பயணத்தது போல, இன்றும் நம்முடைய வாழ்வில் பலவீன மான தருணங்களில் அவர் கூடவே நடந்து, வேத வசனங் களை விளக்கி நம் உள்ளத்தை எரியச் செய்கிறார்.
உயிர்த்தெழுந்த இயேசுவை சந்தித்த சீடர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது போல, நாமும் அவரோடு பயணிக்கும் போது பாவ வழிகளில் செல்லா மல், நல்வழியில் செல்ல அழைக் கப்படுகிறோம்.
நம் கடவுள் வேடிக்கை பார்க்கிற வர் அல்ல: அவர் நம்மோடு இணைந்து பயணிக்கிறவர்.
Jesus Christ is not a spectator but a co- traveller 
1 எனது பிரசன்னம் உன்னோ டு செல்லும். My presence will go with you.விடுதலைப் பயண ம்.Exodus. 33:12-16
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! இறைத்தூதர் மோசே அவர்கள்,இஸ்ரவேல்  மக்கள்
ஆரோனின் தவரான வழிகாட்ட லால்,  அவர்களின்  பொற்கா தணிகளைக் கொண்டு கன்றுக் குட்டியை வடித்து அதை வணங் கி பாவம் செய்தார்கள். மிக மோசமாக அவர்கள் ,"இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே" என்றனர். இது அருவருக்க தக்க பாவமாகும். அதனால் தான் நம் ஆண்டவர் மோசேயிடம், "இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்கா க்கழுத்துள்ள மக்கள் அவர்கள். (விடுதலைப் பயணம் 32:9) என்றார். அவர்கள் அன்று இருந்தது போலவே இன் றும் இருக்கிறார்கள் உலகை அழிவு பாதையில் நடத்துகிறார்கள். சென்ற வாரம் ஒரு இஸ்ரவேல ன் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலையை உடை த்தான் அதனால் அவன் சிறை யில் அடைக்கப்பட்டான். ஆண்டவர் மீது அதிக வெறுப்பு ள்ள மக்களாய் இருப்பது வேத னையளிக்கிறது.
இஸ்ரவேலர் பொன் கன்றுக்
குட்டியை வணங்கியதால், கடவுள் கோபமடைந்து, "நான் உங்களோடு வரமாட்டேன், ஒரு தூதரை அனுப்புகிறேன்" என்று கூறுகிறார். ஆனால் மோசே, "நீர் எங்களோடு வராவிட்டால், எங்களை இங்கிருந்து.  அனுப் பாதேயும்" (33:15) என்று பிடிவாதமாக ஆண்டவரிடம் கேட்கிறார்.தாங்கள் கடவுளு டைய மக்கள் என்பதை உறுதிப்ப டுத்தவும் கேட்கிறார்.
கடவுளின் பிரசன்னம் முக்கியம் (வசனம் 14-15): தேசம் முக்கியம ல்ல, வாக்குத்தத்தம் முக்கிய மல்ல; கடவுளின் பிரசன்னமே (My Presence) மிக முக்கியம் என்று மோசே வாதிடுகிறார். கடவுளின் பிரசன்னம் இருந்தால் தான் இஸ்ரவேலர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிறார்
அதற்கு ஆண்டவர், "எனது பிரச ன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்" என்று கூறுகிறார்.
(விடுதலைப் பயணம் 33:14)
கடவுளின் பிரசன்னம் இல்லாம ல் வெற்றி என்பது சாத்தியமில் லை என்பதையும், கடவுளின் பிரசன்னம் தான் விசுவாசிகளை உலகத்திலிருந்து பிரித்துக் காட் டும் அடையாளம் என்பதையும் இப்பகுதி உணர்த்துகிறது. 
இஸ்ரவேலருடன் இணைந்த
பயணம்: Travel with Israelites.
அன்பர்களே! இஸ்ரவேலர்  40 ஆண்டு, பாலை நிலத்தை கடக்க
மேக தூணாகவும், இரவில் வெளிச்சம் கொடுக்க தீ தூணாக வும் கடவுள் உடன் பயணியாய்
பயணத்ததை நாம் காண்கி றோம்.அவர்களுக்கு முன் சென் று வழி காட்டினார். மேகம் தங்கும் இடங்களில் அவர்கள் முகாமிட்டனர், மேகம் உயரம் போது பிரயாணத்தைத் தொடர்ந் தனர்.இஸ்ரவேலர்கள் மத்தியி லே கர்த்தருடைய பிரசன்னத் தைக் குறிக்கும் விதமாக 'வாசஸ்தலம்' (Tabernacle) அல்லது திரு உறைவிடம் அமைக்கப்பட்டது. இதுவே அவர் களின் வழிபாட்டு மையமாக இருந்தது.தேவன் அவர்களுடன் பிரசன்னமாகி, பாதை காட்டி, எதிரிகளிடமிருந்து பாதுகாத் தார். 
கடினமான சூழலில் கடவுளை நம்பி வாழக் கற்றுக்கொண்ட காலமாகவும், வாக்களிக்கப்பட்ட தேசத்தை (கானான்) நோக்கிச் சென்ற பயணமாகவும் அமைந் தது. 
2.நான் உன்னுடனே இருக்கி றேன். I am with you. திருத்தூ தர் பணிகள்  Acts 18:1-11, 
This part of the  sermon is based on Barclay Commentary.
அன்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் தன் ஊழியத்தை
 ஏதென்சில் முடித்துவிட்டு  
கொரிந்துக்குப் போய்ச் சேர்ந் தார். அங்கே அவர் அக்குவிலா என்னும் யூதரைக் கண்டார். அவர் பொந்து தேசத்தைச் சேர்ந்தவர்.. கி.பி 49-ஆம் ஆண் டில் கிளாடியஸ் ராயன் ரோமி லிருந்து அனைத்து யூதர்களை  நாடு கடத்தினார். அப்போதுதான் அக்குவிலாவும் பிரிசில்லாவும் கொரிந்துக்கு வந்திருக்க வேண்டும்.
பவுலின் காலத்தில் கொரி ந்து: Corinth at the time of St.Paul.
அன்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் வாழ்ந்து, பணிபுரிந்து, தனது மாபெரும் வெற்றிகளை  பெற்ற நகரம் கொரிந்து. இது ஒரு தீய நகரமாகவும் இருந்தது. கிரேக்கர்களிடம், காம இச்சை யுடன் கூடிய ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழ்வதைக் குறிக்கும் நகரம்.கிரீஸில் வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய அனை த்துப் போக்குவரத்தும் கொரிந்து வழியாகத்தான் செல்ல வேண்டி யிருந்தது.ஏனெனில் வேறு வழி இல்லை. மக்கள் அதை "கிரீஸி ன் பாலம்" (The Bridge of Greece.") என்று அழைத்தனர்.கொரிந்து "கிரீஸின் சந்தை இடமாகவும்" விளங்கியது.
அக்குவிலாவும் பிரிசில்லாவும் யூதர்கள். கூடாரம் செய்யும் தொழில் செய்பவர்கள்.இவர்கள் கொரிந்துக்கு வந்திருந்ததாள் 
பவுல் அந்த மக்களிடம் சென்றா ர், மேலும், அவர்கள் தன்னைப் போலவே அதே தொழிலைச் செய்ததால், அவர்களுடன் வேலை செய்தார்; ஏனெனில் அவர்கள் கூடாரம்  செய்யும் தொழில் (Tent Makers) ,செய்பவ ர்கள்.பவுல் ஒரு ரபியாக இருந் தார், மேலும் யூத வழக்கத்தின் படி ஒவ்வொரு ரபிக்கும் ஒரு தொழில் இருக்க வேண்டும். பவுல் அடிகளார் யூத மரபுப்படி, பிரசங்கத்திற்கும் போதனைக் கும் பணம் வாங்கக் கூடாது என்பதினால்,  தன் வாழ் வாதார த்தைத் தானே ஈட்டிக் கொள்ள வேண்டும். யூதர்கள் வேலை யைப் போற்றினார்கள். "வேலையை நேசி," என்றார் கள். "தன் மகனுக்குத் தொழி லைக் கற்றுக்கொடுக்காத வன், அவனுக்குக் கொள்ளை யைக் கற்றுக்கொடுக்கிறான்" என்ற பழமொழியும் உண்டு.
திருத்தூதர் பவுல் அடிகளார் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவர் ஜெப ஆலயத்தில் விவாதித்து, யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் இருவரையும் தன் பக்கம் ஈர்த் தார்.
சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; 'இயேசுவே மெசியா என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். 
யூதர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தப்போது , "உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கி றேன்" என்று கூறினார்; 
ஆனாலும்,தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். 
கர்த்தர் இரவில் ஒரு தரிசனத் தில் பவுலிடம், "பயப்படுவதை நிறுத்து; தொடர்ந்து பேசு, மௌ னமாக இருக்காதே, ஏனென் றால் நான் உன்னுடன் இருக் கிறேன், உனக்குத் தீங்குசெய்ய யாரும் உன்மேல் கை வைக்க மாட்டார்கள், ஏனெனில் இந்த நகரத்தில் அநேக மக்கள் என்னு டையவர்கள்" என்றார். அவர் அங்கே ஒரு வருடம் ஆறு மாதங்கள் தங்கி, அவர்களுக் குள் தேவனுடைய வார்த்தை யைப் போதித்தார்.
பவுல் கூடாரம் செய்யும் தொழி லைச் செய்துகொண்டே நற்செ ய்தி அறிவித்தார். இது ஆன்மீகப் பணிக்காகக் கடின உழைப்புடன் கூடிய சமூக வாழ்வை வலியுறுத் துகிறது.கொரிந்துவில் பெரிய தொரு திருச்சபையை நிறுவ வழிவகுத்தார். 
எனவே, அன்பர்களே! எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் இறைப்பணியில் தளராமல் உழைக்க வேண்டும் ஆண்டவர்
நம்மோடு இருக்கிறார்.
3.இயேசு நம்மோடு பயணிக் கிறார். Jesus is a co-traveller .லூக்கா 24:13-33.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம்முடைய ஆண்டவரா கிய இயேசு கிறிஸ்து நம்மோடு நம் வாழ்வில் இணைந்து பயணி க்கின்றவர்.
திருப்பயணம்:
 எம்மாவு சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், எருசலேமி லிருந்து சுமார் 11 கி.மீ தொலை விலுள்ள எம்மாவு கிராமத்திற் குச் சோகமாக நடந்து சென்ற இரு சீடர்கள். அவர்கள் திருத் தூதர்கள் அல்ல !எம்மாவு விவிலியத்தில் ஒரே ஒரு முறை உச்சரிக்கப்படும் ஊர் !வரலாற்றில் ஒருவராலும் மறக்க முடியாததாய் நிலைத்து விட்டது ! கிட்டத்தட்டநான்கு மணி நேர நடை பயண தூரம் !இஸ்ரேலை
மீட்பார் என நினைத்திருந்தவர்
மாண்டாரே என புலம்பிக் கொண்டிருந்தனர்.
பயண வழியில் உயிர்த்த இயேசு அவர்களுடன் இணைந்து, மறைநூலை விளக்கி, அப்பம் பிட்கும்போது தங்களை வெளிப்படுத்தினார். இதில் ஒருவரின் பெயர் கிலெயோப்பா. முதலாவதாக, எம்மாவு சீடர்கள் செய்ததுபோன்று, உயிர்த்த இயேசுவுடன் ஒன்றிணைந்து நடந்தால், அவரும் நம்முடன் உடன் நடந்து, நம்மை ஊக்கு வித்து, நமது பயணத்தை நிறைவடைய செய்வார்  இத்த கையதொரு பயணமே திருப்ப யணமாக அமையும். இயேசுவின் உயிர்த்தெழுதல் கனவோ, மாயையோ அல்ல; அது வரலாற்று உண்மை. சீடர்கள் கண்டது காய்ச்சலால் வந்த பிரமையல்ல, மரணத்தை வென்ற உண்மையான கிறிஸ் துவை.  இயேசுவின் பாடுகள் மற்றும் சிலுவை மரணம் தற் செயலான தல்ல, அது தேவனு டைய திட்டத்தின் ஒரு பகுதி. திருவிவலிய வேதவாக்கியங் கள் அனைத்தும் கிறிஸ்து பாடு பட்டு மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதையே முன்ன றிவித்தன.
இது மோசே முதல் இறைவாக்கி னர்கள் வரை அனைவரும் தம் மைக் குறித்து என்ன சொல்லியி ருக்கிறார்கள் என்பதை இயேசு அவர்களுக்கு விவரித்தார். வேதத்தை சரியாகப் புரிந்து கொள்வது இயேசுவை அறிவதற்கு மிக அவசியம். 
கிறிஸ்து அவர்களின் இதயங்க ளுடன் பேசுகிறார், அவர்களை மீண்டும் எழுப்புகிறார்,நெருப்புப் போன்ற இருதயம்: இயேசு தங்க ளோடு பேசியபோதும், வேதவா க்கியங்களை விவரித்தபோதும் தங்களுடைய இருதயம் உள்ளுக் குள் எரிந்து கொண்டிருந்தது வேதத்தை ஆழமாகப் படிக்கும் போது இயேசுவை உண்மை யாக அறிந்துகொள்ள முடியும்.
ஏனேனில், சத்திய வேதம் பக்தர்களின் கீதம்.
அப்பம் பிட்கையில் வெளிப்பாடு:
சீஷர்கள் இயேசு வேதக்குறிப்பு களை விளக்கும்போது அடையா ளம் காணவில்லை, ஆனால் அவர் அப்பத்தை ஆசீர்வதித்து பிட்டு அவர்களோடு பகிர்ந்து கொண்டபோது, அவரது கண்கள் திறக்கப்பட்டன. இது அவருடை ய இருப்பு (Presence) மற்றும் ஐக்கியத்தை உணர்த்துகிறது.
 (ஆர்வமும், நம்பிக்கையும் கூடியது) என்பதை அவர்கள் உணர்ந்தனர். இயேசுவை அப்பம் பிட்கையில்  நாம் தூய  ஐக்கியத்தில் பங்கு பெருகி றோம். 
இயேசு நம்மோடு வருகிறார்: நம்முடைய சோகம், அவநம்பிக் கை மற்றும் பயணங்களில் இயேசு நம்மோடு வந்து, நம்மை வழிநடத்துகிறார்.
எங்களோடுத் தங்கும். ஆண்ட வரே!தங்கும் என சொல்லாமல் இருந்திருந்தால் அசரடிக்கும் அந்த அனுபவத்தை அவர்கள்
பெறாமலேயேபோயிருப்பார்கள்.இறுதியாக,
இந்த நிகழ்வு சீஷர்களின் அவநம்பிக்கையை நம்பிக்கை யாக மாற்றி, அவர்களை எருசலேமுக்குத் திரும்பிப் போக சாட்சிகளாக மாற்றியது. 
இன்று, உயிர்த்தெழுந்த இறை வன் நம் ஒவ்வொருவருடனும் சேர்ந்து நடக்கிறார், நாம் நமது பாதைகளில் பயணிக்கும்போது, வேலை, பொறுப்புக்கள், துன்பம் மற்றும் தனிமை என எல்லாப் பாதைகளிலும் அவர் நம் இதயங்களை அரவணைக்க அனுமதிக்கும்படி கேட்கிறார்.
 எனவே, எம்மாவு சீடர்களைப் போலவே, நாமும் மகிழ்ச்சியால் எரியும் இதயங்களுடன் நம் வீடுகளுக்குத் திரும்புவோம். காயங்களை அழிக்காமல் அவற்றை ஒளிரச் செய்யும் ஒரு எளிய மகிழ்ச்சி. கடவுள் உயிருட ன் இருக்கிறார், நம்முடன் நடந்து செல்கிறார், நாம் அவருடன்
இனைந்து பயணிக்க ஆண்டவர்
அருள் புரிவாராக, ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..








    எங்களோடு தங்கும்

 நற்செய்தி (லூக் 24:13-32)

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).