உருக்கமான அன்புடன் இயேசுவுடன் நட.(277). Walk with Jesus in Passionate love. எரேமியா 31:1-6,திருப்பாடல் 63, எபேசியர் 3:14-19, யோவான் 21:15-19

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் நான்காம்  ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "உருக் கமான அன்புடன் இயேசுவு டன் நட"
இதன் அடிப்படையில் உலக
புகழ்பெற்ற பிரசங்கியார் பிில்லி கிரஹாம் (Billy Graham)
அவர்கள் உருக்கமான அன்புட ன் இயேசுவுடன் நட என்ற அடிப்படையில் பல பிரசங்கங்
களில் மிக முக்கிய மையப் பொருட்களாக இருந்தன.தேவன் நம்மை அப்படியே நேசிக்கிறார் என்பதுதான். நாம் பாவம் செய் திருந்தாலும், நம் தவறுகளை மன்னித்து, அன்புக்கரம் நீட்டி நம்மோடு நடக்கிறவர்.
இயேசுவுடன் நடக்க, முதல் படி
இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது (Accepting Jesus as Savior) கிரஹாம் அடிக்கடி கூறுவது போல, "கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம்.
இயேசுவுடன் நடப்பது என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தேவாலயத்திற்கு செல்வது மட்டுமல்ல. இது தினசரி வாழ்க்கையில் அவரோடு பேசு வது (இறைவேண்டல்), திருவிவலியத்தை  வாசிப்பது மற்றும் கீழ்ப்படிதலுடன் வாழ் வது ஆகும்.பேரன்புடன் நடக்கும் போது, நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். இயேசு வின் அன்பு நம் இருதயத்தை நிரப்பும்போது, நாம் மற்றவர்கள் மீது அன்பைக் காட்ட முடிகிறது.
எந்த சூழ்நிலையிலும் இயேசு வை நம்பி, அவருக்கு நம் வாழ்க் கையை அர்ப்பணித்து நடப்பதே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை.
உருக்கமான அன்புடன் நடக்க, இயேசுவோடு தினமும் பேசுவது அவசியம். ஒரு நண்பனுடன் பேசுவது போல உங்கள் கவலைகள், மகிழ்ச்சி, மற்றும் தேவைகளை அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அவருடைய வார்த்தையைக் கேட்பது வேத வாசிப்பு செய்வது 
இயேசுவுடன் நடப்பதாகும்.
"திருவிவலியம் என்பது இயேசுவின் அன்புக்கடிதம்". அதை வாசிக்கும்போது, அவர் உங்களுடன் பேசுவதை உணர லாம்.இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவர் அன்பில் நிலைத்திருந்து, தினமும் அவ ரோடு நடப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி."
பிில்லி கிரஹாமின் பல பிரசங்கங்கள் "தேவன் உங்க ளை நேசிக்கிறார்" (God loves you) என்ற வார்த்தையோடுதான் தொடங்கும். அந்த அன்புதான் நம்மை இயேசுவுடன் நடக்க தூண்டுகிறது.
அன்பர்களே! திருவிவலிய கருத்துப்படி, உருக்கமான அன்பு
Passionate Love என்பது,"வெறும் உணர்ச்சி சார்ந்ததல்ல, அது செயல்பாட்டுடன் கூடிய, தியா கம் நிறைந்த, நிபந்தனைய ற்ற அன்பு ஆகும்.தீவிர அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாரா மல், தகுதியற்றவர்களுக்காகவு ம் தன் அன்பை வெளிப்படுத்துவ தாகும்.
தொன்மை கிரேக்கத்தில் அன்பு நான்கு வகைப்படும்.
1.அகப்பே(Agape):
நிபந்தனையற்ற அன்பு): இது அனைவர் மீதும் காட்டப்படும் சுயநலமற்ற, தியாகம் நிறைந்த மற்றும் தூய்மையான அன்பு. இது தெய்வீக அன்பாகவும், மனிதநேயத்தின் அடையாள மாகவும் கருதப்படுகிறது
2.ஈரோஸ் (Eros) அன்பு என்பது கிரேக்க தத்துவத்தின்படி, உடல் ரீதியான ஈர்ப்பு, சிற்றின்பம், ஆசை மற்றும் பேரார்வம் (Passion) நிறைந்த காதலாகும். இது கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தை குறிக்கும்,
3.ஸ்டோர்ஜ் (Storge - குடும்ப அன்பு)(familial). : இது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் பாசம், விசுவாசம் மற்றும் பாதுகாப்பான அன்பைக் குறிக்கிறது (உதாரணமாக, பெற் றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான பாசம்).
4.ஃபிலியா/பிலியோ (Philia/Phileo - (friendship)நட்பு): இது நண்பர்கள் அல்லது சமமா னவர்களுக்கு இடையே ஏற்படும் ஆழமான நட்பு, தோழமை மற்று ம் பிணைப்பைக் குறிக்கிறது.
1.நித்திய அன்போடு நடத்தல்:
Walking with Eternal Love" எரேமியா 31:1-6, 
நண்பர்களே நித்திய அன்பு என்பது கடவுளின் அன்போடு நடப்பதை குறிக்கிறது.இப்பகுதி
எரேமியா 31:1-6, பாபிலோனிய சிறையிருப்புக்குப் பிறகு இஸ்ர வேலர் மீட்கப்பட்டு, கடவுளின் நித்திய அன்பினால் மீண்டும் கட்டியெழுப்பப்படும் மகிழ்ச்சி யான காலத்தை முன்னறிவிக்கி றது.அக்காலத்திலே நான் இஸ்ர வேலின் குடும்பங்களுக்கெல் லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார் கள்." இது இறைவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிப்பதா கும். இது வெறும் சட்டப்பூர்வ மான உடன்படிக்கை அல்ல, மாறாக தகப்பனுக்கும் பிள்ளை களுக்கும் இடையிலான அன்புப் பிணைப்பு என்று இறையிய ளாளர் வில்லியம் பார்க்களே விளக்குகிறார்.வாளுக்குத் தப்பிய இஸ்ரவேலர் வனாந் தரத்தில் (பாபிலோனிலிருந்து திரும்பும் வழியில்) கர்த்தரின் கிருபையையும் இளைப்பாறுத லையும் காண்பர் என்பது
இஸ்ரவேல் மக்கள் செய்த துரோகங்களுக்குப் பிறகும், தேவன் அவர்களைத் தன் மக்களாக ஏற்றுக்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். கர்த்தர் தம்முடைய மக்களை "சகல கால ங்களிலும் நிலைநிற்கும் அன்பி னால்" (Everlasting love) நேசிப்ப தாகக் கூறுகிறார். இது அவர் களின் பாவங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனைக்கு (சிறையிருப்பு) மத்தியிலும், கர்த்தரின் அன்பு மாறாதது என்பதைக் காட்டுகிறது.
வனாந்தரம் என்பது தண்டனை மட்டுமல்ல, தேவன் தம் மக்க ளோடு தனிமையில் பேசும் இடமாகவும், அவர்களைச் செம்மைப்படுத்தும் இடமாக வும் உள்ளது. இயேசு திருமுழு க்கு பெற்ற உடனே, பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியான வராலே வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
நாற்பது பகலும் நாற்பது இரவும் உணவின்றி உபவாசம் இருந் தார்.கடவுளோடு தனிமையாய் 
இருந்தார் என்பதை நாம் நினை வில் கொள்வோம்.
துன்பங்கள் வழியாகச் சென்றா லும், தேவன் தம் மக்களைக் கை விடவில்லை. 
இஸ்ரவேல் என்னும் கன்னிகை யே, நான் உன்னைத் திரும்பக் கட்டுவேன்." தேவன் மக்களைப் புனரமைத்து, இழந்த மேன்மை யை மீட்டெடுப்பார்.
மேள வாத்தியங்களின் இன்னி சை உன் கையில் இருக்கும், உன் துக்கம் மாறி, மகிழ்ச்சியின் தாளங்கள் மீண்டும் ஒலிக்கும்.
திராட்சைத் தோட்டங்கள் சமாரியாவின் மலைகளில் (சமாரியா மலை (Mount Gerizim) (ஆசீர்வாத மலை) என்பது பண்டைய இஸ்ரேலின் மத்திய மலைப்பகுதியில் அமைந்துள்ள, சமாரியர்களின் புனிதமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். சமாரியர்களின் நம்பிக்கையின்படி, இதுவே உலகின் மிகக்பழமையான மற்றும் மத்திய மலை. அவர்கள் எருசலேமுக்குப் பதிலாக, இந்த மலையையே வழிபாட்டுத் தலமாகக் கொள் கின்றனர்.)

மீண்டும் விவசாயம் செழிக்கும்
கன்னி இஸ்ரவேல் மகிழ்ச்சியோ டு சீயோனுக்குத் திரும்புவாள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட, நம்பிக்கையூட்டும் மீட்பின் செய்தி இதுவாகும்
அன்பர்களே! தேவன் தமது மக்க ளைத் தண்டித்தாலும், இறுதி நோக்கம் அழிவு அல்ல, மாறாக மீட்பு மற்றும் புனரமைப்பு (Restoration) என்பதை வலியுறுத் துகிறது. இது நம்பிக்கையற்ற சூழலில், தேவனுடைய நித்திய அன்பின் மீதான நம்பிக்கை யைத் தூண்டும் வாக்குறுதியா கும்.
2.அன்பே வாழ்வுக்கு ஆணி வேர்.Love is the root of life. எபேசியர் 3:14-19.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் எபேசியர் 3:14-19ல், அவர் விசுவாசிகளுக்காகச் செய்யும் ஒரு ஆழமான இறைவேண்ட லாகும்.
யூதர்கள் பொதுவாக நின்று ஜெபிப்பார்கள். ஆனால் பவுல் இங்கு முழங்கால் படியிடுகி றார். இது தேவனுடைய பிரசன் னத்தில் அவர் காட்டும் அடக்கம், பயபக்தி மற்றும் ஆழ்ந்த 
வேண்டுதலைக் குறிக்கிறது.
விண்ணுலோகம் (தேவதூதர் கள்) மற்றும் மண்ணுலகம் (மனிதர்கள்) ஆகிய அனைத்திற் கும் தந்தையாக இருக்கும் தேவனை பவுல் ஆராதிக்கிறார். 
பவுல் வெறும் உடல் பலத்திற் காக ஜெபிக்கவில்லை. ஆத்து மாவிலும் மனதிலும் உள்ளான மனிதனுக்கு தூய ஆவியானவ ரால் கிடைக்கும் மனோதிடத்தி ற்காக ஜெபிக்கிறார்.
உலக அழுத்தங்களைச் சமாளிக் கவும், கிறிஸ்தவ வாழ்வை வாழ வும் இந்த உள்ளான பெலன் அவசியம். 
கிறிஸ்து நம் இருதயங்களில் தற்காலிகமாக அல்ல, நிரந்தர மாகத் தங்கி, நம் வாழ்வை வழி நடத்த வேண்டும். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ் துவின் அன்பில் ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும்.
அன்புதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. 
கிறிஸ்துவின் அன்பு எல்லையற் றது.அறிவுக்கு எட்டாதது.
அகலம் என்பது எல்லா மனிதர்க ளையும் (யூதர், புற இனத்தார், உலகம் முழுவதும்) உள்ளடக்கியது.
நீளம் என்பது நித்தியத்திற்கும் நிலைத்து நிற்பது.
ஆழம் என்பதுபாவத்தின் பாதா ளத்தில் இருக்கும் பாவியையும் மீட்கக்கூடியது.
உயரம் என்பது நம்மைப் விண் ணக மகிமைக்கு உயர்த்துவது.
இந்த அன்பு அறிவுக்கு எட்டாதது (புரிந்துகொள்ள முடியாதது), ஆனாலும் அனுபவத்தில் உணர க்கூடியது.
இறுதியாக, கிறிஸ்துவை ஆழமாக அறியும்போது, நம்மிடம் தேவன் காண விரும்பும் முழுமை யான பண்புகள்(அன்பு, பரிசுத்
தம்) நம்மில் நிறைவடையும். நாம் கிறிஸ்துவைப் போல மாறுவதே இந்த முழுநிறைவு. கடவுள்மீது கொள்ளும் அன்பே வாழ்வின் ஆணி வேர் என திருத்தூதர் பவுல் அடிகளார் நமக்காக இறை வேண்டல் செய்கிறார்.
3.இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக் கிறாயா?Do you love me more than these?"யோவான் 21:15-19.
(It has been adopted from Stydy Light Org.)
அன்பானவர்களே! உயிர்த்த கிறித்து, மூன்றாவது முறையாக
ஒரு அதிகாலை நேரம் தோன்றி னார். இப்பொழுது, அது திபேரி யா கடல் என்றும், கெனசரேத் ஏரி என்றும், கலிலேயா கடல்
என்றும் அழைக்கப்படும் இடத்தில் தம்முடைய ஏழு சீடர்
களுக்குத் தோன்றினார்.இதன்
முக்கிய காரணம்,பேதுருவின் மூன்று மறுதலிப்புகளை, அவர து அன்பின் மூன்று வாக்குமூல ங்கள் மூலம் சரிசெய்து, அவரை மீண்டும் சீடத்துவத்திற்கும், ஊழியத்திற்கும் (ஆடுகளை மேய்த்தல்) நிலைநிறுத்துகிறார். அன்பிற்குப் பொறுப்பு தேவை என்பதையும், தியாகமான சேவையே கிறிஸ்துவின் மீதான அன்பின் உண்மையான ஆதா ரம் என்பதையும் இது வலியுறுத் துகிறது. 
முதலாவதாக, இயேசு பேதுரு விடம் கேட்ட கேள்வியை நாம் கவனிக்க வேண்டும்: "யோனாவின் மகனான சீமோ னே, இவர்களைவிட நீ என்னை அதிகமாக நேசிக் கிறாயா?" அதற்கு பேதுரு  வெறுமனே, "நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்" என்று சொல்வதில் திருப்தி அடைந்தார்.
இந்த மொழியைப் பொறுத்த வரை, அதற்கு இரண்டு அர்த்தங் கள் சமமாகவே இருக்கக்கூடும்.
1. ஒருவேளை இயேசு படகையும், அதன் வலைகளையும்,மற்ற உபகரணங்களையும், பிடிபட்ட மீன்களையும் காட்டி, பேதுரு விடம் இவ்வாறு கேட்டிருக்க லாம்: “சீமோனே, இவைகளை விட நீ என்னை அதிகமாக நேசிக்கிறாயா? என் மக்களுக் கும் என் பணிக்கும் உன்னை என்றென்றைக்கும் அர்ப்பணி ப்பதற்காக, இவைகளையெல் லாம் விட்டுக்கொடுக்கவும், உன் பாரம்பரிய தொழிலையும், உலக வாழ்க்கையின் எல்லா நம்பிக்கையையும் கைவிடவும்,  துறக்கவும் நீ தயாராக இருக்கி றாயா?” என்று ஒரு சவாலாக
கேட்டிருக்கலாம்.
இது, நற்செய்தியைப் பிரசங்கிப் பதற்கும் கிறிஸ்துவின் மக்களைக் கவனித்துக்கொள் வதற்கும் தன் வாழ்நாள் முழுவ தையும் அர்ப்பணிக்கும் இறுதி முடிவை எடுக்குமாறு பேதுரு வுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக இருந்திருக்கலாம்.
2, இரண்டாவதாக, பேதுரு,  "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்" என்று (மத்தேயு நற்செய்தி 26:33) சொன்ன ஒரு இரவை இயேசு நினைவுகூர்ந்திருக்கலாம்.
அதனால்,
 இயேசு, சீடர்களின் அந்தச் சிறிய கூட்டத்தில் இருந்த மற்ற வர்களைப் பார்த்து, பேதுருவி டம், "சீமோனே, உன் உடன் சீடர்களை விட நீ என்னை அதிகமாக நேசிக்கிறாயா?" என்று கேட்டிருக்கலாம்.
இவற்றில்,இரண்டாவது,மிக சரியாக இருக்கலாம்.அதனால்
தான் பேதுரு,இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிக ளைப் பேணி வளர்" என்றார். 
அன்பர்களே!
 இயேசு இந்தக் கேள்வியை மூன்று முறை கேட்டார்; அதற்குக் ஒரு காரணம் இருந்தது. பேதுரு மூன்று முறை தன் ஆண்டவரை மறுதலித்தார், மேலும் மூன்று முறையும் தன் ஆண்டவர் அவருக்குத் தன் அன்பை உறுதிப்படுத்த வாய்ப்பளித்தார். இயேசு, தமது கிருபையுள்ள மன்னிப்பின் மூலம், மும்முறை மறுதலித்தலின் நினைவை மும்முறை அன்பின் பிரகடனத் தால் துடைத்தெறிய பேதுருவு க்கு வாய்ப்பளித்தார்.
பேதுருவின் அன்பு என்ன கொண்டுவந்தது?
அன்பர்களே!
 அன்பு பேதுருவுக்கு என்ன கொண்டுவந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். 
(1) அது அவருக்கு ஒரு பணி யைக் (task)கொண்டுவந்தது. "நீ என்னை நேசித்தால், என் மந்தை யின் ஆடுகளையும் குட்டிகளை யும் மேய்க்கும் பணியில் உன் உயிரை ஒப்புக்கொடு" என்று இயேசு கூறினார். மற்றவர்களை நேசிப்பதன் மூலமே நாம் இயேசு வை நேசிக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும். அன்பு உலகில் மிகப்பெரிய பாக்கியம், Love is the greatest privilege in the world. ஆனால் அது மிகப்பெரிய பொறுப்பையும் (greatest responsi bility. கொண்டுவருகிறது. 
(2) அது பேதுருவுக்கு ஒரு சிலுவையைக் (Cross)கொண்டு வந்தது. இயேசு அவரிடம் கூறி னார்: "நீ இளைஞனாக இருக்கும் போது, ​​நீ எங்கே போகிறாய் என்பதை நீயே தேர்ந்தெடுத்து க்கொள்ளலாம்; ஆனால் ஒரு நாள் வரும், அவர்கள் உன் கைகளைச் சிலுவையின்மேல் நீட்டுவார்கள், நீ தேர்ந்தெடுக் காத ஒரு வழியில் நீ கொண்டு செல்லப்படுவாய்." அந்த நாளும் வந்தது, ரோமில், பேதுரு தன் ஆண்டவருக்காக மரித்தார்; அவரும் சிலுவையிடம் சென்றார், மேலும் தன் ஆண் டவர் மரித்ததைப் போல மரிக் கத் தான் தகுதியற்றவன் என்று கூறியதால், தலை கீழாக அதில் அறையப்படு மாறு கேட்டார். அன்பு பேதுருவுக்கு ஒரு பணியைக் கொண்டுவந்தது, அது அவருக்கு ஒரு சிலுவையைக் கொண்டு வந்தது. அன்பு எப்போதும் பொறுப்பை உள்ளடக்கியது, அது எப்போதும் தியாகத்தை உள்ளடக்கியது. நாம் கிறிஸ்து வின் பணியை எதிர்கொள் ளவும், அவருடைய சிலுவையை ச் சுமக்கவும் தயாராக இல்லா விட்டால், நாம் அவரை உண்மை யாக நேசிப்பதில்லை.
பேதுரு மாபெரும் மேய்ப்பர்:
Peter as the great shepherd;
அன்பர்களே! தூய யோவான் அவர்கள் இந்தச் சம்பவத்தை வீணாகப் பதிவு செய்யவில்லை. கிறிஸ்துவின் மக்களின் மாபெ ரும் மேய்ப்பராக பேதுருவைக் காண்பிப்பதற்காகவே அவர் அதைப் பதிவு செய்தார்.மற்ற நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு,லூக்கா இந்நிகழ்வை பதிவுசெய்யவில்லை. ஆரம்பகாலத் திருச்சபையில் மக்கள் ஒப்பீடுகளைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். ( 1கொரிந் தியர் 1:12) வேறு எந்த நற்செய்தி யாளரையும்விட யோவானின் சிந்தனைப் பயணங்கள் உயர்ந் தவையாக இருந்ததால், அவரே மாபெரும் மனிதர் என்று சிலர் கூறுவார்கள். 
கிறிஸ்துவுக்காகப் பூமியின் கடைக்கோடி வரை பயணம் செய்ததால்,திருத்தூதர் பவுலே மாபெரும் மனிதர் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், பேதுரு வுக்கும் ஒரு இடம் இருந்தது என்று இந்த அதிகாரம் கூறுகி றது. அவர் யோவானைப் போல எழுதவோ சிந்திக்கவோ முடியா மல் இருந்திருக்கலாம்; பவுலைப் போலப் பயணம் செய்யவோ சாகசங்களில் ஈடுபடவோ முடியா மல் இருந்திருக்கலாம்; ஆனால், கிறிஸ்துவின் ஆடுகளின் மேய்ப்பராக இருக்கும் மா பெரும் கௌரவமும், அருமை யான பணியும் அவருக்கு இருந்தது. இங்குதான் நாம் பேதுருவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியும். நம்மால் யோவானைப் போல சிந்திக்க முடியாமல் இருக்கலாம்; பவுலைப் போலப் பூமியின் கடைக்கோடி வரை செல்ல முடியாமல் இருக்கலாம்; ஆனால், நம்மில் ஒவ்வொருவராலும் வேறொருவர் வழிதவறிப் போகாமல் பாதுகாக்க முடியும், மேலும் நம்மில் ஒவ்வொரு வராலும் கிறிஸ்துவின் ஆட்டுக் குட்டிகளுக்கு தேவனுடைய வார்த்தையாகிய உணவை அளிக்க முடியும் இல்லையா நண்பர்களே! அவ்வாறு, உருக்க மான அன்புடன் இயேசுவுடன் நடக்க ஆண்டவர் அருள்புரி வாராக! ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..



     
 

What Did Jesus Mean When He Said, ‘Feed My Sheep’?

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).