பெந்தக்கோஸ்தே ஞாயிறு. Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனின் குரலை உணர்தல் (280) Hearing God's Voice in a noisy World . 1அரசர்கள் 19:11-18, திருப்பாடல் 29.திருத்தூதர் பணிகள் 2:1-13. யோவான் 20:19-23.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் ஏழாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது "பெந்தக்கோஸ்தே ஞாயிறு. Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனி ன் குரலை உணர்தல்" என்ற
தலைப்பாகும்.
பெந்தெகோஸ்தே ஞாயிறு என்றால், கிறித்து உயிர்த்தெழுந் த ( ஈஸ்டர்) திருநாளுக்குப் பிறகு
வரும் 50வது நாளை குறிக்கும்.
இது ஒரு முதன்மைக் கிறிஸ்த வப் பெருவிழா ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதலு க்குப் பிறகு, தூய ஆவியானவர் (Holy Spirit) அவரது சீடர்கள் மீது இறங்கி வந்ததை இது குறிக்கிற து.இது திருச்சபையின் தொடக் கமாகவும் கருதப்படுகிறது. பரிசு த்த ஆவியின் வல்லமையைப் பெற்ற சீடர்கள், தைரியமாக நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கிய நாள். எனவே, இது திருச்சபையின் (Church) பிறந்த நாளாகவும் போற்றப்படுகிறது.
பெந்தெகோஸ்தே' என்றால் கிரேக்க மொழியில் 'ஐம்பதாம் நாள்' என்று பொருள். யூதர்க ளின் அறுவடைத் திருநாளான 'ஷவுவோத்' (Shavuot) பண்டிகை யுடன் இது தொடர்புடையது.
தூய ஆவியானவரின் வல்லமை யைக் குறிக்கும் வகையில்,இந்த ஆராதனைகளில் 'நெருப்பு' மற்றும் 'வெள்ளைநிறம்' முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தூய ஆவியானவரின் வருகை யைக் குறிக்க ஆராதனைகளில் சிவப்பு நிற ஆடைகளும் அணிய ப்படுவது வழக்கம்.
பண்டிகையின் முக்கியத்து வம்:
அன்பர்களே, இந்நன்னாளில்
பல மொழிகளில் பேசும் திற னைப் பெற்று, உலகெங்கும் தைரியமாக இயேசுவின் நற்செ ய்தியைப் பரப்பத் தொடங்கினர். பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சார்ந்த மக்கள் ஒரே நற்செய்தியைக் கேட்க இதுதூய ஆவியானவரின் அருளால் வழிவகுத்தது. அற்புதங்கள் செய்யும் வல்லமை
அன்பர்களே! கத்தோலிக்க மற்று ம் திருச்சபை பாரம்பரியத்தி ன்படி பெந்தகொஸ்தே நாளில் மரியாளின் பங்கு மிகச் சிறப் பாகக் கருதப்படுகிறது. இயேசுவின் விண்ணேற்றத் திற்குப் Ascension பிறகு, மேல் மாடியில் கூடியிருந்த திருத்தூத ர்கள், இயேசுவின் சகோதரர் கள் மற்றும் பெண்களோடு அன்னை மரியாளும் இறை வேண்டலில் உறுதியாக நிலைத்திருந்தார். தூயஅன்னை மரியாள் திருச்சபையின் தொடக் கத்திற்கு அடித்தளமாக விளங்கி னார். திருத்தூதர்களுடன் மேல் மாடியில் ஒன்றிணைந்து, இறை வேண்டலில் நிலைத்திருந்து, தூய ஆவியானவரைப் பெற் று பிறருக்கு முன்மாதிரியா கவும்,புதிய திருச்சபைக்கு ஒரு தாயாகவும் இறை நம்பிக் கையால் பங்களித்தார்.
பிற திருத்தூதர்களைப் போல வே அன்னை மரியாளின் மீதும் தூய ஆவியானவர் இறங்கி னார். அவர் ஏற்கனவே தூய ஆவியின் வரங்களால் நிறை ந்திருந்தாலும்,ஆண்டவரின் கிருபை பெற்றவர் (லூக் கா1:30) திருச்சபையின் பிறப் புக்கு பலன் தரும் வகையில் புதிய அருட்பணியை பெற்று, உலக திருச்சபையின் தாயாக கருதப்படுகிறார்.ஒரு தாய் தனது குழந்தையின் பிறப்பின் போது அருகில் இருப்பது போல வே, புதிதாகப் பிறந்த திருச்சபை யின் தொடக்கத்திலும் மரியா தாயாக உடனிருந்தார். தொடக் ககால கிறிஸ்தவர்கள் அன்னை மரியாளுடன் இணைந்து செபித் ததன் மூலம் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றனர்
பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, இயேசுவின் சகோதரர் கள் திருச்சபைக்கு ஆற்றிய பங்குகள்: The roles played by the brothers of Jesus in the Church after the Day of Pentecost."
அன்பர்களே!இயேசுவின் சகோ தரர்கள் (யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா) இயேசு வின்சீடர்களோடுபெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, இணைந் தனர்.திருவிவலியத்தின் படி, இவர்கள் முதலில் இயேசுவை நம்பவில்லை. ஆனால், இயேசு வின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்கள் விசுவாசிகளாக மாறினர். திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 1:14-ன்படி, இயேசுவின் தாயான மரியா ளோடும், அவருடைய சகோதரர் களோடும் சீடர்கள் அனைவரும் பெந்தெகொஸ்தே நாளுக்கு முன் ஜெபத்தில் ஒருமனப்பட்டு இருந்தார்கள்.இதன் பிறகு, அவருடைய சகோதரரான யாக் கோபு மற்றும் யூதா ஆகியோர் ஆதி திருச்சபையில் முக்கியத் தலைவர்களாக மாறினர்.
யாக்கோபு (James): இவர் யாக்கோபு திருமுகத்தை எழுதிய
வர். எருசலேம் திருச்சபையின் முக்கிய தலைவரானார். கி.பி. 62-ஆம் ஆண்டில், யூத மதத்தலை வர்களால் எருசலேம் கோவிலின் உச்சியிலிருந்து கீழே தள்ளப்ப ட்டு, பின்னர் கல்லால் அடிக்கப் பட்டு திருத்தூதர்கள் போலவே கொள்ளப்பட்டார் என யூத வரலா ற்றாசிரியர் ஜோசிஃபஸும் இந்த மரணத்தை உறுதிப்படுத் துகிறார்.
யூதா (Jude/Judas): புதிய ஏற்பாட்டில் உள்ள யூதா திருமுக த்தை எழுதியவர். பாரம்பரியத் தின்படி, இவர் பாரசீகம் அல்லது லெபனான் (பெய்ரூட்) பகுதியில் நற்செய்தியைப் பிரசங்கித்து, கோடரியால் தாக்கப்பட்டு இரத்தசாட்சியாய் மரணமடை ந்தார்.
சீமோன் (Simon): சில பாரம்ப ரியக் குறிப்புகளின்படி, இவர் பாரசீகம் அல்லது சிரியா பகுதியில் நற்செய்தியைப் போதித்து இயேசுவைப்போல
சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
யோசேப்பு (Joses): இவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. எவ்வாறாயினும், இவர் மற்ற சீடர்களைப் போலவே நற்செய்தி க்காகத் தனது வாழ்வை அர்ப்ப ணித்ததாக அறியப்படுகிறது.
இவ்வாராக, பெந்தகோஸ்த நாளில் தூய ஆவியைப்பெற்ற
வர்கள் கிறிஸ்துவிற்காக தங்கள் உயிரையும் கொடுத்து கிறித்துவ விசுவாசத்தின் தூண்களாக மாறினர்.
இரைச்சல் நிறைந்த உலகம்.
A noisy World .
அன்பர்களே!கிறிஸ்தவத்தின் பார்வையில், இந்த இரைச்சல் மிகுந்த உலகம் என்பது மனித னை கடவுளிடம் இருந்து திசை திருப்பும் ஒரு ஆன்மீகச் சோதனை மற்றும் விசுவாசிகள்
எதிர்கொள்ளும் அரசு சார்ந்த
ஒடுக்குமுறைகளை குறிக்கும்..
மதமாற்ற தடைச்சட்டம்.
இந்தியாவில் கட்டாய மதமாற்ற த்தைத் தடுப்பதற்கான மத்திய அரசு சட்டம் ஏதும் இல்லை. இருப்பினும், அரசியலமைப்பின்படி சட்டம்-ஒழுங்கு மாநிலப் பட்டியலின் கீழ் வருவதால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் தங்கள் அளவில் மதமாற்றத் தடைச் சட்டங்களை இயற்றியுள்ளன.
இவைகள் கிறித்துவ ஆலயங்க ளை தாக்குதல், போதகர்களை கைது செய்தல், துன்புறுத்தல்
இரைச்சல் மிகுந்த உலகம் என்பதின் அடையாளங்கள்.
2025ம் ஆண்டில், கிறிஸ்மஸ் தினத்தில் ஆலயங்கள் தாக்கப் பட்டது, வட ஆப்ரிக்க நாடுகளில்
கிறித்துவ மக்கள் கொடுமை யாக கொள்ளப்படுவதும்
இரைச்சல் மிகுந்த உலகம் என்ப தில் ஐயம் இல்லை.
புதிய தொழில்நுட்பம்,New Technologies.மூலம் மக்களின்
கவனங்கள் சிதறடிக்கப்படுத லும்உலகளாவிய கவலைகளின் சத்தம் கடவுளின் குரலைக் கேட் பதைக் கடினமாக்குகிறது.
திருவிவலியம், "அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்; வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்; பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்கு வேன்.(திருப்பாடல்கள்(சங்கீதங்
கள்) 46:10)என்ற விவிலியக் கொள்கையின்படி, மௌனம் என்பது கடவுளின் பிரசன்ன த்தை உணரவும், அவருடைய வழிகாட்டுதலைப் பெறவும் இன்றியமையாதது.
புற இரைச்சல் மனிதனின் அக அமைதியைக் குலைத்து, சுய பரிசோதனை மற்றும் இறை வேண்டலுக்குத் தடையாக அமைகிறது.
உலகத்தின் இரைச்சல் என்பது வெறும் சத்தம் மட்டுமல்ல, அது ஆடம்பரம், சுயநலம், மற்றும் அதிகார ஆசை, திருச்சபையில்
ஏற்படும் சண்டைகள், நேர்மைய ற்ற செயல்கள் ஆகியவை இதன் பிரதிபலிப்பாகும்.கிறிஸ்துவின் அமைதி: "உலகம் கொடுப்பது போல நான் உங்களுக்குக் கொடுப்பதில்லை" என்று இயேசு கூறியபடி, எத்தகைய இரைச்சல் மற்றும் குழப்பமான சூழ்நிலையிலும் கடவுள் தரும் ஆழமான அமைதியை இறை வேண்டல் மூலமே அடைய முடியும்.
ஆதிமுதல், பாவம் கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையி லான உறவைச் சீர்குலைக்கும் வரை, கடவுள் ஆபிராமிடம் (பின்னர் அவரது பெயர் ஆபிரகாம் என மாற்றப்பட்டது) பேசி, கடவுளின் கட்டளைகளுக் குக் கீழ்ப்படிந்தால், அவருக்கும் அவரது சந்ததியினருக்கும் அவர் கொடுக்கும் ஒரு நாட்டிற் குச் செல்லும்படி வழிநடத்தி னார். ஆபிரகாம் மூலமாக எல்லா தேசங்களையும் ஆசீர்வதிப்பதா க கடவுள் வாக்குறுதி அளித்தார் (தொடக்க நூல்.ஆதியாகமம் 12:3). சாமுவேல் என்ற சிறுவன், கடவுளுடன் உரையாடுவதற்கா கத் தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கடவுளால் நியமிக்கப்பட்ட எரேமியா, அந்தப் பணிக்குத் தகுதியற்றவ ராக உணர்ந்தார், ஆனால் கடவுள் அவருக்குத் திறனளிப்ப தாக வாக்குறுதி அளித்தார் (எரேமியா 1:4-10). விடுதலைப்பயணம். (யாத்திரா கமம்) 33:11-ல், கடவுள் மோசேயு டன் ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசு ரவார். பின்னர் மோசே பாளைய த்துக்குத் திரும்புவார். இளைஞ னும் நூனின் மகனுமான யோசு வா என்ற அவருடைய உதவி யாளர் கூடாரத்தை விட்டகலாம ல் இருப்பார். (விடுதலைப்பயண ம் 33:11)
1.கடவுளின் மென்மையான ஒலி.The gentle voice of God".
1. அரசர்கள் 19:11-18
அன்பர்களே!
1.அரசர்கள் 19:11-18ல், இறைவா க்கினர் எலியாவுக்கு சோர்விலு ம் பயத்திலும் இருந்த நிலையில் சூறாவளி அல்லது நெருப்புக்கு பதிலாக "மெல்லிய அமைதியா ன குரலில்" கடவுள் தன்னை வெளிப்படுத்தி, புதிய நம்பிக் கையையும் பணியையும் அளித் ததைக் குறிப்பிடுகிறது.
கர்மேல் மலையில், வானத்திலி ருந்து அக்கினி விழுந்து அவரு டைய பலியைப் பட்சித்த அந்த உச்சக்கட்ட மகிழ்ச்சியிலிருந்த, அதே நாளில், தன் உயிரைப் பறித்துவிடுவதாக அச்சுறுத்திய யேசபேலிடமிருந்து தப்பி ஓடியபோது, பாலைவனத்தின் வழியே தனது நீண்ட பயணத்தி ற்குப் பிறகு எலியா வந்து சேர்ந்த ஓரேப் மலைதான், எரிகிற முட்புதரின் நெருப்பில் மோசே தேவனைச் சந்தித்த அதே மலையாகும் (விடுதலைப் பயணம் 3:1f). சீனாய் மலை என்றும் அழைக்கப்படும்அந்த மலையில்தான், நெருப்பு, புகை, இடி ஆகியவற்றுக்கு மத்தியில் தேவன் மோசேக்கு நியாயப்பிர மாணத்தைக் கொடுத்தார் (வி.ப19:16f).
தேவன் எலியாவிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்டார். “நீ இங்கே என்ன செய்கிறாய்?” இந்த கேள்வியை இன்னும் ஆழமாகப் பார்த்தால், யேசபே லின் அச்சுறுத்தலால் அவருடை ய விசுவாசம் தளர்ந்து, தேவன் தனக்காக நியமித்த இடத்திலிரு ந்து அவர் ஓடிப்போனதால்தான் எலியா அங்கே இருந்தார். அவர், "படைகளின் கடவுளாகிய ஆண்ட வர்மீது நான் பேரார்வம் கொண் டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறி விட்டனர்; உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவா க்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்" என்றார். இது ஒரு பணிவான பதிலாகும்.
தேவன் அவரிடம் கேட்ட கேள்வி, சாராம்சத்தில், ‘நீ இருக்க வேண் டிய இடத்தில் ஏன் இல்லை?’ என்பதுதான். தன் இடத்தை விட்டு வந்ததற்கு எலியா ஒரு சாக்குப்போக்கைச் சொன்னார். ஆனால் தேவன் அவருடைய சாக்குப்போக்கை முற்றிலுமாகப் புறக்கணித்து, அவரை மீண்டும் அவர் பணியில் அமர்த்தினார்.
திருப்பொழிவும், அருட்பொழி வும் செய்ய கட்டளையிட்டார்.
முதலாவது, நம் வாழ்வில் கடவு ளின் குரலுக்கு நாம் செவிசாய்க் க வேண்டும் . எப்போதும் இல்லை என்றாலும், பெரும்பா லும் அது ஒரு மெல்லிய,அமைதி யான குரலாகவே இருக்கும். நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், நம்மைச் சுற்றியுள்ள உலகின் இரைச்சல்களால் அந்தக் குரல் அமுங்கிப் போய் விடும்.
இரண்டாவது என்னவென்றால், தேவன் நமது சாக்குப்போக்கு களில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. அவர் நமது கீழ்ப்படிதலில் அதிக அக்கறை காட்டுகிறார். நமது சேவை எதிர்பார்த்தபடி அமையாதபோது நமக்காக நாமே வருத்தப்படுவ தற்குப் பதிலாக, எழுந்து மீண்டு ம் போராட்டத்தில் இறங்குமாறு தேவனுடைய மெல்லிய குரல் நம்மை ஊக்குவிக்கிறது.
நம் உலகில் கடவுள் வெறும் கண்கவர் செயல்களில் மட்டுமல் ல, கண்ணுக்குப் புலப்படாத வழி களிலும் செயல்படுகிறார். கண்கவர் செயல்களைச் செய்யு ம் ஒரே ஒரு தீர்க்கதரிசியை மட்டுமே நாம் காணக்கூடிய இடத்தில், கடவுளுக்கு உலகில் அமைதியாக அவருடைய வேலையைச் செய்யும் ஏழாயிரம் ஊழியர்கள் உள்ளனர் (வசனம் 18). என்பதை உறுதிபடுத்தி னார். நம் உலகில் கடவுள் எப்படிச் செயல்படுகிறார் என்ப தை கண்ணுக்குப் புலப்படாத, மென்மையான ஒரு சத்தம்தான் எலியாவை இறுதியாகக் கடவு ளுக்குப் பதிலளிக்கக்கூடிய ஒரு நிலைக்கு ஈர்த்தது என்பதை
விளக்குகிறது.
அன்பர்களே!
இன்றும்கூட தேவன் தம்முடைய ஒவ்வொரு பிள்ளையுடனும் பேச விரும்புகிறார்! தேவன் கனவுக ள், தரிசனங்கள், வேதவாக்கிய ங்கள், உணர்வுகள் அல்லது எண்ணங்கள் ஆகியவற்றின் மூலமாகவும், அரிதாகக் கேட்கும் வகையிலும் பேசுகிறார்.ஆனால் அவருடைய பிள்ளைகள் பெரும் பாலும் அவருடைய குரலின் மென்மையை கேட்க இரைச்சல் நிறைந்த உலகில் உணர்ச்சி யற்றுப் போயிருக்கிறார்கள்.
2.தூய ஆவியானவரின் வருகையும் திருச்சபையின் பிறப்பும்.The coming of the Holy Spirit and the birth of the Church
றில், பெந்தகோஸ்தே நாள் என்பது தூய ஆவியானவரின் வருகையும் திருச்சபையின் பிறப்பையும் கொண்டுவந்தது.
இது ஆன்மீக திருப்புமுனையா கும்.இந்தநிகழ்வு,பாபேல் கோபுரத்தின் பிரிவினையை மாற்றி, பல்வேறு மொழிகளைப் பேசுவோரை ஒன்றிணைக்கும் கடவுளின் உலகளாவிய அன்பை யும், சீடர்களுக்குக் கிடைத்த தைரியத்தையும் வெளிப்படு த்துகிறது.
( பாபேல் கோபுரம் என்பது விவிலியத்தின் தொடக்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு புகழ்பெற்ற வரலாற்று மற்றும் தொன்மவியல் கட்டிடமாகும். பாபேல்" (Babel) என்றால் எபிரேய மொழியில் "குழப்பம்" என்று பொருள். பெருவெள்ளத்திற்குப் பிறகு, மனிதர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் புகழை நிலைநாட்டவும், கடவுளைப் போல உயரமான கோபுரத்தை கட்டவும் முயன்றனர். இது சினயார் (Shinar) சமவெளியில் கட்டப்பட்டது.மனிதர்கள் தாங்க ள் சிதறிப்போகாமல் இருக்கவும், வானத்தைத் தொடும் அளவிற்கு கோபுரத்தை எழுப்பி தமக்கென் று ஒரு பெயரை ஏற்படுத்தவும் விரும்பினர்.மனிதர்களின் அகந்தையை உணர்ந்த கடவுள், மக்கள் அனைவரும் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முடியாதபடி அவர்களின் மொழி களில் குழப்பத்தை உண்டாக்கி னார்.ஒரே மொழி பேசும் மக்கள் குழுக்களாகப் பிரிந்து, உலகம் முழுவதும் சிதறிச் சென்றனர். இதன் காரணமாகவே மொழி கள் உருவாயின.)
யூதர்களின் மிக முக்கிய பண்டிகைகள்:
அன்பர்களே!
எருசலேமிலிருந்து இருபது மைல் தொலைவிற்குள் வசிக் கும் ஒவ்வொரு யூத ஆணும் சட்டப்படி கலந்துகொள்ளக் கடமைப்பட்டிருந்த மூன்று பெரிய யூதப் பண்டிகைகள் இருந்தன - அவை பஸ்கா, பெந்தேகோஸ்தே மற்றும் கூடாரப் பண்டிகை. பெந்தேகோஸ்தேவின் மற்றொரு பெயர் "வாரங்களின் பண்டிகை" என்பதாகும். பஸ்காவிற்குப் பிறகு, வாரங்க ளின் வாரமான ஐம்பதாவது நாளில் அது வந்ததால், அப்பெ யர் பெற்றது. பஸ்கா ஏப்ரல் மாதத்தின் நடுவில் வந்தது; எனவே பெந்தேகோஸ்தே ஜூன் மாதத் தொடக்கத்தில் வந்தது. அக்காலத்தில் பயணச் சூழல் மிகவும் உகந்ததாக இருந்தது. பஸ்காவிற்கு வந்தவர்களைப் போலவே, பெந்தேகோஸ்தே பண்டிகைக்கும் குறைந்தது அதே எண்ணிக்கையிலானோர் வந்தனர். இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலுக்கு இதுவே காரணம்; பெந்தேகோஸ்தே காலத்தில் இருந்ததை விட அதிகமான பன்னாட்டு மக்கள் கூட்டம் எருசலேமில் இருந்ததில்லை.
அந்தப் பண்டிகைக்கே இரண்டு முக்கிய முக்கியத்துவங்கள் இருந்தன.
(i) அதற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. சீனாய் மலையில் மோசேக்கு நியாயப்பிரமாணம் என்கிற
திருச்சட்டம் கொடுக்கப்பட்டதை அது நினைவுகூர்ந்தது.
(ii) அதற்கு ஒரு விவசாய முக்கி யத்துவம் இருந்தது. பஸ்கா பண்டிகையின்போது, அறுவடை யின் முதல் வாற்கோதுமை தேவனுக்குப் படைக்கப்பட்டது; பெந்தேகோஸ்தே பண்டிகையின்போது, அறுவடை செய்யப்பட்ட விளைச்சலுக்கு நன்றியாக இரண்டு அப்பங்கள் படைக்கப்பட்டன. அதற்கு மற்றொரு தனித்துவமான பண்பும் இருந்தது. அந்த நாளில் எந்தவொரு அடிமை வேலையும் செய்யக்கூடாது என்று திருச்சட்டம் விதித்திருந் தது ( லேவியர் 23:21 ; எண்ணிக்கை 28:26 ). எனவே அது அனைவருக்கும் ஒரு விடுமுறை நாளாக இருந்தது, மேலும் தெருக்களில் மக்கள் கூட்டம் முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தது.
புது அனுபவம்: A new Experience.
அன்பர்களே! பெந்தெகொஸ்தே நாளில் சீடர்கள் இதற்கு முன் ஒருபோதும் அனுபவிக்காத வகையில் தூய ஆவியின் வல்லமை தங்கள் உள்ளத்தில் பொங்கி வழிந்த அனுபவத்தை பெற்றார்கள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் நடபடிகளின்) இந்தப் பகுதிக்கு லூக்கா ஒரு நேரடி சாட்சி அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1)சீடர்கள் திடீரென்று அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தைப் பெற்றது 1 கொரிந்தியர் 14:1-40 படி என்ன நடந்தது என்றால், பரவச நிலையில் இருந்த ஒருவர், அறியப்படாத மொழி யில், புரிந்துகொள்ள முடியாத ஒலிகளின் வெள்ளத்தைப் பொழியத் தொடங்கினார். அது தேவனுடைய ஆவியால் நேரடியாக ஏவப்பட்டது என்று கருதப்பட்டது, மேலும் அது பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வரமாக இருந்தது. பவுல் அதை பெரிதாக அங்கீகரிக்கவில்லை, ஏனென்றால் ஒரு செய்தி புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் கொடுக்கப்பட வேண்டும் என்ப தையே அவர் பெரிதும் விரும்பி னார். உண்மையில், ஒரு அந்நிய ன் உள்ளே வந்தால், அவன் பைத்தியக்காரர்களின் சபைக்கு ள் வந்துவிட்டதாக நினைக்கக்கூ டும் என்று அவர் கூறினார் ( 1 கொரிந்தியர் 14:23. குடிகாரர்க ளைப் போலத் தோன்றக்கூடும்.
(ii) அந்நிய மொழிகளில் பேசு வது அவசியமற்றதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் யூதர்களும் ( அப் 2:5 ) மற்றும் யூத மதத்திற்கு மாறியவர்களும் ( அப் 2:10 ) இருந்தனர். யூத மதத்திற்கு மாறியவர்கள் என்பவர்கள், யூத மதத்தையும் யூத வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்ட புற இனத்தார் ஆவர். அதுபோன்ற ஒரு கூட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு மொழி களே தேவைப்பட்டன. ஏறக்குறைய எல்லா யூதர்களும் அரமேயிக் மொழி பேசினர்; மேலும், அவர்கள் அந்நிய தேசத்திலிருந்து சிதறடிக்கப்பட்ட யூதர்களாக இருந்தாலும்கூட, அக்காலத்தில் உலகில் ஏறக்கு றைய அனைவரும் பேசிய மொழியான கிரேக்க மொழி யையே அவர்கள் பேசுவார்கள்.
புற இனத்தவரான திருதூதர் லூக்கா, அந்நிய மொழிகளில் பேசுவது அவருக்கு குழப்பமாக
வே இருந்திருக்கும்.
உண்மையில்,
என்ன நடந்தது என்றால், தங்கள் வாழ்வில் முதன்முறையாக, பலதரப்பட்ட இந்தக் கூட்டத்தி னர், தங்கள் இருதயங்களைத் தொட்டுணரக்கூடியதாகவும், அவர்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக தேவனுடைய வார்த் தையைக் கேட்டார்கள். ஆவியானவரின் வல்லமை, ஒவ்வொரு இருதயத்தையும் சென்றடையக்கூடிய ஒரு செய்தி யை இந்த எளிய சீடர்களுக்கு அளித்திருந்தது.எனினும்,
"இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தை யும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பி னும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. (1 கொரிந் தியர் 13:2) என்பதுதான் மிக
முக்கியமானது.திருச்சபை அன்பின் அடிப்படையில் அமைந்தது. அன்னிய மொழி பேசுவது அது ஒரு "இரைச்சலாக கருதாமல் இறைவனின் குரலா க உணர்தல்" அவசியமாகும்.
3.பூட்டிய அறைக்குள் அமைதி உண்டாவதாக.May there be peace in a locked room.யோவான் 20:19-23 .
அன்பர்களே! யோவான் 20:19-23 பகுதியில், உயிர்த்தெழுந்த இயேசு, பயந்து பூட்டப்பட்ட அறை க்குள் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களுக்கு அமைதியை வழங் கி, பரிசுத்த ஆவியைப் பொழிந் து, பாவங்களை மன்னிக்கும் மற்றும் உலகிற்கு அனுப்பும் அதிகாரத்தை அளிக்கிறார்.
பூட்டிய அறைக்குள்தான் அமை தியை வழங்கிய ஆண்டவர், நம்
பூட்டிய இருதயத்துக்குள் இந்த
இரைச்சல் நிறைந்த உலகில் அமைதியையும்,தூய ஆவியும்
அளிக்கிறார்.
1. பூட்டப்பட்ட கதவுகள்; (பயம்):சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து தங்கள் அறையைத் தாழிட்டு பூட்டியிருந்தனர்.பயம் என்பது மனித பலவீனம். ஆனா ல், இயேசு அந்தப் பூட்டப்பட்ட கதவுகளைத் தாண்டி வந்து, அவர்களுடைய பயத்தை நீக்கி அமைதியை அருளினார்.
2. "உங்களுக்குச் சமாதானம்" (Peace be with you):
எபிரெய மொழியில் "ஷலோம்" (Shalom) என்பது வெறும் சண் டை இல்லாத நிலை மட்டுமல்ல. அது ஒருவருடைய ஆன்மீக, உடல் மற்றும் மனநலனுக்கான முழுமையான ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது.இயேசுவின் இந்த வாழ்த்து, சீடர்கள் செய்த துரோ கத்தையும், பயந்து ஓடியதையும் மன்னிக்கும் ஒரு தெய்வீக சமாதானமாக இருந்தது.
3. காயங்களைக் காட்டுதல்: இயேசு தன் கைகளையும் விலாவையும் சீடர்களுக்குக் காண்பித்தார். துன்பங்கள் மற்று ம் மரணத்தை வென்றுவிட்டதை இது நிரூபித்தது.காயங்கள் என்பது துன்பத்தின்அடையாளம் என்றாலும், இங்கு அதுவே உயிர் த்தெழுதலின் மற்றும் வெற்றி யின் அடையாளமாக மாறியது.
4. பரிசுத்த ஆவியைப் பெறுங் கள் (மூச்சுவிடுதல்):
இயேசு சீடர்கள் மீது "ஊதினார்" (Breathing). இது தொடக்க நூலில் (ஆதியாகமம் 2:7) கடவுள் மனிதனுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதியதை நினைவூட்டுகிறது. இது புதிய படைப்பின்(New Creation) அடையாளம் அல்லது ஆன்மீக ரீதியான புதிய பிறப் பைக் குறிக்கிறது. இதன் மூலம் சீடர்கள் புதிய வல்லமையைப் பெறுகின்றனர்.
5. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம்:
"நீங்கள் எவர்களுடைய பாவங்க ளை மன்னிக்கிறீர்களோ, அவை மன்னிக்கப்படும்" என்பது மனிதர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்கும் அதிகாரம் அல்ல.கடவுளுடைய அன்பையும், மன்னிப்பின் நற்செய்தியையும் உலகிற்கு அறிவித்து, மக்களைப் பாவத் தின் பிடியிலிருந்து விடுவிக்கும் பொறுப்பைச் சீடர்களுக்கு இயேசு வழங்குகிறார். சுருக்கமாக, இந்த நிகழ்வானது பயத்தில் இருந்த சீடர்களை, உலகிற்கு நற்செய்தி அறிவிக் கும் துணிச்சலான தூதுவர்க ளாக மாற்றிய ஒரு வரலாற்று மற்றும் ஆன்மீக திருப்புமுனை யாகும்.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் இரண்டாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்ப து," இருப்புநிலையை அறை கூவலிடும் இறைவார்த்தை". God's word Challenges the status Quo. நண்பர்களே! கடவுள் நமக்கு திட்டவட்டமாக கூறிய வார்த்தை, "நான் (இயேசு)உலகைச் சார்ந் தவனாய் இல்லாதது போல் அவர்களும் (சீடர்கள்)உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. " (யோவான் நற்செய்தி 17:16) இது அனைத்து கிறித்தவர்களுக் கும் அறைகூவலிடும் இறைவார் த்தை". நம் திருவிவலியம்,உலக விதிமுறைகளுக்கு இணங்கு வதை எதிர்க்கவும்,அநீதியை எதிர்த்து நிற்கவும், கலாச்சார மரபுகளை விட ஆன்மீகஉண்மை களுக்கு முன்னுரிமை அளிக்க வும் பின்பற்றவும், கடவுளின் வார்த்தை தற்போதைய நிலை க்கு சவால் விடுகிறது .நீங்கள் இந்த உலகத்தார் அல்ல" என்ற சொற்றொடர், குறிப்பாக கிறித் துவ இறையியலில், இயேசுவின் சீடர்கள் உலகத்தைப் பின்பற் று பவர்கள் அல்ல என்றும், அவர்கள் உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்...
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் நம் திருச்சபை கள் மாணவர் ஞாயிராக கொண்டாடப்படுகிறது.இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " இயேசு: நமது உன்னத வழிகாட்டி" என்பதா கும். மாணவர் ஞாயிறு: அன்பர்களே! இக் கல்வியாண் டின் துவக்க மாதம் சூன் ,மாணவ ர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சவால் நிறைந்த மாதமாகும். முக்கியமாக, மேற் படிப்பில் சேறு கின்றவர்கள், புதிய வகுப்பில், கல்வி நிலையங்களில் சேறும் போது ஏற்படும் சவால்கள், தேவைகள், பிரச்சனைகள் மிக வும் கவலை அளிக்கும் செயலா கும். மருத்துவப்படிப்பில் சேறும் கணவில் இருந்த 2.2 மில்லியன் மாணவர்களுக்கு, NEET -UG 2026 paper தேர்வு தாள்கள் பொது வழியில் வெளியாகி மறுதேர் வுவறை சென்றதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) அதன் புதிய ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கு மாறியபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக 42 மில்லியன் மாணவர்களின் மதிப்பெண் தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இணையத்தில் பகிரங்கமாக வெளிவந்ததின் காரண...
Comments
Post a Comment