திரித்துவ ஞாயிறு.Trinity Sunday.திரித்துவம். அன்பின் தெய்வீக கூட்டுறவு.(281)Trinity. The divine communion of Love. எசாயா 48:12-17.திருப்பாடல் 33. எபேசியர் 1:3-14, யோவான் 3:8-16.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து தூய ஆவியை பொழிந்த பெந்தகோஸ்தே ஞாயிறுக்குப்பின் வரும் ஞாயி று திரித்துவ ஞாயிராகும். இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, திரித்துவம். அன்பின் தெய்வீக கூட்டுறவு ஆகும்.
திரித்துவ ஞாயிறு என்றால் என்ன? What is Trinity Sunday?
திருச்சபையில், ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாக விளங்கும் மூவொரு கடவுளின் (Holy Trinity) மாபெரும் மறைபொருளைச் சிறப்பித்துக் கொண்டாடும் ஒரு பெருவிழா ஆகும்.கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை மைய மே திரித்துவம் தான். அதாவது, ஒரே கடவுள் (இறைத் தன்மை), தந்தை, மகன், தூய ஆவி என மூன்று தனித்தனி ஆட்களாக நிலைத்திருக்கிறார்.
தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள்; ஆனால் இவர்கள் மூவரும் தனித்தனி கடவுள்கள் அல்ல, ஒரே கடவுள்.
இக்கோட்பாட்டை, மனிதனின் அறிவால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு "மறை பொருள்" (Mystery). இதனை மனித அறிவால் அளவிட முடியா து, மாறாக விசுவாசத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.
பழைய ஏற்பாட்டில் திரித்து வம்: Trinity in the Old Testament.
அன்பர்களே!
1. படைப்பில்:
தந்தையாம் கடவுள், தூய ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்த வேளையில், தம் வார்த்தை யால் அனைத்தையும் படைத் தார் என்று தொடக்க நூலின் முதல் அதிகாரத்தில் கூறப்பட் டுள்ளது. தொடக்கநூல்18:1-16-ல் உள்ள ஒரு திரித்துவ விளக்கமா கும்.கடவுள் தம் வார்த்தையால் அனைத்தையும் படைத்து, தம் ஆவியால் அவற்றுக்கு இயக் கம் அளித்தார் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். இங்கு வார்த்தை என்பது இயேசுவைக் குறிக்கிறது
2. ஆபிரகாமுடன்:
ஆண்டவர் மம்ரே என்ற இடத் தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக் கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட் டும் தாழ்ந்து வணங்கி, அவர்க ளை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியா னை விட்டுக் கடந்துபோகாதிருப் பீராக!" என்றார்
அந்த நிகழ்வில்தான் "மூன்று பேர்" ஆபிரகாமையும் சாராளை யும் சந்தித்து, அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று வாக்களி க்கின்றனர்.
கடவுள் ஒருவரே என்பது பழைய ஏற்பாட்டில், கண்டிப்பான போத னை. அப்படியிருந்தும் அந்த ஒரே கடவுள் பன்மையில் பேசப்பட்டிருப்பதைக் காணலாம் சேராபீன்கள் மூன்றுமுறை போற்றுவதாலும் (ஏசா.6:3) மோசே இஸ்ரவேல் மக்களுக்கு ஆசீர்வாதம் கூறும்பொழுது கர்த்தர், கர்த்தர், கர்த்தர் என்று மூன்று விதமாய் கூறினதாலும் (எண்.6:24-26) எடுத்துக் கொள்ள லாம்.
புதிய ஏற்பாட்டில் திரித்துவம்:
Trinity in the New Testament.
1.இயேசுவின் பிறப்பில்:
அன்பர்களே!
லூக்கா1:35,ல் நற்செய்தியா ளர், 'வானதூதர் மரியாவிடம், "தூயஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறை மகன் எனப்படும்" என்றார்.
2. இயேசுவின் மீது தூய ஆவி:
மாற்கு1:10,11, நற்செய்தியாளர், 'அக்காலத்தில் இயேசு கலிலே யாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்தமகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.'
3.வார்த்தை:
யோவான் 1:2-3 "வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவு ளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டா னது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை யோவான் நற்செய்தியில் உள்ளது
4.துணையாளர்:
யோவான் 15:26ல், தந்தையிடமி ருந்து நான் உங்களுக்கு அனுப் பப் போகிற தூய ஆவியார்' அல்லது 'தேற்றரவாளன்' உங்க துணையாளராக வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும் போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்."எனக் கூறப்பட்டுள் ளது.
5.திரித்துவம்:
மத்தேயு நற்செய்தி 28:19-ல், "நீங்கள் போய் எல்லா மக்களின த்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடு ங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்".
நீங்கள் இறைமக்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளீர்கள்."
3. நிருபங்களில் திரித்துவம்:
திருத்தூதர் பவுல் தனது திருமுக த்தில் மூவொரு கடவுளின் பெய ரால் இவ்வாறு வாழ்த்துகிறார்: "ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்ப தாக என முடிப்பார் (2.கொரிந் தியர் 13:13)
1.திரித்துவத்தின் நிழல்.
The shadow of Trinity.ஏசாயா 48: 12-17.
அன்பர்களே! கடவுள் இஸ்ரவேல்
மக்களை, யாக்கோபே... இஸ்ர வேலே" என தன் மக்களை
நெருக்கமாகவும், பாசமாகவும் அன்பாகவும் அழைக்கிறார். இறைவாக்கினர் ஏசாயா 48:12-17 வரையிலான பகுதியில், கடவுளி ன் சர்வவல்லமை, நித்தியத்து வம் மற்றும் தம் மக்களை நேசித்து வழிநடத்தும் தன்மை யை வெளிப்படுத்துகிறது. இது இஸ்ரவேலரின் அறியாமை மற்றும் கீழ்ப்படியாமையைத் தாண்டி, அவர்களின் நன்மைக் காகவே கடவுள் செயல்படுகி றார் என்பதை விளக்கும் ஒரு ஆறுதலான இறைவாக்கு ஆகும். கடவுளின் நித்தியத்து வம் (வசனம் 12-13):"நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே, எனக்குச் செவி கொடு; நானே அவர்; தொடக் கமும் நானே; முடிவும் நானே. (எசாயா 48:12)என்று கடவுள் தம்மை வெளிப்படுத்துவது, தொடக்கமும் முடிவும் இல்லா தவரான அவரே எல்லாவற்றை யும் படைத்தவர். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து இஸ்ர வேலரை மீட்க கடவுள் பாரசீக மன்னன் சைரஸை (Cyrus) எழுப் புவார் என்பதை ஏசாயா இறை வாக்காகக் கூறுகிறார்.
பாரசீக மன்னனான சைரஸ் ( Cyrus the Great) கிமு 559 to 530) ஆண்டவரால் தூண்டப்பட்டு, யூத மக்களை அவர்தம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப எருசலே மிற்கு அனுப்பினார்.
கடவுள் நம்மை நேர்வழியில் நடத்துவதையும், நமக்கு நன்மை யைத் தருவதையும் மையமாகக் கொண்டுள்ளார்.இறைவாக்கினர் ஏசாயா, "இப்பொழுது கர்த்தரா கிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னைஅனுப்பினார்" என்று கூறுகிறார். கடவுளும், அவருடைய ஆவியானவரும் செயல்படுவதை இது காட்டுகிற து.திரித்துவத்துவம் நிழலாக செயல்படுவதை இங்கு வெளிப் படுத்துகிறார்.
கடவுள் தம் மக்களை மீட்கும் மீட்பராகவும், பரிசுத்தராகவும் இருக்கிறார். அவர் நமக்கு "எதுசிறந்தது "என்பதைக் கற்றுக் கொடுத்து, நாம் நடக்க வேண்டி ய வழியில் நம்மை நடத்துகிறார்.
கடவுளுடைய வார்த்தை எப்போ தும் வெற்றியைத் தரும்.
கடவுள் நமக்கு சிறந்த போதகர்: மனிதர்களுக்கு எது சிறந்தது என்பதை படைப்பாளரான கடவுள் மட்டுமே அறிவார். வழி நடத்துபவர்: நாம் செல்ல வேண் டிய பாதையில் அவர் நம்மை கைப்பிடித்து நடத்துகிறார். நம்முடைய சொந்த அறிவை நம்புவதை விட, கடவுளுடைய வழிநடத்துதலுக்கு நம்மை முழு மையாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் நமக்கு மிகுந்த நன்மைகளையும், சமாதானத் தையும் தருகிறார்.கடவுள் நம்மை விலைகொடுத்து மீட்கிற வர்.
தொடக்கமும் நானே; முடிவும் நானே.I am the beginning; I am the end.
அன்பர்களே! ஏசாயா 48:12ல், உள்ள இந்த வார்த்தை, புதிய ஏற்பாட்டில் திருவெளிப்பாட்டில், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ் துவுக்குப் பயன்படுத்தப்பட் டுள்ளன (திருவெளிப்பாடு 1:17; 22:13).இது கிறிஸ்துவின் தெய்வீ கத் தன்மையை நிரூபிக்கிறது.
கடவுள் தனது நிலையான இருப்பை இஸ்ரவேலர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.எல்லாம் நிறைவேறிவிட்டது; அகரமும் னகரமும் நானே; தொடக்கமும் முடிவும் நானே" என்று இறைவ னின் நித்தியத் தன்மை விவரிக் கப்பட்டுள்ளது.எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாகவும், முடிவா கவும் இருப்பவர் கடவுள் மட்டு மே.
ஏசாயா48: 16 ல், திரித்துவம் (Trinity), இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் திரித்துவக் கொள் கைக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒரு சான்றாகக் கருதப்படு கின்றது.இறைவாக்கினரை அனுப்பும் இறைவனும், அந்த ஆவியானவரும் ஒரே கடவுளின் பிரசன்னமாக இதில் வெளிப்படு கின்றனர்.இறைவனின் மீட்புத் திட்டத்தை மக்களுக்கு அறிவி க்க, கடவுளாலும் அவரது ஆவி யினாலும் ஒருவர் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டு வழி நடத் தப்படுகிறார் என்பதே இந்த வசனத்தின் மையக் கருத்து ஆகும்.திரித்துவம், அன்பின் தெய்வீக கூட்டுறவு, இறைபணி
யில் உலக தோற்ற முதல் தொட
ர்ந்து செயல்படுகிறது.
2.திரித்துவம்.கடவுளின் நித்திய திட்டம் The Trinity. God's eternal Plan.எபேசியர் 1:3-14-
அன்பர்களே! கடவுளின் நித்திய திட்டம் என்பது மனிதகுலத்தின் இரட்சிப்புக்காகவும், உலகப் படைப்பின் நோக்கத்திற்காகவும் கடவுள் உலகம் தொடங்குவதற் கு முன்பே வகுத்த மாறாத திட்டத் தைக் குறிக்கிறது.
மற்றும் மனித மீட்பின் மாபெரும் இரகசியத்தை திருத்தூதர் பவுல் அடிகளார் எபேசியர் 1:3-14- ஐ, ஒரு 'துதிப் பாடலாக' (Doxology) அமைந்துள்ளது.
1.ஆவிக்குரிய ஆசீர்வாதங் கள்.
கிறிஸ்துவுக்குள் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் இவ்வுலகை சார்ந்தவை அல்ல; அவை விண்ணகம் சார்ந்தது. இவை நிலையானவை மற்றும் ஆன்மீக ரீதியில் நம்மை வளமாக்கு பவை. ஆவிக்குரிய ஆசிஅனைத் தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.
2,கடவுளின் மாறாத அன்புத் திட்டம்.
நாம் கடவுளைத் தேர்ந்தெடுப்ப தற்கு முன்பாகவே, உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர் நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். நாம் பரிசுத்தமாகவும், குற்றமற் றவர்களாகவும் வாழவே அவர் நம்மைத் தமது பிள்ளைகளாக தத்தெடுக்க முன்குறித்தார்.இது
கடவுளின் மாறாத அன்புத் திட்டமாகும்.
3.கிறிஸ்துவின் மூலம் மீட்பு.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத் தின் மூலம் நமக்கு பாவமன்னி ப்பும், மீட்கப்படுதலும் கிடைத்து ள்ளது. இது கடவுளின் அளவற்ற கிருபையாலும், ஞானத்தாலும் நமக்கு அளிக்கப்பட்ட இலவசப் பரிசாகும்.
வில்லியம் பார்க்ளேவின் (William Barclay) விளக்கத்தின்படி, இதன் முக்கியக் கருத்துக்கள்:1. (வசனம் 3): ஆகும்.2. 4-6):.3. (வசனம் 7-8):இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நமக்கு பாவமன்னிப்பும், மீட்கப்படுதலும் கிடைத்துள்ளது. இது கடவுளின் அளவற்ற கிருபையாலும், ஞானத்தாலும் நமக்கு அளிக்கப்பட்ட இலவசப் பரிசு.
4.கடவுளின் இரகசியத் திட்டம்.
காலங்கள் நிறைவேறும்போது, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் கிறிஸ்துவுக் குள் ஒன்றிணைக்கப்படும் என்பதுவே கடவுளின் மாபெரும் இரகசியத் திட்டமாகும். இதன் மூலம் நாம் தேவனுடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக வாழ அழைக்கப்படுகிறோம்.
5.பரிசுத்த ஆவியின் முத்தி ரை.
நாம் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்தபோது, வாக்குறுதி யளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியா னவரால் முத்திரையிடப்பட் டோம். அவர் நம்முடைய நித்திய உரிமைப் பங்கிற்குரிய உத்தர வாதமாகவும்,வைப்புத் தொகையாகவும் இருக்கிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மனித முயற்சியால் தேடுபொரு ட்களை அடைவது அல்ல. மாறாக, எல்லையற்ற கடவுளின் கிருபை நம்மைத் தேடிவந்து, நம்மை மீட்டு, தன் நித்திய திட்ட த்தில் இணைத்துக் கொண்டதற் காக அவரைத் துதிப்பதே ஆகும்.
நாம்,ஆண்டவரின் மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டவர்கள். அதனால், தூய ஆவியால் அவரு க்குள் முத்திரையிடப்பட்டவர்கள்.
3.தூய ஆவியால் பிறப்பதே புதிய பிறப்பாகும்.The new birth is being born of the Holy Spirit. யோவான் 3:8-16.
அன்பானவர்களே!
ஆவியினால் பிறத்தல்” என்பது “புதிய பிறப்பு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் புதிய பிறப்பு, பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்; தூய ஆவியால் பிறந்தவர்கள் (மறுபிறப்பு) என்பவர்கள், கடவு ளுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, தூய ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ்பவர் கள் ஆவர். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பையும், தூய ஆவி யால் பிறப்பவர் தூய ஆவியின் அருளையும், அன்பையும், இயல் பையும் உடையவர்களாக மாறு கிறார்கள்.
யூதர்களின் தலைவர் நிக்கதேம்.Nicodemus A Jewish Leader.
அன்பர்களே! ஒரு இரவில் யூதர் களின் தலைவர்களில் ஒருவரா கவும், பரிசேயராகவும் இருந்த நிக்கதேம் இயேசுவை சந்தித் தார்.யூத தலைவர்கள் இயேசு வை எதிர்த்தபோதிலும், அவர் மீதுள்ள நம்பிக்கையால் இரகசியமாக அவரைச் சந்திக்க வந்தார்.இயேசு அவரிடம்,
"ஒருவர் மறுபடியும் பிறந்தால ன்றி இறையாட்சியைக் காண இயலாது" என்று இயேசு நிக்கதேமிடம் கூறினார்.இதை நிக்கதேம் தவறாகப் புரிந்து கொண்டு, 'ஒருவர் எப்படித் தாயின் வயிற்றில் மீண்டும் பிறக்க முடியும்?' என்று கேட்டார். அதற்கு இயேசு, "தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி
இறையாட்சிக்கு உட்பட இயலா து என்றார்.
இயேசு, நிக்கொதேமுவை நோக்கி, “நீ இஸ்ரவேலருக்குப் போதகனாயிருந்தும் இவை களை அறியாமலிருக்கிறாயா?” என்று கேட்கிறார். உலக ஞானமும், மதப் படிப்பும் மட்டுமே ஒருவரை தேவனுடைய அரசை அறியச் செய்யாது. ஆன்மீக உண்மைகளை அறிய மனத் தாழ்மையும், தேவனிடமிருந்து வரும் வெளிப்பாடும் தேவை. ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட வரன்றி வேறு எவரும் 'இயேசு வே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது". இந்த புதிய பிறப்பு என்பது மனித முயற்சியால் அல்லாமல், முழுக்க முழுக்க கடவுளின் அருளால் நிகழும் மாற்றமாகும்.
காற்றின் செயல்பாடு.
காற்று வீசும் திசையை யாரா லும் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல, பரிசுத்த ஆவியான வரின் செயல்பாடு மனிதனின் புத்திக்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது.கட்டுப்படுத்த முடியாதது: மனிதனால் காற்றை ப் பிடிக்கவோ, திசை திருப்பவோ முடியாது. அதேபோல, ஆவியான வர் ஒரு மனிதனின் இதயத் தைத் தொட்டு மாற்றும் போது, அந்த மாற்றத்தை எந்த மனித சக்தியாலும் தடுக்க இயலாது.
உயர்த்தப்படும் மனிதகு மாரன்.
இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் பாம்புகளால் கடிக்கப்பட்டபோது, மோசே ஒரு பித்தளைப் பாம்பை கம்பத்தில் உயர்த்தினான் அதைப் பார்த்தவர்கள் குணம டைந்தனர். அதேபோல, இயேசு சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும். பாவத்தால் காயப் பட்ட மனிதர்கள், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை விசுவாசத்தோடு ஏறிட்டுப் பார்க் கும்போது ஆன்மீக மரணத்திலி ருந்து நித்திய ஜீவனைப் பெறுகி றார்கள்.
உலகை நேசிக்கும் அன்பு:
மனிதகுலத்தின் மீதான கடவு ளின் எல்லையற்ற அன்பை விளக்கும் "கடவுள், தம் ஒரே மகனின் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவா க உலக அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) என்ற புகழ் பெற்ற வசனம் பரிசுத்த வேதா கமத்தின் மணிமகுடமாகும். கடவுளின் அன்பு. இது எந்த நிபந்தனையும் இல்லாதது. கடவுள் "உலகத்தை" (தமக்கு எதிராகச் செயல்படும் மனித சமூகத்தை) நேசித்தார். கடவுள் கொடுத்த பரிசுத்தமான அன்பை ஏற்றுக்கொள்வதே விசுவாசம். இது நம்முடைய சொந்த முயற்சிகளால் பெறப்படுவத ல்ல, முழுக்க முழுக்க தேவ கிருபை.நித்திய ஜீவன் என்பது முடிவில்லாமல் வாழும் காலம் அல்ல. மாறாக, அது கடவுள் வாழ்கிற அதே தரத்திலான தெய்வீக வாழ்க்கையாகும்.
அன்பர்களே!
கடவுள் அன்பின் ஊற்றாக இருக் கிறார். இந்த தெய்வீக கூட்டுற வே மனித உறவுகளுக்கு முன்மா திரியாகவும், அடித்தளமாகவும் அமைகிறது. பிதாவாகிய கடவுள் படைக்கிறார், குமாரனாகிய இயேசு கிறிஸ்து மீட்கிறார், தூய ஆவியானவர் வழிநடத்துகிறார். இந்த முப்பரிமாணச் செயலும் மனிதகுலத்தின் மீதான கடவுளின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துகிறது.
இறைவனின் இந்த அன்பின் கூட்டுறவு, மனிதர்கள் தங்களுக் குள் உண்மையான அன்பையும், ஒற்றுமையையும், சமூக அக்க றையையும் ஏற்படுத்திக் கொள் ள அழைப்பு விடுக்கிறது.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com
Note: ,The message has been prepared to deliver on 31st May 2026
at CSI St.Luke's Church, Vadapathi Chengalpet.
The Adoration of the Trinity by Albrecht Dürer (1511) From top to bottom: Holy Spirit (dove), God the Father and Christ on the cross.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள்.இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " சீடராக் குங்கள்". யார் சீடர்? ஒரு சீடர் என்பது ஒரு ஆசிரியரின் போதனைகளை ஏற்று நடப்பவர், அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுபவர். ஒரு மாணவர் அல்லது கற்றுக் கொள் ளும் எவரையும் சீடர் என்று குறிப் பிடலாம். இயேசுவின் போதனை களை ஏற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அனைவருமே சீடர்கள்தான். ஒரு தலைவரின் போதனையை அறிவிக்காமல் யாரும் சீடராய் இருக்க முடியாது.சீடர் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களைப் பின்பற்றி நடப்பவர் மற்றும் அவரது வழிகாட்டுதலின் படி வாழ்பவர் என்று பொருள். சீடர்கள் 12 பேரும் இயேசுவுடன் நெருக்கமாகப் பழகி, அவரது போதனைகளை உலகெங்கும் பரப்பினார்கள். சீடராக்குங்கள் என்பது இயேசு வின் செய்தியை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களையும் அவரது சீடர்களாக மாற்றுவதைக் குறிக்கிறது. சீடர் என்ற சொல், ஒழுக்கம் போன்றது, லத்தீன் வார்த்தையான டிசிபுலஸிலிருந்து disciplus வந்தது, அதாவது "மாணவர்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் இரண்டாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்ப து," இருப்புநிலையை அறை கூவலிடும் இறைவார்த்தை". God's word Challenges the status Quo. நண்பர்களே! கடவுள் நமக்கு திட்டவட்டமாக கூறிய வார்த்தை, "நான் (இயேசு)உலகைச் சார்ந் தவனாய் இல்லாதது போல் அவர்களும் (சீடர்கள்)உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. " (யோவான் நற்செய்தி 17:16) இது அனைத்து கிறித்தவர்களுக் கும் அறைகூவலிடும் இறைவார் த்தை". நம் திருவிவலியம்,உலக விதிமுறைகளுக்கு இணங்கு வதை எதிர்க்கவும்,அநீதியை எதிர்த்து நிற்கவும், கலாச்சார மரபுகளை விட ஆன்மீகஉண்மை களுக்கு முன்னுரிமை அளிக்க வும் பின்பற்றவும், கடவுளின் வார்த்தை தற்போதைய நிலை க்கு சவால் விடுகிறது .நீங்கள் இந்த உலகத்தார் அல்ல" என்ற சொற்றொடர், குறிப்பாக கிறித் துவ இறையியலில், இயேசுவின் சீடர்கள் உலகத்தைப் பின்பற் று பவர்கள் அல்ல என்றும், அவர்கள் உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்...
Comments
Post a Comment