அருட்பொழிவுத் திருப்பணி. புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு (288) Ordained Ministry: Call to serve not for glory.எரேமியா: 1:4-10, பேதுரு: 5:1-4, திருப்பாடல்: 132, மத்தேயு: 20: 20- 28
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் அருட்பொழிவுத் திருப்பணி. இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு.Ordained Ministry: Call to serve not for glory.
அன்பர்களே! அருட்பொழிவுத் திருப்பணி என்றால்,"ஒருவர் இறைப்பணிக்காக, பேராயம் மற்றும் திருச்சபையின் வழி முறைகளுடன் அதிகாரப்பூர்வ மாகப் தேர்வு செய்யப்பட்டு, திருச்சபையின் பேராயர் அவர் கள், அந்த நபரின் தலையில் கைகளை வைத்து இறைவேண் டலுடன்,, தூய ஆவியின் அருளா ள் திருநிலைப்படுத்தப்பட்டு, இறையியல் கல்வியில் பயிற்சி அளிக்கப்படு தேர்வானவர்களே அருட்பொழிவு பெற்றவர்கள் ஆவர்.
ஆக்ஸ்போர்டு அகராதியின் (Oxford Dictionary)படி, அருட்பொ ழிவு திருப்பணி (Ordained Minis try) என்பது, ஒரு மதகுரு அல்லது பாதிரியார் தனது திருச்சபையி னால் (அல்லது சமய அமைப்பி னால்) முறையாக அங்கீகரிக்கப் பட்டு, பிராத்தனை மற்றும் கை கள் வைத்து ஆசீர்வதிக்கும் சடங்கு மூலம் (Ordination) மதப்பணிகளுக்காகப் பிரத்யே கமாகப் பொறுப் பேற்றுச் செய்ய ப்படும் சேவையைக் குறிக்கி றது.இது கடவுளின் அழைப்பா கக் கருதப்பட்டு, சபை மக்களுக் குச் செய்யப்படும் முழுநேர அல்லது பகுதிநேரப் பணியாக அமைகிறது. இவர்களின் முக்கி ய பணிதிருமுழுக்கு (Baptism), நற்கருணைப் பகிர்வு, திருமண ங்களை நடத்திவைத்தல், இறுதிச் சடங்குகளை மேற் கொள்ளுதல், மற்றும் மக்களு க்கு ஆன்மீக வழிகாட்டுதல் போன்றவற்றைச் செய்தல் ஆகும். இவற்றில் மிக முக்கிய மானது, நற்செய்தியை பரப்புத ல், புதிய ஆத்துமாக்களை கிறித் துவின் மந்தையில் சேர்ப்பதா கும்.
அன்பர்களே! அருட்பொழிவுதிருப்பணி ஒரு புதிய ஆயரின் திருநிலைப்படு த்தல் அபிஷேகம் என்றும் அழை க்கப்படுகிறது . மற்றொருவரை அபிஷேகம் செய்ய குறைந்தது மூன்று ஆயர்கள் அவசியம் என்று பல பண்டைய மூலங்கள் குறிப்பிடுகின்றன, எ.கா., கார்தேஜ் சங்கத்தின் (கி.பி. 394) 13வது நியதி கூறுகிறது, "ஒரு ஆயர் பல ஆயர்களால் அன்றி திருநிலைப்படுத்தப் படக் கூடாது, ஆனால் தேவை ஏற்பட் டால் அவர் மூவரால் திருநிலை ப்படுத்தப்படலாம். மூன்று என்ற எண் திரித்துவத்தின் பிரதிபலி ப்பு.கி.பி. 394 இல் நடைபெற்ற கார்தேஜ் சங்கம் (Council of Carthage) என்பது வடக்கு ஆப்பிரி க்காவில் இருந்த திருச்சபையி ன் தலைவர்கள் மற்றும் ஆயர் கள் கூடிப் பேசிய பிராந்திய மாநாடாகும். இந்தச் சங்கம் பிஷப் அவுரேலியஸ் (Bishop Aurelius) தலைமையில் கூட்டப் பட்டது திருச்சபை குருத்துவ (ordained ministry) நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக, ஆயர்களை நியமி க்கும் முறை, குருக்களின் ஒழுக் கம் மற்றும் பிரம்மச்சரியம் குறித்த பல விதிகளை (canons) இது இயற்றியது.இந்தச் சங்கத் தின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று:
ஆயர்கள் நியமனம் (Canon 13): ஒரு புதிய ஆயரை நியமிக்கும் போது பல ஆயர்கள் ஒன்றுகூடி பிராத்தனை செய்து கையளிப்பு (Ordination) செய்ய வேண்டும். ஒரு அவசர காலச் சூழ்நிலை யாக இருந்தால், குறைந்தபட்சம் 3 ஆயர்கள் முன்னிலையில் மட்டுமே புதிய ஆயர் திருநிலை ப்படுத்தப்பட வேண்டும் என இச்சங்கம் கட்டளையிட்டது. இதன்அடிப்படையில் இப்போது ம் நம் திருச்சபைகளில் அருட் பொழிவு செய்யப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் அருட் பொழி வு. ,Ordained Ministry in the Old Testament.
அன்பர்களே! பழைய ஏற்பாட்டில், கடவுளுடைய மக்களை வழிநடத் தவும், ஆராதனை முறைகளைச் செயல்படுத்தவும் மூன்று முக்கி ய ஊழியங்கள்/பதவிகள் (ஆசா ரியர், தீர்க்கதரிசி, அரசர்கள்) பிரத்தியேகமாக நியமிக்கப்ப ட்டன. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கங்களுக் காகக்கடவுளால்ஏற்படுத்தப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டவை. பழைய ஏற்பாட்டில் நியமிக் கப்பட்ட ஊழியங்களின் விவர ங்கள்:
1. ஆசாரிய ஊழியம் (Priests)நோக்கம்: கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டனர். மக்களின் பாவ ங்களை மன்னிக்கக் கடவுளுக்கு முன்பாகப் பலிகளைச் செலுத் துவது இவர்களின் முக்கியப் பணியாகும்.இது பூர்வ பாரம் பரியத்தின்படி லேவி கோத்திர த்தில் பிறந்த ஆரோனின் சந்ததியினருக்கு மட்டுமே உரிய ஊழியமாக இருந்தது.முக்கிய பொறுப்புகள்: ஆசரிப்புக் கூடாரத்திலும், எருச லேம் தேவாலயத்திலும் ஆராத னைகளை நடத்துதல், பரிசுத்த ஸ்தலத்தில் ஊழியம் செய்தல், மக்களுக்குப் பிரமாணங்களைக் கற்றுக் கொடுத்தல் ஆகியவை இவர்களின் கடமைகள்.
2. தீர்க்கதரிசன ஊழியம் (Prophets)நோக்கம்: கடவுளுடைய செய்திகளையும், எச்சரிப்புக ளையும், எதிர்காலக் காரியங்க ளையும் ஜனங்களுக்கும், ராஜா க்களுக்கும் நேரிடையாக அறிவி த்தவர்கள்.லேவி கோத்திரத் தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில் லை. மோசே, சாமுவேல், எலியா, எலிசா, ஏசாயா போன்றவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த ஊழியத்திற்கு வரவில்லை. கடவுளே நேரடியாக அவர்களைத் தம்முடைய தூது வர்களாகத் தேர்ந்தெடுத்து அழைத்தார்.
முக்கிய பொறுப்புகள்: இஸ்ரவேலர்கள் பாவத்தில் விழும்போது அவர்களைத் தட்டிக் கேட்பது, மனந்திரும்புதலுக்கு அழைப்பு விடுப்பது, மெசியா வின் வருகையைக் குறித்து முன்னறிவிப்பது ஆகிய பணி களைச் செய்தனர்.
3. ராஜரீக ஊழியம் (Kings) நோக்கம்: கடவுளுடைய சட்டங் களின்படி நாட்டை ஆளவும், இஸ்ரவேலர்களைப் புற இனத் தாரின் எதிர்ப்புகளிலிருந்து பாதுகாக்கவும் நியமிக்கப் பட்ட வர்கள்.
நியமனம்: இஸ்ரவேலில் ராஜா வாக வேண்டும் என்றால், அவர் கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு, தீர்க்கதரிசிகளால் (எ.கா: சாமுவேல்) அபிஷேகம் செய்யப் பட வேண்டும்.
முக்கிய பொறுப்புகள்: தேசத்தின் நீதிபதியாகச் செயல் படுதல், தேவாலயத்தைக் கட்டு தல் மற்றும் பராமரித்தல், இஸ்ர வேல் தேசத்தின் ஆன்மீக மற் றும் அரசியல் தலைமையாக விளங்குதல். தாவீது, சாலொ மோன் ஆகியோர் இதற்குச் சிற ந்த உதாரணங்கள். இந்த மூன்று ஊழியங்களும் பழைய ஏற்பாட் டில் தனித்தனியாகவும், சில சம யங்களில் ஒன்றாகவும் செயல் பட்டன (எ.கா: தாவீது ராஜாவா கவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார்).
புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ் துவே இந்த மூன்று ஊழியங்களி ன் பிரதான ஆசாரியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் அருட்பொழிவு. ,Ordained Ministry in the New Testament. அன்பர்களே! புதிய ஏற்பாட்டின் படி, நியமிக்கப்பட்ட தலைவர் கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு விசுவாசியுமே பரிசுத்த ஆவியா னவரால் ஈவு (வரங்கள்) பெற்று, திருச்சபையின் வளர்ச்சிக்காகச் செயல்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்படுகிறது புதிய ஏற்பாட் டில், திருச்சபையின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக இயேசு கிறிஸ்துவும் திருத்தூதர்களும் பல்வேறு ஊழியங்களை நியமி த்துள்ளனர்.
புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்ப ட்டுள்ள முக்கிய ஊழியங்கள்: ஐந்து மடங்கு ஊழியம் (Five-Fold Ministry):திருச்சபையைத் திடப்படுத்துவதற்கென கிறிஸ் துவால் அளிக்கப்பட்ட வரங்கள் நிறைந்த தலைவர்கள் (எபேசி யர்4:11)படி,:
1.அப்போஸ்தலர்கள்:திருத்தூதர்கள்: நற்செய்தியை முதன் முதலில் அறிவித்து, புதிய திருச் சபைகளைத் தோற்று வித்தவர் கள்.
2 தீர்க்கதரிசிகள்: இறைவாக் கினர்.
தேவனுடைய வார்த்தையையும், திட்டங்களையும் வெளி ப்படுத் தி, சபையை உற்சாகப்படுத்து கிறவர்கள்.
3.சுவிசேஷகர்கள்: நற்செய்தி யாளர்கள்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி யை அறியாத மக்களுக்கு எடுத் துரைத்து, அவர்களை விசுவாசத் திற்குள் கொண்டு வருபவர்கள். 4.மேய்ப்பர்கள்:ஆயர்கள்: விசுவாசிகளைப் பாதுகாத்து, அவர்களை ஆன்மீகத்தில் வழிநடத்தும் தலைவர்கள்.
5 போதகர்கள்:
தேவனுடைய சத்தியவசனத் தைத் தெளிவாகக் கற்பித்து, விசுவாசிகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்துபவர்கள். இவர்களுடன், மூப்பர்கள் / ஆயர்கள் (Elders/ Bishops): திருச்சபையை மேற் பார்வையி டுதல், நிர்வாகம் செய்தல் மற்றும் போதிக்கும் பொறுப் பைக் கொண்டவர்கள் (தீத்து 1:5-7, 1 தீமோத்தேயு 3:1-7).திருத்தொண்டர்கள் (Deacons): திருச்சபையின் பௌதீக மற்றும் சமூகத் தேவைகளை கவனித் துக்கொள்வதற்காக நியமிக்கப் பட்டவர்கள் (அப்போஸ்தலர் 6:1-6, 1 தீமோத்தேயு 3:8-13).3. பொதுவான ஊழியம்:புதிய ஏற்பாட்டின்படி, நியமிக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு விசுவாசியுமே பரிசுத்த ஆவியானவரால் ஈவு (வரங்கள்) பெற்று, திருச்சபை யின் வளர்ச்சிக்காகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.
அன்பர்களே! அருட்பொழியாளர்கள்,'நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில் லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்". . (யோவான் நற்செய்தி 15:16) என்ற ஆண்டவரின் வாக்குபடி, தெரிந்து கொள்ளப்பட்ட பாத்தி ரமாக ( Chosen vessel) இருக்கி றார்கள்.
1.அருட் பொழிவு இறைவனி ன் அழைப்பு. Ordained Ministry is a divine Call எரேமியா 1:4-10, அன்பர்களே! இறைவாக்கினர் எரேமியா,ஒரு இறைவாக்கின ராக அழைத்ததை விவரிக்கிறது. யூதாவில் விக்கிரக ஆராதனை பெருகியிருந்த காலத்தில், அரசர்கள் மனாசே, யூதா ஆட்சி செய்த காலம் .அவர்களை எச்சரி க்கவும், வரவிருக்கும் பாபிலோ னிய அழிவு மற்றும் நாடுகடத்தப் படுதலுக்கு எதிராகப் பேசவும் கடவுள் அவரைத் தேர்ந்தெடுத் தார். கி.மு 626ல் அரசர் யோசியாவின் (Josiah’s ) 13ம் ஆண்டில் எரேமியாவின் இறைவாக்கு தொடங்கப்பட்டது. அக்காலத்தில் அசீரிய பேரரசு வீழ்ச்சிப்பெற்று பாபி லோனிய பேரரசு ஆதிக்கம் செலுத்தினர். எரேமியா, லேவிய ஆயர் Priestly family குடும்பத்தை சேர்ந்தவர். பெஞ்சமின் வம்சாவழியினர் வாழ்ந்த வடக்கு எருசலேம் பகுதி யில் உள்ள கிராமமான அனத் தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன்தான் எரேமியா. இறைவ னின் முன்னறிவிப்பின்படி ""தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந் தேன்; நீ பிறக்குமுன்பே உன் னைத் திருநிலைப்படுத்தினே ன்; மக்களினங்களுக்கு இறை வாக்கினனாக உன்னை ஏற்படு த்தினேன்."(எரேமியா 1:5) எரேமியாவின் பிறப்பிற்கு முன் பே அவரது பணி திட்டமிடப்பட்ட தாக கடவுள் உறுதிப்படுத்துகி றார்.எரேமியா தன்னை ஒரு சிறுவன் என்று கூறி தயங்கிய போது, கடவுள் அவரது வாயைத் தொட்டு "என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்" என்று அருளினார்.மேலும், மனிதர்களுக்குப் பயப்பட வேண்டாம் என்று தைரியம் அளித்தார். "பிடுங்கவும்,தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலு ம் அரசுகள் மேலும் பொறுப் பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்" என்றார். இவற்றில், ஆறு செயல்கள்( verses 8-13 are Action Verbs) அடங்கிய தன் முழூபணி யை அதாவது, மக்களின் பாவங் களை "பிடுங்கவும், இடிக்கவும்" (அழிக்கவும்), அதே நேரத்தில் கடவுளின் வார்த்தையைக் கொண்டு மனந்திரும்புதலை "கட்டவும், நாட்டவும்" (மீளமைக் கவும்) அவர் ஏற்படுத்தப்பட்டார். மக்களினங்கள் என்ற வார்த் தை,உலகளாவிய அதிகாரத்தை அவருக்கு அளிக்கிறார். இறை வாக்கினர் எரேமிய யூதாவிற்கு மட்டும் தீர்க்கர் அல்ல, பிற இனங்களுக்கும் அவர்இறை வாக்கினர் என்பதை உறுதியளி க்கிறார்.இதற்காகவே, இவர் அருட்பொழிவு பணிக்காக கடவு ளால் அழைக்கப்பட்டார். இது ஒவ்வொரு அருட்பொழிவா ளரும் சாதி, மதம், நாடு, உறவு என்ற ஆதிக்கத்திலிருந்து விடுப ட்டவர்கள் என்பதை உணர்த்து கிறது
2.அருட்பொழிவுத் திருப்பணி.: புகழ்ச்சிக்கல்ல.The ordained ministry is not for glory 1.பேதுரு 5:1-4 அன்பர்களே! இறையியளாளர் வில்லியம் பார்க்ளேவின் கூற்றுப்படி, 1 பேதுரு 5:1-4 வரையிலான பகுதி யில், திருச்சபைத் தலைவர்கள் (ஆயர்கள், மூப்பர்கள்) அதிகார மனப்பான்மை இல்லாமல், சுயநலமின்றி,அன்புடன் விசு வாசிகளை மேய்க்க வேண்டும் என்று திருத்தூதர் பேதுரு அறிவுறுத்துகிறார்.
1 ஒரு உடன் மூப்பர் (A Fellow-Elder):பேதுரு தன்னை ஒருமுதன் மைத் தலைவராக உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக, தனக் கும் திருச்சபை மூப்பர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை வலியுறுத்தவே 'உடன் மூப்பர்' என்று அழைக்கிறார். இதன் மூலம், தலைமை என்பது மேலா திக்கம் செலுத்துவது அல்ல, மாறாக பகிர்ந்துகொள்ளப்படும் பொறுப்பு என்பதை தெளிவுப டுத்துகிறார்.
2. கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாய் (Not by Cons traint but Willingly):சேவை என்பது கடமைக்காகவோ அல்லது வேறு வழியின்றி (கட்டாயத்தினாலோ) செய்யப்படக்கூடாது. மாறாக, கடவுள் மீதுள்ள அன்பின் கார ணமாகவும், விருப்பத்தோடும் ஊழியம் செய்யப்பட வேண்டும்.
3. இழிவான ஆதாயத்திற்காக அல்ல (Not for Dishonest Gain): தலைவர்கள் பணத்துக்காகவோ அல்லது சுயநல ஆதாயங்களு க்காகவோ தங்கள் பதவியைப் பயன்படுத்தக் கூடாது. சுயநல நோக்கங்கள் ஊழியத்தின் தூய் மையைக் கெடுத்துவிடும்.
4. மந்தைமேல் அதிகாரம் செலுத்துபவர்களாக அல்ல (Not as Being Lords):
திருச்சபை உறுப்பினர்களைத் தங்கள் அடிமைகளாகவோ அல்லது அதிகாரத்தின் கீழ் அடக் கி ஆளப்படும் நபர்களாகவோ பார்க்கக் கூடாது. அதற்குப் பதி லாக, அவர்கள் தங்கள் முன்மாதி ரியான வாழ்க்கையினால் (Example) மக்களை வழிநடத்த வேண்டும்.
5. மகிமையின் கிரீடம் (The Crown of Glory):
இயேசு கிறிஸ்து மீண்டும் வரும் போது, தங்களை அர்ப்பணித்து உண்மையுடன் ஊழியம் செய்த வர்களுக்கு, ஒருபோதும் வாடாத ‘மகிமையின் கிரீடம்’ (Unfading Crown) வெகுமதியாக அளிக்கப் படும். இங்கு இயேசு கிறிஸ்து 'பிரதான மேய்ப்பராக' (Chief Shepherd) சித்தரிக்கப்படுகி றார்.சுருக்கமாக, தலைமைப் பொறுப்பு என்பது அதிகாரம் அல்ல, அன்பு மற்றும் தியாகத் துடனான சேவை என்பதையும் அருட்பொழிவுத் திருப்பணி.: புகழ்ச்சிக்கல்ல.என்பதையும் இப்பகுதி வலியுறுத்துகிறது.
3 அருட்பொழிவு பணி சுய புகழ்ச்சிக்காக அல்ல,Ordained Ministry is not for self glory. மத்தேயு 20: 20-28
அன்பர்களே! மத்தேயு 20: 20-28 என்பது இயேசுவின் அரசு, அதி காரத்தை விட சேவை செய்வதே உண்மையான உயர்வு என்பதை விளக்குகிறது.சீடர்களின் சுயநலத்தைக் கண்டிக்காமல், அன்புடன் அவர்களைத் திருத்தி, தியாகமான வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் ஊழியத்தில் சலோமி:
அன்பர்களே! இயேசு எருசலே மை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைக்கிறார் அப்போது, செபதேயுவின் மனைவி சலோமி தன் மகன்களான யாக்கோபும், யோவானும் கிறிஸ்துவின் அரசில் அவருடை ய வலப்புறத்திலும், இடப்புறத்தி லும் அமர வேண்டும் என்று அவர்கள் உரிமையுடன் கேட்டார்கள். அதற்கு காரணம் சலோமி இயேசுவைப் பின் தொடர்ந்து அவருக்குப் பணி விடை செய்த பெண்களில் ஒருத்தியாக இருந்தாள். தன் செல்வாக்கு தங்கள் கோரிக் கையை நிறைவேற்றிவிடும் என்று நம்பினாள், இது எல்லா மனிதருக்கும் ஏற்படும் ஒரு அனு பவம் தான் நாம் மற்றவருக்கு ஏதாவது செய்கின்றபோது அதன் மூலம் அவர்கள் ஏதாவது நமக்கு செய்வார்கள் என்று எதிர் பார்ப்பது மனித இயல்பு தான். அதுமட்டுமல்ல, அவளின் பிள் ளைகள் யாக்கோபும், யோவா னும் கிறிஸ்துவின் மிக நெருங் கிய சீடர்களாய் இருந்தனர். யோவான், இயேசு நேசித்த சீடரா க இருந்தபோதிலும், அவர்கள் அடிக்கடி கண்டிக்கப்பட்டனர். கிறிஸ்து யாரை நேசிக்கிறாரோ, அவர்களையே அவர் அதிகமா கக் கண்டிக்கிறார்.அவருடைய தாழ்மையையும் மீறி, அவருடை ய ராஜ்யத்தை நம்பிய அவர்களி ன்விசுவாசம் பாராட்டத்தக்கது; ஆனால், அதிகாரமும் ஆடம்பர மும் நிறைந்த ஒரு உலக ராஜ்ய த்தைப் பற்றிய அவர்களின் எதிர் பார்ப்பு தவறானதாகும். அவர் கள் ஊழியத்தை விட கௌரவத் தையே அதாவது பதவிகளை நாடினார்கள்; ஒருவேளை, அவருடைய உயிர்த்தெழுதல் ஒரு உடனடி ஆட்சியைக் குறிக் கிறது என்று அவர்கள் நினைத் திருக்கலாம். கிறிஸ்துவின் வார்த்தைகள் தங்கள் ஆறுதலு க்காகவே என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, அவர்கள் மிக உயர்ந்த பதவிகளை நாடினார் கள். தங்கள் தாயான சலோமி யைத் தங்களுக்காகப் பேச வைப்பதன் மூலம், அவர்கள் தங்கள் கோரிக்கையைத் தந்திரமாக நிறைவேற்றினர்.
1. இயேசுவின் பொறுமை (Jesus's Kindness):சீடர்கள் உலகப் பதவிகளைப் பற்றியும் தங்க ளின் எதிர்காலத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோதும், இயேசு அவர்களிடம் கோபமடை யவில்லை. மாறாக, மிகுந்த பொறுமையுடனும், அன்போடும் அவர்களுக்கு உண்மையான வழியைக் காட்டினார்.
2. யார் முதல்வன்:Who is the leader?"உலகத்தில் தலைவர்கள் என்பவர்கள் மற்றவர்களைக் கட்டுப்படுத்துகிறவர்களாகவும், தங்கள் அதிகாரத்தைக் காட்டு கிறவர்களாகவும் இருக்கிறார் கள். ஆனால், இயேசுவின் அரசில் "முதல்வன்" ஆக இருக் கவிரும்புபவன் மற்றவர்களின் "ஊழியக்காரனாக" இருக்க வேண்டும்.
3 தலைமை என்பது தியாகத் தின் கோப்பை (Leadership is the Cup of Sacrifice):இயேசு,நான் குடிக்கும் பாத்திரத்தை உங்க ளால் குடிக்க முடியுமா?" என்று சீடர்களிடம் கேட்டார். இது அவரு டைய துன்பங்களையும்,சிலுவை மரணத்தையும் குறிக்கிறது. இயேசு தான் அனுபவிக்கவிருக் கும் தியாக வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்ததைப் போலவே, சீடர்க ளையும் அந்த வழியில் செல்ல அழைத்தார்.இவ்வழியைஉண்மையாய் பின்பற்றுபவர்களே அருட்பொழிவுத் திருப் பணியா ளர்கள்.
4. மீட்பின் விலை (The Ransom for Many):இயேசு, இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்ப தற்கு அல்ல, தொண்டு ஆற்று வதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பத ற்கும் வந்தார்" என்று கூறினார். (மத்தேயு நற்செய்தி 20:28) கிறிஸ்து தாழ்மையின் வடிவ மாக இருந்து, உலகத்திற்காகத் தம்மையே பலியாக்கியதே சேவைக்கு மிகச் சிறந்த எடுத்து க்காட்டு என்று விவரிக்கி றார்.
அன்பர்களே!அருட்பொழிவு பணி என்பது சுய புகழ்ச்சிக்கா னது அல்ல; அது முழுக்க முழுக்க தன்னலமற்ற சேவை, இறைவ னின் அன்பை வெளிப்படுத் துதல் மற்றும் பிறருக்குப் பணி விடை செய்வதை அடிப்படையா கக் கொண்டது.
5 அதிகாரம் அல்ல, சேவை: அருட்பொழிவு பணிஎன்பது மக்கள் மீது ஆதிக்கம் செலுத்து ம் அதிகாரப் பணி அல்ல. இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் கால டிகளைக் கழுவி "பணியாளராக" வாழ்ந்து காட்டிய முன்மாதிரியே இதன் அடித்தளம்.
6 இறைவனின் கருவி: அருட்பொழிவு பணியாளர் தன்னை முன்னிலைப்படுத்தா மல், இறைவனின் வார்த்தைக ளையும், நற்செய்தியையும் மக்க ளுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகி றார்.
7 ஆன்மீக வழிகாட்டுதல்: மக்களின் ஆன்மீகத் தேவை களை நிறைவேற்றுவதிலும், துன்பங்களில் ஆறுதல் அளிப்ப திலும் மட்டுமே அவர்களின் முழு கவனமும் இருக்க வேண்டும்.சுய புகழ்ச்சி மற்றும் உலகளாவிய விளம்பரங்களைத் தாண்டி, எளிமை மற்றும் தியாக உணர் வுடன் செய்யப்படும் அருட்பொ ழிவு பணி மட்டுமே சமூகத்தில், மற்றும் திருச்சபையில் உண்மை யான மாற்றத்தை ஏற்படுத்தும். அத்தகைய மாற்றங்களை நாம் ஏற்படுத்த ஆண்டவர் அருள் புரிவாராக, ஆமேன்.
Prof. Dr. David Arul ParamanandamSermon Writer,www.davidarulsermoncentre. com.www.davidarulblogspot.com.
Note: The Sermon has been prepared to deliver at Govt. Rehabilitation Centre, Paranur, Chengalpattu on 19/7/26.

Comments
Post a Comment