நற்செய்தி ஞாயிறு: Mission Sunday: அருள்பணி: இரக்கத்தின் செயல்வடிவம்.( 287) Mission: Compassion in Action .எசாயா 58:6-10, 1 யோவான் 3:16-18, திருப்பாடல் 82, மத்தேயு 9:35-38.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், இவ்வார நற்செய்தி ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அருள்பணி:இரக்கத்தின் செயல்வடிவம். Mission: Comp assion in Actionm".
அருள்பணி என்றால் என்ன?
What is Mission?
அருள் பணி (Mission) என்பது இறைவார்த்தையை அல்லது நற்செய்தியை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்தல்.அன்பு, அமைதி, மற்றும் பிறர் நலம் பேணும் நற்பண்புக ளை உலகிற்கு எடுத்துரைத்தல்
மிக முக்கியமாக இறையரசை
இவ்வுலகில் நிறுவுதலாகும்.
இரக்கத்தின் செயல்வடிவம் என்றால் என்ன?
 What is Compassion in Action?
அன்பர்களே!
இரக்கம்' (Compassion) என்ற வார்த்தை லத்தீன் மொழிச் சொல்லான compassio ' (compati) என்பதிலிருந்து உருவானது, கம்பாட்டி' இதற்கு 'மற்றொரு வருடன் சேர்ந்து துன்பப்படுதல்' என்று பொருள். "to suffer together with" ('com' is prefix means together and  'pati' means "to suffer") மற்ற வர்களின் துயரத்தை உணர்ந்து, அந்த வலியைப் போக்க உதவும் ஒரு சமூக உணர்ச்சியே இரக்க மாகும். 
அன்பர்களே!
2026 FIFA உலகக் கோப்பையில் கேப் வெர்டே (Cabo Verde) அணியின் கோல் கீப்பராகச் செயல்பட்டவர் வோசின்ஹா (Vozinha) ஆவார். இவரது முழுப்பெயர் ஜோசிமார் ஜோஸ் எவோரா டயஸ் (Josimar Jose Evora Dias) ஆவார். 40 வயதா ன இவர், 2026 உலகக் கோப்பை யில் ஸ்பெயின், உருகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற முன்னாள் உலகச் சாம்பியன் அணிகளுக்கு எதிராக மிகச் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப் படுத்தினார்.
ஸ்பெயினுக்கு எதிரான தொட க்க ஆட்டத்தில் மட்டும் 7 அபாரமான கோலை தடுத்து  (Saves) தன் அணியை டிரா செய் ய உதவினார். இந்தச் சாதனை யைப் பாராட்டி இவருக்கு 'மேன் ஆஃப் தி மேட்ச்' (Man of the Match) விருது வழங்கப்பட்டது.
ஜூலை 2026-இல் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026™) நாக்-அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வேர்டே அணிகள் மோதின. இந்த கடுமையான ஆட்டத்திற் குப் பிறகு, லயனல் மெஸ்ஸி வோசின்ஹாவை நேரில் சந்தி த்து கட்டியணைத்து பாராட்டி னார்.
"நீங்கள் மிகவும் சிறந்தவர். உங்களை நினைத்து உங்கள் நாட்டு மக்கள் பெருமைப்பட வேண்டும்" என்று மெஸ்ஸி
வோசின்ஹாவை உற்சாகப்படு த்தினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்திற்குப் பிறகு, இருவரும் தங்கள் ஜெர்சிகளை (Jerseys) மாற்றிக்கொண்டனர்.
உலக போட்டி தொடங்​கு​வதற்கு முன்பு வரை சுமார் 50,000 பேர் மட்​டுமே பின்​தொடர்ந்து வந்த அவரது இன்​ஸ்​டாகி​ராம் பக்கம், போட்டி முடிந்த சில மணி நேரங்​களி​லேயே 8,4 மில்லியனை கடந் து சாதனை படைத்​தது. தான் பெரிய ஜாம்பவானாக இருந்தா லும், லயனல் மெசியின் இரக்ககுணம், மிக சிரிய பத்து குட்டிதீவுகளை கொண்டதும், ஆறு லட்சம் மக்களே வாழும் கேப் வெர்டே நாட்டின் கால்பந்து அணியின் கோல்கீப்பரை நேரிடையாக சென்று கட்டித்தழு வி பாராட்டியது அவரது நேர்மை, அன்பு, மதிப்பை வெளிப்படுத்தி யது மிகவும் பாராட்டப்பட வேண் டும். கேப் வெர்டே ஒரு சிரிய நாடு. இத்தகைய திறமையான வீரர்களை கொண்டு கடுமையா க விளையாடி 3:2 என்ற கணக் கில் தோல்வியடைந்த நிகழ்வு மெஸ்சிஅன்புடன்இரக்கத்துடன்  வோசின்ஹாவைகட்டி அனைத் தார்.
கேப் வெர்டே கால்பந்து வீரர் வோசின்ஹாவின் (Vozinha) தாயார் அனா கேண்டிடா எவோரா, அவரது குடும்பத்தி னருக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைப்பதில் இருந்த சிக்க ல்கள் உலகளவில் பேசப்பட்டன. (US  $15,000The U.S. Department of State officially waived all fees and bonds for his mother as an except ional policy decision) தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கத்தின் அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களின் பெருமுயற்சியால் the Visa pay ment is completely waived. அவரின் தாயார் அமெரிக்கா அழைத்து வரப்பட்டு, மியாமி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தனது மகன் விளையாடுவதைப் பார் வையிட்டார்.
இது மனிதர்களின் இரக்கத்தின்
செயல்வடிவத்தை காட்டுகிறது.
மற்றொரு உதாரணத்தையும், தெரிவிக்கிறேன்.
கேப் வெர்டே வீரரான வோசின் ஹா, உலகக் கோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை வெளி ப்படுத்தி உலகளவில் பல கோடி ரசிகர்களை ஈர்த்தார். இதனைக் கண்ட கிறிஸ்டியானோ ரோனால்டோ, வோசின் ஹாவு க்கு போன் செய்து பேசினார். மேலும், ரோனால்டோவுக்கு ஆதரவளிக்கும் 'UFL on mobile' என்ற கால்பந்து வீடியோ கேம் நிறுவனத்தில் வோசின்ஹாவுக் கான முதல் விளம்பர ஒப்பந்த த்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
உலகக் கோப்பை தொடரில் அவரது அபாரமான ஆட்டத்தால் கவரப்பட்டு, நைக் (Nike) நிறுவனம் சுமார் €30 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு அவரை அணுகியதாகத் தகவல்
வந்துள்ளன."இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில்அவர் கள் இரக்கம் பெறுவர். "
(மத்தேயு நற்செய்தி 5:7)
நாம் இரக்க முடையவர்கள் என்ப தை நம்முடைய செயல் வடிவ மாக காட்டுவதே கிறிஸ்துவத் தின் அடையாளமாகும்.
பழைய ஏற்பாட்டில் இரக்கத் தின் செயல்வடிவம். Compassion in Action in the Old Testament. 
அன்பர்களே! இணைச் சட்டம் (உபாகமம் 10:18)ன்படி பழைய ஏற்பாட்டில் இரக்கம் என்பது வெறும் உணர்வு சார்ந்ததாக இல்லாமல், ஏழைகள், அனாதை கள், விதவைகள் மற்றும் அந்நி யர்களுக்கு உதவும் செயலில் வெளிப்படும் அன்பாகவே வரை யறுக்கப்பட்டுள்ளது  இது கடவு ளின் தன்மையாகவும், மக்களின் கடமையாகவும் பிரிக்கப்பட்டுள் ளது.
1. செயலில் வெளிப்படும் தேவனுடைய இரக்கம்மன்னிப்பு மற்றும் மீட்பு: 
இஸ்ரவேல் மக்கள் தொடர்ந்து பாவம் செய்தபோதும், கடவுள் அவர்களை தண்டித்தாலும்,அவர் களின் அழுகுரலைக்கேட்டுமனம் இறங்கி மீண்டும் அவர்களை மீட் டெடுத்தார் (விடுதலை பயணம் யாத்திராகமம் 34:6). வனாந்தரப் பயணம் முழுவதும் அவர்களைக் கண் மணிபோலக் காத்து, வழி நடத்தினார் (திருப்பாடல், சங்கீ தம் 136).
2. மனிதர்கள் மூலம் வெளிப் படும் இரக்கச் செயல்களும் அறுவடைச் சட்டங்களும: வயலில் அறுவடை செய்யும் போது சிந்திய தானியங்களை யும், மரத்தின் ஓரங்களில் உள்ள பழங்களையும் ஏழைகளும், அந்நியர்களும் பொறுக்கிக் கொள்ள சட்டம் வகுக்கப்பட்டது (லேவியர் 19:9-10).
3. கடன் நிவாரணம்: 
ஒவ்வொரு ஏழாவது ஆண்டும்  ஏழைகளின் கடன்கள், சகோதரரின் கடன்கள் மன்னிக் கப்பட வேண்டும் (இணை சட்டம் உபாகமம் 15:1-2).
4.சமூக நீதி: பலவீனமாக இருக்கும் விதவை, அனாதை ஆகியோருக்கு நியாயம் வழங் குவதும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தவிர்ப்பதும் உண்மையான இரக்கத்தின் வெளிப்பாடு என்று போதிக்கப்ப ட்டது (மீகா 6:8). 
5.செயல்முறை உதாரணங்கள்.: போவாஸ் மற்றும் ரூத்: வயலில் வேலை செய்த ரூத் என்ற ஏழை மற்றும் அந்நியரான விதவைக்கு போவாஸ்கருணை காட்டி, தன் வயலில் உணவைப் பெறச் செய்து, பாதுகாப்பும் அளித்தார் (ரூத் 2:8-16).
நெகேமியா: எருசலேம் மதில்க ள் இடிக்கப்பட்டு மக்கள் அநாதர வாக விடப்பட்டதைக் கேள்வியு ற்று, தன் வசதியான பதவியை விட்டுவிட்டு வந்து, மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து மதில்களை க் கட்ட உதவினார் (நெகேமியா 1).
எஸ்தர் ராணி:
தனது சொந்த உயிரைப் பண யம் வைத்து, தனது யூத இன மக்களை காக்க, முன் அழைப் பின்றி பாரசீக பேரரசன் அகஸ்வேரின் King Ahasuerus, முன் செல்லத் துணிந்தார். இதற்காக அவர் கூறிய "நான் அழிந்தால் அழிந்து போகிறேன் "And if I perish, I perish (Esther 4:16) என்ற வார்த்தைகள் அவரது அசைக்க முடியாத தியாகம், இரக்கத்தின் அடையாளமாகும்.
புதிய ஏற்பாட்டில் இரக்கத்தின் செயல்வடிவம். Compassion in Action in the New Testament. 
அன்பர்களே! புதிய ஏற்பாட்டில் 'இரக்கம்' (Mercy/Compassion) என்பது வெறும் உணர்ச்சி மட்டு மல்ல, அது எப்போதும் பிறர் துய ரம் துடைக்க ஓடோடிச் செல்லும் செயல்பாடாகவே வெளிப்படு கிறது. இயேசு கிறிஸ்துவும் அவரது சீடர்களும் இதனை நடை முறையில்  வெளி ப்படுத்தினார் கள்.
 இயேசுவின் செயலில் வெளிப் பட்ட இரக்கம்  இயேசு மக்களைக் கண்டு மனதுருகி (Compassion), அவர்களின் உடலிலும் ஆன்மா விலும் உள்ள காயங்களை ஆற் றினார்.
நோயாளிகளை குணமாக்குதல்: குஷ்டரோகி, குருடர்கள் போன்ற வர்கள் சமூகத்தால் ஒதுக்கப் பட்டபோது, இயேசு அவர்களைத் தொட்டு சுகமளித்தார்.  தம்மைப் பின் தொடர்ந்த திரளான மக்க ளின் பசியைப் பார்த்து, அவர்க ள் வழியில் சோர்ந்துபோகக் கூடாது என்று கருதி அற்புதமாக உணவளித்தார் (மாற்கு 8:2). இயேசு இரக்கத்தின் ஆழத்தை மக்களுக்குப் புரிய வைக்க சக்தி வாய்ந்த உவமைகளைப் Parables பயன்படுத்தினார்.
நல்ல சமாரி யன் (லூக்கா 10:30-37): சாதியையும் இனத்தை யும் பாராமல், அடிபட்டு வழியில் கிடந்த மனிதனுக்கு முதலுதவி செய்து, மருத்துவச் செலவையும் தானே ஏற்றுக்கொண்ட ஒருவரி ன்  இரக்கசெயல் அனைவருக் குமான பாடம்.
 காத்திருக்கும் தகப்பன் (லூக்கா 15:11-32): வழி தவறித் திரும்பிய மகனைப் பார்த்ததும், அவமான ம் பாராமல் ஓடிச் சென்று அவ னை கட்டி அணைத்து முத்தமிட்ட தந்தையின் நிபந்தனையற்ற அன்புபையும் இரக்கத்தையும்
அளவிடமுடியாது.புதிய ஏற்பாடு
முழுமையும் இயேசுன் அன்பு, இரக்கம் ஆகிய நற்பண்புகளின்
அடையாளமாகவும் செயல்வடி வமாகவும் இருக்கிறது.
1.இரக்கத்தின் செயல்வடிவம்:
Compassion in Action.ஏசாயா 58:6-10.
அன்பர்களே! இறைவாக்கினர்
ஏசாயா, ஏசாயா 58:6-10,ல், உண்மையான உபவாசம் என்ப து வெறும் சடங்கு அல்ல (வெளி யரங்கமான பட்டினி), மாறாக சமூகத்தில் உள்ள ஒடுக் குமுறை களை அகற்றுவதும், ஏழைகளு க்கு உதவுவதும் ஆகும்
 கடவுளுக்கு உகந்த உண்மை யான நோன்பு என்பது வெறும் சடங்கு சார்ந்த பட்டினி கிடப்பது அல்ல. மாறாக, இரக்கத்துடன் ஏழைகளுக்கு உதவுவது, சமூக அநீதியை ஒழிப்பது மற்றும் பிறருக்கு நன்மை செய்வதுதான் உண்மையான ஆன்மீக வாழ் க்கை என்பதை இந்த வசனங் கள் மிக ஆழமாக விளக்குகின் றன. 
1. கடவுள் விரும்பும் நோன்பு (வசனம் 6): அநீதியான கட்டுப் பாடுகளை உடைப்பது, மற்றவ ர்களின் சுமைகளை நீக்குவது, ஒடுக்கப்பட்டவர்களை விடுவி ப்பது மற்றும் அனைத்து வகை யான கொடுமைகளையும் ஒழிப் பதே உண்மையான நோன்பு என்கிறார் தீர்க்கர்.
2 அன்பின் பகிர்வு (வசனம் 7): பசியுள்ளவர்களுக்கு உணவளி ப்பது, வீடற்ற ஏழைகளை வீட்டி ற்கு அழைத்து தங்குமிடம் தருவ து, வஸ்திரமில்லாதவர்களுக்கு ஆடை கொடுப்பது போன்ற இரக் கச் செயல்களே கடவுள் ஏற்கும் காணிக்கை.
இதன் அடிப்படையில்தான் நம் திருச்சபைகள் விடுதிகள் அமை த்து மாணவர்களுக்கு கல்வி வழங்கிவருகிறது.
(வசனம் 8): நாம் பிறருக்கு உதவ முன்வரும்போது, கடவுளின் ஒளி நமது இருளில் பிரகாசிக்கும். நமது காயங்கள் விரைவில் ஆறி, அவருடைய மகிமை நமக் கு முன்னும் பின்னும் அரணாகச் செல்லும். 
(வசனம் 9): நம்முடைய சுயநலத் தையும், பிறர் மீது விரல் நீட்டிப் பழி சுமத்தும் பழக்கத்தையும் கைவிட வேண்டும். நாம் பிறரி டம் அன்பாகப் பேசினால், கடவு ள் நமது இறைவேண்டலுக்கு உடனடியாகப் பதிலளிப்பார். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை (வசனம் 10): பசியுள்ளவர்களுக்காக நம் மனதைத் திறந்து, அவர்களின் தேவையைச் சந்தித்தால், நமது வாழ்க்கை வறண்ட நிலத்தைப் போலன்றி, எப்போதும் பசுமை யான நந்தவனமாக மாறும்., பிறர் துயரத்தைத் துடைப்பதே உண்மையான வழிபாடு. ஏசாயாவின் இந்த வார்த்தைகள், மத்தேயு 25:35-40-ல் இயேசு கிறிஸ்து கூறியுள்ள போதனைக ளுக்கு ஒப்பாகும்.நம் பக்தி, பற்றுறுதி அனைத்தும் இரக்கத் தின் செயலாக இருக்கட்டும்.
2. இறை அன்பு பேச்சில் அல்ல, செயலில் காட்டுவதே!. Love for God is shown not in words, but in deeds.. 1யோவான் 3:16-18 
அன்பர்களே!
1யோவான் 3:16-18 வசனங்கள், திருதூதர் யோவான், பொய் போதகர்கள் மற்றும் பிளவுகளா ல் சவால்களைச் சந்தித்த சபை க்கு இந்த நிருபத்தை  ஆசியா மைனர் பகுதியில் (தற்போதைய துருக்கி) உள்ள எபேசு (Ephesus) மற்றும் அதைச் சுற்றியுள்ள திருச்சபைகளைச் சார்ந்த விசு வாசிகளுக்கு எழுதப்பட்டது . உண்மையான தேவ அன்பு என்பது வெறும் வார்த்தைகளில் அல்ல, மாறாக பிறருக்காக தியா கம் செய்வதிலும், தேவைப்படுப வர்களுக்கு உதவும் செயல்களி லும் வெளிப்பட வேண்டும் என்பதைவலியுறுத்துகின்றன.இந்த வசனங்களின் தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்ப ட்டுள்ளன:
1. உண்மையான அன்பின் இலக்கணம் (வசனம் 16)"இயேசு கிறிஸ்து தமது உயிரைக் கொடு த்ததைக் கொண்டு நாம் அன்பை அறிந்து கொள்கிறோம்; நாமும் நம் சகோதரர்களுக்காக உயிரை க் கொடுக்கக் கடனாளிகளாய் இருக்கிறோம்." கடவுளின் அன்பு எப்படிப்பட்டது என்பதை அறிய நாம் வேறு எங்கும் தேட வேண்டி யதில்லை; இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் சிந்திய தியாக இரத்தமே உண்மையான அன்பின் உச்சக்கட்ட எடுத்துக் காட்டு.இயேசு நம்மை அப்படி நேசித்ததால், நாமும் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்காக (விசுவாசிகளுக்காக) நம்முடைய சுயநலத்தை விட்டுக்கொடுக் கவும், தேவைப்பட்டால் நம் உயி ரையே கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
2. நடைமுறை அன்பு (வசனம் 17)"ஒருவன்உலகப்பொருட்களை உடையவனாயிருந்து, தன் சகோதரன் குறைவுள்ளவனைக் கண்டு, தன் இதயத்தை அடைத் துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு எப்படி நிலைத்திருக் கும்?"இந்த வசனம் அன்பின் நடைமுறைப் பரிமாணத்தை விளக்குகிறது. நம்மிடம் பணம், உடைமை போன்ற வசதிகள் இருக்கும்போது, நம் சக விசுவா சியின் வறுமையைப் பார்த்தும் இரக்கம் காட்டாமல் கஞ்சத்தன மாக இருந்தால், அவனுக்குள் கடவுளின் அன்பு இல்லை.  ஆன்மீக அன்பு என்பது உதட்டள வில் பேசுவது மட்டுமல்ல; அது பசிப்பவனுக்கு உணவு, ஆடை இல்லாதவனுக்கு உடை என்று இயற்பொருள் சார்ந்த தேவைக ளைச் சந்திப்பதாகும்.
3. செயலில் காட்டும் அன்பு (வசனம் 18)"என் சிறுபிள்ளை களே, நாம் சொல்லினாலும் நாவினாலும் அல்ல, செயலாலு ம் உண்மையாலும் அன்பு கூர் வோம்." அன்பு என்பது வெறும் உணர்ச்சிவசப்படுதலோ அல்ல து இனிமையான வார்த்தைக ளை மட்டும் பேசுவதோ அல்ல.  உண்மையான அன்பு என்பது கள்ளமில்லாத செயல்களிலும், வெளிப்படையான உண்மையி லும் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.யோவான் இந்த வசனங்கள் மூலம் கிறிஸ்தவ அன்பை சோதிக்கும் ஒரு கருவி யை அளிக்கிறார். உதட்டளவில் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்வது எளிது; ஆனால் பிறர் நலனுக்காகத் தன் நேரத் தையும், செல்வத்தையும், சுயத் தையும் தியாகம் செய்வதிலும்,
இரக்கம் காட்டுவதிலும் தான் உண்மையான விசுவாசம் அடங் கியிருக்கிறது.
3.இரக்கமுள்ளோரே இறை மக்கள்.God's people are merciful" (மத்தேயு 9:35-38.) 
அன்பர்களே! மத்தேயு 9:35-38. இறையியளாளர்.  வில்லியம் பார்க்லே (William Barclay) இந்த பகுதியில் இயேசுவின் இரக்கத் தையும், ஆன்மீக அறுவடைக்குச் சீடர்களைத் தயார்படுத்துவதை யும் பின்வருமாறு விளக்கு கிறார்:
1 இயேசுவின் மூன்று முக்கிய பணிகள் (வச. 35):இயேசு மூன்று காரியங்களைச் செய்தார்: நற்செய்தியைப் பிரசங்கித்தார், போதித்தார், மற்றும் குணப்படுத் தினார்.  , இயேசு வெறும் போத கர் மட்டுமல்ல; மக்களின் ஆன் மீக, அறிவுசார், மற்றும் உடல் ரீதியான தேவைகளை முழுமை யாகக் கவனித்தவர்.
2. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் (வச. 36):மக்களின் நிலையைக் கண்டு இயேசு உருக்கம் கொண் டார். , அன்றைய யூதத் தலைவர் கள் மக்களைச் சரியான வழி யில் நடத்தாத "மோசமான மேய் .ப்பர்களாக" இருந்தார்கள் என்ப தைச் சுட்டிக்காட்டுகிறார். மக்கள்'களைப்படைந்தவர்களாகவும்,கைவிடப்பட்டவர்களாகவும்' (harassed and helpless) இருந்த னர்; அவர்கள் கடவுளைத் தேடி அலைந்தவர்கள்.
3. ஆன்மீக அறுவடை (வச. 37-38):வயலில் விளைந்த பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருப்ப துபோல, மக்கள் இரட்சிப்பைப் பெறத் தயாராக இருக்கிறார்கள். கடவுள் தனது அரசை கட்டவிரும் புகிறார், ஆனால் அந்தப் பணி யைச் செய்ய மனிதர்கள்தேவை. , "கடவுளுக்கு மனிதர்களின் கைகள் மற்றும் கால்கள் தேவை" என்பதை இதன் மூலம் வலியுறு த்துகிறார்.
இறுதியாக,
இரக்கம் என்பது வெறும் சொல் லாடல் அல்ல; அது மனித மாண் பை உயர்த்தும் செயல் வடிவம். நாம் பிறருக்குக் காட்டும் ஒவ் வொரு இரக்கமும், இந்த உலகை அன்பின் வழியே சிறந்த மனித நேயப் பூங்காவாக மாற்றுகிற து. உண்மையான இரக்கம் பெறு பவரின் துயரத்தைத் துடைப்ப தோடு, அதைச் செயல்படுத்தும் மனிதர்களின் உள்ளத்தையும் தூய்மையாக்கி நிறைவு பெற
நம் கடவுள் அருள்புரிவாராக!ஆமேன்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com.







About the Cape Verde goalkeeper:

Cape Verde's goalkeeper #01 Vozinha celebrates at the end of the 2026 World Cup Group H football match between Spain and Cape Verde at the Atlanta Stadium in Atlanta on June 15, 2026.
Cape Verde’s goalkeeper, Vozinha, celebrates at the end of the 2026 World Cup Group H match between Spain and Cape Verde at Atlanta Stadium on June 15, 2026 

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.