Posts

Showing posts from December, 2022

இயேசுவின் புதிய உடன்படிக்கையே நிலையானது. The New Covenant of Christ is the Eternal . ஏரேமியா: 31:31-34 . மத்தேயு 26: 26-29, எபிரேயர்: 8:6-13

Image
Introduction:  What is Covenant? உடன்படிக்கை என்றால் என்ன? உடன்படிக்கை என்பது ஒருவர் மற்றவர்களோடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை ( Agreement) குறிக்கும். இது வார்த்தையாக( By oral) இருக்கலாம் or எழுத்து (By word) மூலமாக இருக்கலாம். கடவுள் தன் முதல் உடன்படிக்கையை நோவாவின் ( தொடக்கநூல் 9: 9-17) மூலமாக ஏற்படுத்தி தொடர்ந்து ஆபிரகாம்,  மோசே போன்றவர்களோடு பல உடன்படிக்கைகளை செய்து கொண்டார். Difference between the Covenant of  the Mount Sinai and the Mount Calvary. 1.கடவுள் இஸ்ரேல் மக்களோடு சீனாய் மலையில் செய்து கொண்ட உடன்படிக்கை  பழைய உடன்படிக்கை  என்றும், கடவுள் கல்வாரி மலையில் உலக மக்கள் அனைவரோடும் செய்த உடன்படிக்கை  புதிய உடன்படிக்கை  என்றும் அழைக்கப்படுகிறது. 2. புதிய உடன்படிக்கை என்பது விவிலியத்தில் கூறப்படும் கடவுளின் உடன்படிக்கைகளுள் இறுதியானது ஆகும்.  The New Covenant by Jesus Christ is the End and Eternal. 3. மோசையின் உடன்படிக்கை விலங்கின் ரத்தத்தினால்( the blood of animals) ஏற்படுத்தப்பட்டது ஆனால் உலக இரட்ச்சகர் இயேசு கிறிஸ்துவினுடைய புதிய உடன்பட...

கிருஸ்தவர்களின் புத்தாண்டு ஜனவரி -1.லூக்கா 2: 21- 24.

Image
கிரெகொரியின் நாட்காட்டி  ( Gregorian calendar ) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல்ஒன்றியம், ஐ.நா.போன்றவற்றினால்அங்கீகரிப்பட்டுள்ளது. முதன்முதலில் கி.மு 45 ல் ரோம பேரசர் ஜூலியஸ் சீசர்  அவர்கள் தான் ஜனவரி- 1ஐ,  ஆண்டின் முதல் மாதமாக உருவாக்கினார். இது ஜூலியன் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. இதன் திருத்தப்பட்ட வடிவம் அப்போதைய  திருத்தந்தை 13ம் போப் கிரிகோரி கி‌.பி 1582 பிப்ரவரி 24ல் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.இன்று உலகில் பரவலாகப்பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். பின்னாளில் இந்நாட் காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த நாட்காடியின் படி  இயேசு  பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி " ஆண்டவரின் ஆண்டு " எனவும் பெயரிடப்பட்டது. கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ...

புத்தாண்டு நற்செய்தி திருப்பாடல்கள் 147:13-15.லூக்கா 13:6-9.

Image
1  இறைவனை   துதிப்போம் : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இப் புத்தாண்டில் பிரவேசித்துள்ள உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். திருப்பாடல்கள் 147:12,13,14 இறைவார்த்தைகளே புத்தாண்டின் நற்செய்தியாகும். மாபெரும் புனித நகரம் எருசலேம்:  எருசலேம் -  கோவில் மலைத்  தோற்றம்:  12.எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி. வானத்திலிருந்து இறங்கி வரும் புதிய எருசலேமின் வாசிகளே முதலாவதாக நாம் கடவுளை துதிக்க வேண்டும் மற்றும் போற்ற வேண்டும்.   (திருவெளிப்பாடு: 20;9) ஏனேனில் நம் ஆண்டவர் தூதிகளின் மத்தியில் வாசம் செய்கிறார். எருசலேம் தேவனின்நகரம். பரிசுத்தவான்களின் கூடாரம்.  எருசலேம். சமாதானத்தின் நகரம் என்றும், தாவீதின் நகரம் என்றும் அழைக்கப்பட்ட நகரம். எருசலேம் ( சாலேம் நகர்) மகாராஜாவின் நகரம் என அழைக்கப்படுகிறது. எருசலேமின்பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.’—மத்தேயு 5:34, 35. எருசலேம் குமாரித்திகள்தான் இயேசுவின் சிலுவைப்பாட்டில் கண்ணீர் விட்டவர்கள். நம் இறைமைந்தன்  ஏசுவை சிலுவையில் அறறையப...

இறைவனின்.தூதன் திருமுழுக்கு யோவான்.லூக்கா 1:5-25.மத்தேயு:3:13-17.மாற்கு: 1:1-11.யோவான் 1:19-40.

Image
Introduction:.  இறை தூதன் காபிரியேல் ஏன் முதன் முதலில் யோவான் ஸ்நானகனின் பிறப்பை சகரியாவிற்கு அறிவித்தார்? லூக்கா 1:16,17.அவர்,(யோவான்)  இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.  17 எலியாவின் உளப்பாங்கையும்வல்லமையையும் உடையவராய் அவருக்கு (இயேசு) முன் செல்வார்; தந்தையரும் மக்களும்உளம்ஒத்துப்போகச்செய்வார்;நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். இத்தகைய பண்புகள் நிறைந்த யோவான் (லூக்கா 3:2-4) அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தகாலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். அவர் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப்போட்டிருக்கிறார்; தோல் வாரை இடுப்பில் கட்டியிருக்கிறார். வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிடுகிறார். யோவான் இயேசுவை காட்டிலும் 6 மாதம் மூத்தவர். இயேசு பிறந்த பொழுது ஏரோது மன்னன் எருசலேமிலுள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை கொள்ளும்படி கட்டளை இடுவதற்கு முன்பாகவே...

"ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்". லூக்கா நற்செய்தி 1:37 "For with God nothing shall be impossible." Luke 1:37.

Image
Introduction:. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், கன்னி மரியாள் பெத்லகேமில் இருந்தபோது, தாவீதின் வம்சத்தை சேர்ந்த ( யூதா) யோசேப்புடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தார்.அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்?புருஷனை அறியேனே என்றாள்.தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.( For nothing is impossible with God) தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.. இறை தூதன் வார்த்தயின்படியே மரியாள், கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக லூக்கா நற்செய்திகுறிப்பிட...

The Star of Bethelehem. கிழக்கித்ய ஞானிகளின் வருகை. மத்தேயு 2: 1-12.ஏசாயா 60:1-6.

Image
 முன்னுரை: கடவுள் தொடக்கத்தில் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்.கடவுள் வானத்திற்கு " விண்ணுலகம்" என்று பெயரிட்டார்.(தொடக்க நூல் 1:8) விண்மீன்களையும் அவர்உருவாக்கினார்.கடவுளின் பெயர்களில் ஒன்று " அதிசயமானவர்' Wonderful God . எனவே வானத்தில் ஆண்டவரின் பிறப்பில் அதிசய நட்சத்திரம் கிழக்கில் தோன்றியது. "இயேசு ஒரு விடிவெள்ளி நட்சத்திரம் "(வெளி 22:16)எனவே அவர் பிறப்பில் அதிசய நட்சத்திரம் கிழக்கில் தோன்றியது. 2. ஏரோது அறன்மனை: ஞானிகள் குறித்து மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஞானிகள்  யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் வானத்தில் தோன்றியதை கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்று ஏரோது அரசனிடத்தில்  கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் கேட்டனர். இதைக் கேட்டதும் மிகவும் கலங்கினான் ஏரோது மன்னன். எருசலேம் முழுவதும் கலக்கம் ஏற்பட்டது. உடனே மறைநூல் அறிஞர்களையும், தலைமை குருக்களையும் அழைத்து மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.  அவர்கள் அவனிடம் யூதேயாவில்( மீகா 5:2)  உள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும் என்றும் இந்த...

Why did the Angel select the Shepherds to inform the birth of Christ.? ஏன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மேய்ப்பர்களுக்கு(இடையர்கள்) அறிவிக்கப்பட்டது. லூக்கா2:8-20..தொடக்கநூல்: 46: 31-34. யோவான் 10:1-42.

Image
முன்னுரை: இஸ்ரவேலரின் குடும்பத் தொழிலே ஆடுகளை மேய்ப்பது. ஆதாமின் மகனான ஆபேல் ஆடுகளை மேய்த்தான் .அவன் ஆண்டவருக்கு பலியும் செலுத்தினான். ஈசாயின் ‌ மகன்களான ஏசா அவன் சகோதரர் யாக்கோபு ஆட்டிடையர்கள். அதிகமாக ஆடுகளைவைத்திருந்தனர்.மோசே,  தாவிது ஆடுகளை மேய்த்தார்கள். தாவீது ஆண்டவனை " கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்" என உறுதியாக கூறுகிறார். ( திருப்பாடல்: 23.)  ஏசையா தீர்க்கர், ஆண்டவரை, "மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசாயா 40:11) எரேமியா தீர்க்கதரிசி இஸ்ரவேலறை ஆடுகளாக  குறிப்பிடுகிறா‌ர்.பல்வேறு தேசங்களளிருந்த இஸ்ரவேலறை ஒன்று சேர்த்திட "ஒரே நாடு, ஒரே மேய்ப்பன்" என்ற சிந்தனையில்  "ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் தூரத்தியிலிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப் பெருகும். அவைகளைமேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள்பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்ல...

ஆண்டவர் வருகிறார் ஆயத்தமாகுக. PREPARATION: THE LORD IS COMING. மீகா:4:1-5. 1 யோவான் 4:7-21. யோவான் 4:21-37.

Image
முன்னுரை: அரசியல் தலைவர்கள்வருகின்றபோதுஎன்னென்னஆயத்தங்கள் செய்கின்றார்கள். கொடி கட்டுகிறார்கள். பேனர் வைக்கிறார்கள். பெரிய பந்தல்கள் போடுகிறார்கள். காவல்துறை பாதுகாப்புகள் கொடுக்கப்படுகின்றன. இசைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். வெடி வெடிக்கிறார்கள்‌. வாழ்க! வாழ்க! என்ற வார்த்தை வின்னை பிளக்கிறது; ஆனால் இறைமைந்தன் இயேசு இவ்வுலகில் வருகின்றபோது வின்னகத்தூதுவர் மட்டுமே கடவுளை வாழ்த்தினர். லூக்கா 2:13,14. 14 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,“உன்னதத்தில் கடவுளுக்குமாட்சி உரித்தாகுக!உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதியும்,மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி,  கடவுளைப் புகழ்ந்தார்கள். வாழ்த்தலுக்குறிய இறைவனுக்கு வாழ்த்துக்கள் இல்லை. ஆண்டவரின் பிறப்பு தாழ்ந்த நிலையில் உள்ள ஆட்டிடையர்களுக்கும், அறிவில் உயர்ந்த வானசாஸ்திரர்களுக்கும் நட்சத்திரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.  ஆட்டிடையர்கள் முதலில் சென்று பிறந்த இயேசுவை வணங்கினர் வாழ்த்தினார். ஆனால் வான சாஸ்திரி களோ யூதருக்கு அரசனான இயேசு ஏரோதூ அரண்மனையில் தான் பிறந்திருக்க வேண்டும் என தவறுதலாக அரண்மனை சென்றனர் இரண்டு ...