படைப்பின் நோக்கத்தை மீறுவதாகும் வீழ்ச்சி. Fall as the Violation of the Purpose of Creation. ஆதி:6:1-13, சங் 32, ரோம 7:4-25, மத்தேயு 7:15-23.

1 முன்னுரை:
ஆதியாகமம் 6:2, 4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை" அதிக சௌந்தரிய முள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்...அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.(Mighty People). (Dear Readers we must remember this concept with the Hindu mythology where they referring God and the Giants always fighting. ) 
இங்கே "தேவகுமாரர்" யார், "இராட்சதர்" யார்?
ஆனால் பைபிளில் எங்குமே தேவதூதர்கள் மனிதர்களை திருமணம் செய்ததாக இல்லை. மிக மிக முக்கியமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு சொல்லும்போது "அவர்கள் தேவதூதர்களைப்போல திருமணம் செய்யாமல் கொள்வனையும் கொடுப்பனையும் இன்றி இருப்பார்கள்" என்று மாற்கு 12:25ல் குறிப்பிட்டுள்ளார். ஆண்டவரின் வார்த்தையை தான் நாம் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். வேதத்தில் கூறப்பட்ட தேவகுமார் அங்கு ஆட்சி செய்த அரசர்களையும், Kings and Princes, ஞானிகளையும் (wisemen) சமுதாயத்தில்  மதிப்புமிக்க மக்களையே குறிக்கும். நீதிமன்றங்களில் நீதிபதியை பார்த்து "My Lord"(என் தேவனே) என்று கூறப்படும் சொல்லாக் கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக அரசர்களை தேவர்களாக கருதும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. மற்றும் சிலர் 1 பேதுரு 3:18-20, 2 பேதுரு 2:4 மற்றும் யூதா 6,7 ஆகிய வசனங்களை கொண்டுவந்து "மனிதர்கள்-தூதர்கள்" கொள்கையை ஆதரிக்கின்றனர். யோபு 1:6 ல் தேவபுத்திரர் என்ற வார்த்தை வருகின்றது; அங்கே அது "தேவ தூதர்கள்" என்று தெளிவாக புரிந்துகொள்ளும்படி உள்ளது. மனிதர்கள் அல்ல.
சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர்":
இந்த பார்வை "தேவகுமாரர்" என்பவர்களை சேத்தின் வம்சவழி என்று அடையாளப்படுத்துகின்றது. ஏனெனில் இவர்கள் தேவனை தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி 4:26). "மனுஷ குமாரத்திகள்" என்பவர்கள் காயீனின் சந்ததி; இவர்கள் தேவபயமில்லாமல் வாழ்ந்தவர்கள். ஆதி 6:2,3 (The Giants)
தேவ புத்திரர்" என்பது  மதிப்புக்குரியவர்களுக்கு மத்தியகிழக்கு பகுதியில் காணப்பட்ட வழக்கச்சொல். இப்படிப்பட்ட அதிகாரப் பெயர் பெறுவதற்கு அவர்கள் மிகவும் உந்தப்பட்டு பேர்பெற்ற வர்களாக (ஆதி 6:4) இருக்க விரும்பினர். இப்படியாக அறியப்படுவதற்கு அவர்கள் எந்த பகுதிகுயில் இருந்தார்களோ அந்த பகுதிக்கு தானே பொறுப்பென்றும் (Territorial kings)அதிகாரி என்றும்  இருந்தனர். மற்றும் 
சங்கீதம் 82:6 (திருப்பாடல்கள்.)
"நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்." என்ற வசனம் இதற்கு சான்றாக அமைகின்றன.கடவுளின் படைப்பின் முக்கிய நோக்கமே மனிதர்களோடு நல்லுறவு கொள்வதாகும்.
2. படைப்பின் வீழ்ச்சி: The Fall of Creation.
கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான்;ஆதாம் வீழ்ச்சி அடைவதற்கு முன்பாக சாத்தான் வீழ்ந்திருக்க வேண்டும்; இல்லையெனில், எதேன் தோட்டத்தில் எந்தவிதமான சோதனையும் இருந்திருக்காது. படைப்பிற்கு முன்பாக பூமியை இருள் (தொடக்கநூல் 1:2) சூழ்ந்திருந்தது. அந்த இருள் கடவுளால் வானத்திலிருந்து தள்ளப்பட்ட பிசாசின் தூதுவன்  லூசுப்பரை குறிக்கும்.அந்த லூசிபரே வேதாகமத்தில் சாத்தான் என்று அழைக் கப்படுகிறான். அவனை பின்பற்றின தூதர்கள் பிசாசுகள்.கடவுளுக்குவிரோதமாய் கலகம் செய்து பிரிந்து சென்ற நாளிலிருந்து சாத்தானும் அவன் பிசாசுகளும் கடவுளுக்குஎதிராக செயல்படுகின்றனர். இவர்களின் செயலால்தான் கடவுளின் உன்னதமான படைப்பாகிய மனிதன் வீழ்ச்ச அடைந்தான்.
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. கடவுள் இந்த பூமியை படைக்கின்ற போது எல்லாம் நல்லது என்று கண்டார். ஆனால் மனிதனின் கீழ்ப்படியாமை பாவ செயல்கள் அவருக்கு மன கஷ்டத்தை கொடுத்தது.
உலகில் மீண்டும் நல்ல மனிதர்களை படைக்க , அனைத்து உயிர்களையும் ; நோவா குடும்பத்பதை தவிர மற்றவர்களை வெள்ளத்தினால் ( flood) அழித்து போட்டார். நோவாவின் வழி வந்தவர்கள் பிற கடவுளை வணங்கவும் விக்கிர கங்களை வழிபடவும் தொடங்கினர். எனவே அவர்களின் பேசும் மொழியை மாற்றி ஒரே இடத்தில் வாழும் தன்மையை அழித்துப் போட்டார். உலகத் தோற்றத்திலிருந்து பாவம் மிகுதியான கால கட்டத்தில் அவர்களை அழித்துப் போட்டார்.கடவுள் மனிதரைப் படைத்த தற்கான மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தாம் மனிதரோடு அன்புறவில் நிலைத்திருப்பது. கடவுள் மனிதரோடு என்றென்றும் அன்புறவோடு இருக்கவும், ஐக்கியம் கொள்ளவும் மனிதரைப் படைத்தார். சாத்தானுடைய தந்திரமான பேச்சினால் ஏமாற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் கடவுளின் வார்த்தையை நம்பாமல், சாத்தானுடைய பேச்சை நம்பி, இறைவனால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டனர். கீழ்படியாமை என்ற பாவத்தில் விழுந்தனர். கடவுளின் மாபெரும் படைப்பின் உன்னத நோக்கத்தை சிதைத்தனர்.



The Fall of Man by Peter Paul Rubens, 1628–29
3.போலி இறைவாக்கினர்:
புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இறுதி நாட்களில் போலி இறைவாக்கினர் பலர் தோன்றுவர் என இயேசு எச்சரித்துள்ளார். போலி இறைவாக்கினர் சாத்தானால் தூண்டப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.
நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.நல்ல  கனி  கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு  போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனம் கண்டுகொள்ளலாம்.
அப்போஸ்த்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் "தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி நாம் கிறிஸ்துவின் சரீரத்தினாலே திருச்சட்டத்துக்கு மரித்தவர்களானீர்கள் என கூறுகிறார்.ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரைதான் திருச்சட்டம் அவனுடைய எஜமானாக இருக்கும்.பாவம் எவ்வளவு கொடியது என்பதைத் திருச்சட்டம்தான் எனக்குக் காட்டியது என கூறுகிறார்.திருச்சட்டம் கடவுளுக்குச் சொந்த மானது. நாமோ பாவத்திற்கு சொந்தமானோம்.நான் விரும்புகிற நல்லதைச் செய்யாமல் விரும்பாத கெட்டதையே செய்துவருகிறேன்.  நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை, எனக்குள் குடியிருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது என கூறுகிறார். இந்த சூழ்நிலையில் தாவிதின் திருப்பாடல்கள்  32:8. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். என இந்தப் பாவ உலகில் நாம் நடக்க வேண்டிய நல்ல வழியில் நடத்த கடவுள் நமக்கு கிருபை செய்கிறார். இவ்வுலகில் துன்மார்க் கனுக்கு அநேக வேதனை களுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
4.படைப்பின் வீழ்ச்சியை சீர்படுத்துவது எவ்வாறு:
படைப்பின் வீழ்ச்சியால் மரணம் உண்டானது. பவுல் கூறுவது போல '"நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலை யாக்குவார்? ரோமர் 7:24)"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாம்ச சரீரத்திலிருந்து வந்து,நமது மாம்ச இச்சைகளுக்கான பாவத்தைத் தம்மீது ஏற்றுக் கொண்டு மரணத்தை உத்திரத்தை, சிலுவைப் பாட்டிணால் சுமந்து தீர்த்து மீட்ப்பை நமக்கு அவரின் உயிர்த்தெழுதலினால் நமக்கு மரணத்திலிருந்து விடுதலையை நித்திய வாழ்விற்கென்று அளித்தார். உயிர்த்தெழுந்த தேவன் அவருடைய பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்து நமது மாம்ச சரீரத்தை ஆவியின் ஆளுகைக்கு உட்படுத்துகிறார். அவரது ஆவியின் ஆளுகைக்கு நமது சரீரத்தை உட்படுத்ததினால், ஆத்தும மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.  1.தீமோத்தேயு 1:15 
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான் என் பவுல் தன்னை தாழ்த்தினார்.இயேசு பாவியை நேசித்து, பாவத்தை வெறுக்கிறார். ஆகவேதான், பாவமறியாத அவர் நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு, நமக்கு பரிசுத்தத்தை அளிக்கும்படி சிலுவையில் பாவமானார் (2 கொரிந்தியர் 5:21). நாம் செய்த பாவத்தினிமித்தம் தேவன் நம்மை தண்டிப்பதில்லை. தேவன் தாம் நேசிக்கிறவர்களை சிட்சிக்கிறார் (எபிரெயர் 12:6) ஆனால் தண்டிப்பதில்லை. உங்கள் வியாதி தேவன் கொடுத்த தண்டனையில்லை. நீங்கள் குணமடைவதே அவருடைய சித்தமாயிருக்கிறது. பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளும்படி அவர் உங்களை தம்மிடத்தில் அழைக்கிறார். படைப்பில் ஏற்பட்ட வீச்சியை சரி செய்ய ஒரே வழி இயேசுவின் நித்திய ஜீவ வழி. இவ்வுலகில் பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் படைத்த ஒரே கடவுள் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து.தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக் கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”( யோவான் 3:16)
தேவன் உலகத்தை படைக்கும் போது தமது வார்த்தையினால் உண்டாக்கினார். ஆனால் மனிதனை தமது வார்த்தையால் உண்டாக்காமல் தமது சாயலாக பூமியின் மண்ணினால் உருவாக்கி தமது சுவாசத்தை கொடுத்தார். நம்மை இரட்சிக்க தனது சொந்த இரத்தத்தை சிந்தி நாம் ஜீவன் பெற தம் உயிரை தந்தார். எனவே இரட்சிப்பு இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் இலவசமாய் கொடுக்கப் படுகிறது.வேதம் கூறுகிறது கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் [ரோமர்:10:9,10]. 
அன்பானவர்களே இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்று இருப் போமானால் வரும் தண்டனைக்கு எப்படி தப்பித்துக் கொள்ளுவோம். சிந்திப்போம் அன்பானவர்களே! நாம் உலகத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தேவனுடைய வருகை மிக சமீபம். அன்பு சகோதரனே, சகோதரியே இன்றே இரட்சணிய நாள்! இன்றே மனந்திரும்பு!இரட்சிக்கப்பட்ட நாமும் இலவசமாய் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை இலவசமாய் பிறருக்கும் அறிவிப்போம். தேவனோடுள்ள இரட்சிப்பின் உறவில் முடிவு பரியந்தம் நிலைத் திருப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் திரளாக ஆசிர்வதிப்பாராக! ஆமேன்.


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.