திருபாடுகளின் ஞாயிறு. சிலுவை சீடத்துவதற்கான புதிய இலக் கணம். (196) 𝗖𝗿𝗼𝘀𝘀: 𝗔 𝗻𝗲𝘄 𝗣𝗮𝗿𝗮𝗱𝗶𝗴𝗺 𝘁𝗼 𝗗𝗶𝘀𝗰𝗶𝗽𝗹𝗲𝘀. தொடக்க நூல்: 26:12-33. திருப்பாடல் 92. 2 கொரிந்தியர் 11:21-31.மாற்கு 10: 46-52
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே லெந்து காலத்தின் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருபாடுகளின் ஞாயிறு. சிலுவை: சீடத்துவதற்கான புதிய இலக்கணம் ". திருப்பாடுகள் என்றால் என்ன? திருப்பாடுகள் என்பது "விவிலிய த்தின்படி இயேசுவின் இவ்வுலக வாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறை வடைகின் றது." சீடத்துவம் என்றால் என்ன? " சீடத்துவம் என்பது, இயேசு கிறித்துவின் மீது நம்பிக்கை வைத்து தன் வாழ்வில் அவரின் போதனைகளை ஏற்றுக் கொள் வதைக் குறிக்கும். இது ஆன்மீக வளர்ச்சியின் அடிப்படைக் கூறு ஆகும். சிலுவை பாடுகளை சுமக்காமல் ஒரு சீடனாக இருக்க முடியாது ". அன்பானவர்களே! கடவுள் நம்மை சீடர்களை உருவா க்குபவர்களாக அழைக்கிறார் (மத் 28:19-20) ஏனென்றால் அவர் நம்மைத் தம்முடைய மகிமைக்கா கப்பயன்படுத்த விரும்புகிறார். சீடர் என்பவர்,கற்பவராகவோ அல்லது மாணவராகவோ மாறு வது" என்று மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது.ஆண்டவரின் சீடர்கள் எல்லாவற்றைய...