இறைவருகையின் காலம் மூன்றாம் ஞாயிறு. III Advent Sunday.அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை. (239) Deliverance From the Grip of fear. யோசுவா 1:1-9, திருப்பாடல் 27.1யோவான் 4: 13-21, மத்தேயு 1:18-25.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் மூன்றாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை".Deliverance From the Grip of fear.
" கவியரசர் கண்ணதாசன்,
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமை யடா,ஆறிலும் சாவு நூறிலும் சாவு,தாயகம் காப்பது கடமை யடா" என அச்சத்தை குறித்து பாடி இருக்கிறார்.
திருவள்ளுவரும்,"அச்ச முடையா ர்க்கு அரணில்லை " என்கிறார்.
ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான "தாமஸ் ஹார்டி. (Thomas Hardy, புதின எழுத்தா ளர் மற்றும் கவிஞர். தன்,' எ லாவோடிசியன்" (A Laodicean) என்ற நாவலில், "பயம் தொலை நோக்கின் தாய்" Fear is the mother of foresight” என்ற மேற் கோளில், பயம் எதிர்கால ஆபத் துகள் அல்லது எதிர்மறையான விளைவுகளைப் பற்றிய கவலை பெரும்பாலும் நம்மை முன்கூட்டி யே திட்டமிடவும், பிரச்சினை களை எதிர்பார்க்கவும், அவற் றைத் தவிர்க்க ஞானத்தை வளர் க்கவும் தூண்டுகிறது, பயத்தை விவேகம் மற்றும் தயார் நிலை க்கு ஒரு ஊக்கியாக மாற்றுகி றது என்கிறார். பயம் எச்சரிக்கை யையும் எதிர்காலத்தைப் பார்ப் பதையும் தூண்டுகிறது, தவறு களைத் தடுக்கிறது அல்லது தயார்நிலையை உறுதி செய்கி றது.இந்த வழியில், "பயம் ஒரு மதிப்புமிக்க ஆசிரியராக இருக்கிறது." Fear is a valuable Teacher. ஆனால்,அதிகப்படியான பயம் முன்னேற்றத்தைத் தடுக் கலாம், வளர்ச்சியைக் கட்டுப்படு த்தலாம், திறனைத் தடுக்கவோ அனுமதிப்பதற்குப் பதிலாக, அதை ஒரு வழிகாட்டியாகப் பய ன்படுத்தி, பகுத்தறிவு மற்றும் அளவிடப்பட்ட மனநிலையுடன் அணுகுவது மிகவும் முக்கியம்.
திருத்தூதர் பவுல் அடிகளார் திமோத்தேயுவிற்கு எழுதுகின்ற போது,2.தீமோத்தேயு 1:7: "கடவுள் நமக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை,மாறாகசக்தி, அன்பு மற்றும் தெளிந்த மனதை க் கொடுத்துள்ளார்".
பயம் என்பது உளவியல் ரீதியா ன உணர்வு.அது ஒரு ஆவி. கடவுள் நமக்கு இருக்க வேண் டும் என்று விரும்பும் அமைதி , மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை க்கு எதிராக செயல்படும் ஒரு இருண்ட ஆவி . பயம் என்பது எதிரியால், பிசாசால் பயன்படுத் தப்படும் ஒரு சக்திவாய்ந்த ஆயு தமாகும்.
கடவுள் பயத்தை வெறுக்கிறார்! அதனால்தான் "பயப்படாதே" என்ற சொற்றொடர் திருவிவலி யத்தில் சுமார் 365 முறை பல் வேறு வடிவங்களில் வருகிறது - அவை வருடத்தின் ஒவ்வொரு நாளுக்குமான ஒரு மாத்திரை!
1.தலைவர்கள் மாறலாம் ஆனால் கடவுளின் திட்டம் மாறாது.Leaders may change, but God's plan never changes. யோசுவா1:1-9.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இஸ்ரவேலர்களின் விடுத லை பயணத்தில் கடவுள்மோசை மூலமாக வழிநடத்தினார் மோசே மரித்த பிறகு அந்த மாபெரும் பணியை யோசுவா என்ற ராணு வ தளபதிக்கு இந்த மாபெரும் பொறுப்பை கொடுத்தார். தலைமை மாற்றம் Transition of Leadership தவிர்க்க முடியாதது.
தேவனுடைய வேலைக்காரர்கள் மாறினாலும், தேவனுடைய திட்டம் மாறாது, அவர் தம் உன்ன த பணிக்காக புதிய தலைவரை த் தேர்ந்தெடுத்து வழி நடத்து வார்.கடவுளின் திட்டங்கள் நிறை வேற தகுதியானவரை தகுந்த நேரத்தில் தேர்ந்தெடுப்பது அவருடைய தீர்மானமாய் இருக் கிறது. நம்முடைய திருச்சபை களும் அவ்வாறே இயங்குகின் றன.அவ்வாறே யோசுவாவும் அப்பணிக்கு தேர்வு செய்யப்படு கிறார்.மோசேவின்ஆணைப்படி, யோசுவா அமலேக்கியரை வெற் றி கொண்டார் என்பதை Exodus விடுதலை பயணம்:17:8,9ல் காண்கிறோம். அடுத்து அவர்
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தி ற்குள் இஸ்ரவேலர் நுழைவதற் கு முன்பு கானானுக்கு அனுப்பப் பட்ட 12 வேவுகாரர்களின் குழுவின் தலைவராக யோசுவா இருந்தார் ( எண்ணாகமம் 13:4-16 ).என காண்கிறோம்.
வனாந்தர ஆண்டுகளில் 40 வருடங்கள் தப்பிப்பிழைத்து கானானுக்குள் நுழைய எகிப் தை விட்டு வெளியேறிய தலை முறையில் யோசுவாவும் காலேப்பும் மட்டுமே வயது வந்த இஸ்ரவேலர் ( எண்ணா கமம் 14:30 ) யோசவா தலைமை தாங்க இந்த தகுதிகளே போது மானது.
வாக்குத்தத்த தேசத்தின் எல்லை யாக (Promise of the Land) கடவுள் யோசுவாவுக்கு இஸ்ரயேலின் முழு தேசத்தையும் தருவதாக உறுதிப்படுத்துகிறார், அதன் எல்லைகள் குறிப்பிடப்படுகின் றன (நைல் நதி முதல் யூப்ரடீஸ் வரை).அதற்குதேவை,"வலிமை யாகவும் தைரியமாகவும் இரு" (Be Strong and Courageous) என்ற
வார்த்தை. யோசவாவிற்கு தேவை மூன்று செயல்கள்.
1. தேசத்தைக் கைப்பற்ற தைரியம்,
2.மோசேயின் திருச்சட்டங்களை கடைப்பிடிக்க தைரியம்.
3.பயப்படாமல் இருக்க தைரியம்.
இது அவருக்கு கடவுள் எப்போ தும் யோசுவாவுடன் இருப்பார், அவரது ஒவ்வொரு அடியிலும் துணை நிற்பார். இதுவே அவரது வலிமையின் ஆதாரம்.பகலிலும் இரவிலும் கடவுடைய திருச்சட்ட த்தை தியானித்து, அதன்படி நடப்பது வெற்றியைக் கொண்டு வரும் என்ற உறுதிபாடு
இன்றைய கிறிஸ்தவர்களுக்குப் பாடம் (Lesson for Today) என்பதை
நினைவில் கொள்வோம்.
கோட்டை நிறைந்த பட்டிணமான
எரிகோ Jericho யோசுவாவிற்கு ஒரு சவாலாக இருந்தது எக்கா ள சத்தத்தில் அதன் சுவர்கள் இடிந்து விழும் என்ற வாக்கின் படி வென்ற நாடாகும். அதற்கு அடுத்து ஆயி Ai பட்டிணம். இவைகள் கானானிற்கு செல்ல தடையாக இருந்தது. "நான் உன்னை விட்டு விலகுவதுமி ல்லை, உன்னைக் கைவிடுவ துமில்லை" (I will not fail thee, nor forsake thee) என்ற உறுதியான வாக்குறுதியை தேவன் அளிக் கிறார். இது யோசுவாவின் மிகப்பெரிய பயத்தைப் போக் குகிறது.நாமும் பெரிய சவால் களை எதிர்கொள்ளும் போது, கடவுளின் பிரசன்னத்தையும், வார்த்தையையும் நம்பி, தைரி யமாக முன்னேற வேண்டும். பயம் ஏற்படும்போது, கடவுளின் வார்த்தைகளைத் தியானிப்பது ம், அவற்றின்படி நடப்பதும் நமக் கு வலிமையையும், மன உறுதி யையும் தரும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நினை வில் கொள்வது, எந்த சூழ்நிலை யிலும் தைரியமாக இருக்க உதவுகிறது. கடவுள், "பயப்படா தே, திடமனதாயிரு" என்று யோசுவாவுக்குப் பலமுறை வலியுறுத்துகிறார்.
கானான் தேசத்தை இஸ்ரயே லுக்குக் கொடுப்பதாக தேவன் மீண்டும் உறுதியளிக்கிறார். மோசேயின் காலத்தில் கொடுத் ததுபோல, யோசுவாவின் காலத் திலும், காலடி வைக்கும் ஒவ் வொரு இடத்திலும் தேவன்அவர் களைக் காப்பார். கானான் என்ற நாடு நவீன கால பாலஸ் தீனம் மற்றும் இஸ்ரேலை உள்ளடக்கி ய இந்த முழுப் பகுதியும், யோசு வாவின் தலைமையின் இறுதி இலக்காக இருந்தது,
அன்பானவர்களே!
புதிய ஏற்பாட்டு காலத்தின் கிரேக்க மொழியில் யோசுவா என்ற எபிரேயப் பெயர் "இயேசு" என்று மொழிபெயர்க்கப்பட்டு ள்ளது. கானான் என்ற வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தில் இஸ்ர வேலர் எதைப் பெற்றாலும், அவர்கள் யோசுவாவின் கையி ன் மூலம் பெற்றார்கள்; அவ் வாறே, புதிய உடன்படிக்கையில் விசுவாசிகள் கடவுளிடமிருந்து எதைப் பெறுகிறார்களோ அது இயேசு கிறிஸ்துவின் மூலம் பெறப்படுகிறது, இயேசுவே, நமது யோசுவா...
2..பயத்திலிருந்து விடுவிக் கும் அன்பு.Love that frees from fear. 1யோவான் 4: 13-21
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுள் நம்மோடு இருக்கி றார் என்றால் நாமும் கடவுளோடு இருக்கிறோம்.கடவுளுக்குள் நாம் நிலைத்திருக்கிறோம், அவர் நமக்குள்ளே நிலைத்திருக் கிறார் என்பதை அறிவதற்கான ஆதாரம், அவர் நமக்குக் கொடுத் த பரிசுத்த ஆவியே. அவரே நம்மில் வாசம் செய்கிறார் அவர் நம்மில் வாசம் செய்கின்ற பொழுது நாம் மற்றவர்களை நேசிப்போம்.
அன்பில் பயம் இல்லை; பூரண அன்பு பயத்தை நீக்குகிறது. நாம் கடவுளின் அன்பில் வாழும்போ து, அவர் நம்மில் இருக்கிறார், முதன் முதலில் நம் மீது அன்பு செலுத்தியவர் கடவுள் தான். நாம் அவரில் இருக்கிறோம், அதனால் நியாயத்தீர்ப்பு நாளில் நமக்கு பயம் இருக்காது.கடவுள் முதலில் நம்மைநேசித்தபடியால், நாமும் அவரை நேசிக்கிறோம். நாம் கடவுளை நேசித்தால், அவர் நமக்குக் கொடுத்த கட்டளைக ளைக் கடைப்பிடிப்போம். கடவுளை நேசிக்கிறோம் என்று சொல்லி, தன் சகோதரனை வெறுப்பவன் பொய்யன். ஏனெ னில், காணுகிற சகோதரனை நேசிக்காதவன், காணாத கடவு ளை நேசிக்க முடியாது.
கடவுள் நம்மில் நிலைத்திருக்க, நாம் கடவுளை நேசிப்பதோடு, சகோதரனையும், மற்றவர் களையும் நேசிக்க வேண்டும். உண்மையான விசுவாசத்தின் அடையாளம், கடவுளின் அன்பை பெற்று, அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதே என திருத் தூதர் யோவான் விளக்குகிறா ர்.நாம் பாவிகளாக இருந்தபோ தே அவர் நம்மை நேசித்தார். இறையியளாளர் ஸ்பர்ஜன் “இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் கடவுளை நேசிப்பவ னாக அல்ல, மாறாக ஒரு பாவி யாக கடவுளிடம் வர வேண்டும், பின்னர் ஒரு பாவியாக கடவுள் அவரிடம் காட்டிய அன்பை நம்ப வேண்டும்.” என்கிறார்.
3. பயத்திலிருந்து விடுவிக் கும் தூய ஆவி.The Holyspirit that frees from fear. மத்தேயு 1:18-25.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!மத்தேயுவின் நற்செய்தி இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடங்குகிறது, இது கடவுளின் புதிய படைப்பு மற்றும் மேசியா வின் யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இயேசுவின் தெய் வீக பிறப்பை விளக்குவதோடு மட்டுமல்லாமல், கடவுளின் அன் பின் மகத்துவத்தையும், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவில் எவ்வாறு நிறை வேறுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அது இயேசுவை யூதர்களின் மேசியா (மீட்பர்) ஆகவும், பழைய ஏற்பாட் டுத் தீர்க்கதரிசனங்களின் நிறை வாகவும் காட்டுகிறது;
இந்த நிகழ்வு ஏசாயா 7:14ன்படி, "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள் வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரி டுவார். என்ற தீர்க்கதரிசனத்தை நிறை வேற்றுகிறது. இயேசு "இம்மானுவேல்" (தேவன் நம்மோடு இருக்கிறார்) என்று அழைக்கப்படுவது, கடவுளின் திட்டத்தின் மையக் கருத்தாகும்.
அக்கால யூதச் சமூகத்தில் பெண்களுக்குக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட் டது; சில சமயங்களில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பெண் களின் முக்கியப் பணி வீட்டை நிர்வகித்தல், சமையல் செய்தல், குடும்பத்தைப் பராமரித்தல் ஆகியவை ஆகும்.அவர்களுக் குக் குறைந்த கல்வியே கிடைத் தது, ஆனால் மதச் சட்டத்தின்படி அடிப்படை கல்வியும் வழங்கப் பட்டது; அப்படிப்பட்ட சூழலில்,
கடவுள் மிகவும் சாதாரணமான, பாரம்பரியமாக மதிக்கப்படாத நபர்களின் (மரியாள்) வாழ்விலு ம்கூடத் தம்முடைய நோக்கங்க ளை நிறைவேற்றுகிறார், இது கடவுளின் அன்பின் எல்லைய ற்ற தன்மையைக் காட்டுகிறது.
யோசேப்புக்குக் கிடைத்த கனவு வெளிப்பாடு, இயேசுவின் பிறப் பின் தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. யோசேப்பு அவளை இரகசியமாக நீக்க நினைத்தார், ஆனால் தேவதூத னின் வார்த்தை அவனது நம்பிக் கையை மாற்றியது.
யோசேப்பு அந்த தேவதூதனின் வார்த்தையை நம்பி, மரியாளை யைத் திருமணம் செய்துகொள் கிறார், இது கடவுளின் சித்தத் திற்கு அவன் கீழ்ப்படிந்ததைக் காட்டுகிறது.இயேசுவின் தெய் வீக தன்மையையும், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்க ளின் நிறைவையும் இது காட்டு கிறது.
அன்பர்களே! இறைவருகையின் காலத்தில் இருக்கின்ற நாம்
கிறித்து பிறப்பின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி நம்மில் நிளை
த்திட ஆண்டவர் அருள்புரிவா ராக.ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.
Note: The sermon has been prepared to deliver at CSI Alison Cassie Memorial Church, Chengalpet on 14/12/2025.
Comments
Post a Comment