புனித திங்கள். சமநோக்கு நற்செய்தி நூல்களில் சிலுவை. (262)The Cross in the Synoptic Gospels.மத்தேயு 27:59-68

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித திங்கள் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது
"சமநோக்கு நற்செய்தி நூல்க ளில் சிலுவை" 
சமநோக்கு நற்செய்தி நூல்கள் யாவை? What are the
Synoptic Gospels?
நண்பர்களே சமநோக்கு நற்செய் தி நூல்கள் என்பது மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய் திகளை குறிக்கும்.
சினோப்டிக்" (Synoptic) என்ற வார்த்தை, "ஒன்றாகக் காணு தல்" அல்லது "ஒரே பார்வை யில் பார்த்தல்" என்று பொருள் படும் (synoptikos ("seeing togeth er"),  கிரேக்க வார்த்தையிலிரு ந்து வந்தது.இந்த மூன்று நூல் களும் இயேசுவின் கலிலேய ஊழியம், அற்புதங்கள், உவமை கள் மற்றும் எருசலேம் பயணம், சிலுவை மரணம், உயிர்த்தெழுத ல் ஆகியவற்றை ஒத்த வரிசையி லும், சில இடங்களில் ஒரே வார் த்தைகளுடனும் பதிவு செய்துள் ளன. 
நான்காவது நற்செயிதியான யோவான், மற்ற மூன்றிலிருந் தும் மாறுபட்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மை மற்றும் நீண்ட உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அது ஒத்த நற்செய்திகளில் சேர்க்கப்படவில்லை. 
1.புனித மத்தேயு நற்செய்தி யாளரின் பார்வையில் சிலுவை. St.Matthew's perspective view on the Cross.
அன்பர்களே! புனித மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவின் சிலுவைப்பாடுகளை ஒரு மீட்பி ன் நிகழ்வாகவும், இறைவாக்கு களின் நிறைவாகவும் சித்தரிக் கிறார்.The Cross is the instrument of Redumption as well as the fulfillment of Prophecies.
சிலுவை  கெட்டு போகிறவர் களின் கேலி சித்திரம்.
இயேசு சிலுவையில் தொங்கும் போது, கடந்து போவோர், தலை மைக்குருக்கள், மறைநூல் அறி ஞர்கள் மற்றும் ,பொதுமக்கள், "நீ இறைமகனானால் சிலுவையிலி ருந்து இறங்கி வா" என்று கேலி செய்தனர்.சிரேன ஊரானாகிய சீமோன் சிலுவையைச் சுமத்தலை (மத்தேயு 27:32),பதிவு செய்கிறார். அதன்பின் அவரு டைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவை களில் அறைந்தார்கள். அவரது தலைக்கு மேல் அவரது மரண தண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் "இவன் யூதரின் அரசனாகிய இயேசு" என்று எழுதப்பட்டிரு ந்தது. 
இயேசுவின் ஆடைகள் சீட்டுப் போட்டுப் பங்கிடப்பட்டதை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்தே யு 27:35), இது  திருப்பாடல்(சங்கீ தங்களில்) கூறப்பட்ட பழைய ஏற்பாட்டு இறைவாக்கின் நிறை வேற்றமாகக் காட்டப்படுகிறது.
மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவி ட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தினார். 
இயேசு உயிர்விட்டபோது, எருச லேம் கோவிலின் திரை மேலி ருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது, பூமி அதிர்ந்தது, பாறைகள் பிளந்தன, கல்லறை கள் திறந்தன. இது இயேசுவின் மரணம் இறைவனுக்கும் மனித னுக்கும் இடையிலான உறவை மாற்றியதைக் குறிக்கிறது.
இயேசுவின் இறப்பின்போது நடந்த அதிசயங்களைக் கண்டு, நூற்றுவரும் அவருடன் காவல் காத்தோரும், "இவர் உண்மையா கவே இறைமகன்" என்று அறிக் கையிட்டனர்.  (மத்தேயு 27:54): 
மத்தேயு நற்செய்தி, சிலுவையை ஒரு தோல்வியாகக் காட்டாமல், இயேசுவின் அரசத்துவத்தின் உச்சக்கட்டமாகவும், மனிதகுல மீட்பின் பலியாகவும் பதிவு செய்கிறது. 
2.புனித மாற்கு நற்செய்தியா ளரின் பார்வையில் சிலுவை. St.Mark's perspective view on the Cross.
அன்பர்களே!மாற்கு நற்செய்தி, இயேசுவின் சிலுவையை ஒரு தோல்வியாகக் காட்டாமல், மீட்பின் பாதையாகவும், மகிமை யின் தொடக்கமாகவும் சித்தரிக் கிறது.மாற்கு நற்செய்தியில் இயேசுவின் சிலுவை மரணம் (அதிகாரம் 15) முக்கிய பங்கு வகிக்கிறது, இது துன்பப்படும் ஊழியராகிய இயேசுவின் தியாகத்தையும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியையும் வெளிப்படுத் துகிறது.இயேசு மரித்தபோது, தேவாலயத் திரைச்சீலை இரண் டாகக் கிழிந்தது, இது கடவுளுக் கும் மனிதனுக்கும் இடையிலா ன தடை நீங்கியதைக் குறிக்கிற து. மத்தேயு பதிவிட்ட அனைத் தும் மாற்கு நற்செய்தியாளர்
குறிப்பிடுகிறார்.
3.புனித லூக்கா நற்செய்தி யாளரின் பார்வையில் சிலுவை. St.,Luke's perspective view on the Cross.
அன்பர்களே! லூக்கா தனது நற்செய்தியில், இயேசுவின் மரணம் பாவங்களை மன்னிக் கவும், மனிதகுலத்தை மீட்கவும் நிகழ்ந்த ஒரு தியாக நிகழ்வாக வே சித்தரித்துள்ளார்.
இயேசு சிலுவையில் ,"தந்தை யே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக் குத் தெரியவில்லை" என்று சொன்னார்.
கல்வாரியில் இயேசுவின் சிலு வையுடன் (மீட்பின் சிலுவை) இரு திருடர்களின் சிலுவைக ளும் ஒன்று நிராகரிப்பு மற்றொ ன்று மனம் திரும்புதல் இடம் பெற்றுள்ளன.
இந்த மனம் திரும்பிய திருடன் இயேசுவை அரசராக ஏற்றுக் கொண்டு,  "இயேசுவே, நீர் ஆட்சி யுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். 
அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியா க உமக்குச் சொல்கிறேன்" இயேசு வழியில் அழுத பெண்க ளிடம் தமக்காக அல்ல, தமக்காக வும் பிள்ளைகளுக்காகவும் அழச் சொன்னார். என்றார். ஏறக்குறைய நண்பகல் பன்னிர ண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. இயேசு வின் கடைசி வார்த்தை,
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். 
பிலாத்து இயேசுவில் எந்தக் குற்றமும் காணவில்லை என மூன்று முறை கூறினார். 
சிலுவையை சுமப்பதே சீடத்துவ ம் என்ற அடிப்படையில் மூன்று
நற்செய்தியாளரும் வலியுருத் தும்,", "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக்கொண்டு என் னைப் பின்பற்றட்டும். 
(லூக்கா நற்செய்தி 9:23)
சிலுவை, மனித இனத்திற்கான
மீட்பின் பரிசாகும்.
எருசலேம் தேவாலயத்தின்திரை ச்சீலை இரண்டாக பிளந்தது மீட்டிற்கு தடையாய் இருந்தவை கள் உடைக்கப்பட்டன, சிலுவையின் மீட்பு அனைவருக் குமாக திறக்கப்பட்டது. சிலுவை
யின் பாடு, கிறித்துவின் கீழ்படி தலை, மானிட மக்கள்மீதமான
அன்பை வெளிப்படுத்துகிறது.
இறுதியில், இரட்சிப்பிற்கு வழி
காட்டுகிறது.
திருத்தூதர் பவுல் அடிகளார் "சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. (1 கொரிந்தியர் 1:18)
இந்த, புனித திங்களின் சிலுவை
பாடு நமக்கே என ஆண்டவர்
அருள் புரிவாராக, ஆமேன்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..


Note: The sermon has been prepared
to deliver at CSI Rev.Adam's Memorial Church, Ambedcar Nagar,
Chengalpet, on 30/03/2026.






Crucifixion, seen from the Cross by James Tissot, c. 1890


 
  
.


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80