புனித புதன். பவுலின் கடிதங்களில் சிலுவை.(264) The Cross in the Pauline Epistles கொலேசையர் 2:9-15.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித புதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"பவுலின் கடிதங்களில் சிலுவை.The Cross in the Pauline Epistles"
அன்பானவர்களே திருத்தூதர் பவுல் அடிகளார் தனது அனைத்து திருமுகங்களிலும் சிலுவையை( "cross" (stauros) குறித்து மிக அதிகமாக 10 /20 முறைக்கு  மேலாக எழுதி இருக் கிறார், இவர் தான்.  நற்செய்தி நூல்களை காட்டிலும் சிலுவை யின் மகிமையை அதிகமாக எழுதி இருக்கின்றார் திருத்தூ தர் பவுல் அடிகளார்.பவுலின் கடிதங்கள் நற்செய்தி நூல்களு க்கு முன்பே எழுதப்பட்ட, கிறிஸ்த வ நம்பிக்கையின் அடித்தளமா ன வரலாற்று ஆவணங்களாகும்
பவுளின் திருமுகங்கள் Epistles) எனப்படுபவை, புதிய ஏற்பாட்டில் திருத்தூதர் பவுல் அடிகளார் ஆதி கிறிஸ்தவ சபைகளுக்கும், தலைவர்களுக்கும் எழுதிய 13 நிருபங்களாகும். கி.பி. 51-64 க்கு இடையில் எழுதப்பட்டவைகள்.
கொலோசெயர் 2:9-15-ல், கிறிஸ்துவில் தேவத்தன்மை முழுமையாகவும் சரீரப்பிரகார மாகவும் வாசம் செய்கிறது, அவரில் விசுவாசிகள் பூரணமாக் கப்படுகிறார்கள் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
இது கள்ள உபதேசங்களுக்கு எதிரான தீர்க்கமான பதிலாகும். விசுவாசிகள் கிறிஸ்துவுடன் திருமுழுக்கில் அடக்கம் பண்ண ப்பட்டு, பாவத்திலிருந்து எழுப் பப்பட்டு, அவரோடு உயிர்த்தெ ழுவதைக் குறிக்கும் அடையாள ம். சிலுவையில் நம் கடனைப் போக்கி, சாத்தானின் சக்திகளை வென்றதாகக் கூறுகிறார். 
கிறிஸ்து சிலுவையில் சாத்தான் மற்றும் அதிகாரங்களை நிரா யுதபாணியாக்கி (disarmed), பகிரங்கமாகத் தண்டித்து, அவர்கள் மீது வெற்றிகொண் டார். 
1.உந்தன் சிலுவை எந்தன் மேன்மை:Your Cross is my honour.
நண்பர்களே திருத்தூதர் பவுல் அடிகளார் கிறிஸ்துவின் சிலு வையே எந்தன் மேன்மை என்கி றார் இந்த உலகில் கிறிஸ்துவி ன் சிலுவை குறித்து அல்லாமல் வேறு ஒன்றும் குறித்து நான் மேன்மை பாராட்ட மாட்டேன் என்கிறார்.
தவறான போதனைகளால் தவித்துக் கொண்டிருந்த கலாத் திய சமூகத்திற்கு பவுல் எழுதிய உணர்ச்சிப்பூர்வமான வார்த் தைகளாக கலாத்தியர் திருமுகம் விளங்குகிறது. இந்த நிருபம் கிறிஸ்தவ விசுவாசத்தின் மகா சாசனம் The Creed of the Christian Faith or the Magna Carta of the Christian faith என்றும் அழைக் கப்படுகிறது
கலாத்தியர் திருமுகத்தில் 6:14-ல், நானோ நம் ஆண்டவர்இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது. உலகைப் பொறு த்தவரையில் நானும் சிலுவை யில் அறையப்பட்டிருக்கிறேன். 
என்கிறார்.இனி வாழ்வது நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்" என சிலுவையை
மேன்மை படுத்தினார்.
2. பவுலின் திருமுகத்தில் சிலுவை என்றால் என்ன? What is Cross on Paul's letters?
அன்பர்களே திருத்தூதர் பவுல் அடிகளார்,"சிலுவை  என்பது வெறும் மரணக் கருவி அல்ல, அது கடவுளின் மீட்புத் திட்டம், வல்லமை மற்றும் புதிய படைப் பின் மையப்பொருள். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் செய்தியே பவுலி ன் போதனைகளின் அடிப்படை. 
ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்ப ற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சி லுவை யூதருக்குத் தடைக்கல்லா கவும் பிற இனத்தாருக்கு மடமை யாயும்  இருக்கிறது என்கிறார்.
தனது நற்செய்திப் பிரசங்கத்தி ன் மையமாக, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை (Christ Crucified) முன்னிறுத்திய தைக் குறிக்கிறது.சிலுவை பாவ மன்னிப்பு, மீட்பு மற்றும் கடவுளி ன் வல்லமையின் அடையாள மாக பவுலால் பார்க்கப்பட்டது.
பவுலின் போதனையில்,சிலுவை என்பது அவமானம் அல்ல, மாறாக உலகத்தின் மதிப்பீடுக ளை மாற்றி அமைக்கும் கடவுளி ன் ஞானம் மற்றும் வல்லமையா கும். பவுலின் சிலுவை பற்றிய முக்கிய அம்சங்களின் மையச் செய்தி, "நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினை க்கவில்லை. (1 கொரிந்தியர் 2:2)
என்பது பவுலின் உறுதியான நிலைப்பாடு.சிலுவை என்பது பவுலின் கோட்பாடு மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கை முறை. கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, கிறிஸ்து தனக் குள் பிழைத்திருக்கும் வாழ்க்கை யை அவர் வாழ்ந்தார் (கலாத்தியர் 2:20). 
3.பவுலின் நிருபங்களில் சிலுவை.Cross is on Paul's Epistles.
அன்பர்களே! திருத்தூசர் பவுல்
அடிகளாருக்கு சிலுவைஎன்பது வெறும் மரணச் சின்னமல்ல, அது தேவனுடைய மீட்பின் வல்லமை.சிலுவையில் இயேசு செய்த தியாகத்தை விசுவாசிப்ப தன் மூலம் மட்டுமே மீட்பு கிடைக் கும் என்பதைவலியுறுத்துகிறது.
கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னி ப்புப் பெறுகிறோம். (எபேசியர் 1:7) சிலுவையில் சிந்திய ரத்தம் ஒன்றே நம்மை மீட்கும் என்பதை உறுதிப்படுத்துகிறார்.சிலுவை, தேவனுடைய கிருபையின் உச்ச க்கட்ட வெளிப்பாடு என்கிறார்.
பவுல் இயேசு கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் அறையப்பட் டதையும் மட்டுமே பிரசங்கிக்க விரும்பினார் (1 கொரிந்தியர் 2:2). எனவே,
நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வா று பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். (உரோமையர் 6:6)
அன்பர்களே!
சிலுவை மனிதப் பெருமையை நீக்கி, மேன்மை அமைப்புகளைத் தகர்த்து, கிறிஸ்துவின் தியாக அன்பில் நமது அடையாளத்தை மையப்படுத்துகிறது.சிலுவையைத் தவிர வேறு எதிலும் பெருமை கொள்ளாமல், கிறிஸ்துவில் ஐக்கியப்பட்டு, புதிய படைப்பின் தூதுவர்களாக வாழ நம்மை  இந்த புனித புதன் அழைக்கிறது.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..



 


 .


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80