Lent: VIth Friday. உடைக்கப்பட்டோருக்காக உடைக்கப்படும் ஆண்டவர்.The Lord is broken for the broken.(260) ஏசாயா: 52:13-53:12
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 6ஆம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"உடைக்கப்பட்டோருக்காக உடைக்கப் படும் ஆண்டவர்" என்ற தலைப் பாகும்.
யார் உடைக்கப்பட்டோர்? Who are the Broken?
அன்பர்களே! உடைக்கப்பட்டோர்
என்பவர்கள் உலக புகழ்பெற்ற
நற்செய்தியாளர் பில்லி கிர ஹாம் கூற்றுப்படி,"பாவத்தி
னால் கடவுளிடமிருந்து பிரிக் கப் பட்டவர்களே" உடைக் கப்பட்டோர் என்கிறார். இறையியலாளர் வில்லியம் பார்க்ளே அவர்கள், "உடைக்க ப்பட்டவர்கள் சமூக அந்தஸ்து, அதிகாரம், பணம் இல்லாதவர் கள். அவர்கள் ஏழைகள், நலிவ டைந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர் கள், ஓரங்கட்டப்பட்டவர்கள். அவர்கள் குரலற்ற மக்கள். அவர்கள் எதையும் கட்டுப்படுத்து வதில்லை," இவர்களே உடைக் கப்பட்டோர் என்கிறார்,
ஆனால், இத்தகைய எளிய மக்களுக்கே விண்ணரசு என ஆண்டவர் கூறுவதை உணர்த்து
கிறார்." ஏழையரின் உள்ளத்தோ ர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரி யது. (மத்தேயு நற்செய்தி 5:3).
ஆண்டவர் இத்தகைய உடைக்க ப்பட்ட மக்களுக்காகவே உடைக்
கப்பட்டார்.
நண்பர்களே! ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இஸ்ரவேலர் பாலை
நிலத்தில் கடவுளின் உடன்படிக் கையை மீறினார்கள் மோசேவி னால் கற்பலகை உடைக்கப்பட் டது, கர்த்தர், இனி ஒருபோதும் உடைக்கப்படாத நித்திய உடன் படிக்கையாக புதிய உடன்படிக் கையை ஏற்படுத்தினார். அதற் குச் சாட்சியாக கிறிஸ்துவையே ஏகபலியாக்கவும் சித்தங்கொ ண்டார். இஸ்ரவேலினால் நிறைவேற்றத் தவறிய பழைய உடன்படிக்கையை, கிறிஸ்து வின் இரத்தத்தால் உண்டான புதிய உடன்படிக்கை நிறைவேற் றியது. பழைய உடன் படிக்கை எதைச் சுட்டிக் காட்டியதோ அது கிறிஸ்துவில் நிறை வேறியது. இதற்காக நாம் அல்ல; கிறிஸ்துவே உடைக்கப்பட்டார் என்பதை நாம் நினைத்துப் பார்க் கவேண்டும்.. அன்று இஸ்ரவேல், கர்த்தர் செய்த மகா அடையாள ங்களைக் கண்டும் உடன் படிக் கையை உடைத்தெறிந்தனர். இன்று கிறிஸ்துவின் மகாபலி யை நாம் அறிந்தும், அதனாலு ண்டான மீட்பை அனுபவித்தும், நமது இருதயத்தில் நாம் உடை வதை விடுத்து, அப்படியென் றால், "கடவுளுடைய மகனையே காலால் மிதித்தவர், தம்மைத் தூய்மைப்படுத் திய உடன்படிக் கையின் இரத்தத்தையே தீட்டு என்று கருதியவர், அருள்தரும் ஆவியாரையே பழித்தவர் எத்து ணைக் கொடிய தண்டனையைப் பெற வேண்டியவர் என்பதை எண்ணிப்பாருங்கள். (எபிரேயர் 10:29) என்பதை இந்த லெந்து காலத்தில் சிந்திக்க அழைக்க ப்படுகிறோம்.
1.உடைக்கப்படும் ஆண்டவர்.
The Lord is broken.ஏசாயா 52:13.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! இறைவாக்கினர் ஏசாயா 52:13 நான்காவதும் இறுதியு மான ஊழியப் பாடல் இப்பகு தியாகும்.ஏசாயா 52:13-53:12 இது பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட யூதாவின் மக்களுக்கு நம்பிக் கை தரும் பாடல், கடவுள் அவர் களைக் கைவிடவில்லை என்று அவர்களுக்கு உறுதியளிக்கிற து. அவர்களுக்கு அடிமைத்தனத் திலிருந்தும் பாவமன்னிப்பும் இரட்சிப்பும் உண்டு என்பதை முன்னறிவிக்கிறது.மனிதகுலத்தின் பாவங்களுக்காகத் தியாக மாகத் "துன்பப்படும்ஊழியனை" (Suffering Servant) இயேசுவை முன்னறிவிக்கிறது.இயேசு கிறி ஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் மீட்பின் உறுதியை கிறித்து பிறப்பதற்கு முன்பே,700 ஆண்டுகளுக்கு முன்பே இறை வாக்காக உரைக்கிறது.இந்த ஊழியர் (இயேசு) நிராகரிக்கப் பட்டு, வேதனையை அனுபவித் து, இறுதியில் உயர்வடைவார், இதன் மூலம் பலரை நீதிமானாக் குவார்.
துன்பப்படும் ஊழியன் இயேசு கிறிஸ்துவே இஸ்ரவேலின் பாவங்களை மட்டுமல்ல, உலகத் தின் பாவங்களையும் சுமந்தார்.
அவர் புறக்கணிக்கப்பட்டு, துக்க ம் நிறைந்த மனிதராக, மனித உருவம் சிதைக்கப்படும் அளவு க்கு அடித்து துன்புறுத்தப் பட் டார். உடைக்கப்பட்டார்.
"அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல் களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர் தம் காயங்களால் நாம் குணம டைகின்றோம். (எசாயா 53:5) அவர் மீது சுமத்தப்பட்ட தண்ட னை நமக்குச் சமாதானத்தைக் கொண்டுவந்தது.அவர் ஒடுக்கப் பட்டார்; சிறுமைப்படுத்தப்பட் டார்; ஆயினும், அவர் தம் வாயை த் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும் உரோமம் கத்தரிப் போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
(எசாயா 53:7)திருத்தூதர் பேதுரு அவர்கள் பின்னர் இயேசுவைப் பற்றி எழுதினார்:“பழிக்கப்பட்ட
போது பதிலுக்குப் பழிக்கவில் லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமா கத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். (1 பேது ரு 2:23)
இது விந்தையான செயல், யூதர்
கள் கண்ணுக்கு கண் பல்லுக் குப் பல் என்ற சட்டத்தை பின்பற் றும் நிலையில், இந்த யூத இராச சிங்கம் தன்னை காத்துகொள்ள ஒன்றும் செய்யவில்லை. கார ணம் , "இதோ! கடவுளின் ஆட்டுக் குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்கு பவர். (யோவான் நற்செய்தி 1:29)
2.மேன்மை படும் ஆண்டவர்.
The Lord is exalted.ஏசாயா 53:12.
அன்பின் இறைமக்களே! இறைவாக்கினர் ஏசாயாவை போல் யாருமே ஆண்டவருடைய பாடு, மரணத்தை முன்னறிவிப்பு சிறப்பாக செய்ததில்லை.
ஆனால், இயேசுவின் மரணத் தையும் முன்னறிவித்த முதல் இறைவாக்கினர் மோசே அவர் கள் வழியாக தேவன் அருளிய தொடக்க நூல் 3:15ல் இது ஏதே ன் தோட்டத்தில் ஆதாம்-ஏவாளி ன் வீழ்ச்சிக்குப் பிறகு, சாத்தா னின் தலை "பெண்ணின் வித்தி னால்" (இயேசு) நசுக்கப்படும் என்று கூறப்பட்ட முதல் நற்செய் தியாகும்.ஏசாயா 53:12. துன்பப் படும் மேசியாவின் தியாகத்தி ற்கும், அதன்பின்னர் அவருக்குக் கிடைக்கும் உன்னத வெற்றிக்கு ம் இடையிலான தொடர்பை விளக்குகிறது. பாவிகளுக்காகத் தம் உயிரைக் கொடுத்ததால், கர்த்தர் அவரைப் பலமுள்ளவர் களோடு பங்கைப் பங்கிட்டு, மகிமைப்படுத்துவார் என்று இந்த வசனம் கூறுகிறது.அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவங்களுக்காகத் தம் ஆத்துமா வை மரணத்திலூற்றினார்.
மக்களின் பாவத்திற்காகப்பலி யான அவர், குற்றவாளியாகக் கருதப்பட்டார்.அவர் அக்கிரமக் காரருக்காக வேண்டுதல் செய் து, மன்னிப்பைப் பெற்றுத் தந்தார் கர்த்தர் அவரைப் பெரிய வர்களுடன் பங்காக்கி, வெற்றி யாளருக்குரிய வெகுமதியை அவருக்கு அளிப்பார். துன்பத் தின் மூலம் வெற்றி பெற்றதால், மேசியாவுக்கு உன்னத ஸ்தான மும், அதிகாரமும் அளிக்கப்ப டும்.அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டார்": சிலுவையில் இயேசு சொன்ன
"தந்தையே, இவர்களை மன்னி யும். ஏனெனில் தாங்கள் செய்வ து என்னவென்று இவர்களுக் குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) (லூக்கா நற்செய்தி 23:34)
நண்பர்களே!இது மேசியாவின் பரிகார மரணத்தையும், மறு உயி ர்ப்பின் வெற்றியையும் முன்னறி விக்கிறது. "இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மை ப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.
(எசாயா 52:13) என்ற இறை வாக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட
பணி என்பதை நாம் மறந்துவிட
க்கூடாது. தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் வாழ்வில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை உன் புகழ் பாட வேண்டும் என உறுதி யோடு நாம் ஆண்டவருடைய நாமத்தை இவ்வுலகில் மேன்மை ப்படுத்துவோம். அவ்வாறு செயல்படுத்த நம்மை கடவுள் அருள் புரிவாராக ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..

Comments
Post a Comment