குருத்தோலை ஞாயிறு.Palm Sunday. அமைதியின் அரசரை வரவிடுங்கள்.(261) Let the King of Peace Enter. 2அரசர்கள் 7 : 3-21, திருப்பாடல் 24. பிலிப்பியர் 4: 4-13, மாற்கு: 11:1-13
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார குருத்தோலை ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"அமைதியின் அரசரை வரவிடுங் கள்"What a wonderful topic. மிக அருமையான தலைப்பு நண்பர் களே! திருத்தூதர் யோவான் அவர்களின் கூற்றுப்படி நமது ஆண்டவர் எருசலேமுக்கு ஐந்து முறை பயணித்திருக்கிறார் (யோவான் 2:13,5:1,7:10, 10:22, 12:12) இவற்றில் மிக முக்கிய மானதுஐந்தாவது வெற்றியின் பயணம்.நற்செய்திகளின்படி, இயேசு பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட கழுதையின் மீது ஏறி எருசலேமுக்குள் வந்தார் .
இறைவாக்கினர் ஏசாயா 9:6ல் கிறிஸ்து பிறப்பதற்கு கிமு700 ஆண்டுகளுக்கு முன்பாக இயே சு கிறிஸ்துவை அமைதியின் அரசர் (The Prince of Peace) எனக் குறிப்பிட்டார். இந்த அமைதியி ன் அரசர் எருசலேமிக்குக்கு வரு வதை கிமு 520 ஆண்டிற்கு முன் பாக இறைவாக்கினர் செக்கரி யா 9:9ல், "மகளே சீயோன்! மகிழ் ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையி ன்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். (செக்கரியா 9:9)
இயேசு, சகரியா 9:9-ல் கூறப்ப ட்டுள்ள இறைவாக்கு நிறைவேற் றவும், தான் போருக்கு வரும் அரசர் அல்ல, அமைதியை நிலை நாட்டும் மனத்தாழ்மையுள்ள மேசியா என்பதை உணர்த்தவு ம் கழுதையின் மீது ஏறி எருசலே முக்குச் சென்றார். குதிரை யுத் தத்தின் அடையாளமாகவும், கழுதை அமைதி மற்றும் தாழ் மையின் அடையாளமாகவும் கருதப்பட்டதால், அவர் தாவில தின் அரசகுலத்தைச் சார்ந்தவ ராயினும் எளிமையாக நுழைந் தார். ரோமானிய சாம்ராஜ்யத் தை எதிர்த்துப் போரிடும் இரா ணுவ அரசர் அல்ல, மாறாக உலகிற்கு அமைதியைக் கொண் டுவரும் அமைதியான அரசர் என்பதை வெளிப்படுத்தினார்.
இயேசு கிறிஸ்து கிழக்கு வாசல் வழியாக நுழைந்தார்.
Jesus entered into Jerusalem on Eastern Gate.
அன்பர்களே!
லூக்கா நற்செய்தியாளரின் 19:37ல், கூற்றுப்படி,இயேசு கிறிஸ்து கிழக்கு வாசல் (Easte rn Gate and Golden Gate) வழியாக எருசலேமுக்குள் நுழைந்தார். ஒலிவ மலையிலிருந்து (Mount of Olives) வந்து, இந்த வாசல்வழி யாகவே அவர் கோட்டைக்குத் தன் வெற்றிப் பயணத்தை மேற் கொண்டார், இந்த வாசல் எருச லேம் பழைய நகரத்தின் (Old City of Jerusalem) கிழக்குச் சுவரில் உள்ளது.இறை வாக்கினர் எசேக்கியேல் 43:1-4ன் படி, யூத பாரம்பரியத்தில், மெசியா (இரட்சகர்) இந்த வாசல் வழியாக வே வருவார் என்று நம்பப்படுகி றது. "ஆண்டவரின் மாட்சி கிழக் கு நோக்கிய வாயில் வழி கோவி லினுள் நுழைந்தது. (எசேக்கிய ல் 43:4) என கூறுகிறார். இயேசுவின் பிறப்பை உலக ஞானிகளுக்கு தெரிவிக்க தோன்றிய நட்சத்திரம் கிழக்கி லே தோன்றியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். (மத்தேயு2:1)
இந்த கிழக்கு வாசல் தற்போது முத்திரையிடப்பட்டுள்ளது,மேசியா (மீட்பர்) அதன் வழியாக வருவார் என்ற தீர்க்கதரிசனத் தை தடுக்க, ஒட்டோமான் பேரரசர் சுலைமானால் 1541-ல் மூடப்பட்டது. இந்த வாசலுக்கு வெளியே உள்ள பகுதியில் முஸ்லிம்களின் கல்லறை அமைந்துள்ளதால், தீர்க்கதரி எனப்படுபவர் இதைக் கடந்து வரமாட்டார் என்ற எண்ணத்தி லும் அது மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவே இயேசு நுழைந்த வாயிலாகக் கருதப்படுகிறது.
யூத ஆண்கள் அனைவரும் மூன்று புனிதப் பண்டிகைகளு க்காக ஜெருசலேமுக்குச் செல் லக் கடமைப்பட்டுள்ளனர் . எருசலேமை சுற்றி 15 மைல்களு க்குள் வாழும் 12 வயதை கடந்த ஒவ்வொரு ஆண்களும் பாஸ்கா விற்கு எருசலேம் செல்வது கட்டாயமாகும். பாஸ்கா பண்டி கைக்கு முந்தைய ஓய்வுநாள் , யூத மதத்தில் 'பெரிய ஓய்வு நாள்' என்று அழைக்கப்படு கிறது . அந்நாளில் ஒவ்வொரு குடும்பமும் அல்லது சமூகமும் ஒரு பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பிரித்து வைக்கிறது .
பாஸ்கா பண்டிகை, எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரவேலரை கடவுள் விடுவித் ததைக் கொண்டாடுகிறது. பாஸ் கா பண்டிகையின் கொண்டா ட்டம் "ஜெருசலேம் கோவிலை மையமாகக் கொண்ட ஒரு "புனிதபயண விருந்தாக" மாறியது.இந்த பாஸ்காவை கொண்டாட, இயேசு எருசலேமிற் கு மக்கள் கூட்டத்தோடு எருசலே ம் சென்றார்.
அவ்வாறே, அன்பர்களே! கி.மு 970ல்,சாலமோன் அரசர் , அரச
ராக இறைவாக்கினர் நாத்தா னால் திருப்பொழிவு பெற்றவு டன், தாவீது அரசனின் கட்டளை ப்படி, கியோன் (Gihon Spring) ஊற்றைக் கடந்து கித்ரோன் பள்ளத்தாக்கு வழியாக அவரை எருசலேமுக்குள் ஊர்வலமாக .தாவிது அரசரின் கழுதையின் மீது ஏறி, எக்காளங்கள் முழங்க, மக்கள் ஆரவாரத்துடன் எருசலே முக்குள் வெற்றிகரமாக "அரசர் சாலமோன் வாழ்க!" என்று ஆரவாரித்து அவரை வரவேற்றனர். (1.அரசர்கள் 1:39 )
ஏன் மக்கள் குருத்தோலைக ளை கையில் ஏந்தினர்?
Why did people carry palm leaves in their hands?
அன்பர்களே! நம் திருவிவலியத் தில், பனை ஓலைகள் Palm Leav es பிரதானமாக வெற்றி, மகிழ் ச்சி, அமைதி மற்றும் அரச மரியா தையின் அடையாளமாகப் பயன் படுத்தப்பட்டன. இயேசு எருசலே முக்குள் நுழைந்தபோது (குருத் தோலை ஞாயிறு), மக்கள் தங்கள் தலைவரை அரசராக ஏற்றுக்கொண்டு, அவரை வர வேற்கவும் கௌரவிக்கவும் பனை ஓலைகளை அசைத்து, வழியில் பரப்பி"ஓசன்னா"
("இப்பொழுதே இரட்சியும்") என்று முழக்கமிட்டனர்.
ரோமானிய கலாச்சாரத்தில் வெற்றியை அறிவிக்க குருத் தோலை பயன்பட்டது போல, இயேசுவை ஒரு அரசராக (வெற்றியாளராக) வரவேற்க மக்கள் பனை ஓலைகளைப் பயன்படுத்தினர்.திருவெளிப்பாட்டில் Revealation 7:9-ல், இரட்சிப்பைப் பெற்ற திரளான மக்கள் பனை ஓலைகளை ஏந்தி நிற்பது, பாவத்தின் மீதான இறுதி வெற்றியைக்குறிக்கிற து.மற்றும் பழைய ஏற்பாட்டில், கூடாரப்பண்டிகையின் போது பனை கிளைகள் மகிழ்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தப் பட்டன (லேவியர் 23:40). சாலொமோனின் தேவாலயத் தில் சுவர்கள் மற்றும் கதவுகளி ல் பனை மரவடிவங்கள் செதுக்க ப்பட்டிருந்தன, இது அமைதியை யும் நீதியையும் குறித்தது. பனை ஓலைகள் யூத மரபில் கடவுளின் ஆசீர்வாதத்தையும், நீதியான வெற்றியையும் குறிக்கும் அடை யாளமாகவே பயன்படுத்தப் பட்டன.
கிறிஸ்துவுக்கு முன் எருச லேமில் நுழைந்த அரசர்கள்.
Who were the Kings entered in Jerusalem, before Christ?
அன்பானவர்களே! எருசலேம் எத்தனையோ மாமன்னர்களை தன்னுடைய நாட்டிற்கு வரவழை த்தது, அனைவரும் படையெடுத் து வந்தார்கள் வென்றார்கள் சிலர் நாட்டையே அழித்தார்கள்.
1 நீதியின் அரசர் என கூறப் படும் மெல்கி சேடக் சாலமின் அரசர். அவர் ஆபிரகாமின் வெற் றிக்காக அப்பமும், திராட்சைரச மும்கொண்டுவந்து ஆபிராகமை
ஆசிர்வதித்த முதல் ஆசாரிய
அரசன். தொடக்க நூல் 14 (Genesis)
2.கி.மு 1010 த்தில் தாவிது அரச ன் எருசலேமை ஜெபுஸைட்டி டமிருந்து கைப்பற்றி இஸ்ரவே லின் தலைநகராக மாற்றினார். United Kingdom of Israel.(2 சாமு வேல் 5:6-9)
3.கி.மு 960 ல் சாலமன் அரசர்
முதல் ஆலயத்தை எருசலேமில்
கட்டினார்.
4. சாலமனின் இறப்பிற்கு எகிப்
த்திய மன்னன் சிசோங்க் Sheshonk கிமு 925ல் எருசலேமை
வெற்றிக்கொண்டு அதை அழித்
தான்
5 கி.மு 786ல், இஸ்ரவேலின்
அரசன் ஜெகோஸ் Jehoash எருச லேமை கைப்பற்றி அமாசியா வை Amaziah சிறை பிடித்தான் (2Kings 14:11–14 and 2 Chronicles 25:21–24. )
6.எசேக்கியா அரசன் காலத்தில்
கி.மு 701ல் அசீரிய அரசன் சென்னாசெரிப் Sennacherib
எருசலேமை முற்றுகை இட்டான்
7.கி.மு 586ல் பாபிலோனிய பேர ரசன் நேபூகாத்நெசார் II.
Nebuchadnezzar II எருசலேமை
கைபற்றி முதல் தேவாலயத்தை
இடித்துப்போட்டான். இஸ்ரேல் மக்களை பாபிலோனுக்கு சிறை பிடித்து சென்றான்.(2 அரசர்கள் 25)
8.மாமன்னன் ஸைரஸ் Cyrus the Great of Persia பாரசீக மன்னன் கி.மு 539ல் பாபிலோனிய பேர ரசை வென்று இஸ்ரவேலர்
தங்களின் ஆலயத்தை மீண்டும்
கட்ட எருசலேமிற்கு செல்ல
அனுமதித்தான்.(ஏசாயா 44,45)
9.கிரேக்க மன்னன் மாவீரன் அலெக்சான்டர்(Alexander the Great (332 BCE): எருசலேமை கை
பற்றினான். (Daniel 8:5-8, 21) மற்றும் ரோம மன்னன் பொம்பே Pompey கிமு 63 ல் எருசலேம் கைப்பற்றப்பட்டு ஏரோது மன்னனை ரோமர்கள் அரசராக நியமித்தார்கள்
இவ்வாறு உலக மாமனர்கலெல் லாம் எருசலேமிற்கு படையெடு த்து வந்தார்கள், வென்றார்கள் ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அமைதியின் அரசராக எருசலேம் வந்தார். யூதர்கள் எதிர்பார்த்த ரோம அரசியலிலிருந்து விடுவிப்பார் என்ற நம்பிக்கை இவர் நிறை வேற்றவில்லை என்பதற்காக அவரை மதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
1 இந்நாள் நற்செய்தியின் நாள். This day is the day of the Gospel. 2 அரசர்கள் 7 : 3-20,
அன்பானவர்களே! சிரியாவின் முற்றுகையால் சமாரியாவில் கடுமையான பஞ்சம் நிலவியது. மக்கள் தப்பிப்பிழைக்க வழியி ன்றி, அநாகரீகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இஸ்ரவேல் மற்றும் சமாரியா மீது வந்த பேர ழிவிற்காக இஸ்ரவேலின் அரசர் கர்த்தரைக் குறை கூறினாலும், தேவன் அரசருக்கு அந்த தேசத் திற்கும் ஒரு வார்த்தையை வைத்திருந்தார் – அது ஒரு நற் செய்தியாக இருந்தது.
இறைவாக்கினர் எலிசா நாளை இதே நேரத்தில் 24 மணி நேரத் தில் சமாரியாவின் பொருளாதா ர நிலைமை முற்றிலும் தலைகீ ழாக மாறும் என்று எலிசா மூல மாக தேவன் வாக்குறுதி அளித் தார். பற்றாக்குறைக்கு பதிலாக, நகரத்தில் உணவுப் பொருட்களி ன் விலைகள் பெருமளவில் குறையும் அளவுக்கு மிகுந்த செழிப்பு ஏற்படும் என்றார். ஆனால் அரசனுடைய அதிகாரி அந்தத் இறைவாக்கை சந்தேகித் தார்,
பட்டண வாயிலில் இருந்த நான் கு தொழுநோயாளிகள், இவர் கள் தொழு நோயாளியாக இருந் ததால் நகரத்துக்குள் அனுமதிக் கப்படவில்லை."இங்கே இருந்தா ல் சாவு, உள்ளே சென்றால் பஞ் சம், சிரியரிடமாவது போவோ வோம்" என்ற முடிவுக்கு வருகி றார்கள். இது நம்பிக்கையற்ற சூழலில் அவர்கள் எடுத்த ஆபத் தான முடிவு. அவர்கள் சிரிய முகாமிற்குச் சென்றபோது, தேவன் சிரிய ராணுவத்தினரு க்கு தேர்களின் சத்தத்தைக் கேட் கச்செய்தார்,அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்க ளையும் எகிப்திய அரசர்களை யும் கூலிக்கு அமர்த்திக் கொண் டு நம்மைத் தாக்க வருகிறான்" என்று சொல்லிக்கொண்டு உயிருக்கு பயந்து அவர்கள் உணவையும் செல்வத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இந்த மாபெரும் சிரியா இராணு வம் பல மாதங்களாக சமாரியா நகரத்தைச் சூழ்ந்திருந்தது, மேலும் அந்த முகாம் ஆயிரக்க ணக்கான வீரர்களுக்கு இருப் பிடமாகவும், பொருட்கள் வழங் கும் மையமாகவும் இருந்தது. அன்று காலை தொழுநோயாளி கள் அங்கு வந்தபோது, அவர்கள் ஒரு வெற்று இராணுவ முகாமை கண்டுபிடித்தனர் – பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டிருந் தாலும், வீரர்கள் யாரும் இல்லை.
அவர்கள் கூடாரத்திற்குள் சென்று உண்டு குடித்தார்கள்.
பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரி டம், "இன்று நாம் இப்படிச் செய் வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள்." நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம்" என்று சொல்லிக் கொண்டனர். தொழுநோயாளி களிடமிருந்து வந்த நற்செய்தி, மிகவும் எளிமையான முறையில் அரசருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்பு ஜனங்கள் புறப்பட்டுப் போய், சீரியர்களுடைய கூடாரங் களைக் கொள்ளையிட்டார்கள் .
பஞ்சமும் தீர்ந்தது.எலிசா கூறிய படியே மலிவான விலையில் உணவு கிடைத்தது. தீர்க்கதரிசி யை நம்பாத அதிகாரி, மக்களின் மிதியடியில் மிதிப்பட்டு இறந் தார். சமாரியாவின் வாசலில், ஒரு சேக்கலுக்கு இரண்டு சேயா வாற்கோதுமையும், ஒரு சேக்க லுக்கு ஒரு சேயாவும் சிறந்த மாவும் விற்கப்படும்” என்று சொன்னபடியே அது நடந்தது. அன்பர்களே! தொழுநோயாளி கள் (சமூகத்தால் ஒதுக்கப்பட்டவ ர்கள்) நற்செய்தியைப் பகிர்ந் தது போல, நாமும் பெற்ற ஆசீர் வாதத்தைப் பகிர வேண்டும்.
2.ஆண்டவரின் உறவில் நிலைத்திருங்கள். Remain in the Lord's relationship.பிலிப்பியர் 4: 4-13
அன்பானவர்களே திருத்தூதர் பவுல் அடிகளார் பிலிப்பியில் உள்ள திருச்சபையினருக்கு தனது அன்பான பிணைப்பையு ம், கர்த்தருக்குள் அவர்கள் நிலைத்திருப்பதையும் வலியுறு த்துகிறார். இந்த பகுதி, கிறிஸ் துவ வாழ்க்கையின் நடைமுறை வழிகாட்டியாகத் திகழ்கிறது.
பிலிப்பியர்களே!கிறிஸ்துவுக் குள் இருக்கும் உண்மையான மகிழ்ச்சி, இறைவேண்டல் மற்றும் எந்த சூழ்நிலையிலும் திருப்தியுடன் வாழும் ரகசிய த்தை வலியுறுத்துகிறேன். கடின மான சூழலிலும் கிறிஸ்துவின் பலத்தினால் எதையும் தாங்க முடியும் என்ற நம்பிக்கையை பவுல் வெளிப்படுத்துகிறார்.
கர்த்தருக்குள் இருக்கும் நிலை யான மகிழ்ச்சிக்கு பவுல் அழைக் கிறார். இது வெளிப்புறத் தூண் டுதலால் வரும் மகிழ்ச்சி அல்ல, மாறாக கிறிஸ்துவுடன் இணைந் திருப்பதால் வரும் மகிழ்ச்சி. கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தங்கள் சாந்தகுணத்தைக் (Gentleness) காட்ட வேண்டும். இறைவேண்டல் மூலம் கவலை களை இறைவனிடம் ஒப்படைக் கும்போது, மனிதப் புத்திக்கு எட்டாத தெய்வீகச் சமாதானம் ,அமைதி இதயத்தைக் காக்கும். பவுல் நல்ல, நீதிமானாக, போற் றத்தக்க விசயங்களில் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறார். சரியான சிந்தனை, சரியான செயல்களுக்கு வழிவகுக்கி றது.பவுல் கற்று க்கொண்ட "திருப்தி" (Contentment) என்பது ஒரு முக்கியக் கலை என்கிறார். செழிப்பிலும் வறுமையிலும், பசி மற்றும் பற்றாக் குறையிலும், கிறிஸ்துவுடன் இருக்கும்போது அவர் திருப்தியாக இருக்கி றார்.இது சூழ்நிலைக்கேற்ப மாறும் உணர்ச்சி அல்ல. "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என்கிறார்.அது அவரின் உறவி ல் நிலைத்திருந்தால் சாத்திய மாகும் என்கிறார்.
3."அமைதியின் அரசரை வரவிடுங்கள்"மாற்கு: 11:1-13
Let the King of Peace Enter.
அன்பானவர்களே இறைவாக்
கினர் ஏசாயாவின் இறைவாக் கின்படி, இயேசு அமைதியின் அரசராகவும், வியத்தகு ஆலோ சகராகவும், வலிமைமிகு இறை வனாகவும் வர்ணிக்கப்படுகிறா ர். அமைதியின் அரசர் என்பதி னால், எருசலேமில் தன் பயண த்தை ஆலயத்தை நோக்கி இருந்தது அது அரண்மனை யை நோக்கி செல்லவில்லை. ஒரு அரசர் சமாதானமாக வருகி றார் என்பதுதான்.
பாலஸ்தீனத்தில் கழுதை ஒரு இழிவான மிருகமாக இருக்க வில்லை, மாறாக ஒரு உன்னத மான மிருகமாக இருந்தது. ஒரு அரசர் போருக்குச் செல்லும் போது குதிரையின் மீது ஏறி வருவார், சமாதானமாக வரும் போது கழுதையின் மீது ஏறி வருவார்.
இயேசுவின் காலத்தில் கழுதை அரசர்களின் மிருகமாக இருந் தது. ஆனால், இயேசு எத்தகைய அரசராகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர் சாந்தமாகவும் தாழ்மையாகவும் வந்து, "அமைதியின் அரசராக"
வந்தார்.அந்த நாளில் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தபோது, அவர் தன்னை அரசன் என்று கூறிக்கொண்டார், ஆனால் அவர் சமாதானத்தின் அரசன் என்றே உரிமை கோரினார். அவருடைய செயல், மனிதர்கள் நம்பியிருந்த மற்றும் எதிர்பார்த் திருந்த அனைத்திற்கும் முரணா க இருந்தது.
ஆண்டவர் தன் வெற்றியின் பயணத்திற்காக இரண்டு கிராமங்களை தேர்வு செய்தார்
பெத்பாகே மற்றும் பெத்தா னியா ஆகியவை எருசலேமுக்கு அருகிலுள்ள (about two miles) கிராமங்கள்.
பெத்பாகே என்றால் அத்திப்ப ழங்களின் வீடு என்றும், பெத்தானியா என்றால் பேரீச்சைப் பழங்களின் வீடு என்றும் பொருள் கொள்ளலாம்.
தன் சீடர்களில் இருவரை நோக்கி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்ப தைக் காண்பீர்கள். அதை அவிழ் த்துக் கொண்டு வாருங்கள்.
இது ஆண்டவருக்குத் தேவை, The Lord needs this.
நண்பர்களே இது ஆண்டவருக்கு தேவை என்ற வார்த்தை நாம் அவற்றில் உட்பட்டு இருக்கிறோ மா? என்று சிந்திக்க வேண்டும் நானும் ஆண்டவருக்கு தேவைப் படுகிறவனாய் இருக்க இந்த குருத்தோலை ஞாயிறு நம்மை சிந்திக்க அழைக்கிறது. Am I needed to God?
நாம் இவ்வுலகில் கடவுளின் வார்த்தையை சுமந்து செல்கி ன்ற வழியாய்(Channel) அமை தியை ஏற்படுத்தும் செயல்வீர னாய் இருக்க இந்நாள் நம்மை தயார்படுத்துகிறது.
ஆண்டவர்,
யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்ட வருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பி விடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். அவ்வாறே நடந்தது.
அவர்கள் கொண்டுவந்த குதிரை க் குட்டியின் மீது ஒருபோதும் சவாரி செய்யப்பட்டதில்லை. அது பொருத்தமானதாகவே இருந்தது, ஏனெனில் ஒரு புனிதமான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு மிருகம், வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடா து. தீட்டுகளை நீக்கிய சாம்பலை க் கொண்ட செம்மறியாட்டுக் கிடாரியின் விசயத்திலும் அவ் வாறே இருந்தது ( எண்ணிக்கை 19:2 , உபாகமம் இணை சட்டம் 21:3 ).கடவுள் தூயவர், அவருக்கு வேண்டியவைகளும் தூயதாக இருக்க விரும்புகிறார், வேண்டு கிறார்.
பண்டிகை காலங்களில் எருசலேமில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதினால் யாத்திர ர்கள் பெத்தானியாவில் தங்க அங்கீகரிக்கப்பட்ட ஒரு இடமா கும்.Bethania was an authorized
place for Pilgrims to stay.
சீடர்கள் அந்தக் கழுதைக் குட்டி யை இயேசுவிடம் கொண்டு வந் து, தங்கள் ஆடைகளை அதன் மேல் உடுத்தி, அவரை அதன் மேல் ஏற்றினார்கள். அவர்களில் அநேகர் தங்கள் ஆடைகளைச் சாலையின்மேல் விரித்தார்கள். மற்றவர்களோ வயல்களிலிரு ந்து கிளைகளை வெட்டிச் சாலை யின்மேல் விரித்தார்கள். முன்னால் சென்றவர்களும், பின்னால் வந்தவர்களும், “இப்பொழுது இரட்சியும்! நம்மு டைய பிதாவாகிய தாவீதின் வரவிருக்கும் அரசு ஆசீர்வதிக் கப்பட்டது! வானத்தின் உன்னத ங்களிலிருந்து உமது இரட்சிப் பை அனுப்பும்!” என்று சத்தமிட் டுக் கொண்டே இருந்தார்கள்.
ஏன் ஆடைகளை விரித்தனர்?
Why did they spread their clothes?
அன்பர்களே! அக்கால கலாச்சா ரத்தில், ஒரு அரசரையோ அல் லது மிகவும் மதிக்கப்படும் தலை வரையோ வரவேற்க மக்கள் தங்கள் மேலுடைகளை (cloaks) பாதையில் விரிப்பது வழக்கம்
இயேசுவை எதிர்பார்த்த மேசியா வாக (வாக்குத்தத்தம் செய்யப்ப ட்ட மீட்பர்) மக்கள் கருதியதால், அவருக்கு இந்த உயரிய மரியா தையைச் செலுத்தினர்.இது 2 அரசர்கள் 9:13ல் 2 Kings;9;13 ல்
ஏகூ என்ற இஸ்ரவேலின் மன்ன னை மன்னராக திருப்டொழிவு செய்த போது," தம் போர்வை யைக் கழற்றி அவற்றை வெறு மையாய் இருந்த படிகளில் விரித்து எக்காளம் ஊதி, "ஏகூவே அரசர்!" என்று முழங்கினர். (2 அரசர்கள் 9:13) ஆடைகளை விரிப்பது என்பது ஒரு அரசருக் கு செய்ய வேண்டிய மரியாதை ஆகும் இயேசு நூற்றுக்கு நூறு அமைதியின் அரசர். ஆனால் இஸ்ரவேலர் எதிர்பார்த்த அரசியல் அரசர் நம் ஆண்டவர் இல்லை. அவர் ரோம பேரரசிடிட மிருந்து இஸ்ரேவேலை மீட்பார் என்று எதிர்பார்த்தார்கள். அவர் ஒரு நாட்டின் அரசர் அல்ல. அவர் உலகத்தின் அமைதியின் அரசர் எந்த எருசலேமுக்கு அமைதியை தன் பவணி மூலம் கொண்டு வந்தாரோ அந்த எருச லேம் அமைதியற்ற பூமியாய் இந்நாளிலும் இருப்பது என்பது அவரை இன்னும் வரவிடவி ல்லை என்பது உண்மை. அமை தியின் அரசரை வரவிடுங்கள்.
அதுவரை,
சமாதான நகரமான எருசலேம் அமைதியற்றே இருக்கும் ஏனென்றால் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு இஸ்ர வேல். ஆண்டவர் 2000 ஆண்டு களுக்கு முன்பாகவே"எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம்; மாறாக உங்களுக் காகவும் உங்கள் மக்களுக்காக வும் அழுங்கள். (லூக்கா நற் செய்தி 23:28)
ஓ பெஞ்சமின் நெத்தன்யாகு, டோனால்டா டெரும்ப், விளாடிமர் புட்டின்,கிம் ஜொங் உன் அமைதியின் அரசரை உலகில் வர விடுங்கள். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற் றோர்; ஏனெனில் அவர்கள் கடவு ளின் மக்கள் என அழைக்கப்ப டுவர். (மத்தேயு நற்செய்தி 5:9)
அமை ஏற்படுத்துங்கள் நீங்க ளும் கடவுளுடைய மக்களாய் மாறுவீர்கள்
அமைதி உலகத்திற்கு சவாசிக் கும் காற்று போன்றது.
அன்பர்களே!
"வருகிறவர்" என்பது மேசியா வின் மற்றொரு பெயராகும். யூதர்கள் மேசியாவைப் பற்றிப் பேசியபோது, அவரை 'வருகிற வர்' என்றே குறிப்பிட்டனர்.
திருவெளிப்பாட்டில் கூறியபடி; ஆண்டவர் வருகிறார் வெகு விரைவில் வருகிறார் அதற்கு முன்பாக உலகில் அமைதி நில வ நாம் அனைவரும் செயல் படுவோம். அமைதியை ஏற்படு த்துவோம் அவ்வாறு செய்ய கடவுள் நமக்கு அருள் புரிவாராக
அமைதியின் அரசரே வாரும் ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Palm Sunday is for
Confession,” and “Personal and Pastoral Application.”

Comments
Post a Comment