புனித வியாழன். நற்கருணை. வாழ்வளிக்கும் அன்பு.(265) Eucharist:Life Giving Love. விடுதலை பயணம் 16:4-12, திருப்பாடல் 139.1 கொரிந்தியர் 11: 23-29, யோவான் 13: 17-34, 35.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித வியாழன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது
"நற்கருணை. வாழ்வளிக்கும் அன்பு.Eucharist:Life Giving Love"
அன்பர்களே நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்து தனது பாடுகளுக்கு முந்தைய இரவு, "இறுதி விருந்தில்" (Last Supper) நற்கருனையை  ஏற்படுத் தினார். நற்கருணை' என்பது 'நன்றி செலுத்துதல்' (Eucharistia) என்று பொருள்படும்.
உண்மையான பிரசன்னம். அப்பம் மற்றும் இரசம் வெறும் அடையாளங்கள் அல்ல; அவை இயேசுவின் உண்மையான உடல், இரத்தம், ஆன்மா மற்றும் இறைத்தன்மையுடன் கூடிய பிரசன்னம் (Real Presence)  என்பது திருச்சபைக ளின் நம்பிக்கை.இது கிறிஸ்து வின் தியாகத்தை நினைவு கூரும், கிறிஸ்தவ வாழ்வின் மையமாகவும், ஆன்மீக உணவா கவும் கருதப்படுகிறது.
இது புதிய உடன்லடிக்கையின்
அன்பின் அடையாளமாகும். இரத்தம் சிந்திய கடவுளை நினைவு கூற இந்த சாக்கி ரமந்தை தவிர, வேறு ஒன்றுமி ல்லை.
இயேசு கிறிஸ்து புதிய உடன்படி க்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார்.சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தமே இந்த உடன்படிக்கையின் முத்திரை.
கடவுள், மோசே மூலம் கற்பாரை யில்  கொடுக்கப்பட்ட உடன்படிக் கை பழைய உடன்படிக்கை. இஸ்ரவேலர்கள் பாவத்தினால் மீறினார்கள். ஆனால்  விசுவா சிகளாகிய நம் இருதயத்தில் ஆண்டவர் எழுதியது அன்பின் அடிப்பையான புதிய உடன்ப டிக்கை. இது இறைவாக்கினர் எரேமியா 31:31-34 ஐ, அடிப்படையாகக் கொண்டது. 
வியாகுல வியாழன் என்றால் என்ன?What is Maundy Thursday?
மௌண்டி" (Maundy) என்பது லத்தீன் வார்த்தையான 'mandatum' (கட்டளை) என்பதி லிருந்து வந்தது. "ஒருவர் மற்ற வரை நேசிக்கவும், பாதங்களைக் கழுவியது போல பணிவிடை செய்யவும்" இயேசு கொடுத்த புதிய கட்டளையை இது குறிக் கிறது.இது இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் கொண்டா டிய இறுதி இரவு உணவையும் (The Last Supper), (இறுதி பாஸ் கா) தாழ்மையின் அடையாளமா கத் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வையும் நினைவு கூரும் நாளாகும். 

1.விடுவிக்கும் ஆண்டவர். Liberating Lord.விடுதலைப் பயணம் Exodus (யாத்திரா கமம்) 16:4-12, 
அன்பானவர்களே!  கடவுள் இவ் வுலகில் அடிமைப்பட்ட இஸ்ர வேல் மக்களுக்காக முதல் விடுத லை போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்றார்.அதற்காக சில மாதங்க ளை எடுத்துக்கொள்கிறார் மோசே.
.இஸ்ரவேலர் ஏலிமை விட்டுப் புறப்பட்டு சீன வனாந்தரத்தை அடைந்தனர். எகிப்தில் உண்பத ற்கு மிகுதியான உணவு இருந் ததாகக் கூறி, மோசே மற்றும் ஆரோனுக்கு எதிராகப் பசியினா ல் முறை யிட்டனர். வானத்திலிருந்து அப்பம் (மன்னா) பொழியச் செய்து, நாள்தோறும் தேவையானதைச் சேகரிக்கக் கட்டளை யிடுகிறார்.
மன்னா தேன்கூடு போன்ற அப்பம் போலவும், கொத்தமல்லி விதையை போலவும் இருந்தது. வனாந்தரத்தில் பசியால் முறு முறுக்கும் இஸ்ரவேலருக்குக் கடவுள் மன்னா மற்றும் காடை களை வழங்கி, அவர்களின் கீழ்ப் படிதலைச் சோதிக்கும் நிகழ்வை விவரிக்கிறது. கானான் தேசத்தி ன் எல்லையை அடையும்வரை, இஸ்ரவேலர் நாற்பது ஆண்டு கள் இந்த மன்னாவைச் சாப்பி ட்டனர். 
ஏழாம் நாள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க, ஆறாம் நாளில் இருமடங்கு சேகரிக்க அறிவுறு த்தப்படுகிறது மக்கள் மோசே யை எதிர்த்தாலும், அது இறை வனுக்கு எதிரான முறுமுறுப்பு என உணர்த்தப்படுகிறது.மக்கள் மாலை வேளையில் இறைச்சி யையும் (காடை), காலையில் அப்பத்தையும் உண்பதன் மூலம், அவர்கள் எகிப்திலிருந்து விடுவி த்தவர் ஆண்டவர் என்பதை உணர்வார்கள். 
அவ்வாறே நம் ஆண்டவர் சிலு வையை சுமந்து நமக்காக தன் உயிரைக் கொடுத்து பாவத்தி லிருந்து விடுதலை கொடுத்தார்.
2. வாழ்வளிக்கும் நற்கரு ணை,Life-Giving Eucharist"
1.கொரிந்தியர் 11: 23-29
அன்பர்களே!
கொரிந்தியர் திருமுகம் திருத் தூதர் பவுல், அடிகளார் கி.பி. 53-55 காலகட்டத்தில்   எபேசுவிலி ருந்து கொரிந்து சபைக்கு எழுத ப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதமா கும்.. 
கொரிந்து, ரோமானியப் பேரரசி ன் ஒரு முக்கிய, பணக்கார மற்று ம் கலாச்சாரப் பல்வகைப்பட்ட துறைமுக நகரமாகும். பவுல் தனது இரண்டாவது பயணத்தில் இங்கு 1.1/2 ஆண்டுகள் தங்கி,(18 மாதங்கள்) இந்த சபையை நிறுவினார்.பவுல், தனதுமூன்றா வது மிஷனரி பயணத்தின் போது, எபேசுவில் நீண்ட காலம் (சுமார் 3 ஆண்டுகள்) தங்கியிரு ந்தபோது இந்த நிருபத்தை எழுதினார்.
 சபையை சீரமைக்கவும், பவுலி ன் போதனைகளை உறுதிப்படுத் தவும், கிறிஸ்தவ வாழ்க்கை முறையை விளக்க எழுதப்பட்ட து.
கொரிந்தியர் 11:23-29-ல், பவுல் கர்த்தருடைய நற்கருணை  முக்கியத்துவத்தை விளக்குகி றார்: இது கிறிஸ்துவின் தியாக த்தை நினைவுபடுத்துதல், புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத் துதல் மற்றும் அவர் வரும்வரை அவரின் மரணத்தை அறிவித் தல் ஆகும்.இந்த நற்கருணை யை ஆண்டவர் இயேசு, தான் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில் ஏற்படுத்துகிறார்.இந்த இரவில் ஆண்டவர், குருத்துவத்தை (Priesthood) ஏற்படுத்தினார். இறையியலாளர்,வில்லியம் பார்க்லே (William Barclay) இதை, சுய-பரிசோதனை மற்றும் ஒற்றுமையுடன், கிறிஸ்துவின் தியாகத்தை மதிக்காமல் அநாக ரிகமாக பங்கேற்பதை எச்சரிக்கு ம் நிகழ்வாகக் குறிப்பிடுகிறார். 
நற்கருணை என்பது வெறும் சடங்கு அல்ல; இது இயேசுவின் மரணத்தை நினைவுபடுத்துவது மற்றும் அவர் மீண்டும் வரும் வரை அந்த இரட்சிப்பை உலகி ற்கு அறிவிக்கும் செயலாக உள்ளது.நற்கருணையில் பங்கே ற்பதற்கு முன், ஒவ்வொருவரும் தங்கள் இருதயத்தையும், மற்ற விசுவாசிகளுடன் தங்களுக்கு ள்ள உறவையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கிறிஸ்து சரீரமாகிய திருச்சபை யின் ஒற்றுமையை மதிக்காமல், சுயநலத்துடன்—பங்கேற்பது கிறிஸ்துவின் சரீரத்திற்கும் இரத்தத்திற்கும் எதிராக பாவம் செய்வதாகும்.அப்பத்தை உண்ணும்போது, அது கிறிஸ் துவுக்காக பிட்கப்பட்ட சரீரம் என்பதையும், சபையானது கிறிஸ்துவின் சரீரம் என்பதை யும் உணர்ந்து, ஒற்றுமையுடன் பங்கேற்க வேண்டும். 
கர்த்தருடைய மேஜையை பயபக்தியுடனும், பரிசுத்தமாக பங்கேற்க கிறிஸ்துவின் தியாக த்தின் மீதான நன்றியுடனும் அணுகுவதை வலியுறுத்து கிறது. நற்கருணை நம்முடைய வாழ்வுக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இயேசு கிறிஸ்து மனிதர்களுக்கு வாழ்வளிக்கும் உயிருள்ள உணவாக நற்கரு ணையில் இருக்கிறார் என்ப தைக் குறிக்கிறது.
3,. அன்பு என்னும் புதிய கட்டளை.Love: the New Covenent.யோவான் 13:17-35
This part of sermon is based on William Barclay, my favourite theologian.
அன்பர்களே! திருத்தூதர் யோவான் நற்செய்தியாளர்
புதிய கட்டளையாக 
1.பாதம் கழுவுதல்: 
இயேசு பாதங்களைக் கழுவிய பிறகு, "இவைகளை நீங்கள் அறிந்திருக்கிறபடியினால், " ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிக ளைக் கழுவக் கடமைப்பட்டிரு க்கிறீர்கள். (யோவான் நற்செ ய்தி 13:14)  என்றார்.அறிவு (Knowledge) என்பது செயலாக (Action) மாறாதவரை அது பயன ற்றது என்று வலியுறுத்துகிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தத்துவங்களை அறிவது அல்ல, சேவை செய்வதாகும்..
2.துரோகம் முன்னறிவித்தல்:
இயேசு தம்மைக் காட்டிக்கொ டுக்கப் போகும் யூதாசைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சீடர்களுக்கு மத்தியில் துரோகி இருந்தாலும், இயேசுவின் அன்பு குறையவில்லை, அவர் தரோகியின் பாதத்தையும் கழுவினார். இயேசு உள்ளத்தில் கலங்கி, தம் சீடர்களில் ஒருவன் காட்டிக்கொடுப்பான் என்று கூறுகிறார்.இயேசு யூதாஸுக்கு உணவளித்து, அவனை வெளி யேற்றுகிறார் அவன் வெளியே போனபோது, பொழுது இருட்டிற் று" என்று யோவான் குறிப்பிடு கிறார். இது வெறும் நேரத்தைக் குறிக்கவில்லை, யூதாஸின் இருண்ட ஆத்துமா மற்றும் அவனின் பாவம் நிறைந்த துரோகத்தைக் குறிக்கிறது. 
3.அன்பு என்ற புதிய கட்டளை:
யூதாஸ் வெளியேறியதும், இயேசு தாமே மகிமைப்படுவ தைப் பற்றிக் பேசுகிறார்., இயேசுவின் சிலுவை மரணம் என்பது தோல்வி அல்ல, அது
கடவுளின் அன்பு வெளிப்படும் உன்னதமான வெற்றி மற்றும் மகிமை என்று விளக்குகிறா ர்.நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்க ளில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" இயேசுவின் அன்பு நிபந்தனையற்றது, தியாகமானது, சேவை மனப் பான்மை கொண்டது. இது "பாதம் கழுவும்" அளவுள்ள தாழ்மையான அன்பு.சீடர்களின் அடையாளம் (35): "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ள வர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்களெ ன்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்".அன்பினால்
மட்டுமே, நாம் சீடராக முடியும்.
அன்பர்களே! ஒரு தேவாலயத் தின் அளவு, செல்வம் அல்லது தத்துவங்களால் அல்ல, மாறாக சீடர்களுக்கு இடையே உள்ள அன்பான உறவால் மட்டுமே உலகம் கிறிஸ்துவை அறியும் என்று கூறுகிறார். 
முக்கியமாக,
கிறிஸ்தவ சேவை என்பது தாழ்மையின் உச்சம்.அன்பு என்பது உணர்வு மட்டுமல்ல, அது சேவை செய்யும் செயல்.




Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..



 


God Provides Manna and Quail for Israel in the Wilderness

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80