புனித வெள்ளி. இரண்டாம் வார்த்தை. இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய் (267) You will be wirh me in Paradise. லூக்கா 23:38-43.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." பெரிய வெள்ளியின்
இரண்டாம் வார்த்தை,"இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய்"  மனந்திரும்பும் எவருக்கும், எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், இயேசு வின் கிருபை கிடைக்கும் என்ப தை இந்தப் பகுதி உறுதி செய்கி றது.இந்த கள்வர்களுக்கு  Dismas and Gestas என்ற பெயர்கள் இருந்ததாக நம்பிக்கை. 
ஒரு கள்வன் இயேசுவை நிந்திக்க, மற்றொருவன் தன் பாவம் மற்றும் இயேசுவின் நீதியை உணர்ந்து, "உம்முடைய அரசு வரும் போது என்னை நினைத்தருளும்" என்று விசுவாசத்துடன் வேண்டினான்.
1. ஆண்டவரின் அரசு:(Kingdom of God)
அன்பர்களே! ஆண்டவரின் அரசு என்பது கிறிஸ்தவத்தில், கடவுள் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் நிறைவேற்றும் ஆன்மீக ஆட்சி மற்றும் இறையாண்மையைக் குறிக்கிறது. இது ஒரு குறிப் பிட்ட இடமோ, நாடோ அல்ல; மாறாக, அன்பும் நீதியும் நிறைந்த, மனித இதயங்க ளில், சபையில், மற்றும் இயே சுவின் போதனைகளின்படி வாழும் வாழ்வில் செயல்படும் இறைவனின் ஆட்சியாகும். அது, இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல் படுகிறது" என்றார். (லூக்கா நற்செய்தி 17:21)
இது மனமாற்றம் மற்றும் ஆன்மீக அனுபவத்தின் மூலம் இதயத்தில் உணரப்படும் அன்பி ன் ஆட்சி ஒன்று என்பதை உணர் த்துகிறது.
கடவுளின் அரசு என்பது தற் போதைய உலகில் நீதியை யும், அமைதியையும் கொண் டுவந்து, தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகியோரின் ஆளுகையி ன் கீழ் வாழும் நித்தியமான ஆன்மீக பேரரசாகும்.
இது நம்பிக்கை கொண்டவர்களி டையே"ஏற்கனவே வந்துவிட் டது" என்றும், கடவுளின் அரசு "வரவேண்டும் என்று காத்திருப் போர் பலரும்" என்பது "எங்கள் ஆண்டவரே, வாரும்!" (Our Lord, come!) மாரநாதா என்றும், "எங்கள் ஆண்டவர் வந்து விட்டார்" (Our Lord has come) என்று நம்பிக்கை உள்ளவர்கள்
பலரும் இவ்வுலகில் உள்ளனர்.
"ஆண்டவரின் உங்களுக்குள் இருக்கிறது" ஆண்டவரின் அரசு பழிவாங்குதல் அல்ல, மாறாக அன்பு, மன்னிப்பு, மற்றும் பணிவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. அதனால் தான் மனம் திருந்திய கள்வனிடம்
இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய்"  என்றார்.
2, இன்றைக்கே பேரின்ப வீடு.You will be in paradise today,
நண்பர்களே!இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பேரின்ப வீட்டில் இருப்பாய் " என்று இயேசு கூறியது, மனந்திரும் புதலுக்கு தாமதம் இல்லை என்ப தையும், மரணத் தருவாயிலும் மீட்பு சாத்தியம் என்பதையும் காட்டுகிறது. இன்றைக்கு என்பது,
இது மரணத்திற்குப் பின் உடன டியாகக் கிடைக்கும் இரட்சிப்பு, நம்பிக்கை மற்றும் கடவுளின் உடனடி மன்னிப்பைக்குறிக்கும் ஒரு வாக்குறுதி ஆகும். மரித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு வாழ்வளித்த இந்த வார்த்தைக ள், இன்றும் அதையே செய்கின் றன. 
 3.மனமாறிய கள்வனின் மான்புகள்.The virtues of a repentant thief.
அன்பர்களே! முதலில் இந்த
கள்வன், 
கிறிஸ்துவை நிந்தித்த தன் தோழனின் பொல்லாப்பைக் குறித்து அந்தத் திருடன் கவலைப்பட்டான், கண்டிக்கி றான். நண்பன் என்றாலும் அவன் செய்கின்ற தவறை சுட்டிக்காட்டுபவனே நல்ல நண்பன், இதுவே அவன் மனந்திரும்பியதில் முதல் குறிப் பிடத்தக்க படியாக இருந்தது. ‘நீங்களும் அதே தண்டனைத் தீர்ப்பில் இருக்கிறீர்களே, அப்படி யிருக்க நீங்கள் தேவனுக்குப் பயப்படவில்லையா?’ என்று அவன் கேட்டான்.
இரண்டாவதாக,
தனது பாவத்தை முழுமையாக ஒப்புக்கொள்வதாகும். 'நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்ட னையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில் லையே!" என்று பதிலுரைத் தான். (லூக்கா நற்செய்தி 23:41)
மூன்றாவதாக,
அவன் சிலுவையில் அறையப்ப ட்டு துன்புறும் ஒருவரிடம் திரும் பி, அவரை ' ஆண்டவர்' என்று அழைத்து, அவருக்கு ஒரு அரசு உண்டு என்ற தனது நம்பிக்கை யை அறிவித்தார்.
எனவே தான் அவனுக்கு, இன்றே (Today )உனக்கு பேரின்ப வீட்டில் என்னுடன் இருப்பாய் என உறுதியளிக்கி றார்.
இறுதியாக,
இவருக்கு ஒரு அரசு உண்டு என்பதை நம்புகிறான்.அந்த அரசு இவ்வுலகில் வரும் என நம்புகிறான். நான் நினைத்துப் பார்க்க வேண்டும் இந்த கள்வனுக்கு இருந்த நம்பிக்கை நமக்கு இருக்கிறதா?
அன்பர்களே! மனம் திருந்தியவர் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பும் மறுவாழ்வும் உடனே உண்டு என்பதை கடவுள் சிலுவையில் நமக்கு உறுதி அளிக்கிறார்.
அந்த விண்ணரசில் நிலை வாழ்வு பெற நம் வாழ்வு அமைய கடவுள் அருள் புரிவாராக ஆமென்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..





"இன்று நீ என்னுடன் பரலோகத்தில் இருப்பாய்" என்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
"இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய்" 

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80