புனித வெள்ளி. மூன்றாம் வார்த்தை. இதோ உன் தாய்.(268) Here is your Mother. யோவான் 19:25-27.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் மூன்
றாம் வார்த்தை,
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.
பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
(யோவான் 19:26-27)
இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன் பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன் பேசியது மூன்று முறை மட்டுமே என்று கூறப் பட்டுள்ளது (லூக்கா 2 : 49, யோவான் 2 : 4, 19 : 26).
இயேசு தனது தாயான மரியா ளையும், தான் நேசித்த சீடரான யோவானையும் இந்த வார்த்தை கள் மூலம் ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுக்கிறார்.
1.அன்பும், பொருப்பும்:
அன்பர்களே! ஒரு மகன் அல்லது மகள் தன் பெற்றோர்களை கவனித்துக் கொள்வது நமது
கடமையாகும். தன் தாயின் பாது காப்பைப் பற்றிய அக்கறையை இது காட்டுகிறது.இயேசு மரிக் கும் தருவாயிலும் பிறர் மீது காட் டிய பாசத்தையும், கரிசனையை யும் இது உணர்த்துகிறது. கத்தோலிக்க திருச்சபையின் பார்வையில், இது மரியாவை தேவாலயத்தின் தாயாக அறிவிப்பதாகக் கருதப்படுகிற து.
2.இதோ உன் தாய்" (Here is your mother) : சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, தனது தாயார் மரியாளை, அன்பான சீடரான யோவானி டம் (John) ஒப்படைக்கும்போது கூறிய வார்த்தையாகும். தன் தாய் மரியாளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தனக்கு அன்பான சீடனான யோவா னிடம் ஒப்படைத்தார்.
இயேசுவின் சகோதரர்கள் அப்போது அவரை நம்பாததால், உண்மையான சீடரான யோவானிடம் மரியாளை ஒப்படைத்தார்.வேதாகமத்தின்படி (மத்தேயு 13:55, மாற்கு 6:3), இயேசுவுக்கு யாக்கோபு, யோசே (ஜோசஸ்), சீமோன், மற்றும் யூதா ஆகிய நான்கு சகோதரர்கள் இருந்தனர்.மேலும் இவர்களு டன் சகோதரிகளும் இருந்தனர், ஆனால் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
3.அம்மா, இதோ உன் மகன் ’
அன்பர்களே! இந்த மூன்றாவது வார்த்தையை நாம் கேட்கும் போது , இயேசு தனது தாயை "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லை யே" என்று. (யோவான் நற்செய்தி 2:4) கூறினார்.
‘அம்மா’ என்று அழைத்த முந்தைய சந்திப்பு ஒன்று நம் மனதில் உடனடியாகத் தோன் றுகிறது. கானாவிலுள்ள திருமண விருந்தில் மரியாள், இயேசுவிடம் திராட்சைரசம் இல்லை என்று கூறுகிறாள். அதற்கு இயேசு, “அம்மா உனக் கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என் நேரம் இன்னும் வரவில் லை” என்று பதிலளிக்கிறார்.
அந்த நேரம் இப்பொழுது சிலுவையில் வந்துவிட்டது. கானாவில் நடந்த முதல் அற்புதத்தின்போதும், பொது வாழ்வின் தொடக்கத்திலும் மரியாள் அங்கிருந்தார். இப்போது, சிலுவையில் அந்த இறுதி மூன்று மணி நேரங்களி லும் மரியாள் பிரசன்னமாக இருக்கிறார் என்பது அந்த நேரம் இப்பொழுது சிலுவையில் அடியில் வந்துவிட்டது என்பதா கும்.
இயேசு தன் இறப்பிற்குப் பிறகும் தன் தாயின் நலனில் அக்கறை கொண்டு, யோவானி டம் அவரை ஒப்படைத்தார். யோவான் தன் சொந்தத் தாயைப் போலப் மரியாளை பராமரிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
யோவானின் தாயார் சலோமி (Salome) ஆவார். இவர் செபெ தேயுவின் மனைவி மற்றும் இயேசுவின் தாயான மரியாயி ன் சகோதரியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. யோவா னின் சகோதரர் யாக்கோபு.
சிலுவையடியில் இயேசுவின் தாயாருடன் நின்றவர்களில் சலோமியும் ஒருவர் (மத்தேயு 27:56, மாற்கு 15:40). என்பதை
நாம் கவணிக்க வேண்டும்.
கிறிஸ்துவின் பிள்ளைகளாக நாம் இயேசுவைப்போல தம் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த மூன்றாம் வார்த்தையின் புனித அர்த்தமாகும்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..

Comments
Post a Comment