ஏன் என்னை கைவிட்டீர்?(269)Why have you forsaken me? மாற்கு: 15:34.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் நான்காம் வார்த்தை, மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தி னார்.
1.கடவுள் ஏன் கைவிட்டார்?
Why have God forsaken me?
அன்பர்களே!
1.மனிதகுலத்தின் பாவங்களு க்காக மீட்ப்பராக வந்த இயேசு
பாவத்தை சிலுவையில் சுமந்த தால் இறைவனிடமிருந்து தற்காலிகமாகப் பிரிந்தி ருந்தார்
2. கடவுள் பரிசுத்தர், பாவம்
சுமந்த இயேசுவிற்கு கடவுளிடம் இடமில்லை.
3.பாவியாகிய மனிதனுக்காகப் பாவத்தின் தண்டனையை (பிரிவினை) அவர் ஏற்றார்.
4.கைவிடுதல் திருப்பாடல் சங்கீதம் 22:1-ன்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? நிறைவேற்றமாக இது கருதப்படுகிறது.
5.நொடிப்பொழுதே (ஒரு வினாடி அல்லது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் மிகக் குறுகிய கால அளவாகும்) நான் உன்னைக் வல்லகைவிட்டேன்; ஆயினு ம் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வேன். (எசாயா 54:7) கடவுள் இயேசுவை நொடிபொழு துதான் கைவிட்டார்.
2.பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. There was darkness over the whole earth.
அன்பர்களே! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (ஆறாம் மணி முதல் ஒன்பதாம் மணி வரை) பூமியெங்கும் அந்தகாரம் (இருள்) உண்டாயி ற்று.
இது பாவம் மற்றும் அநீதியா ன மரணத்தின் மீது தேவனு டைய நியாயத்தீர்ப்பை உணர்த்தும் ஒரு அற்புத அடையாளமாகவும், உலகத்தின் பாவத்திற்காக அவர் பலியானதை குறிக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படு கிறது.
உலக பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரிக்கும்போது, தேவன் தன் முகத்தை மறைத் ததாகவும், அந்தகாரத்தின் அதிபதியாகிய சாத்தானின் அதிகாரம் வெளிப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்த நிகழ்வு தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததோடு தொடர்புடையது, இது பழைய உடன்படிக்கை முடிந்து, இயேசுவின் மூலம் புதிய உடன்படிக்கை தொடங் கியதை அடையாளப்படுத்து கிறது.
விடுதலை பயணம் (யாத்திரா கமம்) 19 : 16 – 19 ல் கர்த்தர் மோசேயோடு பேசின போது சீனாய் மலையில் கார்மேகமும், மகா பலத்த எக்காளச் சத்தமும்,, இடி முழக்கமும், மின்னல்களும் உண்டாயிற்று என்று பார்க்கி றோம். இது கர்த்தரின் பிரசன் னத்தைக் காட்டியது.
இயற்கை கடவுளின் படைப்பு. கடவுள் படும் பாடை தாங்க முடியாமல் இருளில் முழ்கியது.
அதேபோல் இணைச்சட்டம் 5 : 22 ல் கர்த்தர் மலையிலே அக்கினி யிலும், மேகத்திலும், காரிருளில் சபையார் எல்லோரோடும் மகா சத்தத்தோடு சொன்னதைப் பார்க்கிறோம்.
இறுதியாக
1அரசர்கள் 8 : 11, 12 ல் காரிருளில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னதாகவும், அப்பொழுது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாம் ஜீவ ஒளியில் பிரவேசிப்பத ற்கு இயேசு மரண இருளில் தள்ளப்பட்டார்.
3.,ஏலி,ஏலி,எலோயீ என ஏன் கத்த வேண்டும்?
அன்பர்களே!
நற்செய்தியாளர் மத்தேயுவில் ஏலி என்றும் மாற்குவில் எலோயீ என்றும் உள்ளது. மத்தேயு கிரேக்க மொழியில் ஏலி என்று கூறியிருக்கிறார். மாற்குவோ அன்று வழக்கத்தில் இருந்த மொழியாகிய அரேமிக் மொழியில் எழுதியுள்ளார். இயேசு இந்த மொழியில் மக்கள் புரிந்து கொள்வதற்காகப் கூறி யிருப்பார்.
மத்தேயு 27 : 49 ல் இறைவாக் கினர் எலியா இயேசுவை இரட்சி க்க வருவார் என்பது அந்நாட்க ளில் யூதர்களிடமிருந்த ஒரு நம்பிக்கை. கஷ்டப்படும்போது எலியாவைக் கூப்பிட்டால் அவர் வந்து அவர்களுக்கு உதவி செய்வாரென்றும், அவர்களை எதிர்த்தவர்களை அக்கினியால் அழித்து விடுவாரென்றும் நம்பினர்.
ஆனால் இயேசு எலியாவைக் கூப்பிடவில்லை. பிதாவை நோக்கி மட்டுமே கூப்பிட்டார்.
இறுதியாக
வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்க ளுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்கு கிறது, உங்கள் பாவங்களேஅவர் உங்களுக்கு செவிகொடாத படிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாமல் மறைப்பது பாவம். நமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது.
பாவத்தை விட்டுவிடுவதே நாம்
கடவுளின் பாடுகளுக்கு செய்யும் கைமாறாகும்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..

Comments
Post a Comment