புனித வெள்ளி. ஏழாம் வார்த்தை. என் உயிரை ஒப்படைக்கிறேன்.(272) லூக்கா 23:44-46
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஏழாம் வார்த்தை, "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். (லூக்கா நற்செய்தி 23:46)
லூக்கா 23:44-46-ல், இயேசுவின் சிலுவை மரணத்தின்போது 12 மணி மதியம் முதல் 3 மணி வரை ஏற்ப ட்ட இருள், தேவால யத் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது, மற்றும் "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்ற வார்த்தைகள், பாவம் மன்னிப்பு மற்றும் தேவனை அணுகும் புதிய வழியைஉறுதிப் படுத்துகின்றன. இது தேவனி ன் நியாயத்தீர்ப்பு, பாடுகளின் முடிவு மற்றும் பிதாவுடனான பரிபூரண நம்பிக்கையை வெளி ப்படுத்துகிறது.
1 ஆதியில் இருந்த இருள்;
அன்பர்களே! மண்ணுலகு உருவ ற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி யிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. (தொடக்கநூல் 1:2)
அவ்வாறே! நண்பகல் முதல் 12 மணிமுதல் மூன்று மணி நேரம் வரை நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது. இது ஒரு இயற்கை க்கு அப்பாற்பட்ட நிகழ்வு. இது தேவனின் நியாயத்தீர்ப்பை, குறிப்பாக பாவம் நிறைந்த மனிதகுலத்தின் மீது தேவன் கொண்டிருந்த துக்கத்தையும், பாவத்திற்காக இயேசு சுமந்த தண்டனையையும் குறிக்கிறது. இருள் உலகம் முழுவதும் மூடிக் கொண்டிருந்த 3மணி நேரம், நம் ஆண்டவர்
இந்த பூமியின் பாதாளத்தில்
3 நாட்கள் இருந்ததை நினைவு
ப்படுத்துகிறது.
2.தேவாலய திரைசீலை;
தேவாலயத் திரை கிழிந்தது தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தல த்தையும் மகா பரிசுத்த ஸ்தலத் தையும் பிரிக்கும் திரை மேலி ருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. இது இனி மனிதர்கள் நேரடியாகத் தேவனை அணுக லாம் என்பதையும், பழைய உடன்படிக்கை முடிந்து புதிய உடன்படிக்கை தொடங்கியதையு ம் காட்டுகிறது.
இரண்டாக கிழிந்த திரைச்சீலை
கடவுள் உலக மக்களை நியாதீர் ப்பில் இரண்டாகப் பிரிப்பதை காட்டுகிறது.கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. (மத்தேயு நற்செய்தி 27:52) நாம் அனைவரும் உயிர்த்து வரும்
கிறித்துவை குருத்தோலை
கையில் ஏந்தி அவரை வரவே ற்போம் என இது குறிக்கிறது.
3.தந்தையே!
அன்பர்களே! தந்தையே இவர்களை மன்னியும் என
முதல் வார்த்தையை ஆரம்பித்து
இயேசுவின் இறுதி வார்த்தை யான "தந்தையே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவி க்கிறேன்" (திருப்பாடல் சங்கீதம் 31:5) கூறியபடி, இயேசு சத்தமி ட்டுச் சொன்னார்.
"தந்தையே" என சிலுவையின் வேதனையின் உச்சத்திலும், அவர் தேவனைத் தன் பிதாவாக வே கருதினார்.
4."ஒப்புவிக்கிறேன்":
ஆண்டவரின் மரணம் தற்செய லாக நிகழ்ந்ததல்ல, அது அவரது முழு விருப்பத்துடன், தந்தை மீது வைத்திருந்த பரிபூரண நம்பிக் கையில் தன் ஆவியை ஒப்படை த்த செயல்.
,இயேசுவின் மரணம் ஒரு தோல்வியல்ல, மாறாக மீட்பின் திட்டம் நிறைவேறிய வெற்றி யின் தருணம். இருள் விலகி, பிதாவின் பிரசன்னம் மீண்டும் அவர் மீது பிரகாசிப்பதைக் குறிக்கும் வகையில், இந்த இறுதி வார்த்தைகள் அமைதியின் அடையாளமாக உள்ளன.
இறுதியாக
இந்த வசனங்கள், இயேசுவின் மரணத்தின் வழியாக, மனிதர் கள் பாவம் மன்னிப்புப் பெற்று, தேவனுடன் மீண்டும் இணைக்க ப்பட்டுள்ளனர் என்ற நம்பிக்கை யைத் தருகின்றன.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
Crucifixion, seen from the Cross by James Tissot, c. 1890

Comments
Post a Comment