உயிர்த்தெழுதல்: மரணத்தின் மீது வெற்றி.(273) Resurrection: Victory over death. எசேக்கியேல் 37:11-28, திருப்பாடல் 49. IIகொரிந்தியர் 5:1-10. யோவான் 20:1-8.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நன்னாளின் ஞாயிறு தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டி
ருப்பது,"உயிர்த்தெழுதல்: மரணத்தின் மீது வெற்றி" என்
பதாகும்.
உயிர்த்தெழுதல் என்பது இறந்துபோன ஒருவர், கடவுளின் வல்லமையால் மீண்டும் உயிரு டன் எழுந்து வருவது இதற்கு (அனஸ்டாசிஸ் - (Anastasis) என்பது "எழுந்து நிற்றல்" அல்ல து "உயிர்த்தெழுதல்" என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையாகும்). . இது கிறிஸ் தவ நம்பிக்கையின் முக்கிய அடித்தளமாக, இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்திற்குப் பிறகு மூன்றாம் நாளில் மகிமையுடன் மரித்தோரிலிருந்து உயிர்பெற்று எழுந்த நிகழ்வைக் குறிக்கிறது. (Resurrection means, In the Christian religion the return to life of Jesus Christ.)
I கொரிந்தியர் 15:55-ல் உள்ள "சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" என்ற வசனம், இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதலால் மரண த்தின் மீதான வெற்றியை பறைசாற்றுகிறது. பாவமே சாவின் கொடுக்கு (வலி) என்றும், கிறிஸ்துவின் மூலம் நமக்கு வெற்றி கிடை த்துவிட்ட தால் சாவு ஒரு தோல்வியுற்ற சக்தியாக மாறிவிட்டது என்றும் இது விளக்குகிறது.
1.உலர்ந்த எலும்புகள் தரிச னம். The vision of the dry bones) எசேக்கியேல் 37:11-14)
நண்பர்களே பாபிலோனிய சிறையிருப்பில் (பாபிலோனிய சிறையிருப்பு (கி.மு. 586-538 6ம் நூற்றாண்டு) என்பது நேபுகாத் நேச்சார் II மன்னன் கீழ், யூத மக்கள் எருசலேமிலிருந்து பாபி லோனுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு முக்கிய வரலாற்று மற்றும் விவி லிய நிகழ்வாகும். சாலமோன் தேவாலயம் அழிக்கப்பட்டு யூதர் கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் 70 ஆண்டுகள் நீடித்த இக்காலகட் டத்தில், யூதர்கள் தங்கள் சமய அடையாளத்தைத் தக்கவைத்து க் கொண்டு, ஜெப ஆலயங்கள் (Synagogues) மற்றும் வேதப் படிப் புகளை உருவாக்கினர்.) நம்பிக்கையிழந்த இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது. கடவுள் தத்ரூபமான இந்த தரிசனம் மூலம், மரணத்தை ஒத்த நிலை யில் உள்ள தேசத்திற்குப் புதிய வாழ்வு (உயிர்த்தெழுதல்) அளிப்பதாகவும், அவர்களை மீண்டும் சொந்த தேசத்தில் நிலைநிறுத்தி, தம்மால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் வாக்குறுதி அளிக்கிறார்.
"எங்கள் எலும்புகள் உலர்ந்து (Dry Bones): போயின, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று" (வ. 11) என்ற மக்களின் கூற்று, அவர்கள் முற்றிலும் விரக்திய டைந்து, தங்களை ஒரு இறந்த தேசமாக கருதியதைக் காட்டுகி றது. இந்த எலும்புகள் இஸ்ரவே ல் வம்சத்தார் அனைவருமே,
இந்த தரிசனம் தனிநபர் உயிர்த்தெழுதலை விட, தேசிய மீட்பை (National Restoration) வலியுறுத்துகிறது. பாவம் மற்றும் நாடுகடத்தலால் மரித்த நிலையில் இருந்த இஸ்ர வேல், கடவுளின் ஆவியினால் மீண்டும் உயிர் பெற்று, ஒரு பெரிய சேனையாக எழுப்பப்ப டும்.
கடவுளின் வல்லமையால் உலர் ந்த எலும்புகள் சத்தமிட்டு ஒன்றி ணைவது, கடவுளின் வார்த்தைக் கு மனித நம்பிக்கைக்கு அப்பா ற்பட்ட சூழ்நிலையிலும் கடவுள் புதிய வாழ்க்கையைத் தர வல்ல வர்.
கடவுளின் புது உடன்படிக்கை:
சிறையிருப்பிலிருந்து திரும்பு வது மட்டுமல்லாமல், கடவுள் தமது ஆவியை அவர்களுக்குள் வைத்து, அவர்கள் சொந்த தேசத்தில் நிலைத்திருக்கச் செய்வார் என்ற வாக்குறுதி, இது ஒரு புதிய ஆரம்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது. "நான் அவர்களுடன் நல்லுறவு உடன் படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர் களை நிலைபெறச் செய்து அவர் களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய் வேன். (எசேக்கியல் 37:26)
எவ்வளவு பெரிய தோல்வியி லும், கடவுள் நம்பிக்கையைத் தர முடியும்.கடவுளின் வார்த்தையை அறிவிக்கும்போது, மரித்துப் போன சூழ்நிலைகளிலும் உயிர் உண்டாகும்.தேசிய மற்றும் ஆன் மீக மறுமலர்ச்சிக்கு கடவுளின் ஆவியானவர் (Spirit) அவசியமா னவர்.
இறுதியில்,
கடவுள் தம் மக்களுடன் என்றெ ன்றும் வாசம் செய்வார் என்ற வாக்குறுதியை இது குறிக்கி றது. "என் உறைவிடம் அவர்க ள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய்இருப்பேன்; அவர்கள் எனக்குமக்களாய் இருப்பர்" என்பது மீட்பு, ஒற்றுமை மற்றும் தூய் மைப்படுத்துதலைக் குறிக்கும், இஸ்ரயேல் மீதான அவரது அன்பின் உடன்படிக்கையாகும்.
இந்த உயிர்த்தெழுந்த திருநாளி ல், நாமும் கடவுளின் மக்களாய்
இருப்பேன் என்பதே நம் தரிசனமாக இருக்கவேண்டும்.
2.உயிர்த்தெழுதல்: கர்த்தரு டன் இருத்தல்.: Resurrection: Being with the Lord". II கொரிந் தியர் 5:1-10.
அன்பானவர்களே உயிர்த்தெழு தல் என்பது, "நாம் நித்திய நித் தியமாய், ஆண்டவரோடு இணைந்து இருப்பதை, தங்கி இருப்பதை உடன் இருப்பதை குறிக்கிறது, திருத்தூதர் பவுல் அடிகளார் நம் உடல் என்பது
ஒரு தற்காலிக "கூடாரம்" (Temporary Tent or Shelter (தற்காலிக தங்குமிடம்)
இது அழியும்போது, தேவன் பரலோகத்தில் நமக்கென்று கைகளால் கட்டப்படாத, நித்தியமான "கட்டிடம்" போன்ற சரீரத்தை ஆயத்தம் செய்து வைத்துள்ளார். இந்த நம்பிக்கை யால் மரணத்தைக் கண்டு பயப் பட வேண்டியதில்லை. திருத்தூதர் யோவான் அவர்கள்
தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், "உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்" என்று சொல்லியிருப்பேனா?
(யோவான் நற்செய்தி 14:2) என்கிறார்.
தேவன் நமக்கு பரிசுத்த ஆவியா னவரை முத்திரையாகக் கொடு த்து, இந்த நித்திய மகிமை நிச்ச யம் என்பதை உறுதிப்படுத்தியு ள்ளார்.
சரீரத்தில் இருக்கும்போது கர்த்தரை விட்டுத் தூரமாய் இருக்கிறோம். நாம் கண்ணால் காண்பதை வைத்து வாழாமல், தேவனுடைய வார்த்தை மீது விசுவாசம் வைத்து வாழ்கிறோ ம். சரீரத்தை விட்டு கர்த்தரோடு இருக்கும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
கிறிஸ்துவர்களின் முக்கிய நோக்கம்:
கர்த்தருக்குப் பிரியமாக வாழ்வ தே. நாம் அனைவரும் கிறிஸ்து வின் நியாயாசனத்திற்கு முன் நின்று, நம் சரீரத்தில் செய்த நன்மை தீமைகளுக்குப் பலன் பெறுவோம். இது இரட்சிப்பிற் கான தீர்ப்பு அல்ல, ஊழியங்க ளுக்கான வெகுமதி.
உயிர்த்தெழுதல்,
மரணத்தைப் பற்றிய பயத்தை நீக்கி, பரலோக நம்பிக்கையுடன், கர்த்தருக்குப் பிரியமான வாழ்க் கையை வாழ இந்த வசனங்கள் ஊக்குவிக்கின்றன.
இறையியலாளர்,
ஸ்பர்ஜனின் கூற்றுப்படி,
இரட்சிப்பு salvation என்பது ஆன்மா அல்லது ஆவிக்கு மட்டுமல்ல, உடலுக்கும் உரியது. உயிர்த்தெழுதல் மூலமே தேவன் நம் உடல்களை இரட்சிக்கிறார்
நீதிமான்கள் மிகவும் சோர்வுற்று, களைப்படைந்து தங்கள் கல்ல றைகளில் வைக்கப்படுகிறார்க ள்; ஆனால் அப்படியே அவர்கள் உயிர்த்தெழ மாட்டார்கள். அவர்கள் சுருங்கிய நெற்றியுட னும், குழிவிழுந்த கன்னத்துட னும், சுருக்கங்கள் நிறைந்த தோலுடனும் அங்கே செல்கிறார் கள்; ஆனால்,அவர்கள் அழகி லும் மகிமையிலும் விழித் தெழுவார்கள்.” என உயிற்த்
தெழுதலின் மகிமைப்படுத்து கிறார்.
திருத்தூதர் பவுல் அடிகளார்,
நாம் இனி கர்த்தரை விட்டுப் பிரிந்திருக்காத ஒரு நாள் வரும் . அந்நாளில், நாம் விசுவாசத்தி னால் நடக்க வேண்டியதில்லை , ஆனால் தேவனுடைய மகிமை யையும் பிரசன்னத்தையும் கண்ணால் காண்போம்.
இறுதியாக,
கிறிஸ்தவர்கள் இந்த சரீரங் களை விட்டு, புதிய சரீரங்களில் உயிர்த்தெழுப்பப்பட்டு, கர்த்த ருடன் இருப்பார்கள்.என்பதே
உயிர்த்தெழுதலின் நற்செய்தி யாகும்.
3.உயிர்த்தெழுதல்: காலி கல்லறை: Resurrection: The Empty Tomb.யோவான் 20:1-8.
அன்பர்களே! அதிகாலையில், இன்னும் இருட்டாக இருக்கும் போதே மகதலேனா மரியா கல்லறைக்குச் சென்றார். இது இயேசுவின் மீதான அவரது அளவற்ற அன்பையும், பக்தி யையும் காட்டுகிறது.மரியா காலி கல்லறையைப் பார்த்த தும், உடல் திருடப்பட்டதாகக் கருதி ஓடுகிறார். இது மனித இயல்பான பயத்தைக் காட்டுகி றது.
எனவே அவர் சீமோன் பேதுருவி டமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த யோவானிடம் வந்து, ";ஆண்டவரைக் கல்லறை யிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார். யோவான் முந்தி ஓடி னாலும், பேதுரு முதலில் உள்ளே செல்கிறார். இது யோவானின் அன்பையும், பேதுருவின் உணர் ச்சிப்பூர்வமான தன்மையையும் காட்டுகிறது.
கல்லறைத் துணிகள் :
கள்ளர்கள் உடலைத் திருடியிருந் தால், துணிகளை விட்டுவிட்டுச் சென்றிருக்க மாட்டார்கள். துணிகள் மடிக்கப்பட்டு, தலைக் கட்டு தனியாக வைக்கப்பட்டிருந் தது, இயேசு நிதானமாக உயிர்த் தெழுந்து வெளியேறியதைக் குறிக்கிறது.
கல்லறைக்குச் சென்ற பெண்கள்.The Women at the Tomb.
அன்பர்களே! கல்லறைக்குச் சென்ற பெண்களைப் பற்றி ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒரு கணக்கீடை கூறுகிறார்கள்.
1.மத்தேயு நற்செய்தி 28:1ல்
மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.
2.மாற்கு நற்செய்தி 16:1
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற் கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.
3.லூக்கா நற்செய்தி 24:10
அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர்.
4.யோவான் நற்செய்தி20:1
வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்;
மொத்தத்தில், மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாய் மரியாள், மற்றும் சலோமி.
இவர்கள் இயேசுவின் உடலைச் நறுமணப் வர்க்கங்களால் அபிஷேகம் செய்யவும், இறுதி மரியாதை செலுத்தவும், அவர் மீதிருந்த ஆழ்ந்த பக்தி மற்றும் அன்பின் காரணமாகவும் அங்கு சென்றனர். பெண்கள்தான் இறந்தவர்களை சுத்தம் செய் வார்கள், ஆனால், இயேசுவுக்கு, அடக்கம் செய்த அன்றே நிக்க
தேமு நறுமணப் பொருட்களால்,
ஆண்டவறை சுத்தம் செய்தார்.
காலியான கல்லறை: The
Empty Tomb.வெற்று கல்லறை.
பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தபோது, வலதுபுறத்தில் வெள்ளை அங்கி அணிந்த ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்கள். “திடுக்கிடாதீர்கள்,” என்றான் அவன். “சிலுவையில் அறையப் பட்ட நசரேயனாகிய இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்! அவர் இங்கே இல்லை. அவரை வைத்திருந்த இடத்தைப் பாருங் கள். ஆனால், நீங்கள் போய், அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும், ‘அவர் உங்களுக் கு முன்பாகவே கலிலேயாவுக் குப் போகிறார். அவர் உங்களுக் குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள்,’ என்று சொல்லுங்கள்.”என்றான்.
மாற்கு 16:8ல்
நடுங்கியபடியும் குழப்பமடைந் தபடியும், அந்தப் பெண்கள் வெளியே வந்து கல்லறையி லிருந்து தப்பி ஓடினார்கள். பயத்தின் காரணமாக அவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லவி ல்லை.
இறுதியாக,
கடவுள் இயேசுவை உயிரோடு எழுப்பியதன் மூலம், கடவுள் மரணத்தைவிட அதிக வல்லமை படைத்தவர் என்பதை நிரூபிக் கிறார்.பழைய பாவம் நிறைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, புதிய, புனிதமான வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்ற பாடத்தை இது கற்பிக்கிறது.
இயேசுவின் உயிர்த்தெழுதல், அவரை நம்பும் ஒவ்வொருவருக் கும் ஒருநாள் நித்திய வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அத்தாட்சிப்படுத்துகிறது.
இயேசு கல்லறையை வென்று உயிர்த்தெழுந்ததால், மரணம் என்பது முடிவல்ல, அது நித்திய வாழ்விற்கான தொடக்கம் என்பதை அறிய முடிகிறது.
உயிர்த்தெழுந்த இயேசு நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை, வாழ்க்கையின் துன்பங்கள் மற்றும் மரண பயத்திலிருந்து ஆறுதலையும் தைரியத்தையும் தருகிறது.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள்.இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " சீடராக் குங்கள்". யார் சீடர்? ஒரு சீடர் என்பது ஒரு ஆசிரியரின் போதனைகளை ஏற்று நடப்பவர், அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுபவர். ஒரு மாணவர் அல்லது கற்றுக் கொள் ளும் எவரையும் சீடர் என்று குறிப் பிடலாம். இயேசுவின் போதனை களை ஏற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அனைவருமே சீடர்கள்தான். ஒரு தலைவரின் போதனையை அறிவிக்காமல் யாரும் சீடராய் இருக்க முடியாது.சீடர் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களைப் பின்பற்றி நடப்பவர் மற்றும் அவரது வழிகாட்டுதலின் படி வாழ்பவர் என்று பொருள். சீடர்கள் 12 பேரும் இயேசுவுடன் நெருக்கமாகப் பழகி, அவரது போதனைகளை உலகெங்கும் பரப்பினார்கள். சீடராக்குங்கள் என்பது இயேசு வின் செய்தியை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களையும் அவரது சீடர்களாக மாற்றுவதைக் குறிக்கிறது. சீடர் என்ற சொல், ஒழுக்கம் போன்றது, லத்தீன் வார்த்தையான டிசிபுலஸிலிருந்து disciplus வந்தது, அதாவது "மாணவர்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் இரண்டாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்ப து," இருப்புநிலையை அறை கூவலிடும் இறைவார்த்தை". God's word Challenges the status Quo. நண்பர்களே! கடவுள் நமக்கு திட்டவட்டமாக கூறிய வார்த்தை, "நான் (இயேசு)உலகைச் சார்ந் தவனாய் இல்லாதது போல் அவர்களும் (சீடர்கள்)உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. " (யோவான் நற்செய்தி 17:16) இது அனைத்து கிறித்தவர்களுக் கும் அறைகூவலிடும் இறைவார் த்தை". நம் திருவிவலியம்,உலக விதிமுறைகளுக்கு இணங்கு வதை எதிர்க்கவும்,அநீதியை எதிர்த்து நிற்கவும், கலாச்சார மரபுகளை விட ஆன்மீகஉண்மை களுக்கு முன்னுரிமை அளிக்க வும் பின்பற்றவும், கடவுளின் வார்த்தை தற்போதைய நிலை க்கு சவால் விடுகிறது .நீங்கள் இந்த உலகத்தார் அல்ல" என்ற சொற்றொடர், குறிப்பாக கிறித் துவ இறையியலில், இயேசுவின் சீடர்கள் உலகத்தைப் பின்பற் று பவர்கள் அல்ல என்றும், அவர்கள் உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்...
Comments
Post a Comment