தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. (279)Holy Spirit : Promise of the Indwelling Presence. எசாயா 59: 14-21 திருப்பாடல் 143, எபிரேயர் 10: 8-18.யோவான் 14:15:21.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் ஆறாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது "தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. "
தூய ஆவி, விவிலியத்தில் புறா வடிவில் தூய ஆவி சித்தரிக்கப்ப டுகிறார்.
தந்தை (பிதா), மகன் (இயேசு கிறிஸ்து) ஆகியோருடன் இணைந்து உள்ளுறைந்து
செயல்படுபவர்.மனித இதயங் களில் வாசம் செய்து, வழிகாட்டி, ஆறுதல்படுத்தும் தேற்றரவா ளர் என்றும் அழைக்கப்படு கிறார்.மூவொரு இறைவனின் (Trinity) மூன்றாவது ஆள் ஆவார்.
தூய ஆவியின் கனிகள்;The Fruit of the Holy Spirit)
அன்பர்களே!கலாத்தியர் 5:22,23 ன் படி தூய ஆவியின் கனிகள், அன்பு,(love,) மகிழ்ச்சி,(joy,) அமைதி, (peace,,) பொறுமை,(forbearance), பரிவு,(kindness), நன்னயம்,(goodness,) நம்பிக்கை, (faithfulness,) கனிவு, (gentleness), தன்னடக்கம் (self-control). என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட் டத்திற்கு இடமில்லை.
பரிசுத்த ஆவியின் ஒன்பது முக்கிய கனிகள் (நற்குணங்கள்) ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை யில் தூய ஆவியானவர் உள்ளு றைந்து ஏற்படுத்தும் மாற்றத் தைக் குறிக்கின்றன.கிறித்து
வின் தூய ஆவியைப் பெற்றவ ர்கள், துதித்துகொண்டிருப்ப வர்கள்.
உள்ளுறைந்து என்றால் என்ன? What is Indewelling?
அன்பர்களே! உள்ளுறைந்து' என்ற வார்த்தை, உள்ளே தங்கி அல்லது மறைந்திருந்து (hidden/embedded inside) என்று பொருள்படும்.வெளிப்படையாகத் தெரியாத, உள்ளே மறைந்திரு க்கும் தூய ஆவியைக்குறிக்கும்.
உள்ளுறைந்து" என்பது ஒரு வினைமுற்றுச் சொல்லின் வினை எச்சம்: இது (உள்ளுறை ந்து - lying within hidden inside) இலக்கணக் குறிப்பு ஆகும். இதன் இலக்கண விளக்கம் கீழே கொடுக்கிறேன்.
வினைமுற்று என்பது ஒரு செயல் முற்றுப் பெற்றதைக் குறிக்கும் "Complete Verb"or Finite Verb ஆகும்.உ.ம். செய்தேன்.
In Christian theology, it describes the Holy Spirit living within a believer, guiding them, and acting as a permanent presence in their life.
தூய ஆவியினவர் உள்ளிருந்து
(In) நம்மோடு செயல்படும் வேளையில், இம்மானுவேல் ஆண்டவர் நம்முடனிருந்து (with) செயல்படுவது நம்மை
புதிய படைப்பிற்கு அழைத்து
செல்கிறது.
தூய ஆவியானவர் படைப்பில்
இருந்தாரா? Is holyspirit in Creat ion?
அன்பர்களே! தூய ஆவியானவர்
படைப்பில், தீவிரமாக செயல்பட் டார்.திருவிவலியத்தில் மண் ணுலகு உருவற்று வெறுமை யாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திர ளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிரு ந்தது. (தொடக்கநூல் 1:2)இது படைப்பின் ஆரம்பத்தில் தூய ஆவி பிரசன்னமாக இருந்ததை உறுதிப்படுத்துகிறது.தூய ஆவி என்பது கடவுளுடைய செயலை நடப்பிக்கும் வல்லமை அல்லது ஆற்றலாக விவரிக்கப்படு கிறது.
படைப்பில் தந்தை, மகன் மற்று ம் தூய ஆவியானவர் ஆகிய மூவருமே இணைந்திருந்தனர். தூய ஆவியானவர் கடவுளின் சர்வவல்லமையுள்ள ஆவியாக, இவ்வுலகை படைப்பதிலும், ஆதாம் ஏவாளை உருவாக்குவ திலும் பங்காற்றினார்.
இத்தகைய வல்லமையான தூய ஆவியைதான் கடவுள் தன் சீடர்க ளுக்கு கொடையாக கொடுத்த னுப்பினார்.
1.கடவுள் தம்முடைய பாவமு ள்ள மக்களை மீட்டெடுக்கி றார்.God redeems His sinful people."ஏசாயா 59:14-21,
அன்பர்களே! இஸ்ரவேல் மக்க ளிடமிருந்து, கடவுளுக்கு பல முறையீட்டும், வேண்டுதலும் செய்தும், உண்ணா நோம்பு இருந்தும் அவர் தொலைவில் இருப்பது போலத் தோன்றினார். அவர்கள் இறைவேண்டுதல் செய்தார்கள், ஆனால் அவர் களின் இறை வேண்டலை கேட் காததுபோலத் தோன்றியது.
இந்த சூழலில்,ஏசாயா 59:14-21,ல் மக்களின் பாவத்தினால் சமூக த்தில் நீதி, உண்மை மற்றும் நேர்மை முற்றிலும் அழிந்து
போன ஒரு இருண்ட சூழலை விவரிக்கிறது.நம் பாவம் நம்மை மிகவும் பாவமாகத் தோன்றுகி றோம், அவ்வாறே அவரின் கிருபை மிகவும் கிருபையாகத் தோன்றுக.
கடவுளே ஒரு மீட்பராக வந்து, அக்கிரமங்களை ஒழித்து, தம் மக்களுடன் நித்திய உடன்படிக் கை செய்து அவர்களைக் காப் பார் என்ற நம்பிக்கையை இந்த பகுதியில் இறைவாக்கினர் ஏசாயா மூலம் கடவுள் அளிக்கி றார். இஸ்ரேல் சமுகத்தில் நீதி பின்வாங்கியது, சத்தியம் வீதிக ளில் தடுமாறியது, நேர்மை காணப்படவில்லை என சமூகம் ஒழுக்கச் சிதைவின் உச்சத்தில் உள்ளதை வெளிப்படுத்தினார்.
மக்களுக்கு உதவி செய்யயாரு மில்லை என்பதைக் கண்டு, கர்த்தரே தலையிட்டு, நீதியைக் கவசமாகவும், இரட்சிப்பைத் தலைக்கவசமாகவும் தரித்து க்கொண்டு ஒரு போர்வீரனைப் போல வருகிறார்.
யாக்கோபில் அக்கிரமத்தை விட்டுமனந்திரும்புகிறவர்களுக்கு, சீயோனுக்கு ஒரு மீட்ப்பர் வருவார் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது.அந்த மீட்பர்
இயேசுகிறிஸ்துவே.
நித்திய உடன்படிக்கை;
இந்த கடினமான சூழலில், கடவு ள் தம் மக்களுடன் ஒரு நித்திய உடன் படிக்கை செய்கிறார். அவருடைய வார்த்தையும் உள் ளுறைந்து உடனிருக்கும் தூய ஆவியின் வாக்குறுதி. என்றென் றும் அவர்களை விட்டு விலகாதி ருக்கும் என்று உறுதியளிக்கி றார்.
2.கிறித்துவின் ஒறே பலியே இறுதி பலி.The one sacrifice of Christ is final.எபிரேயர்10:8-18.
அன்பர்களே! எபிரேய திருமுகம் யூத மதத்தில் இருந்து கிறித்து வை ஏற்றுக்கொண்ட யூதர்களு க்காக எழுதப்பட்டது இவர்கள் பழைய ஏற்பாட்டின் கொள்கை யிலே இருந்தார்கள் இவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை யூத மயமாக்க விரும்பினார்கள் அதனால் மீண்டும் யூத சமயத் திற்கு திரும்ப நினைத்தனர் அதைதடுக்க இத்திருமுகம் எழுதப்பட்டது.
பலிகள்:
இயேசு கிறித்துவின் பலிபழைய உடன்படிக்கையின் மிருக பலிக ளைப் போலல்லாமல், பாவ மன்னிப்பிற்காக ஒரே முறை, பரிபூரணமாகவும், நித்தியமாக வும் செலுத்தப்பட்ட ஈடு இணை யற்ற தியாகமாகும். இது மனித குலத்தை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்டு, கடவுளுடன் நித்திய உறவை ஏற்படுத்தி, தேவனின் அளவற்ற அன்பை வெளிப்படுத்துகிறது.
பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் லேவியர் ஆகமத்தின்படி தின மும் பலிகளைச் செலுத்தினர், ஆனால் அவை பாவங்களை ஒருபோதும் நீக்கவில்லை.
யூதர்களுக்கு பலி என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது தேவனுடைய பரிசுத்தத்தையும், மனிதனின் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்தும் ஒரு செயலாக இருந்தது.பலிகளின் நோக்கமே பாவத்திலிருந்து நிவாரணம்
பெற.லேவியர் 4-ம் அதிகாரம் பாவநிவாரண பலியைப் பற்றி பேசுகிறது. இது மனிதர்கள் அறியாமையினாலோ அல்லது பாவ சுபாவத்தினாலோ செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக கொடுக்கப்பட்டது.ஆனால், கிறித்துவின் பலி எக்காலத்தி ற்குமான ஒரே பலி.இது பழைய ஏற்பாட்டிற்கான அனைத்து பலி
களையும் நிறைவு செய்கிறது.
கிறிஸ்துவின் பலி, மனிதனுக் கும் கடவுளுக்கும் இடையில் இருந்த பிரிவினையை நீக்கி, தேவனோடு நம்மை ஒப்புரவாக் கியது.
பலிகள் திருச்சட்டப்படி செலுத் தப்பட்ட போதிலும் "நீர் பலிக ளையும் காணிக்கையையும் எரிபலிகளையும் பாவம் போக் கும் பலிகளையும் விரும்பவி ல்லை; இவை உமக்கு உகந்த வையல்ல" என்று எபிரேய ஆக்கியோன் அவர்கள் முதலில் கூறுகிறார்.
ஆண்டவர், அவர்களது தீச் செய லையும் அவர்களுடைய பாவ ங்களையும் இனிமேல் நினைவு கூர மாட்டேன்" என்றும் கூறுகி றார். காரணம், அவர்கள் பாவ மன்னிப்பு பெற்றவர்கள் இனி அவர்கள் பலி செலுத்த தேவை யில்லை.புதிய ஏற்பாட்டில், நம் உடலை தேவனுக்குப் பிரியமா ன, பரிசுத்தமான, உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு ள்ளது.இதோ, "உமது திருவுளத் தை நிறைவேற்ற, இதோ வருகி ன்றேன்" என்கிறார்.இயேசு கூறியதன் மூலம், பழைய உடன் படிக்கை நீக்கப்பட்டு, புதியஉடன் படிக்கை நிலைநிறுத்தப்பட்டது.
இறுதியாக,
இயேசு கிறிஸ்துவின் ஒரே பலி போதுமானது மற்றும் இறுதியா னது என்பதை உறுதிப்படுத்து கிறது. பழைய ஏற்பாட்டில் மிருக பலிகள் மீண்டும் மீண்டும் தேவைப்பட்டன, ஆனால் இயேசு வின் சிலுவை பலி பாவங்களை முழுமையாக மன்னித்து, பாவம் சார்ந்த கடனை முழுமையாக தீர்த்து, மீண்டும் பலி செலுத்த வேண்டிய அவசியத்தை முடிவு க்குக் கொண்டுவந்தது என்பதை
எபிரேய திருமுக ஆசிரியர் கூறுகிறார்.
3.உள்ளுறைந்து உடனிருக் கும் தூய ஆவி.The indwelling Holy Spirit. யோவான் 14:15-21.
அன்பர்களே!
தூய ஆவி என்பவர் அமைதி, ஆறுதல், மற்றும் மகிழ்வின் ஊற் று. அவர் நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துகிறார். சுருக் கமாக, இந்த வரிகள், "நாம் தனி யாக இல்லை" என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தருகி ன்றன. கடவுள் நம்முள் இருக்கி றார், நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்த்தி, வாழ்வில் ஏற்படும் போராட்டங்களைச் சமாளிக்கும் மன வலிமையை (உள்மன ஆறுதல்) தூய ஆவி வழங்குகிறார். இது, நம்மைச் செம்மைப்படுத்தி, இறைவனின் சாட்சிகளாக வாழத் தூண்டும் ஒரு தெய்வீக வல்லமையாகும்.
யோவான் 14:15-21-ல், இயேசு தம் சீடர்களுக்கு அன்பு, கீழ்ப்படிதல், மற்றும் தூய ஆவியானவரின் வாக்குறுதியை அளிக்கிறார். , இயேசுவின் மீதான அன்பு என்ப து உணர்வு மட்டுமல்ல, அது அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப் படும் செயலாகும்.இயேசு, தன் தந்தையிடம் வேண்டிக்கொண் டு, சீடர்களுக்கு பரிசுத்த ஆவியா னவரை அனுப்புவார். அவர் விசுவாசிகளோடு என்றென்றும் இருப்பார். ( 'துணையாளர்' (Paraclete)மூலம் விசுவாசிகள் அனாதைகளாக விடப்படாமல், தொடர்ந்து வழி நடத்தப்படுவார் கள்.
பாராக்லீட் (Paraclete) என்பது புதிய ஏற்பாட்டில் தூய ஆவியா னவரைக் குறிக்கப் பயன்படும் ஒரு கிறிஸ்தவ விவிலியச் சொல்லாகும்.
கிரேக்கத்தில் 'பாராக்லேட்
டோஸ்' (παράκλητος) என்பதன் பொருள் "உதவிக்கு அழைக்க ப்பட்டவர்" அல்லது "பக்கத்தில் இருப்பவர்" (One who comes alongside)ஆகும். ஆறுதலளிப்பவர் (Comforter) என்பவர் துன்ப நேரத்தில் தேற்றுபவர்.இவர் ஒரு வழக்கறிஞர் (Advocate) போல தேவனோடு நமக்காகப் பரிந்து பேசுபவர். இவர் உதவியாளர் மற்றும் ஆலோசகர் (Helper and Couns elor) விசுவாசிகளுக்கு வழிகாட் டுபவர்.
திருதூதர் யோவான் எழுதிய நற்செய்தியில், இயேசு கிறிஸ்து விண்ணேற்றத்திற்குப் பிறகு தம் சீடர்களுக்கு ஆதரவாக அனு ப்பும் பரிசுத்த ஆவியானவரை, அதாவது தேற்றரவாளனை இது குறிக்கிறது. கிறிஸ்தவ அன்பு என்பது இயேசுவின் வார்த்தை களை "நெஞ்சில் இருத்தி" (holding dear) அதன்படி நடப்பதே என்கிறார் இறையியளாளர்
திருதூதர் யோவான் எழுதிய நற்செய்தியில், இயேசு கிறிஸ்து விண்ணேற்றத்திற்குப் பிறகு தம் சீடர்களுக்கு ஆதரவாக அனு ப்பும் பரிசுத்த ஆவியானவரை, அதாவது தேற்றரவாளனை இது குறிக்கிறது. கிறிஸ்தவ அன்பு என்பது இயேசுவின் வார்த்தை களை "நெஞ்சில் இருத்தி" (holding dear) அதன்படி நடப்பதே என்கிறார் இறையியளாளர்
வில்லியம் பார்க்களே.(William Barclay)
இந்த உலகத்தால் ஆவியானவ ரைப் பார்க்கவோ அறியவோ முடியாது, ஆனால் விசுவாசிகள் அவரை அறிந்திருக்கிறார்கள். அவர் உள்ளுறைந்து உடனிருக் கும் வாக்குறுதியை அளித்திருக் கிறார். அவர் அனாதைகளாக விடப்படமாட்டார்கள். என் கட்ட ளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்ப வர் என்மீது அன்பு கொண்டுள் ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள் வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். " என உறுதியளிக்கிறார்.
பழைய ஏற்பாட்டில் தூய ஆவியா னவர் மனுசர்மீது தற்காலிகமாக வந்ததற்கும், புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் ஒவ்வொருவருக் கும் உள்ளே நிரந்தரமாக வாசம் செய்வதற்கு இது உறுதியளிக்
கிறது.
அன்பர்களே! விசுவாசிகளான நமக்கு பரிசுத்த ஆவியானவர் துணையாகவும், சத்தியத்தை போதிப்பவராகவும், நம்மை வழிநடத்துபவராகவும் எப்போதும் நம்மோடு இருக்கி றார்.
4.உள்ளுறைந்து உடனிருக் கும் தூய ஆவி ஏன் மணிப்பூர் போதகர்களை காப்பற்ற வில்லை?
Why did the Holy Spirit, who indwells and is present, not protect the pastors in Manipur?
அன்பர்களே! மணிப்பூரில் உள்ள கங்போக்பி (Kangpokpi) மாவட்ட த்தில், மே 13, 2026 அன்று, குக்கி சமூகத்தை சேர்ந்த 3 கிறிஸ்தவ போதகர்கள் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தாடூ பாப்டிஸ்ட் அசோசியேசனை (Thadou Baptist Association - TBA) சேர்ந்த Rev. டாக்டர். வும்தாங் சித்லோ, பாஸ்டர் கைகோலன் லூவும், பாஸ்டர் பாவுகோலன் சித்லோ ஆகிய 3 பேர்,
மத வழிபாட்டு கூட்டத்தில் பங்கே ற்றுவிட்டு திரும்பியபோது, இவர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
இந்தத் தாக்குதலில் மேலும் 4-5 பேர் காயமடைந்து மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.
கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் விசுவாசிகள் துன்பப்படுவதை கடவுள் அனுமதிப்பதற்கு திருவிவலியம் மற்றும் கிறிஸ் தவ இறையியல் பல காரணங் களை முன்வைக்கிறது. இது கடவுளின் அன்பற்ற தன்மை யைக் குறிக்கவில்லை, மாறாக அவருடைய ஆழ்ந்த நோக்கங்க ளை வெளிப்படுத்துகிறது.
1.இயேசு கிறிஸ்து மனிதகுல த்திற்காகத் துன்பப்பட்டார். போதகர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குச் சேவை செய்வதிலும், அவருடைய பாடுகளைப் பகிர்ந்துகொள் வதிலும் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
2.. உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணி வுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்பது ஆண்டவரின் வாக்கு.
3.கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந் தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன். என்ற
ஆண்டவரின் வார்த்தை பல இலட்ச மக்களை கிறித்துவுக் குள் கொண்டுவரும்.
4. இந்த மரணம் அவர்களை கிறிஸ்துவின் சாயலுக்கு மாற்ற உதவுகிறது. உயிர்த்தெழுதலில்
வெள்ளை அங்கி அணிந்தவர் களாய் முதல் வரிசையில் இருப்
பார்கள்.
5.போதகர்கள் தங்கள் சொந்த பலத்தை நம்பாமல், பலவீன மான நேரங்களில் கடவுளின் கிருபையை முழுமையாக நம்பு வதற்கு துன்பம் கற்றுக்கொடு க்கிறது.
6 இந்த உலகம் நிலையற்றது என்பதையும், நித்தியமான விண்ணக வாழ்வே முக்கியம் என்பதையும் துன்பம் நினைவூ ட்டுகிறது.
7.துன்பத்தின் நடுவிலும் நிலை த்து நிற்பது, விசுவாசத்தின் உண்மைத்தன்மையை உலகிற் கு சாட்சியாக பறைசாற்றுகிறது.
8.துன்பத்தின் மூலம் கடவுள் தம் மக்களைச் செம்மைப்படுத்தி, தமக்கு நெருக்கமாக்கி, இறுதி வெற்றிக்காகத் தயார்படுத் துகிறார்.
இத்தகைய, துன்பத்தின் ஊடே
சிலுவைப்பாடுகள், நமக்கு வெளிப்படுத்துவது கிறித்துவம்
துன்பம், மரணம், பாடுகள் மத்தி
யில்தான் உலகில் பரவியது.
என்னிலையிலும் உள்ளுறைந்து உடனிருக்கும் தூய ஆவி நம்மோடு இருந்து நம்மை பலப்ப
டுத்துகிறார், நாம் துன்பம் படும்
வேலையில் அவரும் ஆள் தத்து
வத்துடன் நம்முடன் துன்பப் படுகிறார்.துக்கப்படுகிறார்.
நாம் இந்த உலகத்தை சார்ந்த வர்கள் அல்ல. இந்த உலகின்
துன்பங்களை எதிர்நோக்கவும்
தயார்நிலையில் இருக்கவும்
தூய ஆவியானவர் உள்ளுறை ந்து உடனிருப்பதை உறுதியளிக் கிறார்.
நாம் இந்த வீழ்ந்த உலகத்தில் வாழ்வதால், துன்பங்களைச் சந்திக்கி அழைக்கப்படுகிறோம்.
கடவுள், உயிரிழந்த போதகர்கள்
காயம்பட்டோர், மணிப்பூர் திருச்சபையோடும், உலகில் பல
இடங்களில் துன்பப்படும், கிறித் தவர்களோடும் தூய ஆவியானர்
தொடர்ந்து உள்ளுறைந்துஉடனி ருப்பதை உறுதியளிக்க நம்
ஆண்டவர் அருள்புரிவராக.
ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..

Comments
Post a Comment