உழைப்பே வழிபாடு.: நமது பணியில் கடவுளை கனப்படுத் துவோம்.(286) Work as Worship.: Honouring God in our Professions. விடுதலைப்பயணம் 31:1-11, கொலோசியர் 3:22-25; திருப் பாடல் 104:1-24, லூக்கா::17:7-10.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், இவ்வார ஞாயிறு தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப் பது,"உழைப்பே வழிபாடு : நமது பணியில் கடவுளை கனப்படுத்துவோம்.Work as Worship.: Honouring God in our Professions." 
உழைப்பே வழிபாடு என்பது
திருவிவலியத்தில் வேலை என் பது சாபத்திற்கு முன்பே, அதாவது மனிதன் பாவம் செய்வ தற்கு முன்பே தேவன் கொடுத்த ஒரு ஆசீர்வாதமான கட்டளை யாகும்.
"ஏதேன் தோட்டத்தைப் பண்படுத் தவும் பாதுகாக்கவும் ஆண்டவரா கிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். (தொடக்கநூல் 2:15)
மனிதன் வேலை செய்யவே படைக்கப்பட்டான்.நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் தேவனு க்குச் செலுத்தும் உண்மையான வழிபாடாகும்.நமது அன்றாட உழைப்பை நேர்மையுடனும்,முழு மனதுடனும், தேவனை மகிமைப் படுத்தும் நோக்கத்துடனும் செய்யும்போது, அதுவே சிறந்த ஆராதனையாக மாறுகிறது
எபிரேய மொழியில், வேலை என்பது அவோடா(Avadoh) என்று அழைக்கப்படுகிறது. 'இது வேலை, வழிபாடு மற்றும் சேவை ") என்று  யூத மதத்தில் கடவுளுக்குச் சேவை செய்வதை க் குறிக்கிறது, மேலும் நவீன எபிரேயத்தில் இது வெறுமனே "வேலை" என்றும் பொருள்படும்.
இது, முதலில் எருசலேமில் உள்ள கோவிலில் வழங்கப்படும் பலிகளைக் குறிக்கப் அவோடா  பயன்படுத்தப்பட்டது.
உலக பொதுமறையான திருக் குறளில்," தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்." என்பது,
தெய்வத்தின் அருளாலே ஒரு காரியம் கைகூடாமல் தடைபட் டாலும், மனம் தளராமல் ஒருவர் செய்யும் முயற்சியானது, அவரது உடல் வருத்தத்திற்கான கூலி யை (பலனை) நிச்சயமாகத் தந்துவிடும் என உடல் உழைப் பால் ஏற்படும் சோர்வு வீண் போகாது; அதற்கான பலன் எப்படியாவது கிடைக்கும் என கூறுகிறார்.
"செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல் வம்,  கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைதான் நமது பதவி'-என சில வரிகளில் பக்கு வமாகக் கூறிவிட்டார் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இதிலிருந்து, உழைப்பும் வழி பாடும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்பது தெளிவாகி றது.எனவே, நாம் செய்யும் தொழிலோ, வேலையோ எது வாக இருந்தாலும், அதை முழு நேர்மையுடனும் திறமையுடனும் செய்யும்போது, அது தேவனுக்கு உகந்த நற்கிரியையாகவும், வழி பாடாகவும் மாறுகிறது.
1.உடன்படிக்கைப் பேழை
தெய்வீகத்தின்படைப்பாகும்.
The Ark of Covenant is the Work of Divine. விடுதலைப் பயணம் 31:1-11, 
அன்பர்களே! விடுதலைப்பயண ம் (யாத்திராகமம்) 31:1-11, கடவுள் தனது திருவுறைவிடத் தை (Tabernacle) அமைப்பதற் காக பெசலேல் (Bezalel) மற்றும் அகோலியாபு (Oholiab) ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான ஞானத்தையும் கைத்தொழில் திறமையையும் பரிசுத்த ஆவி யின் மூலம் அருளுவதை விவரி க்கிறது.
1 உடன்படிக்கைப் பேழை (பெட்டி)
உடன்படிக்கைப் பெட்டி (Ark of the Covenant) என்பது கடவுளால் மோசேக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைப்படி, சீனாய் மலையில் உருவாக்கப்பட்ட ஒரு தெய்வீகப் படைப்பு. இது கடவுளின் பிரசன் னத்தை (இருப்பிடத்தை) குறிக் கும் மிக புனிதமான பேழையா கும்.
1 கடவுளின் தெய்வீக அழைப்பு.
கடவுள் மோசேவிடம்,  "யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மக னான ஊரியின் மகன் பெசலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள் ளேன். கடவுள் ஒவ்வொருவரை யும் தனித்தனியாக அறிந்திருக் கிறார். அவர் தனது திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நபர் களைத் தேடி, பொறுப்புக்களைக் கச்சிதமாக ஒப்படைக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
இதன் மூலம் கடவுள் நமக்கு வெளிப்படுத்துவது அவருடைய உன்னதமான பணிக்கு கடவுள் நம்மையும் அழைக்க சித்தமாய் இருக்கிறார். சிலரை அழைத்தும் பொறுப்பை கொடுத்திருக்கிறார் அந்தப் பொறுப்பை சிறப்பாக செய்வதே தெய்வீக பணியாகும்
திருவிவலியத்தில் தூய ஆவி யானவர் ஒரு குறிப்பிட்ட நபருக் குள் இறங்கி வேலை செய்ததா கக் கூறப்படும் முதல் நபர் பெசலேல் ஆவார். கடவுளின் பணியைச் செய்ய மனித ஆற்ற ல் மட்டும் போதாது, தெய்வீக ஞானமும் (Wisdom), நுண்ணறி வும் (Understanding), அறிவும் (Knowledge) தேவை என்பதை இது வலியுறுத்துகிறது.
பரிசுத்த ஆவியானவர் பெட்சலே லுக்கு பொன், வெள்ளி, மற்றும் வெண்கல வேலைகள், மர வேலைகள், மற்றும் சிற்ப வேலைகள் செய்வதற்கான தகுதிகளைத் தருகிறார். நம்
மக்களின் அன்றாடத் திறமை கள் மற்றும் கைத்தொழில்கள் கூட கடவுளால் தரப்பட்ட வரங் கள் தான். 
தம் அறிவு, ஞானம், திறமை கடவுளின் மகிமைக்காகப் பயன் படுத்தப்படும் போது நம் பணி பரிசுத்தமான சேவையாக மாறு கின்றன.
2. கலை மற்றும் ஆன்மீகத்தி ன் இணைப்பு.
கடவுள் தானாகவே முன்வந்து பெசலேலுக்கு உதவியாக தாண் குலத்தைச் சேர்ந்த அகோலியா பை நியமிக்கிறார். மேலும், திறமை வாய்ந்த மற்றவர்களுக் கும் அந்த வேலையைச் செய்ய அறிவுறுத்துகிறார். கடவுளின் பணி ஒரு தனி மனிதனின் முயற்சியால் மட்டும் நடப்பதில் லை. அது ஒரு கூட்டு முயற்சி (Teamwork). தலைமைப் பொறுப் பில் இருப்பவர்கள் மற்றவர்க ளின் திறமைகளை மதித்து, அவர்களுடன் இணைந்து பணி யாற்ற வேண்டும்."ஒற்றுமையே வெற்றிக்கு வழி". அமெரிக்க தொழிலதிபர் என்ரி போர்ட் Henry Ford.அவர்கள், "Coming together is a beginning. Staying together is progress. Working together is success."  என இணை ந்து பணியாற்றுவதை வெற்றி என கூறுகிறார்.
3. கீழ்ப்படிதலின் முக்கியத் துவம். 
உடன்படிக்கைப் பேழை (Ark of the Covenant), திருமுளைப்பீடம், மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் உட்பட அனைத்துப் பொருட்களையும் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்ய வேண்டும் என்று கடவுள் வலியு றுத்துகிறார். : ஆன்மீகப் பணி யில் நமது சொந்த யோசனை களைவிட, கடவுளின் திட்டத்திற் கும் வார்த்தைக்கும் கீழ்ப்படிவது மிக முக்கியமானதாகும்.இது நமக்குமேல் இருக்கும்அதிகாரிக ளுக்கு கீழ்படிய வேண்டும். கிறிஸ்தவர்களின் முக்கிய குணங்களில் ஒன்று கீழ்ப்படிதல் தன்னை தாழ்த்துகிறவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்பது உறுதி.
4. உடன்படிக்கைப் பேழை (Ark of the Covenant), சிறப்பம்சங் கள்.
மரப்பெட்டி: இது சித்தி மரத்தால் (Acacia Wood) செய்யப்பட்ட ஒரு பெட்டி. இதன் உள்பகுதியும், வெளிப்பகுதியும் தூய பொன் னால் மூடப்பட்டிருந்தது.இதில் கிருபாசனம் (Mercy Seat): பெட்டியின் மேல் பகுதி தூய பொன்னால் செய்யப்பட்ட மூடி யால் மூடப்பட்டிருந்தது. இதுவே தேவனுடைய பிரசன்னம் இறங் கி வரும் இடமாகக் கருதப்பட்டது. கேருபீன்கள்: அந்தப் பொன் மூடியின் இரு முனைகளிலும் இறகுகளை விரித்தபடி இரண்டு கேருபீன்கள் (தேவதூதர்கள்) காணப்பட்டன. இதன் உள்ளே இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த பத்து கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகை கள் வைக்கப்பட்டிருந்தன.
இதன் வரலாற்றுப் பின்னணி: 
அன்பர்களே! இஸ்ரவேலர்களின் பாலைவனப் பயணத்தின்போது அவர்களின் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்ப ட்டது. பிற்காலத்தில் சாலொ மோனால் கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்தில் இது வைக்கப்ப ட்டது. பாபிலோனியர்கள் கி.மு 586ல் அதன் அரசர் நெபுகாத்நே சர் -2,  எருசலேமைத் தாக்கிய போது உடன்படிக்கைப் பேழை (Ark of the Covenant), காணாமல் போனது.
 புதிய ஏற்பாட்டின்படி, இது கடவுளின் உடன்படிக்கைக்குரிய சின்னமாகவும், உலகத்தின் பாவத்தை மன்னிக்கும் தேவனு டைய கிருபைக்குரிய அடையாள மாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த அழகுமிகு வேலைப் பாடா ன உடன்படிக்கைப் பேழை கடவுளை கனப்படுத்துவதாக
இருந்தது.
2.நமது பணியில் கடவுளை கனப்படுத்துவது எப்படி? How to honor God in our work?கொலோசியர் 3:22-25.
நண்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் நேரடியாக கொலெ சியா நகரில்  நற்செய்திப் பணி யாற்றவில்லை. எபேசு திருச் சபையில் இருந்து எப்பபிரா மூலம் இப்பகுதிகளுக்கு நற் செய்தி ஆற்றினார. இத்திரு முகம் கிபி 70 - 80 ஆண்டுகளில் எழுதப்பட்டது.
 கொலோசியர் 3:22-25ல், வசனம்
22ஐ, "அடிமைகளே" என பவுல்
அடிகளார் ஏன் எழுதினார்?
அன்றைய ரோமப் பேரரசில் நிலவிய சமூக அமைப்புக்குள் கிறிஸ்தவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அறிவுறுத் தவே ஆகும்.அடிமைகளைப் (பணியாளர்களை) பற்றி எழுதியது, சமூக அமைப்பை வன்முறையால் மாற்றுவதற்குப் பதிலாக, கடவுளின் அன்பை அடிப்படையாகக் கொண்டு எஜமானர்களுக்கும் அடிமைகளு க்கும் இடையிலான உறவை அவர் மாற்றியமைத்தார்.
அடிமைகள் தங்கள் பூமிக்குரிய எஜமானர்களுக்கு மனப்பூர்வ மாக கீழ்ப்படிய வேண்டும் என்று பவுல் ஊக்குவித்தார். மனிதர்க ளை மகிழ்விப்பவர்களாக இல்லாமல், கடவுளுக்குப் பயந்து நேர்மையாக உழைக்கும்படி அறிவுறுத்தினார்
அடிமைகள் செய்யும் ஒவ்வொரு வேலையும் எஜமானர்களுக்காக மட்டுமல்ல, அது விண்ணகத்தில் உள்ள ஆண்டவராகிய கிறிஸ்து வுக்குச் செய்யப்படும் சேவையா கும்.இந்த வசனம் அடிமைத்தன த்தை ஆதரிக்கவில்லை.
தேவனுடைய பிள்ளைகள், தன் பணியில், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, அவரை மகிமைப்படுத்தும் ஒரு வாழ்க் கையை வாழ வேண்டும்.
திரு தூதர் பவுல் அடிகளார் இரண்டு வெவ்வேறு வகையான வேலை களைப் பற்றிப் பேசுகிறார். 
1. "கர்த்தருக்கான வேலை" (3:23–24) மற்றும் 
2."இறையரசிற்கான வேலை" (4:11)
அன்றாட வேலையைத் தேவனுக் கான சேவையாக மாற்றுவதை யும், முழு மனதுடன் கர்த்தருக் காகச் செயல்படுவதையும் வலியுறுத்துகின்றன. பூமிக்குரிய எஜமான்களுக்குச் செய்யும் வேலைக்குக் கிறிஸ்து விடமிருந்து வெகுமதி கிடைக் கும் என்றும், கடவுள் பாரபட்சமி ன்றி நீதியை நிலைநாட்டுவார் என்றும் இந்தப் பகுதி விளக்குகி றது.
நாம் நம்முடைய வேலையை அல்லது கடமையைச் செய்யும் போது, அதை மனிதர்களைத் திருப்திப்படுத்தவோ அல்லது புகழுக்காகவோ செய்யாமல், கடவுளுக்குச் செய்வதுபோல அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். நாம் அவ்வாறு  உண் மையோடு செய்யும் போது உழை ப்பிற்கான பலனை அல்லது சுதந்தரத்தை, பூமிக்குரிய முத லாளிகளிடமிருந்து அல்ல, கர்த்தராகிய இயேசுவிடமிருந்து பெறுவோம்.நாம் பணிபுரியும் இடத்தில் யாரின் கீழ் வேலை செய்தாலும், நமது உண்மை யான எசமானர் கிறிஸ்துவே ஆவார்.
நாம் செய்யும் ஒவ்வொரு செய லுக்கும் கடவுளின் நீதிப்படி பலன் உண்டு. தம் பணியில் தவறு செய்பவர்கள் அதற்கான விளைவுகளை நிச்சயமாகச் சந்திக்க நேரிடும்.  கடவுள் மனித ர்களின் அந்தஸ்து, பதவி, அல்லது செல்வாக்கைப் பார்த்து ஒருபோதும் பாரபட்சம் காட்டுவ தில்லை; எஜமானாக இருந்தா லும், அடிமையாக இருந்தாலும் அவரது நீதி இருவருக்கும் சமமா னது.
3.நமது பணியில் கடவுளை கனப்படுத்துவோம்.Honouring God in our Professions.லூக்கா 17:7-10 
அன்பர்களே! லூக்கா 17:7-10ல், இயேசு ஒரு பணியாளனின் (அடிமையின்) உவமையைக் கூறுகிறார்.சீடர்களுக்கு கடவுளி டம் மனத்தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்பகுதி போதிப்பதாகும். சீடர்கள் இயேசுவிடம் “எங்கள் விசுவாசத்தை அதிகரியும்” என்று கேட்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தில் பெரிய சக்தி, அதிகாரம் அல்லது அங்கீகாரம் வேண்டும் என்று விரும்பினர்.
 வயலில் வேலை செய்துவிட்டு களைப்புடன் வரும் ஒரு பணியா ளனுக்கு, அவனது எஜமானன் உடனே உட்கார்ந்து உணவருந் தும்படி கூறமாட்டான். மாறாக, முதலில் எஜமானுக்கு உணவு சமைத்துப் பரிமாறிவிட்டு, அவன் உண்ட பின்னரே பணியாளன் சாப்பிட வேண்டும்.
இது,பணியாளனின் கடமை.
ஒரு வேலைக்காரன் தன் கடமை யைச் செய்ததற்காக அவனது எஜமான் அவனுக்கு நன்றி கூற வோ அல்லது விசேச சலுகை காட்டவோ கடமைப்பட்டவன் அல்ல. அதைப் போலவே, கடவு ளுக்கு நாம் செய்யும் நன்மைக ளோ அல்லது கீழ்ப்படிதலோ அவரை நமக்குக் கடனாளியாக் காது.நாம் அனைவரும் அவரு டைய கட்டளைகளைச் செய்யும் "சாதாரன ஊழியர்கள்,"
கடவுளுக்கு நாம் சேவை செய்வ தை வைத்து, அவர் நமக்கு ஏதாவது திருப்பித் தர வேண்டும் என்று பேரம் பேசக்கூடாது.
கடவுள் நமக்கு எல்லாவற்றை யும் தந்துள்ளார். எனவே, அவரு க்கு நாம் செய்யும் எந்தவொரு சேவையும், நம்முடைய கடமை க்கு உட்பட்டது தானே தவிர, அது ஒரு பெரிய தியாகமோ அல்லது சாதனையோ அல்ல நாம் எப்போ துமே அவரிடமிருந்து கிருபை யைப் (Grace) பெறுபவர்களே தவிர, உரிமை கோருபவர்கள் அல்ல.கடவுளை நம் கடனாளி யாக்க முடியாது:
நாம் நம்முடைய நற்செயல்க ளையோ, தியாகங்களையோ நினைத்து பெருமை கொள்ளக் கூடாது. நம்மை நாமே தாழ்த்தி, "நாங்கள் பயனற்ற ஊழியர்கள்; எங்கள் கடமையை மட்டுமே நாங்கள் செய்தோம்" என்று ஒப்புக்கொள்வதே உண்மையா ன சீடத்துவத்தின் அடையாளம்.
இந்த உவமை, பலனை எதிர்பா ர்த்து செய்யும் சுயநல சேவை யை எதிர்க்கிறது. ஒரு உண்மை யான சீடன் தன் எஜமானின் (கடவுளின்) கட்டளைக்குக் கீழ்ப் படிவதையே தன் முழுமையான பாக்கியமாகக் கருதி, அன்பின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டும். இந்த உவமை மூலம் இயேசு, சீடர்களுக்குள் வரக் கூடிய அகந்தையைத் தடுத்து, முழுமையான கீழ்ப்படிதலும் மனத் தாழ்மையும் கொண்ட மன நிலையை வலியுறுத்துகிறார்.
இறுதியாக, 
இயேசுவின் இந்த உவமையா னது, கடவுளிடம் பேரம் பேசும் மனப்பான்மையையும், ஆன்மீக அகந்தையையும் (Self-righteous ness) தவிர்த்துவிட்டு, எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தூய அன்புடன் சேவை செய்ய வேண்டும் என்பதை சீடர்களுக்கு உணர்த்துகிறது.
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பது நமது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய வாக்கா கும். நமது தொழிலில் இறைவ னைப் போற்றுவது என்பது, நமது உழைப்பை நேர்மையுடன் மேற்கொள்வதும், அதில் பிறரு க்கு நன்மை விளைவிப்பதும், செய்யும்ஒவ்வொருசெயலையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சேவையாகக் கருதுவதும் ஆகும்.
4.நமது பணியில் கடவுளை கனப்படுத்தும் முறைகள்:
1.நேர்மையும் அர்ப்பணிப்பும்: எந்தவொரு தொழிலையும் முழுமையான பொறுப்புணர்வு டனும், நேர்மையுடனும் செய்யும் போது அங்கே இறைவன் போற் றப்படுகிறார். "நன்று, நம்பிக்கை க்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக் கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சி யில் நீரும் வந்து பங்குகொள் ளும்" என்றார். (மத்தேயு நற்செய்தி 25:23)
2.சேவை மனப்பான்மை:
 நமது தொழில் மூலம் பிறருக்கு நன்மையும் மகிழ்ச்சியும் கிடைக் கும்போது, அதுவே இறை வழி பாடாகிவிடுகிறது.
3.நன்றியுணர்வு: 
தொழில் மூலம் நமக்குக் கிடைக் கும் வருமானத்திற்கும், வளர்ச் சிக்கும் இறைவனுக்கு நன்றியு டையவர்களாக இருத்தல் வேண் டும்.திருச்சபை வளர்ச்சிக்கும் அதன் நற்செய்தி பணிக்கும் நம் பண உதவி மிக அவசியமாகும்.
4.அன்பு செலுத்துதல்: 
சக பணியாளர்களிடமும், பிறரி டமும் அன்பாக நடப்பது இறை வனை மதிப்பதற்குச் சமமாகும்.
நம் பக்தியை காட்டிலும் உயர்ந் தது அன்பே ஆகும்.
ஆண்டவரே! உழைப்பே வழி பாடு என்ற எண்ணத்தோடு,. எங்கள் பணியில் கடவுளை கனப்படுத்த அனுதினமும் அருள் புரிவாயாக, ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com.









The erection of the tabernacle and the Sacred vessels, as in Exodus 40:17–19; from the 1728 Figures de la Bible.

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.