கனியற்ற அத்திமரம் சபிக்கப்படுதல், போலி ஆன்மீகவாதத்தின் முடிவு. Jesus curses the Fig tree which bears no fruits, the End for the Fake Spirituality.மாற்கு 11:12-14, 20,21 பரிசுத்த திங்கள் Holy Monday .
முன்னுரை: கிறிஸ்துவின் அன்பர்களே! கனியற்ற அத்திமரம் சபிக்கப்படுதல், போலி ஆன்மீகவாத்தின் முடிவு. என்ற தலைப்பு ஆண்டவ ரின் பசிதாபத்தை வெளிப் படுத்தும் தன்மையை குறிக்கிறது. அவர் சாந்த குணமுள்ளவர். ஆனால் இந்த மரம் கனி தராததால் அதைசபிக்கின்றார். உண்மையில் இயேசுவிடம் பணம் இல்லை. பணத்தை அவர் வைத்து கொள்வ தில்லை. (மத்தேயு 17:24-27) உணவு வாங்க காசும் இல்லை. Jesus is a Penniless God. இந்த பசியின் கொடுமையினால் அத்தி மரத்தை பார்க்கிறார். சபிக்கிறார்.அவர் எருசலேம் செல்லும் வழியில் இந்த அத்திமரத்தை காண்கிறார். அது கனிகாய்க்கும் காலமல்ல. ஆனாலும் அந்த மரம் ஆண்டவரூக்கென்றே சில கனிகளை கொடுத் திருக்க வேண்டும். அவர் தன் பசியாற்றிருப்பார். நம்மை எப்பொழுதும் ஆவியின் கனி தரும் நபராக எதிர்பார்க்கிறார். அத்தி மரம் இஸ்ரவேலரை குறிக்கும். ( ஓசியா 9:10)( எரோமியா 8:13) அவர்கள் மேசியாவாகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. யோவான் நற்செய்தியாளர் 1:11ல் "அவர் தமக்குரிய வர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வில்லை." இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்பட்ட அத்தி மரத்தை போன்றவர்கள். ஆதாம் ஏவாள...