கிறித்துவை நம்புவதே வழி: BELIEVING IN CHRIST விப: 14:10-20, திருப்பாடல் mm:1-7.
முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! கிருத்துவை நம்புவதே வழி. வழி என்றால் எது? அது ஜீவ வழி. வழிகாட்டிட வந்தவர் இயேசு. ஏனெனில் வழியும் அவர், சத்தியமும் அவர், ஒளியும், அவர் உன்னதமும் அவர். அவர் வழியே நித்திய வழி. நித்திய ஜீவனுக்கான வழி. நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாய் இருக்கிறேன் என்றவர் நல்வழி காட்டுகின்ற நல்ல ஆண்டவர்.யோவான் மட்ட நற்செய்தி 14:6ல் " இயேசு "நானே வழியும் உண்மை யும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை". தந்தையிடம் செல்ல அவர் ஒருவரே வழி. Jesus Christ is the Passport to Enter into Heaven. எரேமியா 6:16 "ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். இஸ்ரவேலரோ "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்." அவர் வழியில் செல்வர் களுக்கு அமைதி உண்டு. ஏனென்றால் அவர் அமைதியில் அரசர் ( The Prince of Peace) அவர் வழியே அமைதி தரும் வழி. தந்தை யுடன் இணைக்கின்ற நேர் வழி. ஆண்டவரின் வழி "உனக்கு அ...