இறைவேண்டலில் விடாமுயற்சி.(118) Persistence in Prayer. 2 அரசர் கள் 20:1-11. திருப்பாடல்: 116. 1 தெசலோனிக்கேயர் 5:12-22. மாற்கு: 7:24-30.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இறைவேண்டல் என்பது கடவுளி டம் பேசும் மொழியாகும். இறை வேண்டுதல் செய்யாமல் இறைவனிடம் செல்ல முடியாது. இறைவனிடம் கேட்டு பெரும் ஒரு வழியே இறை வேண்டல். கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற வார்த்தை இறைவேண்டல் மூலமாகவே செயல்படுகிறது. இறைவேண்டுதளுக்கான தகுதியான நேரம் அது காலை நேரம். காலை நேரமே கர்த்தரின் மகிமையை காணும் நேரம். திருப்பாடல்(சங்கீதம்)5:3ல்,"ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறை யில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன். தாவீது அதிகாலையில் எழுந்த வர்; தான் மாத்திரமல்லாது தனது உதடுகளும் இசைக்கருவிகளும் அதைப் போன்று துதிகளைப் பாடவும் தீர்மானித்திருந்தார். ஆதலால் அவர் “வீணையே, சுர மண்டலமே, விழியுங்கள்” என்று அழைக்கிறார். "வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன்." திருப்பாடல்(சங்கீதங்கள்) 108:2. இறை வேண்டல் முதலில் துதித்தலுடன் ஆரம்பிக்க வேண் டும், துதிகளுக்குள் வாசமாயிரு க்கிற தேவரீரே பரிசுத்தர். (திரு ப்பாடல்:22:3)என துதியுங்கள். உதடுகளின் கனியாகிய ஸ்தோத் திரப் பலிகளை செலுத்துங...