திருமணம்: ஒன்றித்த பங்களி ப்பின் கொண்டாட்டம் (289) Marriage: Celebration of Unity and Partnership. சபை உரையாளர் 4: 9-12, எபேசியர் : 5:21-33,; திருப் பாடல் 128, மத்தேயு; 19: 4-6.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "திருமணம்: ஒன்றித்த பங்க ளிப்பின் கொண்டாட்டம்"
திருமணம் என்பது இரு மனங் கள் இணையும் ஒரு சமூக, சட்ட மற்றும் ஆன்மீக ஒப்பந்தமாகும். புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்
சபையின் தந்தை என அழைக்க ப்படும், மார்ட்டின்லூதர் அவர்க ளின் கருத்துப்படி, திருமணம்
என்பது தூயது, அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நல்வழி
என்கிறார்.திருமணம் என்பது "பண்புக்கான பள்ளி" (School of Character) என்றும் மார்ட்டின் லூதர் குறிப்பிடுகிறார். திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் ஒரு வாழ்க் கை முறை. இது அன்பு, பொறுப் பு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகிய நற்பண்புகளைக் கற்றுத் தரும் மிகச் சிறந்த ஒரு அனுப வப் பள்ளியாக அமைகிறது.
திருமணத்தை குறித்து லூத்தர்:
திருமணம் என்பது ஒரு புனித மான சடங்கு (Sacrament) அல்ல, மாறாக அது கடவுளால் மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு இயல்பான வாழ்க்கை முறை. குருமார்கள்கட்டாயமாகப் பிரம்மச்சரியத்தைக் (celibacy)
கடைப்பிடிக்க வேண்டும் என்ற கத்தோலிக்கத் திருச்சபையின் வழக்கத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். மனித இயல்புக்கு மீறிய கட்டாய பிரம்மச்சரியம் தவறு என்றார். கணவன் - மனைவி இடையே சிறுசிறு கரு த்து வேறுபாடுகள் வருவது இய ல்பு; அவற்றை ஒருவருக்கொரு வர் பொறுத்துக்கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே குடும்பத்தில் அமைதி நிலவ முடியும்.பிள்ளைகளைப் பெற்று அவர்களை இறைவழியி ல் வளர்ப்பது திருமண வாழ்க் கையின் மிகச் சிறந்த பலன் களில் ஒன்றாகும் என்று லூதர் நம்பினார்.
என்னுடைய வழிகாட்டி, ஆசான், இறையியலாளர்,தத்துவ ஞானி யான நார்மன் ஸ்ரீவின்சென்ட்
பீல் (Norman Vincent Peale) "நேர்மறை சிந்தனையின் வியத்தகு சக்தி" என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய வர், அவரது நேர்மறைசிந்தனை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித் த போதனைகள் தம்பதியினரு க்குப் பொருந்தும் வகையில் அமைந்திருந்தன. இவர் டொனால்ட் டிரம்ப் - இவானா டிரம்ப் மற்றும் ஜூலி நிக்சன் - டேவிட் ஐசனோவர் போன்ற பல பிரபலங்களின் திருமண ங்களை நடத்தி வைத்துள்ளார். திருமண வாழ்க்கை மற்றும் உறவு முறைகள் என்பது கணவ னும் மனைவியும் ஒருவருக் கொருவர் இணைந்து செயல் படும் சரியான ஜோடியாக இருக் க வேண்டும் என்று அவர் தனது சொந்த வாழ்க்கையிலும், போத னைகளிலும் குறிப்பிட்டார். கணவன், மனைவி ஒன்றாக இணைந்து இறைவனிடம் இறை வேண்டல் செய்யும் தம்பதிகள் எத்தகைய கடினமா ன சூழ் நிலையையும் எளிதில் கடந்து வெற்றி பெறுவார்கள் என்று அவர் நம்பினார். திரும ண வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைக் குறைகூறாமல், நேர்மறையான மனதுடன் எதிர் கொண்டு விட்டுக் கொடுத்துச் செல்வது உறவை நீடிக்கச் செய் யும் என்கிறார்.
திருமணம் அல்லது இல்வாழ்க் கை என்பது அன்பு, அறம் மற்று ம் பரஸ்பர ஒற்றுமையின் அடிப்படையில் அமைய வேண் டும் என்று திருவள்ளுவர்தனது திருக்குறளில் அழகாகவிளக்கு கிறார்.
பழையஏற்பாட்டில்திருமணம்.
Marriage is in the Old Testament
அன்பர்களே! திருமணம் என்பது ஒரு புனிதமான உறவாகவே பார்க்கப்பட்டது. அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவி லும், நம் சாயலிலும் உண்டாக்கு வோம். அவர்கள் கடல் மீன்களை யும், வானத்துப்பறவைகளையும், கால்நடைகளையும்,மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர் வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவி லேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்க ளைப் படைத்தார்.
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண் ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்து ங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.(தொடக்க நூல் 1:26-28) 2:24) இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியு டன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப் பர். ஆணும் பெண்ணும் ஒருவ ருக்காக ஒருவர் படைக்கப்பட்ட வர்கள்.
தொடக்க நூலில்(ஆதியாகமம் 1:27-28 )- ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்து, பெருகி பலுகும்படி கடவுள் ஆசீர்வதித் தார்.பழைய ஏற்பாட்டின் நடை முறைகள்ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற ஒருதார மணமே கடவுளின் தொடக்க நோக்கமாக இருந்தது.பிந்தைய காலங்களி ல் சூழ்நிலைகள் மற்றும் மனித பலவீனங்களால் பலதார மணம் மற்றும் விவாகரத்து போன்ற நடைமுறைகள் முதன் முதலில் மோசஸ் அனுமதித்தார். "இருதயக் கடினத்தினால்” மோசே விவாகரத்தை அனுமதித் தார்.(இணைசட்டம் 24:1,மத்தேயு 19:8-)முதன்முதலில், தொடக்க நூலில் (ஆதியாகமம் 4-ஆம் அதிகாரத்தின்படி ), காயீனின் மகன் லாமேக் இரண்டுமனைவி களை மணந்தான்.மோசேக்கும் இரண்டு மனைவிகள் இருந்த னர். அது போலவே, மோசேயின் சட்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணக்கும் வழக்கத்தை அனுமதித்தது.
புதிய ஏற்பாட்டில்திருமணம்.
Marriage is in the New Testament.
அன்பர்களே!புதிய ஏற்பாட்டில் திருமணம் என்பது ஒரு புனித மான, பிரிக்க முடியாத மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட உறவாகக் கூறப்படுகிறது.திருமணம் என்ப து கடவுளால் இணைக்கப்பட்டது; அதை மனிதன் பிரிக்கக் கூடாது (மத்தேயு 19:6).என்று இயேசு கூறினார். இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இணைந்து ஒரே உடலாகமாறுவதைக் குறிக்கிறது.கடினமான மனதின் காரணமாகவே மோசே காலத் தில் விவாகரத்து அனுமதி க்கப்பட்டது, ஆனால் தொடக்கத் திலிருந்தே அது கடவுளின் விருப்பம் அல்ல (மத்தேயு19:8)
திருமணத்தைக் குறித்து திருத்தூதர் பவுல் அடிகளா ரின் கூற்று:
அன்பர்களே!கணவன்மார் தங் கள் மனைவிகளைத் கிறிஸ்து வின் அன்பு போல நேசிக்க வேண்டும்; மனைவிகள் தங்கள் கணவன்மார்களுக்குப் பணிய வேண்டும் (எபேசியர் 5:25,33).
திருமணம் என்பது கறைபடாதது மற்றும் தூய்மையானது என (எபிரேயர் 13:4).திருமுகத்தில் கூறுகிறார்.கணவனும் மனை வியும் ஒருவருக்கொருவர் உரிமையுள்ளவர்கள், அன்போடு அனுசரித்து நடக்க வேண்டும் (1 கொரிந்தியர் 7:3-4).என அறிவுற த்துகிறார்.கணவன்மார்களும் மனைவிகளும் இப்போது ஒருவ ரையொருவர் உண்மையாக நேசிக்கவும் மதிக்கவும் முடியும். கிறிஸ்து தம்முடைய திருச்சபை மீது வைத்திருக்கும் பிரிக்க முடி யாத அன்புக்குத் திருமணம் சாட்சி பகர்கிறது என்று புனித பவுல் நமக்குச் சொல்கிறார்.
1 திருமணம் அது தெய்வீக இணைப்பு.Marriage is a divine union.சபை உரையாளர் (பிரசங்கி) 4:9-12 .
அன்பர்களே! திருமணம் என்பது
மனித வாழ்க்கையில் கூட்டுறவு, நட்பு மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அழகாக விளக்குகிறது.நீதி அரசர் சால மோன், தனி ஒருவரை விட இருவர் சேர்ந்து வேலை செய் வது நல்லது; அவர்களின் உழை ப்புக்கு நல்ல லாபம் கிடைக்கு ம்.ஒருவர் சோர்ந்து அல்லது தவறி விழும் போது, தோழன் அவரைத் தூக்கி விடுவான். தனித்து இருப்பவருக்கு உதவ ஆள் இருக்காது.பழைய காலத் தில் யாத்திரை செல்பவர்கள், வியாபாரிகள் மற்றும் விவசா யிகள் எங்கு சென்றாலும் கடுமையான ஆபத்துகளைச் சந்தித்தனர். அப்போது தனித் துச் செல்வதை விட நண்பர்க ளுடன் அல்லது கூட்டாகச் செல் வது பாதுகாப்பானது. குளிர்காலத்தில் இருவர் சேர்ந்து படுக்கும்போது சூடுண்டாகும், ஆனால் தனித்து இருப்பவன் குளிர் தாங்க முடியாது.. சூரியனு க்குக் கீழுள்ள உலகில்கூட தனி யாக வாழ்வது வாழ்க்கையை மோசமாக்குகிறது என்று சாலமோன் சிந்தித்தார். ஒன்றை விட இருவர் சிறந்தது என்ற அதே தனி மனிதனை எதிரி எளிதில் வீழ்த்தலாம், இருவர் சேர்ந்தால் எதிர்த்து நிற்கலாம்.தனியாக வாழ்ந்து பணியாற்றுவதை விட, இணை ந்து வாழ்ந்து பணியாற்றுவது ஒரு பெரும் நன்மையாகும்,
இரண்டு இழைகளை விடமூன்று இழைகளால் திரிக்கப்பட்டகயிறு (முப்புரிநூல்) எளிதில் அறுபடுவ தில்லை.மனித உறவுகளுடன் கடவுளையும் சேர்த்துக் கொள் ளும் போது அந்த உறவுஇன்னும் பலம் பெறுகிறது.திருமணம் என்ற கூட்டு வாழ்க்கை, நட்பு மற்றும் ஒற்றுமையின் மேன்மை யை விளக்குகிறது.
2.திருமணம் ஓர் உடலின் சங்கமம்.Marriage is the union of one body. எபேசியர் : 5:21-33.
அன்பர்களே! ரோமப் பேரரசின் காலத்தில் குடும்பம் மற்றும் வீட்டு நெறிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற கலாச் சாரப் பின்னணியில் இது எழுத ப்பட்டது.கிரேக்க-ரோம குடும்ப நடைமுறை காலத்தில் குடும்பத் தில் கணவனே முழுமையான தலைவன்; பெண்களுக்குக் குறைவான உரிமைகளே இருந் தன.கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை கடவுளின் பயத்தினா லும், கிறிஸ்து மீதுள்ள அன்பி னாலும் மற்றவர்களுக்குப் பணி ந்து போவதாகும்.
மனைவியர் தங்கள் கணவர்க ளுக்குக் கீழ்ப்படிவது அடக்கு முறையால் அல்ல; மாறாக, சபை கிறிஸ்துவுக்குத் தன் விருப்பத் தோடு ஊழியம் செய்வது போன் ற ஒரு அன்பு சார்ந்த முறை.
கணவன் தனது மனைவியை எதேச்சதிகாரத்தோடு நடத்தா மல், கிறிஸ்து தேவாலயத்தின் மீது கொண்ட அதே சுயநலமற்ற, உயிரைக் கொடுக்கும் பேரன் பைக் காட்ட வேண்டும்.ஒருவன் தன் சொந்த உடலைத் தாங்களே பேணி வளர்ப்பது போல, கணவன் தன் மனைவியைத் தன் சொந்த உடலாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணத்தில்கணவன்மனைவி இருவரும் "ஒரே மாம்சமாக"மாறு வது, கிறிஸ்துவும் அவனுடைய சபையும் இணைந்திருக்கும் நித்திய மறைபொருளை உலகி ற்கு வெளிப்படுத்துகிறது. திருமணம் என்பது இரு மனங் களின் இணைவு மட்டுமல்ல, பரஸ்பரபங்களிப்பும் புரிதலும் நிறைந்த ஒரு கூட்டுப் பயணம் ஆகும். இது அன்பு, பொறுப்பு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றுடன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டாடும் ஒரு அழகான தருணம்.
3.திருமணம் எளிதில் பிரிக்க முடியாத ஒருதெய்வீகஇணை ப்பாகும். Marriage is a divine bond that is not easily broken. மத்தேயு; 19: 4-6.
அன்பர்களே! இயேசு கலிலேயா வை விட்டு யூதேயா எல்லைக்கு ட்பட்ட யோர்தானுக்கு செல்லும் வழியில் இச்சம்பவம் நடந்தது.
இயேசுவைச் சோதிக்கும் நோக் கில் பரிசேயர்கள் வந்து, "எந்தக் காரணத்துக்காகிலும் மனைவியை விட்டுவிடலா மா?" என்று விவாகரத்து பற்றி கேள்வி கேட்டனர்.அப்போது யூத மதகு ருமார்களிடையே மோசே எழுதிய சட்டத்தின்படி எந்தக் காரணத்திற்காகவும் விலகலாம் என்ற தவறான கருத்து நிலவி யது.
இயேசு மனிதர்களைத் தொடக் கத்திலே கடவுள் ஆணும் பெண் ணுமாகப் படைத்தார் என்பதை தொடக்க நூல்(ஆதியாகமம் 1:27) மற்றும் 2:24 வசனங்களைக் கொண்டு சுட்டிக்காட்டினார். கணவன் தன் தாய் தந்தையை விட்டு மனைவியுடன்இணைந்து இருவரும் ஒரே மாம்சமாக மாறு கின்றனர் என்றார்.
கடவுள் இணைத்ததை மனித ன் பிரிக்கக் கூடாது. இது ஒரு சட்ட விதியல்ல, மாறாக எவரா லும் உடைக்க முடியாத முழுமை யான ஒன்றிணைப்புக்கான தெய்வீக இலட்சியம் ஆகும்.
திருமணத்தின் முக்கிய அம்சங்கள்
1.நம்பிக்கை: கணவன் மற்றும் மனைவி இடையே அன்பு, பொறு ப்பு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருக்க வேண்டும்.
2.மதிப்பு: ஒருவருக்கொருவர் மரியாதை தந்து வாழ்வது குடும் பத்தை மகிழ்ச்சியாக மாற்றும். 3 ஒற்றுமை: இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து நின்று வாழ்க்கைப் பயணத் தைத் தொடர்வது இதன் அடிப் படையாகும்.
திருமணத்தில் எடுக்கப்பட்ட
முக்கிய உடன்படிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள்:
அன்பர்களே! நாம் திருமண த்தின் போது திருச்சபைக்கு முன்பாக எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் அதன்படி நமது திருமண வாழ் வில் நடந்து கொள்கிறோமா? என்பதை சுய பரிசோதனை செய்வது மிக நல்லது
1 வாழ்நாள் முழுவதும் இணை ந்திருத்தல்:
மரணம் பிரிக்கும் வரை அல்லது என்றென்றும் ஒருவரையொரு வர் கைவிடாமல் தாங்கி வாழ் வது.
2 நிபந்தனையற்ற அன்பு: சுகத்திலும் பிணியிலும், செல்வத்திலும் ஏழ்மையிலும் ஒருவருக்கொருவர் உண்மை யாக அன்புசெலுத்திக் காப்பது.
3.மணமகன் / மணமகள் சொல்ல வேண்டிய உறுதி மொழி: "தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி, நம்மைப் படைத்த தேவன் உயிரோடி ருக்கும் நாளெல்லாம் உன்னை என் [மனைவியாக / கணவனாக] ஏற்றுக்கொள்ளுகிறேன். இன்பத்திலும், துன்பத்திலும், செல்வத்திலும், வறுமையிலும், நோயிலும், நயத்திலும் உன்னை நேசிக்கவும், மதிக்கவும், காத்து க்கொள்ளவும் நாம் இருவரும் உயிரோடிருக்கும் வரை உனக்கு உண்மையாய் இருப்பேன் என்று தேவ சமூகத்தில் உனக்கு வாக்கு க்கொடுக்கிறேன்."
அன்பர்களே! கடவுள்முன் நாம்
திருமணத்தின் போது கொடுத்த
உறுதிமொழியின்படி நம் வாழ்க்
கையில் நடந்துகொண்டால் அது
ஒன்றித்த பங்களிப்பின் கொண் டாட்டம் தான்.
ஆண்டவர்தாமே, நம் திருமண
வாழ்வை மகிழ்வுடன் காப்பாராக
ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre. com.www.davidarulblogspot.com.
Rembrandt's depiction of Samson's marriage feast. Source: Wiki

Comments
Post a Comment