இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல். (290) Theological Education: To make the Church as a Learning Community. நெகேமியா : 8:1-12, 1 கொரிந்தியர்: 14:20-23, திருப் பாடல்கள் 1, மத்தேயு 13: 16-23

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல். Theological Education: To make the Church as a Learning Community.
இறையியல் கல்வி என்றால் என்ன,?
இறையியல் (Theology) என்பது கடவுள், சமயம் (மதம்), ஆன்மீகம் மற்றும் அதனுடன் தொடர்புடை ய நம்பிக்கை முறைகளை அறிவியல் முறைப்படி ஆழ்ந்து ஆராயும் ஒரு துறையாகும்.
Theology என்ற வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தையி லிருந்து வந்தது.theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல் லிலிருந்து பிறந்தது."தியோய்' (theos)என்றால் "கடவுள்",என்றும்   லோகஸ் (logos) என்றால், வார்த்தை (word) என்றும் பொருள்படும் "கடவுளைப்பற்றி
பேசப்படும் செயலாகும்". இலத்தினிலும் theologia என்னு ம் சொல்லே பயன்படுத்தப்படு கிறது.
 தமிழில் "இறையியல் " என்பது
இறை என்றால் கடவுளை குறிக்கும்," இயல்" என்றாள் "ஆய்வு" or இயல்பாக என்ற இரு தமிழ்ச் சொற்களின் அடிப்ப டையில், இது 'கடவுளைப் பற்றிய அறிவியல்'  என்று பொருள்படுகிறது.
 logon tou theou = word of God)  "கடவுள் அருளிய சொல்" என்ற தொடர் விவிலியத்தின் இறுதி நூலாகியதிருவெளிப்பாடு (19:13) நூலில் வருகிறது.
இறையியல் என்னும் சொல் கிறித்தவ சமய வழக்கில் கையாளப்படுவதற்கு முன்னர் பண்டைய கிரேக்க கலாச்சார த்தில் முதன்முதலாக   தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428/427 - கி.மு. 348/347) கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட நான்காம் நூற்றாண்டிலேயே இச்சொல் லைக் கையாண்டார். அதற்கு தெய்வம் (தெய்வங்கள்) பற்றிய விளக்கம் என்னும் பொருள் கொடுத்தார்.
திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல். 
அன்பர்களே! திருச்சபையின் மக்கள் தொடர்ந்து இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு அதன் படி நடப்பதும், ஆன்மீக வளர்ச்சி யில் இணைந்து வளர்ந்து, வாழ் நாள் முழுவதும் கற்றுக் கொள் ளும் ஒரு விசுவாசக் கூட்டமைப் பாக செயல்படுவதே, திருச்சபை யை ஓர் கற்கும் சமூகமாக்கலா கும்.
அன்பர்களே! நான் பல கிராம
திருச்சபையில் பிரசங்கிக்கும்
போது சில கேள்விகளை கேட் பேன் அதற்கு கிராம திருச்சபை மக்கள் மிகச் சிறப்பாக பதில் அளித்திருப்பது நம் திருச்சபை ஒரு கற்கும்  சமூகமாக மாறி வருகிறது என்பது உண்மை. இதற்கான முழு பொறுப்பை நம் ஆயர்களும், சபை ஊழியர்க ளும், அங்கு வாரா வாரம் பிரசங் கிக்கின்ற பிரசங்கியர்களும் முக்கிய காரணமாகும். இதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
இறையியல் கல்வியை சிறப் பாக கற்கும் இடம் ஆலயமா? இல்லங்களா? விடுதிகளா?
Is the best place to study theology in a Church? Homes? Hostels?
அன்பர்களே! என் அனுபவத்தில்
நம் வீடுகளில் பாடல், வேத வாசி ப்பு இறைவேண்டல் கட்டாயம் இருக்கும்,ஆனால்இறையியலை போதிப்பதுகிடையாது,  காரணம் அதற்கான நேரம், அறிவு,பயிற்சி, வாய்ப்பு கள் குறைவு.
நம் திருச்சபை ஞாயிறு பள்ளி களில் குழந்தைகளின் வயதிற்
கேற்ப பாடத்திட்டம் வகுக்கப் பட்டு, தன்னார்வ ஆசிரியர்களா ல் ஆடல்,பாடல்,வசனம் ஒப்புவி த்தல், வண்ணம் தீட்டுதல், வேத நீதி கதைகள் , நற்செய்தியாள ரின் வாழ்க்கை நெறிகள் போதி க்கப்படுகின்றன.இதற்காக இவர்களுக்குஆசிரியர் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்கள் மூலமாகஅடிப்படை வேத அறிவு தரப்படுகிறது.
மற்றம் திருச்சபைகள் வேத கல்வி (Bible Study) மாதாமாதம் நடத்தி பஙகுபெறுவோர் ஆழ மாக திருவிவலியத்தை புரிந்து க் கொள்ள முடிகிறது.
பிரசங்கங்கள் வேதப்பகுதியை
தலைப்புடன் விளக்குவது, ஆலோசனை தருவது, மனமாற் றத்திற்கான மருந்தாய் நல்லிண க்கத்துடன் வாழ உதுவுகிறது
இதன் மூலம் கற்றல் சமூகமாக
திருச்சபைகள் மாறுகின்றன.
ஆனால், கிறித்துவ விடுதிக ளில் அனுதின காலை,மாலை தியானங்கள், பிரசங்கங்கள், பாடல்கள் வேத வாசிப்பு, இறை வேண்டல்வசனம் ஒப்புவித்தல், போன்ற பயிற்சிகள் தனிப்பட்ட முறையிலும்,குழுவாகவும்,வினா விடை போட்டிகள்,  கொடுக்கப் படுகின்றன. இதன்மூலம் வேதத் தில் சிறப்பான ஆற்றல் பெற்று
திருச்சபையில் சிறந்த பிரசங் கியாய் திகழ்கிறார்கள். ஆக
வீட்டில் கிடைக்காத இறைகல்வி நம்விடுதிகளில் கிடைக்கின்ற ன என்பதில் எனது அனுபஅறி வாகும்.
1. திருச்சபை ஒரு கற்பிக்கும் அவை.The Church is a teaching body.நெகேமியா : 8:1-12
அன்பர்களே நெகேமியா 8 ஆம் அதிகாரம் யூத நாட்காட்டியின்படி ஏழாம் மாதம் (திஸ்ரி மாதம்) முதல் நாள்  கி.மு. 445-ஆம் ஆண் டின் நிகழ்வாகும்  
கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் எருசலேம் மதில்கள் கட்டி முடிக் கப்பட்டப் பிறகு இந்த நிகழ்வு நடந்தது.
யார் இந்த நெகேமியா?
Who was this Nehemiah?
அன்பர்களே! எருசலேம் மதில் களை மீண்டும் கட்டியெழுப்பிய தைரியமான யூதத் தலைவர் நெகேமியா,  பாரசீக அரசர் அர்தசஷ்டாவின் பானபாத்தி ரக்காரர் ஆவார். இவரது பெயர் "கடவுள் ஆறுதல் அளிக்கிறார்" என்று பொருள்படும். பானபாத்திரக்காரன் (Cup bearer) என்பது பழங்கால அரச வை மற்றும் பேரரசுகளில் மன்ன ருக்குப் பரிமாறப்படும் திராட்சர சம் அல்லது பானங்களில் நஞ்சு எதுவும் கலக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்து, அதை மன்னருக்கு வழங்கும் மிக உயர் ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய பொறுப்பில் இருந்த அதிகாரி யைக் குறிக்கும்.(விவிலியத் தில். தொடக்கநூல் 40,  முதன் முதலில் கோப்பை ஏந்துபவர் (Cupbearer) பற்றிய குறிப்பு பார்வோனின் முக்கிய தலை மைக் கோப்பை ஏந்துபவர் (Chief Cupbearer) பார்வோனின் கோபத் திற்குள்ளாகி எகிப்தில் யோசே ப்பு அடைக்கப்பட்ட அதே சிறை யில் இவரும்  அடைக்கப்பட்ட னர்.) 
நெகேமியா, பாரசீகத்தின் சூசன் கோட்டையில் வாழ்ந்த இவர், அரண்மனையில் உயர் பதவியில் இருந்தபோதிலும் எருசலேமின் பாழடைந்த நிலை குறித்து பெருத்த கவலை கொண்டார். கி.மு. 444-ல் முதலா ம் அர்தசஷ்டா அரசரிடம் அனுமதி பெற்று எருசலேமுக்கு ஆளுநராகச் சென்றார். இடிந்திருந்த எருசலேமின் மதில் சுவர்களை வெறும் 52 நாட்க ளில் மக்களுடன் சேர்ந்து கடுமையாகப் போராடி கட்டிமுடி த்தார். 
இவர் காலத்தில்தான் திருநூல் வல்லுநரான எஸ்ரா( வேத பாரகன்) மக்கள் அனைவரும், எருசலேமில்  உள்ள தண்ணீர் வாயிலுக்கு (Water Gate)எதிரே இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை ஒன்று கூடி  இருந்த நிலையில், ஆண்ட வர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் (the Law of Moses.) கொண்டு வரு மாறு செய்து, இதற்காகவே செய்யப்பட்ட மர மேடையில் நின்று கொண்டு ஆடவர், பெண் டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலு ள்ள சிறுவர் அனைவரும் அடங் கிய சபை முன்னிலயில் திரு நூலைக் வாசிக்க தொடங்கினா ர்.தேவனுடைய வார்த்தையை வாசித்து மக்களுக்கு விளக்கி னார்.அதனால் மக்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து அழுத போது அதிபதி நெகேமியாவும், குருவான எஸ்றாவும் மக்களை நோக்கி, இது கர்த்தருடைய பரிசு த்த நாள், எனவே அழ வேண்டாம் என்றனர்.தலைவர்கள் அவர்க ளைத் தேற்றி கர்த்தரின் மகிழ் ச்சியைக் கொண்டாடும்படி அறி வுறுத்தினர்.கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங் கள் பலம்" என்று கூறி, நல்ல உணவுகளை உட்கொள்ளவும், இல்லாத வர்களுக்குப் பங்கு களை அனுப்பவும் கட்டளையிட் டனர்.
வார்த்தையைப் புரிந்துகொண்ட மக்கள் துயரத்தை மறந்து, பெரு மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுப் பரிமாறிக்கொண்டு சென்றனர்.
முக்கிய கருத்துக்கள்:
1 மக்கள் அனைவரும் ஒரே மனதுடன் எருசலேமில் கூடுகி றார்கள்
2 திருவிவலியம் காலை முதல்
மதியம் வரை வாசித்தல்
3.மக்கள் தேவனுடைய வார்த் தையைக் கவனமாகக் கேட்ட னர்மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோ டும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள்
4., மக்கள் தலைவணங்கி தொழுது கொண்டார்கள்.
5 வேத வாசிப்பின் மூலம் தங்கள் பாவங்களை உணர்ந்து மக்கள் அழுது புலம்பினார்கள்.
6 தலைவர்கள் அவர்களைப் பார் த்து, இது கர்த்தருக்குப் பரிசுத்த மான நாள் என்று கூறி அழுகை யை நிறுத்தச் சொன்னார்கள்.
7 எல்லா மக்களும் அவர்களுக் குக் கூறப்பட்ட வார்த்தைகளை ப் புரிந்துகொண்டதால், உண் ணவும்,உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப் பட்டுச் சென்றார்கள். 
ஆக திருச்சபைகள் திருமறை யை கற்பிக்கும் அவைகளாகவும்
மக்கள் திருமறையை கற்கின்ற
கூட்டமாக இருக்க வேண்டும்
என்பதை உறுதிப்படுத்துகிறது.
2 திருச்சபை பக்தி வளர்ச்சிக் கானது.The church is meant for spiritual growth..1 கொரிந்தியர் 14:20-23.
அன்பர்களே! திருதூதர் பவுல் அடிகளார் தனது இரண்டாம் ஊழிய பயணத்தின்போது கொரிந்து திருச்சபையை கி.பி. 50–52 காலப்பகுதியில் தோற்று வித்தார். அங்கு அவர் 1 வருடம் 6 மாதங்கள் (18 மாதங்கள்) தங்கி இறைபணியை ஆற்றினார்.
பல பாவங்களும் புறமத வழிபா டுகளும் நிறைந்த பெருநகர வணிக மையத்தில் இச்சபை உருவாக்கப்பட்டது. இரண்டு திருமுகங்களை இச்சபைக்கு
எழுதினார்.கொரிந்திய சபையி னர் தங்களுக்குள்ள வரங்க ளைச் சபைக் கூட்டத்தில் போட் டிபோட்டுக் கொண்டு வெளிப்படு த்தினர்.மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அனைவரும் ஒரே நேரத்தில் அந்நியமொழிகளில் பேசியதால் குழப்பம் ஏற்பட்டது. இதை தடுக்கவே,
1.கொரிந்தியர் 14:20-23 வரையி லான பகுதியில் , திருதூதர் பவுல் அடிகளார் விசுவாசிகள் சிந்திப்பதில் முதிர்ச்சியடைந் தவர்களாகவும், தீமையில் பச்சி ளங்குழந்தைகளைப் போலவும் இருக்க வேண்டும் என்று வலியு றுத்துகிறார்.  கொரிந்திய விசு வாசிகள் ஆன்மீக வரங்களை, குறிப்பாக பிறமொழிப் பேச்சுக ளைப் பயன்படுத்துவதில் குழந் தைகளைப் போல நடந்துகொண் டனர்.திருச்சபை கூட்டங்களில் ஆவிக்குரிய வரங்களை ஒழுங் குடனும் மற்றவர்களின் பக்தி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் பவுல் அவர்களின் இந்தச் செயலைத் திருத்தி, அறிவு மற்றும் புரிந்து கொள்ளு தலில் முதிர்ந்த மனிதர்களாக மாறும்படி கேட்டுக் கொள்கி றார்.தீமை மற்றும் பொல்லாப்பு போன்றவற்றில் பச்சிளங்குழந் தைகளைப் போல கறையற்ற வர்களாக இருக்க வேண்டும் என்கிறார்.அந்நிய மொழிகளில் பேசுவது விசுவாசியல்லாத வர்களுக்குக் குழப்பத்தை ஏற் படுத்துவதோடு, சபையைக் குழப்பும்.சபைக்குள் விசுவாசி கள் அனைவரும் புரியாத மொழி யில் பேசினால், வெளியே இருந் து வருபவர்கள் அவர்கள் பைத் தியம் பிடித்தவர்கள் என்று நினைக்கலாம். தீர்க்கதரிசனம் உரைப்பது (இறைவார்த்தை யைப் தெளிவாகப் பேசுவது) கேட்பவர்களின் உள்ளத்தைத் தொட்டு, அவர்களை இறைவனி டம் கொண்டு சேர்க்கும்.
திருச்சபை கூடிவரும்போது
செய்ய வேண்டியது என்ன?
What to do when the congregation gathers?".  
அன்பர்களே!  சகோதர சகோதரி களே, ! நீங்கள் கூடிவரும்போது ஒருவர் திருப்பாடலைப் பாட லாம்; ஒருவர் கற்றுக் கொடுக் கலாம்; ஒருவர் திருவெளிப்பா டுகளை எடுத்துரைக்கலாம்; ஒருவர் பரவசப்பேச்சு ( பிற மொழி) பேசலாம்; ஒருவர் அதை விளக்கிக் கூறலாம். இவை அனைத்தும் திருச்சபையைக் கட்டியெழுப்பும் வகையில் பக்தி வளர்ச்சிக்காகவே நடை பெற வேண்டும். 
3 கற்றலே சமூகமாக்களாகும்.
 Learning is social.மத்தேயு13:16-23
அன்பர்களே! ஒரு கற்றல் சமூகமே,  நல்ல சமூகமாக மாறு ம். கற்றல் மனிதனுக்கு மிக
வும் அடிப்படை தேவை.்எனவே
தான் இந்திய அரசியலமைப் பின் தந்தை என அழைக்கப்ப டும் பாபாசாகிப் அம்பேத்கர்
தன் கொள்கையில் கற்பி என்ப
தை முதன்மை படுத்துகிறார்.
 இயேசுகிறிஸ்த்துவும் சுருங்க சொல்லி விளங்க வைக்கும்
உவமைகளை தன் நற்செய்தி
பணியில் பயன்படுத்தினார்.
கிரேக்க மொழியில், παραβολή (parabolé) என்ற சொல்லுக்கு, "ஒப்பீட்டின் மூலம் ஒரு உண்மை யைக் கற்பிக்கும் கதை அல்லது கூற்று என்ற பொருள்" 
உண்மையில், உவமைக்கான மிக எளிய வரையறை என்ன வென்றால், அது "பரலோகப் பொருள் கொண்ட ஒரு பூலோகக் கதை" an earthly story with a heavenly meaning என்பதா கும். 
 இயேசுவைப் பற்றி வேறு எது உண்மையாக இருந்தாலும், அவர் "சிறுகதைகளின் உலகி ன் தலைசிறந்த வல்லுநர்க ளில் ஒருவர்" என்பது நிச்சய மாக உண்மையே." 
இயேசு ஏன் இந்த உவமை முறையைப் பயன்படுத்தி னார்? Why did Jesus use this method of parables?
அன்பர்களே! உவமைகள் தேவ னுடைய அரசின் இரகசியங்க ளை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
1.உவமையானது, ஒருவன் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கி, அவன் இருக்க வேண் டிய இடத்திற்கு அவனை வழிநட த்துவதன் மூலம் அவனது மன தையும் கண்களையும் திறக்கி றது.
2.இயேசு பயன்படுத்திய உவ மையானது, வாசிக்கப்படாமல், பேசப்பட்டது. அதன் தாக்கம் உடனடியானதாக இருக்க வேண் டுமே தவிர, விளக்கவுரைகளை யும் அகராதிகளையும் கொண்டு நீண்ட காலம் படித்ததன் விளை வாக இருக்கக்கூடாது.
3.உவமையின் மாபெரும் போத னைப் பண்பு என்னவென்றால், அது ஆர்வத்தைத் தூண்டுகிற து. மக்களுக்கு ஆர்வத்தை ஏற்ப டுத்துவதற்கான மிகஉறுதியான வழி, அவர்களுக்குக் கதைக ளைச் சொல்வதே ஆகும்.
4.ஒரு உவமைக்கு ஒரே ஒரு கரு த்து மட்டுமே இருக்கும். உவமை என்பது உருவகக் கதை அல்ல
5.உவமைகள் கேட்பவர்களை அந்தக் கதைக்குள் நுழைந்து, 'இதில் நான் எங்கே காண்கி றேன்?', 'எதை மாற்றுமாறு கடவுள் என்னை அழைக்கிறார்?' என்று கேட்கத் தூண்டுகின்றன.
6.கடினமான கடவுள் வார்த்தை யை எளிதாக புரிந்துகொள்ளு தல் அதற்காக அன்றாட வாழ் க்கையில் பார்க்கின்ற விதைத் தல், மீன் பிடித்தல் போன்ற நடைமுறையில் உள்ளவற்றை
உவமைகள் மூலம் விளக்குவ தாகும்.
இயேசுவின் காலத்தில் பாலஸ்தினம். Palestine at the time of Jesus.
அன்பர்களே! இயேசு தன் ஆரம்ப
கால ஊழியங்களை 'இறை வேண்டல் கூடங்களில்"
போதிப்பதைக் காண்கிறோம்.
ஆனால் இப்போது அவர் கடற்கரையில் போதிப்பதைக் காண்கிறோம். இந்த மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜெப ஆலயத்தின் கதவு அவருக்கு முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டது என்பதல்ல, ஆனால் அது மூடப்பட்டுக்கொண்டிருந்தது.
யூத தலைவர்கள் இப்போது அவருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜெப ஆலயங்களில் சாதாரண மக்க ளிடமிருந்து அவருக்கு வரவே ற்பு கிடைத்தது; இரண்டுவித மான கூட்டங்கள் 1. சாதாரண மான மக்கள். 2. அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு வார்த்தையையும், செயலையும் ஆராய்ந்து, அதை ஒரு குற்றச்சா ட்டாக மாற்றுவதற்காக  கவனி த்துக் கொண்டிருக்கும் வேத பாரகர்கள், பரிசேயர்கள் மற் றும் மூப்பர்களின் கோபபார் வை கூட்டத்தினரையும் அவர் காண்பார்.
ஆண்டவர், ஜெப ஆலயத்தின் கதவுகள் அவருக்கு எதிராக மூடப்பட்டபோது, ​​அவர் திறந்த வெளி ஆலயத்திற்குச் சென்று, கிராம வீதிகளிலும், சாலை களிலும், கடற்கரையிலும், மக்களின் சொந்த வீடுகளிலும் மலைகளின் அடிவாரங்களை ளிலும், வனாந்தர பகுதிகளிலும் ,அவர்களுக்குப் போதித்தார்.
இயேசு தம் காலத்துத்திருச்சபை யிலிருந்து விலக்கப்பட்டார் என்பது மாபெரும் துயரங்களில் ஒன்றாகும். தடைகள் இருந்தா லும், எவ்வழிகளிளெல்லாம் நற்
செய்தியை வழங்க வழி காண் பதே நற்செய்தியாளரின் நோக் கமாக இருக்கவேண்டும்.
ஆண்டவருக்கு படகு  பிரசங்க
மேடையாக (pulpit) பயன்பட்டது.
ஆண்டவர், இதோ!” என்றார்.        ( இதோ என்பது நிகழ்காலம்) அவர், “விதைப்பவன் விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைத்த போது, ​​சில விதைகள் வழியோர த்தில் விழுந்தன; இது உண்மை யில் கண்ணெதிரில் நடந்த நிக ழ்வு. விதைப்பவனைஆண்டவர் பார்த்துக் கொண்டேபேசுகிறார். இயேசு அளித்த நற்செய்தியே இறையாட்சியின் விதையாக இருக்கிறது.
பாலஸ்தீனத்தில் நில அமைப்பு: The Land of Palestine. 
அன்பர்களே! இயேசுவின் காலத் தில் பாலஸ்தீனத்தின் விளைநி லங்கள் குன்றுகள், பள்ளத்தாக் குகள் மற்றும் சமவெளிகளாகப் பிரிந்து, கோதுமை, பார்லி, ஆலிவ் மற்றும் திராட்சை ஆகிய வற்றை விளைவிக்கும்வளமான இடங்களாக இருந்தன. பாலஸ்தீனத்தில் வயல்வெளி கள் நீளமான, குறுகிய பட்டை களாக (Narrow strip). இருந்தன; அந்தப் பட்டைகளுக்கு இடை யேயான நிலம் எப்போதும் ஒரு பொது வழித்தடமாகவே இருந்த து. அது ஒரு பொதுவான பாதை யாகப் பயன்படுத்தப்பட்டது; அதனால், எண்ணற்ற வழிப்போ க்கர்களின் கால்களால் அது நடைபாதையைப் போல கடின மாக மிதிக்கப்பட்டது. இதைத் தான் இயேசு வழியோரத்தைக் குறிப்பிடுகிறார். 
பாலஸ்தீனத்தில் விதை விதை க்க இரண்டு வழிகள் இருந் தன. 
1 விதைப்பவர் வயலில் மேலும் கீழும் நடந்து கொண்டே விதை களை ஆங்காங்கே தூவி விதை க்கலாம். நிச்சயமாக, காற்று வீசினால், சில விதைகள் காற் றில் அடித்துச் செல்லப்பட்டு எல்லா இடங்களிலும் சிதறிவி டும், சில சமயங்களில் வயலை விட்டே வெளியேறிவிடும்.  
 2.இது ஒரு சோம்பேறித்தனமா ன வழியாக இருந்தாலும், அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அது, ஒரு கழுதையின் முதுகில் ஒரு விதைச் சாக்கை வைத்து, அந்தச் சாக்கின் மூலையில் ஒரு துளையைக் கிழித்து அல்லது வெட்டி, பின்னர் அந்த விலங்கை வயலில் மேலும் கீழும் நடக்க வைத்து, விதைகள் வெளியேறச் செய்வதாகும்.அப்படிப்பட்ட நிலையில், அந்த விலங்குபாதை யைக் கடக்கும்போதும், வயலை அடைவதற்கு முன்பும் சிலவிதை கள் சிதறி வெளியேறக்கூடும்.
விதைகள் நான்கு விதமான நிலங்களில் விழுந்தன.
i. சாலையோரம் என்பது மக்கள் நடந்து செல்லும் பாதையாக இருந்தது; அங்கு நிலம் மிகவும் கடினமாக இருந்ததால் எதுவும் வளர முடியவில்லை. அது
வழியோர மண் என்பது, தேவ வார்த்தையை ஒருபோதும் புரிதலுடன் கேட்காதவர்களைக் குறிக்கிறது. தேவனுடைய வார்த் தை உண்மையாகவே கனி கொடுப்பதற்கு முன்பாக, அது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
ii. பாறை நிறைந்த இடங்கள் என்பவை, பாறை மேட்டின் மீது மெல்லிய மண் அமைந்திருந்த இடங்கள் ஆகும். இந்த நிலத் தில், மண்ணின் வெப்பத்தின் காரணமாக விதை விரைவாக முளைக்கிறது, ஆனால் பாறை மேட்டின் காரணமாக விதையால் வேரூன்ற முடிவதில்லை.
இந்த நிலம், வார்த்தையை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ப வர்களைக் குறிக்கிறது; ஆனா லும் , வார்த்தையின் நிமித்தம் வரும் உபத்திரவத்தையோ துன்புறுத்தலையோ சகித்துக் கொள்ள அவர்கள் சித்தமில் லாததால், அவர்களுடைய ஆயுட்காலம் குறுகியது.

iii. முட்களுக்கு மத்தியில் என்பது வளமான மண்ணைக் குறிக்கிறது – ஒருவேளை அது மிகவும் வளமானதாக இருக்க லாம், ஏனெனில் அங்கே தானி யங்களுடன் முட்களும் வளர்கின் றன.
முட்களுக்கு இடையில் விழும் விதை வளர்வதுபோல, தானியத் தண்டுகள் விரைவில் அற்றுப் போயின அதுபோலவே, சிலர் தேவவசனத்திற்குச் செவிகொ டுத்து, கொஞ்சக் காலம் வளர் கிறார்கள், ஆனால் ஆவிக்குரி யதல்லாத காரியங்களின் போட்டியினால் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி தடைப்ப ட்டு, நிறுத்தப்படுகிறது.
iv. நல்ல நிலம் என்பது வளமா கவும் களைகள் இல்லாமலும் உள்ள மண்ணைக் குறிக்கிறது. நல்ல நிலத்தில் சிறந்த, அதிக விளைச்சல் தரும் பயிர் வளரும் .
இந்த நிலம், இறைவார்த்தையை ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கிறது; அதுஅவர்களுடைய நிலத்தில் வெவ்வேறு விகிதங் களில் ( சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் ) கனி தருகிறது, எனினும் ஒவ் வொருவருக்கும் தாராளமான அறுவடைஉண்டு.
அன்பர்களே! 
"நான் எவ்வகையான நிலம்?
What kind of land am I? 
அன்பர்களே! சரியான நிலமாக இருப்பதற்கு என் இதயத்தையும் மனதையும் நான் எவ்வாறு ஆயத்தப்படுத்த முடியும்?” என்று நம்மையே  கேட்கத் தூண்டுகி றது. 
நாம் தேவனுடைய வார்த்தை யை நல்ல நிலத்தில் விழுந்த விதைபோல  அறுபது, நூறுமாக 
பலன் கொடுப்போம்.
"இறைவார்த்தையைக் கேட்கிற வர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிற வர்களாயும் இருங்கள். (யாக் கோபு 1:22) என்ற வார்த்தையி ன்படி நடக்க கடவுள் அருள்புரி
வாரமாக, ஆமேன்.



Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com

  




 
குறிப்பிடப்படுள்ளது. மத்தேயு 13:3-8;மாற்கு 4:3-8; லூக்கா 8:5-8


விதைப்பவன்

 



Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.