திருமுழுக்கால் குறிக்கப்படும் கிறிஸ்துவின் அடையாளம்.(296) Identity in Christ Marked by Baptism. தொடக்க நூல்: Genesis: 11: 7-24. 1பேதுரு:1 Peter : 3: 18-22, ,திருப்பா டல்கள்: Psalms: 32, யோவான்: John: 3:1-8.
முன்னுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "திருமுழுக்கால் குறிக்கப்ப
டும் கிறிஸ்துவின் அடையா ளம்" என்பதாகும்.
திருமுழுக்கு என்றால் என்ன?
திருமுழுக்கு என்பது கிறிஸ்தவ த்தில் தண்ணீரை பயன் படுத்தி ச் செய்யப்படும் ஒரு புனிதச் செயலாகும்.
இது தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழும்புவதையோ அல்லது சில சபைகளில் நீர் தெளிக்கப்ப டுவதையோ குறிக்கிறது.
இது பழைய பாவங்கள் மன்னிக் கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து புதிய மனிதராகப் பிறப்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு திருமுழுக்கின்போது
விண்ணரசிரல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நான் "இதுமுதல் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமா னவன்" என்று விசுவாசி பகிர ங்கமாக ஒப்புக்கொண்டு பொது வாக்குமூலம் அளிப்பதாகும். திருமுழுக்கின் போது, தலையில் கைவைத்து, நெற்றியில் சிலு வையின் அடையாளமிடுவது, இனி நாம் கிறித்துவை சார்ந் தவர் என அடையாளப்படுத்து கிறோம்.
இது ஒரு நபர் தன்னைத் திருச் சபையின் உறுப்பினராகவும், கடவுடைய பிள்ளையாகவும் இணைத்துக் கொள்ளும் இரட்சி ப்பின் வாசலாகக் திருமுழுக்கு கருதப்படுகிறது."Baptism is the Gateway to the Church."
இயேசுவே நமக்கு முன்மாதிரி.
அவர் யோர்தான் நதிக்கரையில்
திருமுழுக்கு யோவானால் திரு முழுக்கு பெற்றார்.
இயேசுவின் திருமுழுக்கும், திரித்துவமும்.Jesus' Babtism and Trinity.
அன்பர்களே! இயேசு திருமுழு க்கு யோவானால் திருமுழுக்கு பெற்ற போது நடந்த முக்கிய நிகழ்வுகள்:
1.வானம் திறந்தது: இயேசு தண்ணீரில் இருந்து கரையேறி ய உடனே வானம் திறக்கப்பட் டது.வானம் விண்ணரசை குறிக் கும்.திருமுழுக்கு நம்மை விண் ணரசிற்கான முதல் தகுதியை தருகிறது.
2. தூய ஆவி இறங்கினார்:
கடவுளின் ஆவியானவர் புறா வைப் போல் இயேசுவின் மீது இறங்கி வந்தார். திருமுழுக்கு பெறுவோர் தூய ஆவியின் அருளை பெறுவர்.
.3 தந்தையின் வாழ்த்துதல்:
"இவர் என் நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறே ன்" என்று தந்தையான கடவு ளின் சத்தம் வானத்திலிருந்து வாழ்த்துதளாய் ஒலித்தது. திருமுழுக்கு தந்தையின் நித்திய உறவில் இணைக்கிறது.
4,திரித்துவம் வெளிப்பட்டது: தந்தை (ஒலி), குமாரன் (இயேசு), மற்றும் தூய ஆவி (புறா) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் அங்கே வெளிப்பட்டனர்.
அவ்வாறே, இவ்வுலகில் திரு முழுக்கு எடுக்கும்போது, திரித் துவத்தின் ஆசிர் நம் அனைவ ருக்கும் கிடைக்கிறது.
ஆனால், அன்பர்களே! இஸ்ர வேல் மக்கள் யாவரும் பாவமன் னிப்புப் பெற்று, மனம்மாற வேண்டும்’ (லூக் 3:3) என்பதற் காக திருமுழுக்கு யோவான் திருமுழுக்குக் கொடுத்து வந்து கொண்டிருந்த வேளையில், ஒரு பாவமும் அறியாத இயேசு திருமுழுக்குப் பெறுவது முறை யா? என்ற கேள்வி எழுகிறது.
இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு மூன்று முதன்மை யான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது.
1.இயேசு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றபிறகு பாலைவனத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருக் கின்றார். அதற்குப் பின்பு அவர் ‘மனம்மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது’ என்று நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கிவிடுகி ன்றார் (மத் 4:17)
2 அவர் மக்களில் ஒருவராகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றார்.
3.பாவிகள் யாவரும் மனம்மாறி, ஆண்டவரிடத்தில் திரும்பிவர வேண்டும் என்பதற்காக கொடு க்கப்பட்ட திருமுழுக்கில், இயேசு பங்கு பெறுவதன் வழியாக அவர் மனிதர்களில் ஒருவராகி, அவர்களுடைய சுய துக்கங்கள், கஷ்ட, நஷ்டங்களில் கலந்து கொள்ளத் தயாராகின்றார். திருமுழுக்கினால், நம் பாவங்க ள் கழுவப்படுகின்றன.
1.பாபேல் சுயநலத்தின் சின்னம்.Babel is a symbol of selfishness. Genesis: 11:7-24.
அன்பர்களே கடவுளின் அநாதி
திட்டத்தின் அடிப்படையே, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்"என்பதாகும்
(தொடக்கநூல் 1:28) ஆனால் அவர்கள், "வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டு வோம்" என்றனர். (தொடக்கநூல் 11:4) சுயநலம்கடவுள்வெறுக்கும்
பாவமாகும்.
பாபேல் கோபுரத்தைக் கட்டிய மனிதர்கள் கடவுளைச் சார்ந்தி ருக்காமல், தங்கள் சொந்த பலத்தையும் ஒற்றுமையையும் மட்டுமே நம்பிப் பெருமை கொண்டனர்.பாபேல் கோபுரம் என்பது மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் பெருமையையும், தேவனைச் சார்ந்திராமல் சுய பலத்தை நம்பிய பாவ நிலையையும் குறிக்கிறது.
கடவுளின் மொழி அழிவு:
The destruction of God's language.
அன்பர்ளே! கடவுள் படைப்பின் போது, தன் மொழியை மனிதனு க்கு கொடுத்தார். இதனால், அவர்கள் ஒரே இடத்தில் வாழ வேண்டியதாகி, பாபேல் கோபுர த்தை கட்டினார்கள் இது கடவு ளின் படைப்பின் திட்டத்திற்கு மாறானது.அதனால் களத்தில்
கடவுளே நேரிடையாக இறங்கி,
"வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச் சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப் பத்தை உண்டாக்குவோம்" என்றார்.
மொழி குழப்பம் என்பது வெறும் தண்டனை மட்டுமல்ல; மனித குலம் ஒரே தீய சிந்தனையோடு இணைந்து கடவுளை எதிர்த்து நிற்பதைத் தடுத்து, அவர்களைப் பூமி எங்கும் பெருகச் செய்யும் கடடைவுடைய ஒரு இரக்கமுள்ள மகா திட்டமாகும்.
மனிதர்கள் பாபேல் நகரைத் தங்களின் பெருமையின் அடையாளமாக மாற்ற முயன்ற னர், ஆனால் கடவுளோ, அதை 'குழப்பம்' (பாபேல்) என்ற அவ மானப் பெயராக மாற்றினார்.
மனிதனைப் படைத்தபோதே அவனுக்குப் பேசும் திறனையும் மொழியையும் கற்றுக்கொடுத்த கடவுள், இப்போது மனிதனின் பெருமையை ஒடுக்க அவனுடை ய பழைய படைப்பின் மொழியை மறக்கச் செய்கிறார்.
மொழியின் பிரிவினை: Division of language:
அன்பர்களே!மொழி என்பது அரசியல் மற்றும் தேசிய அடை யாளமாக காணப்படுகிறது. ஒரே பண்பாட்டைக் கொண்ட மக்கள் மொழியால் தங்களை வேறுபடுத்திப் பார்க்கத் தொடங் குவர்.உலகில் தற்போது 6912 மேற்பட்ட மொழிகள் இருக்கின் றன. அவற்றுள் பெரும்பான்மை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் அழிந்துவிடும் என அறியப்படு கிறது.இன்று மனிதகுலம் எதிர் கொள்ளும் மொழிசார்ந்த அத்த னை சிரமங்களுக்கும், மொழி பெயர்ப்புத் தடைகளுக்கும், தவறான புரிதல்களால் ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங் களுக்கும் மூலக்காரணம் அன்று பாபேலில் நம் முன்னோர்கள் செய்த கலகமே ஆகும்.
அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்..பூமியெங்கும் சிதறிப்போகக் கூடாது என்ற மனிதனின் சுயநலத் திட்டத்தை முறியடிக்க, கடவுள் தனது வல்லமையால் அவர்களைப் பூமியெங்கும் சிதறடித்தார். இதனால் அவர்கள் நகரம் கட்டுவதை நிறுத்தினார்கள்.
ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த வர்கள் அல்லது ஒரே கூட்டத்தை ச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் புதிய மொழிக ளையும், பிற கூட்டத்தினர் அறி யாத மாற்று மொழிகளையும் கடவுள் உருவாக்கினார்.
மனிதனின் ஆயுட்காலம்:
Human lifespan.
அன்பர்களே! பெரு வெள்ளத் திற்குப் பின் மனிதகுலத்தின் ஆயுட்காலம் படிப்படியாகக் குறைவதை நாம்காண்கிறோம்.
நோவாவின் காலத்திற்குப் பிறகு மனிதனின் ஆயுள் 500 ஆண்டுகளில் இருந்து 400 ஆகக் குறைந்தது (சேம், அர்பக்சாத், சேலா), பின்னர் ஏபேர் மற்றும் பேலேகின் காலத்தில் 200 ஆண்டுகளாகவும், நாகோரின் காலத்தில் மேலும் சுருங்குவதை யும் நாம் பார்க்கிறோம். பாவத்தின் பெருகிய தாக்கமும் கடவுளுடைய இறையாண்மை இதில் அடங்கியுள்ளது.பாவம்
செய்ய செய்ய ஆயுளும் குறைகி றது.(In those period, no Gregorian calendar i,e. 365 days followed)
கடவுளின் மீட்பு திட்டம்:God's Salvation Plan":
அன்பர்களே! உலகம் பாபேலில் கலகம் செய்து சிதறிப்போனாலு ம், கடவுள் தம்முடைய மீட்பின் திட்டத்தைக் கைவிடவில்லை. சேமின் சந்ததி வழியாக உலகி ற்கு இரட்சகரைத் தரும் உன்னத நோக்கத்திற்காக " விசுவாசத் தின் தந்தை" என்று அழைக்கப் படவிருக்கும் ஆபிரகாமின் தோற்றத்திற்கான இந்த வம்ச வழியைத் கடவுள் பாதுகாத்து நடத்துகிறார்.
இறுதியாக,
மனிதன் கடவுளிடம் சாராமல் சுயபலத்தால் தனக்கெனப் பேர ரசை உருவாக்க நினைக்கும் போது குழப்பமே மிஞ்சும். மனிதர்கள் ஒன்றுகூடித் கடவு
டைய கட்டளையை (பூமியை நிரப்புங்கள் என்ற கட்டளையை) மீற முயன்றாலும், இறுதியில் கடவுளுடைய சித்தமே நிறை வேறியது. நியாயத்தீர்ப்பின் மத்தியிலும், ஆபிரகாமைக் கொண்டு வரத்தக்கதாக ஒரு பரிசுத்த வம்சவழியைத் கடவுள் தெரிந்து கொண்ட கிருபையை இந்த அதிகாரத்தின் பிற்பகுதி (வசனங்கள் 10-24) நமக்கு உணர்த்துகிறது.
(Dear friends, I was a little bit confus ed with this chapter Genesis11: 7-24. In what way, it is connected to the Babtism? But, Our CSI theologians are highly expertised in wisely collaborating the topics)
தொடக்கநூல் 11:7-24 ன் திருமுழக்கின் தொடர்பு:
அன்பர்களே! பாபேல் கோபுரம் மற்றும் சேமின் வம்சவரலாறு பகுதிக்கும் கிறிஸ்தவ திருவருட் சாதனமானதிருமுழுக்கு(Baptism) உள்ள தொடர்பு, மனிதனின் பாவம் மற்றும் சிதறடிப்பு மற்றும் கிறிஸ்துவின் மூலமாக நடக்கும் மீட்பு, மற்றும் ஒன்றிணைப்பு ஆகியவை இறையியல் பின்னணியில் அமைந்துள்ளது
1.திருமுழுக்கு என்பது ஒரு மனிதனை கிறிஸ்துவின் சரீர மாகிய திருச்சபைக்குள் இணை க்கிறது. பாபேலில் பாவம் மனித ர்களைப் பிரித்து, வெவ்வேறு மொழிகளால் சிதறடித்தது. ஆனால், தூய ஆவியானவரால் பெறப்படும் திரூமுழுக்கின் அடையாளமாக விளங்கும் பெந்தெகொஸ்தே நாளில் (திருதூதர் பணிகள் Acts: 2), தூய ஆவியானவர் இறங்கி வந்து, வெவ்வேறு,மொழி பேசும்
மக்களை கிறிஸ்துவின் அன்பிற் குள் ஒன்றிணைத்தார்.
2.பாபேல் கோபுரம் மனிதனைப் பிரித்தது; கிறிஸ்துவினால் பெறப்படும் திருமுழுக்கு பிரிந் த மனிதகுலத்தை மீண்டும் கடவுளுடைய ஒரே குடும்பமாக இணைக்கிறது.
3.மனிதர்கள் கடவுளுக்கு இணையாகத் தங்களை உயர்த் தவும், "தங்களுக்குப் பேரை உண்டாக்கவும்" பெருமையோடு கோபுரத்தைக் கட்டினார்கள். ஆனால், திருமுழுக்கு என்பது மனிதனுடைய பழைய பெருமை, பாவம் மற்றும் சுயநலமான வாழ்வை தண்ணீருக்குள் அடக் கம் செய்து, கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக உயிர்த்தெழு வதைக் குறிக்கிறது (ரோமர் 6:4).
4 மனிதன் அழிவை நோக்கிச் சென்ற பெருமை, திருமுழுக்கில் தாழ்மையின் வழியாக வாழ் வாக மாறுகிறது.
5.பாபேல் சிதறடிப்புக்குப் பிறகு, திருவிவலியத்தில் சேம் என்பவ ரின் வம்சவரலாற்றைக் குறிப் பிடுகிறது. இந்த வம்சவரலாறு நேராக ஆபிரகாமிடம் வந்து முடிகிறது. இந்த வம்சவரலாறே பிற்காலத்தில் உலக இரட்சகரா கிய இயேசு கிறிஸ்து பிறப்ப தற்குக் காரணமாக அமைந்தது (மத்தேயு 1 வம்சவரலாறு).
6.இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வழி யாகவே நமக்கு திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம் கிடைத்தது. சேமின் வம்சவரலா று வழியாக ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், இன்று திருமுழுக்கு பெறும் அனைத்து விசுவாசிகளுக்கும் (அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும்) கிறிஸ்துவின் மூலம் சுதந்தரமாகக் கிடைக்கி றது (கலாத்தியர் 3:27-29). என திருத்தூதர் பவுல் அடிகளார்
கூறுகிறார்.
2 திருமுழுக்கு இரட்சிப்பின் கருவியாகும்.Baptism is the instrument of salvation."பேதுரு 3:18-22.
அன்பர்களே திருத்தூதர் பேதுரு அவர்கள் இத்திருமுகத்தை கிபி 62 - 64ல் ரோமப் பேரரசில் கிறிஸ் தவர்கள் கடுமையான துன்புறுத் தல்களையும் அவதூறுகளையும் எதிர்கொண்டனர். இயேசு கிறிஸ்து பாடுகளைச் சகித்து இறுதியில் எப்படி வெற்றி பெற் றார் என்பதை நினைவூட்டி, சோர் ந்துபோன விசுவாசிகளைத் திடப்படுத்துவதும், அநீதியைச் சகிக்கும்போது நற்செய்தியைத் தைரியமாகப் பறைசாற்ற இந்த
திருமுகத்தை எழுதினார்.
நீதிமானாகிய இயேசு, அநீதி யுள்ள நமக்குப் பதிலாகப் பாவத் துக்காக ஒருமுறை மரித்தார். அவர் சரீரத்திலே கொல்லப்பட் டாலும், ஆவியிலே உயிர்ப்பிக்க ப்பட்டார்.அவர் சிறையில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். நோவாவின் காலத்தில் பேழை தயாராகும்போது கீழ்ப்படியாமல் இருந்த ஆவிகளுக்கு (அல்லது விழுந்துபோன தூதர்களுக்கு) கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு தனது முழு வெற்றியையும் அதிகாரத்தையும் அறிவித்தார் (பிரசங்கித்தார்) என்பதை திருதூதர் பேதுரு இங்கு குறிப்பிடுகிறார்.
திருமுழுக்கு என்பது நோவா வின் காலத்தில் தண்ணீர் மூலம் எட்டுப்பேர் காப்பாற்றப்பட்டது போல, இன்றைக்கு திருமுழுக்கு நம்மை இரட்சிக்கிறது.இந்த தண்ணர் என்பது திருமுழுக்கி ன் அடையாளம். இது சரீரத்தின் அழுக்கைக் கழுவுவது அல்ல; இயேசு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலின் மூலமாகத்கடவுளை நோக்கி வேண்டிக் கொள்ளும் நல் மனசாட்சியின் உடன்படிக் கையாகும்.
இயேசு பரத்துக்குச் சென்று கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்ல மைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டி ருக்கின்றன; அதாவது, அவரே எல்லாவற்றிற்கும் மேலானவர்.
அவரே அனைத்திற்கும் மேலான முழுமையான அரசன்.
3.திருமுழுக்கு புதுபிறப்பின் அடையாளம். Baptism is the sign of rebirth." யோவான் 3:1-8.
அன்பர்களே! யோவான் 3:1-8,ன் பின்னணி (Context),என்னவென்
றால், இயேசுவுக்கும் யூதர்களி ன் தலைவர்களில் ஒருவரான நிக்கொதேமுவுக்கும் இடையே இரவு நேரத்தில் நடந்த ஆன்மீக உரையாடலாகும்.
நிக்கொதேமு யார்?
இவர் ஒரு பரிசேயர் மற்றும் யூதர்களின் உயர் நீதிமன்றமான சன்செரிசங்கத்தின்(Sanhedrin) உறுப்பினர் ஆவார். யூதர்களுக் குச் சட்டங்களைக் கற்றுக் கொடு ப்பதில் வல்லவர். இவர் நம் ஆண்டவர் இயேசு கிறித்துவை சந்திக்க இரவில் வந்தார்.
இது யூதத் தலைவர்களின் பயம் அல்லது தன் பெயரைக் காப்பா ற்றிக் கொள்ளும் நோக்கமாக இருக்கலாம்.
"இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலிற்கு ஒன்றே ஒன்று" என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற வரிகளா கும்.(The night has a thousand eyes" என்ற ஆங்கிலப் சொற்றொடர் பிரான்சிஸ் வில்லியம் பௌர்டி லன் (Francis William Bourdillon) எழுதிய புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதையிலிருந்து பெறப்பட்ட தாகும்). இரவு நேரச் சந்திப்பு என்பது அரசியலில் மிக முக்கி யமானது.
இந்த வரியின் பொருள் என்ன
வென்றால்,பகலில் நாம் செய் யும் ஒவ்வொரு செயல்களைச் சூரியன் என்ற ஒற்றைக் கண் (ஒளி) பார்த்துக் கொண்டிருக்கி றது. ஆனால், இரவில் மனிதர்க ளின் நடமாட்டத்தைக் கண் காணிக்கவும், பல இரகசியங்க ளைக் காண நட்சத்திரங்களும், நிலாவும், இருளும் பல கண்கள் போலச் செயல்படுகின்றன. என்பதே உண்மை.
இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு, கடவுளோடு கூட இயேசு இருக்கிறார் என்பதை நிக்கொ தேமு உணர்ந்திருந்தார்.
அன்பர்களே!
யோவான் 3:1-8 பகுதியில் இயேசு கிறிஸ்துவிற்கும் நிக்கொதேமுவிற்கும் இடையே நடக்கும் உரையாடலைக் குறித் து, பிரான்ஸ் நாட்டின் சீர்திருத் தவாத இறையியலாளர் ஜான் கால்வின் (John Calvin) வழங் கிய முக்கியமான விளக்கவுரை என்ன கூறுகிறது என்றால்:
1. நிக்கொதேமு ஒரு பரிசேய னாகவும், யூதர்களின் அதிகாரி யாகவும் இருந்தான். அவன் உலகப்பிரகாரமான மத போத னைகளிலும், நியாயப்பிரமாண ஒழுக்கங்களிலும் உயர்ந்த இடத்தில் இருந்தான்.
2 அவன் இரவில் வந்தது ஏன்?: நிக்கொதேமு இயேசுவிடம் இரவில் வந்ததற்கு அவனது பயமும் வெட்கமுமே காரணம் என்று கால்வின் குறிப்பிடு கிறார்.
3 தனக்கு இருக்கும் சமூக அந்த ஸ்து மற்றும் யூதர்களின் பயம் காரணமாக அவன் பகலில் வரத் துணியவில்லை.
4 இயேசுவை வெறும் ஒரு "போதகர்" (Rabbi) என்றும், கடவுள் அவரோடு இருக்கிறார் என்றும் மட்டுமே நிக்கொதேமு அங்கீகரித்தான். ஆனால், அவ னால் இயேசுவை மெசியாவாக வோ அல்லது மீட்பராகவோ முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.
3)மனித சுபாவத்தின் மொத்த சீரழிவு (Total Depravity): இயேசு நிக்கொதேமுவின் புகழுரைக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், "ஒருவன் மறுபடியும் பிறவாவி ட்டால் கடவுளுடைய அரசை காணமாட்டான்" என்று கூறுகி றார். மனிதன் தன் சுய முயற்சி யாலோ, நற்கிரியைகளாலோ அல்லது மத சடங்குகளாலோ இரட்சிப்பை அடைய முடியாது என்பதை இது காட்டுகிறது என்று கால்வின் விளக்குகிறார்.
4 புதிய பிறப்பு: "மறுபடியும் பிறப்பது" என்பது ஏதோ ஒரு சிறு சீர்திருத்தம் அல்ல; அது மனிதனுடைய முழு சுபாவமும், சிந்தனையும், இருதயமும் முற்றி லும் புதிதாக்கப்பட வேண்டிய கட்டாயத்தைக் குறிக்கிறது.
5 "முதிர்வயதான மனிதன் எப்படிப் பிறக்க முடியும்? தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் முறை புக முடியுமா?" என்ற நிக்கொதே முவின் கேள்வி அவனது ஆவிக்குரிய குருட்டுத்தன்மை யைக் காட்டுகிறது.
6,உலக அறிவிலும் வேத அறிவி லும் சிறந்த ஒரு போதகர்கூட, பரிசுத்த ஆவியானவரின் வெளி ச்சம் இல்லாமல் ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை கால்வின் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.
7. தண்ணீராலும் ஆவியினாலும் பிறத்தல் என்பது 'தண்ணீர்' என்பது இங்கு வெறும் திருமுழு க்கு தண்ணீரைக் குறிக்கவில் லை என்று கால்வின் திட்ட வட் டமாக மறுக்கிறார். பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் எசேக்கியேல் 36:25-27 இல் சொல்லப்பட்டுள்ளது போல, "தண்ணீர்" என்பது பரிசுத்த ஆவியானவர் இருதயத்தைச் சுத்திகரிக்கும் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு உவமை யாகும். ஆவியானவர் பாவக் கறைகளைக் கழுவிச் சுத்திகரி ப்பதையும் (தண்ணீர்), இருதய த்தில் ஒரு புதிய தெய்வீக வாழ்வை உருவாக்குவதையும் (ஆவி) இது குறிக்கிறது.
மாம்சம் vs ஆவி: "மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்". ஆதாமின் வழிய வந்த மனித சுபாவம் எப்போதும் பாவம் நிறைந் ததாகவே இருக்கும். எனவே, ஆவிக்குரிய தெய்வீகத் தன்மையைப் பெற பரிசுத்த ஆவியின் பிறப்பு மட்டுமே ஒரே வழி.
காற்றின் உவமை:
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்க முடிகிறதே தவிர, அது எங்கிருந்து வருகி றது, எங்குப் போகிறது என்று மனிதனால் கட்டுப்படுத்த முடியாது.கடவுளுடைய இறை யாண்மை (Divine Sovereignty):யும் அதேபோல, பரிசுத்த ஆவியான வர் இரட்சிப்பில் இறையாண் மையோடு (Sovereignly) கிரியை செய்கிறார். ஆவியானவர் யாரு டைய இருதயத்தில், எப்பொழுது கிரியை செய்வார் என்பதை மனிதக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. மறுபடியும் பிறத்தல் என்பது மனிதனின் தீர்மானத்தால் அல்ல, முற்றிலும் கடவுளுடைய கிருபையினாலும் ஆவியான வரின் ரகசியமான கிரியையி னாலும் மட்டுமே நடக்கிறது என்பது கால்வினின் முக்கிய இறையியல் வாதமாகும்.
இறுதியாக,
ஜான் கால்வினின் வர்ணனை ப்படி, யோவான் 3:1-8 இன் முதன்மை செய்தி என்ன வென் றால் மனிதன் தன் சொந்தப் புண்ணியங்களால் கடவுளு டைய அரசிற்குள் நுழைய தகுதி யற்றவன்; பரிசுத்த ஆவியானவ ரின் இறையாண்மையுள்ள கிரியையினால் மட்டுமே ஒரு பாவி ஆவிக்குரிய மறுபிறப்பை அடைய முடியும் என்பதாகும். அந்த மறுபிறப்பாகிய புது வாழ்
வு நமக்கு திருமுழுக்குமூலம்
கடவுள் அருள்கிறார்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511
Comments
Post a Comment