பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பும்.(297). Pluralism: Faith and Friendship. எரேமியா: 29:1-7, உரோமையர்12:8-18, திருப்பாடல்: 37:1-24, லூக்கா: 11:5-10

முன்னுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பும். Pluralism: Faith and Friendship"
பல் சமயச் சூழல் என்றால் என்ன? What is Pluralism?
அன்பர்களே! பல் சமயச் சூழல்
என்றால்,"சட்டத்தின் முன்னேயும் சமூகத்திலேயும் அனைத்து மத மக்களுக்கும் சமமான உரிமை களை சமத்துவ நோக்கோடும், அனைத்து மதத்தினரும் தங்க ளின் நம்பிக்கைகளைக் கடைப் பிடிக்க சுதந்திர உரிமையை பெற்று, ஒருவரையொருவர் அனுசரித்து  மற்ற மதங்களை மதித்து அதன் மீது அவதூறு பேசாமல், அவற்றின் வழிபாடு களையும் கருத்துக்களையும் மதித்து நடப்பதே பல் சமயச் சூழல் என்பதாகும்.
ஆனால், இன்றைய ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) ஒன்றை கொண்டுவந்துள்ளது.
சாதி, மதம், இனம் மற்றும் பாலின வேறுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெ டுத்தல் மற்றும் சொத்துரிமை போன்ற தனிநபர் சட்டங்களை ஒரே மாதிரியாக அமல்படுத்து வதே பொது சிவில் சட்டம்  எனப்படும்
இதனால் ஏற்படும் பாதிப்பு கள்:
அன்பர்களே! அனைத்து சமூகத் தினரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வருவது சமூகத்தில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.
அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஒருமித்த கருத் தை எட்டாமல் சட்டத்தைத் திணி ப்பது சமூக ஒற்றுமைக்குச் சோத னையாக அமையும்.
சிறுபான்மையினர் மற்றும் பல்வேறு பழங்குடிச் சமூகங்கள் தங்களின் தனித்துவமான மத நம்பிக்கைகளில் அரசாங்கம் தலையிடுகின்றது.
இந்திய அரசியலமைப்பின்படி, பகுதி III-ல், பிரிவு 25 முதல் 28 மத சுதந்திரத்திற்கான உரிமை என்பது குடிமக்களுக்கு வழங்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைக ளில் ஒன்றாகும், முக்கிய சட்டப் பிரிவுகள்பிரிவு 25 மத சுதந்திரம் எந்தவொரு மதத்தையும் ஏற்றுக் கொள்ளவும், அதன்படி நடக்க வும், மற்றும் அதைப் பரப்பவும் தனிநபருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. பொது ஒழுங்கு, தார்மீக நெறி மற்றும் உடல் நலம் பாதிக் காத வகையில் இந்த உரிமை அமல்படுத்தப்படும்.பிரிவு 26 (மத விவகாரங்களை நிர்வகிக் கும் உரிமை): எந்தவொரு மதப் பிரிவினரும் தங்களின் மத மற் றும் நற்பணி நிறுவனங்களை ஏற்படுத்தவும், நிர்வகிக்கவும், சொத்துக்களைப் பெற்று அவற் றைச் சட்டத்திற்கு உட்பட்டு பராம ரிக்கவும் உரிமை உண்டு.பிரிவு 27 (மத வளர்ச்சிக்கான வரி வில க்கு)எந்தவொரு குறிப்பிட்ட மதத் தையும் பரப்பு வதற்காகவோ அல்லது மேம்படுத்துவதற்காக வோ தனிநபர்கள் மீது வரி செலுத்தும்படி அரசு கட்டாயப்ப டுத்தக் கூடாது.பிரிவு 28 (மதப் போதனை தடை)அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மதப் போதனைகள் வழங்கக் கூடாது என்பது அடிப்படைக் கோட்பாடு, இந்த உரிமைகள் மூலம் இந்தியா ஒரு மதச்சா ர்பற்ற நாடாக (Secular State) அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிறுபான்மை கிறித் தவர்கள் அதிகமாக ஒடுக்கப்படு கின்றனர்.ஆலயங்கள் தாக்கப் பட்டு, ஒரு அச்ச சூழ்நிலையில்
வாழ்ந்து வருகின்றனர். இந்த
பொது சிவில் சட்டம் கிறித்தவர் களின் மத நம்பிக்கைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும்.
பல்சமய சூழலில் இந்திய கிறித்தவர்களின் பங்கு.,The
Role of Indian Christians in Pluralism. 
அன்பர்களே!
பல்சமய சூழலில் இந்திய கிறித்தவர்களின்பங்குஎன்பது
 கல்வி, மருத்துவம், சமூக மேம் பாடு மற்றும் தேசிய ஒருமை ப்பாடு ஆகியவற்றில் மிக முக்கி யமானது. பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி, அனைத்து மதத்தினருக்கும் கல்வி கிடைக்கச் செய்தனர். 
கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச் சிக்கு உதவினர். 
தொலைதூர கிராமங்களில் மருத்துவமனைகளை அமைத்து, ஏழை மக்களுக்கு எளிய முறை யில் மருத்துவச் சேவைகளை வழங்கினர்.
சுகாதார விழிப்புணர்வை ஏற்படு த்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல கிறித்தவர் கள் தீவிரமாகப் பங்கேற்றனர். பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்த இந்தி யச் சூழலில், பிற மதத்தினருடன் இணைந்து வாழ்ந்து நல்லிண க்கத்தைப் பேணுகின்றனர்.
திருத்தூதர் பவுல் அடிகளார் கூறுவதுபோல்,"இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லா ரோடும் அமைதியுடன் வாழுங் கள். (உரோமையர் 12:18) என்ற
இறைகருத்தை வைத்தே திரு விலியம் நமக்கு அறிவுறுத்து கிலறது.
பண்டைய இஸ்ரவேலர்கள் பிற மதக் கோட்பாடுகளையோ அல் லது அந்நிய தெய்வ வழிபாடுக ளையோ மதிக்கவில்லை. தங்களின் தனித்துவமான ஒரே கடவுள் (யாவே/யெகோவா) கொள்கையில் அவர்கள் தீவிர மாக இருந்தனர். இஸ்ரவேலர்களின் சமயம் "ஒரே கடவுள்" (Monothe ism) மற்றும் "உடன்படிக்கை" சார்ந்ததாகும். எனவே, பிற இன த்தாரின் வழிபாடுகளை அவர்கள் முற்றிலும்நிராகரித்தனர்.
கானான் தேசத்து தெய்வங்களா ன பாகால், அஸ்தரோத் போன் ற பிறமத தெய்வ வழிபாடுகளை அவர்கள் அருவருப்பாகக் கருதி னர்.விவிலியகட்டளைகளின்படி, அவர்கள் பிற மத வழிபாட்டுத் தலங்களை(மேடைகள்,சிலைகள்)  உடைத்து அழிக்க வேண்டும் என்ற கடுமையான ஆன்மீக சட்டங்களைக் கொண்டிருந்த னர்.மத ரீதியாகப் பிற நம்பிக் கைகளை எதிர்க்க துணிந்த இஸ்ரவேலர்கள், தனிமனித அளவில் பிற தேசத்து மனிதர் களை (அந்நியர்களை) மதிக்க வும், அவர்களைக் காக்கவும் கட்டளையிடப்பட்டிருந்தனர். மோசேயின் நியாயப்பிரமாண த்தில், "நீங்களும் எகிப்து தேசத் தில் அந்நியர்களாய் இருந்தபடி யால், அந்நியனை ஒடுக்கக் கூடாது, அவனை உங்களைப் போல் நேசிக்க வேண்டும்" (லேவியரா 19:34) என்றுதெளி வாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, திருவிவலியம் பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பையும் கொண்டிருந்தது.
1.பல் சமயச் சூழலில் இஸ்ர வேலர்.Israelites in a Pluralistic Religious Context". எரேமியா: 29:1-7. ,Based on John Calvin Commentary)
அன்பர்களே!எரேமியா  இறை வாக்கினர் எருசலேமிலிருந்து பாபிலோனில் சிறைப்பட்டிருந்த தலைவர்கள்,(காலம் கி.மு 597 முதல்538 கிமு,) ஆசாரியர்கள் மற்றும் மக்களுக்கு இந்தக் கடித த்தை அனுப்புகிறார்.கடவுள் எரேமியாவைத் தன் அதிகாரப் பூர்வ தூதுவராகப் (Ambasdador) பயன்படுத்தினார் என்பதை இறையியலாளர் கால்வின் வலியுறுத்துகிறார். யூத மக்கள் தங்களைச் சிறைபிடித்த நேபு காத்நேச்சரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த சிறையிருப்பு மனிதர் களால் நேர்ந்ததல்ல, மாறாக அவர்களின் பாவங்களுக்காகக் கடவுளே அனுமதித்த தண்டனை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று கால்வின் குறிப்பிடுகிறார். பாபிலோனில் வெறும் இரண்டு வருடங்களில் விடுதலை கிடை த்துவிடும் என்று கள்ள இறை வாக்கினர் பொய் வாக்குறுதி அளித்து வந்தனர். ஆனால், எரேமியா 70 ஆண்டுகள் அங்கேயே இருக் க வேண்டும் என்று கூறுகி றார்.இந்தக் கட்டளைகளின் மூலம், மக்கள் தங்களின் "சிறையிருப்பு நீண்ட காலம் நீடிக்கும்" என்ற உண்மையை அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என கால்வின் விளக்குகிறார்.வீடுகளைக் கட்டு வதும், தோட்டம் அமைப்பதும், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் பராமரிப்பி ன் அடையாளமாகும். அவர்கள் சிறைப்பட்ட தேசத்திலும் சோர் ந்து போகாமல், தங்களின் அன் றாட வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த வேண்டும். கடவுள் கொடு த்த தண்டனையின் காலத்தை அவர்கள் பொறுமையுடனும் கீழ்ப்படிதலுடனும் கடக்க வேண் டும் என்று கால்வின் கூறுகிறார்.
பல் சமயச் சூழலில் இஸ்ர வேலரின் நம்பிக்கை.The faith of Israel in a multi-religious context".
அன்பர்களே! இஸ்ரவேலர் 
தங்களை ஒடுக்கின, தங்களின் ஆலயத்தை அழித்த பாபிலோ னிய பேரரசின் நன்மைக்கா கவும், அமைதிக்காகவும், இறை வேண்டல்செய்யும் படி யூதர்கள் பணிக்கப்படுகிறார்கள். இறையியலாளர் கால்வினின் வர்ணனையில் இந்த வசனம் மிக முக்கிய இடத்தைப் பெறு கிறது. தங்களை வதைக்கும் எதிரிகளுக்காக  வேண்டுதல் செய்வது மனித இயல்புக்கு எதிரானது. ஆனால், உண்மை யான ஞானம் என்பது கடவுளு டைய கட்டளைக்கு நம்மை முழுமையாக ஒப்படைப்பதுதான் என்று கால்வின் கற்பிக்கிறார். பாபிலோனின் அமைதிதான் யூதர்களின் அமைதிக்கும் வழி வகுக்கும். அந்நிய தேசத்தில் அவர்கள் வாழும் வரை, அந்த அரசாங்கத்தின் நல்வாழ்வு இவர்களுடைய பாதுகாப்பிற்கும் அவசியம் என்பதை கடவுள் உணர்த்துகிறார். இது கர்த்தர் தங்களுக்கு நியமித்த காலம் என்பதால், அந்த அரசை எதிர்க் காமல், அமைதியாக வாழ வேண்டும்.  "சிறையிருப்பு என் பது நேபுகாத்நேச்சரின் பலத் தால் வந்தது அல்ல, கடவுளின் திட்டத்தால் வந்தது". எனவே, சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடாமல், கடவுளின் இறை யாண்மையின் கீழ் மக்கள் தங்க ளை தாழ்த்த வேண்டும்.  தேவாலயம் இல்லாத பாபிலோ ன் போன்ற ஒரு கடவுளை அறியாத தேசத்திலும் கடவுள் விண்ணப்பத்தைக் கேட்கிறார். எங்கே இருந்தாலும் விசுவாசி கள் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் நன்மைக்காக உழைக்க வேண்டும். கடவுள் நமக்கு வைத்திருக்கும் திட்டங்கள் நன்மைக் கேதுவான வை (வசனம் 11). விசுவாசிகள் தங்கள் சொந்த அவசரத் திட்ட ங்களின்படி செயல்படாமல், கடவுளின் காலத்திற்காகப் பொறுமையோடு காத்திருக்க பழக வேண்டும்.
2.பல் சமய சூழலில் கிறித்த வர்கள் எவ்வாறு வாழவேண் டும். How Christians should live in a multi-religious society" உரோமை யர்12:8-18
அன்பர்களே! திருதூதர் பவுல் அடிகளார்  உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:8-18 வரை யிலான பகுதியானது, ஒரு கிறிஸ்தவர் தன் அன்றாட வாழ்க் கையிலும், பிற மக்களுடனும் திருச்சபையுடனும் எவ்வாறு பழக வேண்டும் என்பதை விளக்கும் மிக முக்கியமான வாழ்வியல் போதனையா கும்.கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தாலந்துகளையும் (கொடைகளையும்) கொடுத் திருக்கிறார். உங்களுக்கு என்ன தாலந்து கொடுக்கப்பட்டுள்ள தோ, அதை முழு மனதோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண் டும். பிறருக்கு உதவும்போது முகச்சுளிப்பு இல்லாமல், இன் முகத்தோடு செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறார். உங்கள் அன்பு வெளிவேடமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள் ளுங்கள். சகோதர அன்பால் ஒருவர் மற்றவரிடம் பற்றுக் கொள்ளுங்கள்; பிறரை மதிப் பதில் உங்களைவிட மற்றவரை முற்பட்டவராகக் கருதுங்கள் அன்பு என்பது போலித்தனமாக இருக்கக் கூடாது. தீமையான காரியங்களை முற்றிலும் வெறுத்து, நன்மையை மட்டுமே செய்ய வேண்டும். சுயநலம் இல்லாமல், உங்களை விட மற்ற வர்களுக்கு மதிப்பும் மரியாதை யும் கொடுப்பதில் முதன்மையா க இருக்க வேண்டும். ஆன்மீக ஆர்வத்தில் தளர்ச்சி வேண்டாம்; தூய ஆவியால் ஆர்வம் கொண் டவர்களாய் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். நீங்கள் கொண் டுள்ள எதிர்நோக்கில் மகிழ்ச்சி யாயிருங்கள்; துன்பத்தில்பொறு மையாயிருங்கள்; இறைவேண்ட லில் நிலைத்திருங்கள்.  கடவுளுக்குப் பணி செய்வதில் சோம்பேறித்தனம் கூடாது. தூய ஆவியின் வழிநடத்துதலால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வரவிருக்கும் விண்ணக வாழ்வை நினைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துன்பங்கள் வரும்போது சோர்ந் து போகாமல் சகிப்புத்தன்மை யோடு இருக்க வேண்டும். எல் லாவற்றிற்கும் மேலாக, எப்போ தும் ஜெபிக்க வேண்டும்.  "வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம் பலில் கண்ணும் கருத்துமாய் இருங்கள்." கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கும், உடன் வாழும் விசுவாசிகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். நம் வீட்டிற்கு வருபவர்களை அன்போடு வர வேற்று உபசரிக்க (விருந்தோ ம்பல்) வேண்டும்.  "உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சாபமிடாதீர்கள்."இது இயேசு கிறிஸ்து மலைப்பொழிவில் கற்பித்த மிக உயரிய போதனை யாகும். நமக்குத் தீமை செய்பவ ர்களையோ அல்லது நம்மைத் துன்புறுத்துபவர்களையோ நாம் பழிவாங்கக் கூடாது, மாறாக அவர்களுக்கு கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். "மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். ஒருவ ரோடு ஒருவர் ஒருமனப்பட்டிரு ங்கள்; உயர்வுள்ளவற்றை நாடாமல் தாழ்வுள்ளவற்றோடு உங்களை இணைத்துக் கொள் ளுங்கள்; உங்களை அறிவாளிக ளாகக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்." மற்றவ ர்களின் மகிழ்ச்சியைக் கண்டு பொறாமைப்படாமல் அவர்க ளோடு சேர்ந்து சந்தோஷப்பட வேண்டும். அவர்கள் துக்கத்தில் இருக்கும்போது ஆறுதலாக இருந்து அவர்களோடு அழ வேண்டும். யாரிடமும் பாகுபாடு காட்டாமல், ஏழை மற்றும் எளிய மனிதர்களோடு நட்புறவு கொள்ள வேண்டும். "நான் எல்லாம் தெரிந்தவன்" என்ற அகந்தையோ, பெருமையோ இருக்கக் கூடாது.   "தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; மனிதர் அனைவருக்கும் முன்னிலை யில் நன்மையானவற்றையே செய்யக் கருத்தாயிருங்கள். உங்களால் இயன்றவரை எல்லா மனிதரோடும் அமைதியுடன் வாழுங்கள்." 
இறுதியாக, 
இந்த உரோமையர் திருமுகப் பகுதி, ஒரு கிறிஸ்தவ வாழ்வு என்பது வெறும் வழிபாடுக ளோடு முடிந்துவிடுவதல்ல, அது பிறர் மீது காட்டும் உண்மையா ன அன்பு, தாழ்ச்சி, பொறுமை, மன்னிப்பு மற்றும் பிறரோடு இணங்கி வாழும் அமைதியான வாழ்க்கை ஆகியவற்றில் தான் வெளிப்படுகிறது என்பதை நமக்கு ஆழமாக உணர்த்து கிறது. 
3.நடு இராத்திரி நண்பன். Midnight Friend. லூக்கா: 11:5-10 
அன்பர்களே!பிரபல விவிலிய அறிஞர் வில்லியம் பார்க்லே (William Barclay) அவர்களின் விளக்கத்தில், முதலில் நாம்
பாலஸ்தீன நாட்டின்கலாச்சாரப் பின்னணியை கவனிப்போம்.
பாலஸ்தீனத்தில் பகல் நேரத் தில் வெயில் அதிகமாக இருக் கும் என்பதால், பயணிகள் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரங்களில்தான் பயணம் செய்வார்கள்.அதனால்தான் உவமையில் வரும் நண்பன் நடுராத்திரியில் வந்து சேருகி றான்.யூத கலாச்சாரத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிப்பது மிக முக்கியமான கடமை. தன்னிடம் உணவில்லை என்றாலும், வந்தவரைப் பட்டி னியாக வைக்கக்கூடாது என்ற கட்டாயத்தினால்தான் அவன் தன் அண்டை வீட்டுக்காரனை நாடுகிறான்.அக்காலத்து சாதாரண ஏழை வீடுகள் ஒரே ஒரு அறையைக் கொண்டதாக இருக்கும். அதில் தரை சற்று உயர்த்தப்பட்டு, ஒரே பாயில் தந்தை, தாய், பிள்ளைகள் என அனைவரும் ஒன்றாகப் படுத்து றங்குவர். கதவுகள் உள்பக்க மாகப் பூட்டப்பட்டிருக்கும். எனவே, நடுராத்திரியில் எழுந்து கதவைத் திறந்தால், வீட்டில் உள்ள பிள்ளைகள் அனைவரும் எழுந்துவிடுவார்கள். இதனா ல்தான் உள்ளே இருப்பவன் "என்னைத் தொந்தரவு செய்யா தே"என்கிறான்.எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொரு ட்டாவதுதேவையானதைக் கொடுப்பார் என்பது ஆண்டவரி ன் வாக்கு.இங்கு "விடாப்பிடியா ய்" என்ற வார்த்தை, கிரேக்க மூல மொழியில் 'அனாய்டியா' (Anaideia) என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு "வெட்கமின்மை" அல்லது "துணிகரமான விடாமுயற்சி" (Shameless Persistence / Audacity) என்று பொருள்.இறையியலாளர் பார்க்லே இதைக் குறிப்பிடும் போது, உள்ளே இருக்கும் நண்பன், நட்புக்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், வெளியே நிற்பவனின் "வெட்கமற்ற, விடா ப்பிடியான தட்டுதல்" காரண மாக, தன் தூக்கம் கலைந்தாலும் பரவாயில்லை என்று எழுந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்கிறார்.
இந்த உவமை கடவுளை அந்த எரிச்சலடையும் அண்டை வீட்டுக் காரருக்கு ஒப்பிடுவதற்காகக் கூறப்படவில்லை; மாறாக அதற்கு முற்றிலும் மாறான வர் கடவுள் என்பதைக் காட்டவே கூறப்பட்டது.ஒரு சுயநலமுள்ள, தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனே தொடர்ந்து கேட்பதால் கொடுத்துவிடுகிறான் என்றால், நம்மை நேசிக்கும் நம் அன்பின் பரம பிதா நாம் கேட்கும்போது எவ்வளவு அதிகமாய் நமக்குக் கொடுப்பார்?
அன்பர்களே! கடவுள் ஒருபோதும் கதவைப்பூட்டிவிட்டு "என்னைத் தொந்தரவு செய்யாதே" என்று சொல்ல மாட்டார். கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் இந்த வசனங்களில் உள்ள கிரேக்க வினைச்சொற்கள் "தொடர்ச் செயலைக்" (Continuous Action) குறிக்கின்றன. கேட்டுக் கொண் டே இருங்கள் (Keep on asking) – அது உங்களுக்குக் கொடுக்கப்ப டும். தேடிக்கொண்டே இருங்கள் (Keep on seeking) – நீங்கள் கண்டடைவீர்கள்.
தட்டிக்கொண்டே இருங்கள் (Keep on knocking) – அது உங்களுக்குத் திறக்கப்படும்.ஜெபம் என்பது ஒருமுறை கேட்டுவிட்டு நிறுத் துவதல்ல; அது கடவுள்மீது கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையோடு, விடாமுயற் சியுடன் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதை இப்பாடம் உணர்த்துகிறது.





Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511

 









18th Sept 1936 TheDayInHistory
Dr BabaSahebAmbedkar deputed 13 men to the Sikh Mission at Amritsar to study the Sikh Religion.After their arrival,in a letter Dr.Ambedkar encouraged & congratulated them on their being the vanguard of the conversion movement.


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.