அல்லலுற்ற நம் வாழ்வில் கடவுளின் கருணை (300)Strength in Weakness. God's grace in our Lives.எசாயா 35: 1-10, 2 கொரிந் தியர் 12:1-10, திருப்பாடல் 34, யோவான் 9:1-7

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,,"அல்லலுற்ற நம் வாழ்வில் கடவுளி ன் கருணை".
அன்பர்களே! இந்த 300வது இறை செய்தியை எழுத கிருபை
அளித்த ஆண்டவருக்கு நன்றி
தெரிவிக்கிறேன். என்முன்னோர் கள் கி.பி 1890களில், என் பாட்ட னார் பொண்ணன் Ponnan
என்கிறவர், செங்கல்பட்டு லுத்த ரன் திருச்சபையினர் மூலம் கிறித்துவை ஏற்றுக் கொண்டவ ர்.அவர் தன் பெயரை ஏசடியான் என திருமுழுக்கு பெயராக மாற்றிக்கொண்டு முழுகுடும் பம், மற்றும் உறவினர்கள்
கிறித்துவை ஏற்றுக்கொண்ட னர். இதன் தொடர்பாக, ஆங்கி லேய தொழிலாளர்களுக்கு ஆட்களை பர்மா நாட்டிற்கும், மலாய் நாட்டிற்கும் தேயிலை தோட்டத்திற்கு ஆட்களை வேலை அமர்த்தும் பணியில், ஈடுபட்டார். என் தந்தை Y டேவிட் ( ஊரில் தாவீது என அழைத்த னர்)  1919ம் ஆண்டில் ரங்கூ னில் பிறந்தார்.செங்கல்பட்டு தூய கொலம்பா பள்ளியில் தன்
பள்ளிப்படிப்பை முடித்து, அரசு
ஆசிரியர் பயிற்சியில் பயிற்சி
பெற்று,சிறிது காலம் ஆசிரிய ராக பணியாற்றிய பிறகு 1937 -1948 வரை  இந்திய இராணுவ த்தில் பணியாற்றி, இரண்டாம் உலகபோரில் சிங்கப்பூரில் ஏற்பட்ட காயத்திளிமித்தம், வெளியேறினார்.
என் பாட்டனார் ஏசடியான் ஒவ்வொறு ஞாயிற்றுக்கிழமை தவறாமல் ஐந்து கி.மி நடந்தே ஆலயம் செல்வார் ஞாயிறு ஆராதனையை தவரவிடவே மாட்டார். 95 வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். அவர்
வழியில் அவரின் இறைபணி யை எங்க குடும்ப மக்கள் செய்துவருகின்றனர்.நானும்
ஆண்டவருக்காக ஒரு சிறிய
பணியாற்றுவதற்காக இறை
செய்தி தயாரிக்கிறேன்.இந்த
300வது இறைசெய்தி கடளுவுளு க்கே மகிமை உண்டாவதாக.
அல்லலுற்ற நம் வாழ்வு:
Our afflicted life :
அன்பர்களே!
 கிறிஸ்தவ வாழ்வு என்பது துன் பங்களே இல்லாத ஒரு வாழ்க் கை அல்ல; மாறாக, துன்பங்க ளின் மத்தியில் இறைவனின் அமைதியையும் தேறுதலையும் அனுபவிக்கும் ஒரு வாழ்க்கை ஆகும். மனிதனாகிய நம் வாழ்வில் கவலைகள், நோய்கள், ஏமாற்ற ங்கள், தோல்விகள் மற்றும் இழப்புகள் போன்ற அல்லல்களும் துயரங்களும் வரும்போது, இயேசு கிறிஸ்து நமக்கு எவ்வாறு துணையாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
அல்லலுற்ற நம் வாழ்வில் கிறிஸ்து நமக்குச் செய்யும் நன்மைகள்:
1. பாரத்தைச் சுமப்பவர்:
" இயேசு, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லா ரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு நற்செய்தி 11:28) என்று இயேசு அழைக்கி றார். நம்முடைய துயரங்களை அவரிடம் ஒப்படைக்கும்போது, அவர் நம் பாரத்தைத் தாங்கிக் கொள்கிறார்.நமக்கும் உலக
பாரங்களை தாங்கும் சக்தி தருகிறார்.
2 வாசல்படியில் இருக்கும் இறைவன்: 
நாம் உடைந்துபோய் இருக்கும் போது, இறைவன் நம்மை விட்டுத் தூரப் போவதில்லை. “உடைந்த உள்ளத்தோர்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின் றார்; நசுங்குண்ட நெஞ்சினரை அவர் நலம் பெறச் செய்கின் றார்” (திருப்பாடல்கள் 34:18) என்னும் வசனம் துன்பத்தில் இருக்கும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலாகும்.
3. துன்பங்களில் முன்மாதிரி: இயேசு கிறிஸ்து இந்த உலக த்தில் வாழ்ந்தபோது பசி, தாகம், துரோகம், அவமானம் மற்றும் சிலுவை மரணம் போன்ற அத்த னை துன்பங்களையும் அனுபவி த்தார். எனவே, நம்முடைய வேதனைகளை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. நம் துன்பங் களில் அவர் நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், வழிகாட்டி யாகவும் இருக்கிறார்.
4. அமைதி தருபவர்: 
உலகம் தரும் தற்காலிக அமை தியைப் போலல்லாமல், எந்த ஒரு சூழ்நிலையிலும் மாறாத தெய்வீக அமைதியை கிறிஸ்து நமக்குத்தருகிறார்.புயல்போன்ற சோதனையான காலங்களிலும் நம் மனதை அவரால் அமைதிப் படுத்த முடியும்.நம் வாழ்வில் அல்லல்கள் வரும்போது, கிறிஸ் துவை நோக்கி இறைமன்றாற்
றல் செய்து, அவருடைய வார்த்தைகளைத் தியானிப்ப
தும் நமக்கு விவரிக்க இயலாத மன வலிமையைத் தரும்.
கருணையின் குணம்: The Quality of Mercy;
அன்பர்களே!
 வில்லியம் ஷேக்ஸ்பியர் கடவுளின் கருணையைப் பற்றி தனது புகழ்பெற்ற நாடகமான 'தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனி ஸ்' (The Merchant of Venice)-இல் போர்சியா (Portia) என்ற கதா பாத்திரத்தின் மூலம் மிக அழகா க விளக்கியுள்ளார். "கருணையின் குணம்" (The Quality of Mercy) என்று அழைக் கப்படும் இந்த உரை, உலக இலக்கியங்களில் கருணையை ப் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த வரிகளாகக் கருதப்படுகிறது.
ஷேக்ஸ்பியர் கடவுளின் கருணையை பின்வருமாறு விவரிக்கிறார்:
1. கருணை இயற்கையானது மற்றும் கட்டாயப்படுத்த முடியா தது.கருணை என்பது யாரிடமி ருந்தும் பலவந்தமாகவோ அல் லது கட்டாயப்படுத்தியோ பெறக் கூடிய ஒன்றல்ல. அது வானத் திலிருந்து பூமிக்கு பொழியும் மென்மையான மழையைப் போல இயற்கையாகவே உள்ள த்திலிருந்து வர வேண்டும்.
2. இரட்டிப்பு ஆசீர்வாதம் (Twice Blessed)
கருணை காட்டுவது என்பது கொடுப்பவர், பெறுபவர் ஆகிய இருவருக்குமே நன்மை பயக் கும். கருணையைப் பெறுபவர் அதன் மூலம் காப்பாற்றப்படு கிறார்; அதே நேரத்தில் கருணையை வழங்குபவரின் உள்ளமும் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்வடைகிறது.
3. கருணை அதிகாரத்தை விட மேலானது.
ஒரு அரசனுக்கு அவனது கிரீட மும், செங்கோலும் (Sceptre) உலக அதிகாரத்தையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் மட்டு மே தரும். ஆனால், கருணை என்பது அந்த செங்கோல் அதிகாரத்திற்கும் மேலானது. அது அரசர்களின் இதயங்களில் வீற்றிருக்கும் ஒரு தெய்வீகப் பண்பாகும்.
4. கடவுளின் உண்மையான அடையாளம்.
கருணை என்பது நேரடியாக கடவுளுக்கே உரிய ஒரு குணம் (Attribute to God Himself). உலகிலுள்ள ஆட்சியாளர்களோ அல்லது மனிதர்களோ, தங்களு டைய நீதியோடு கருணையை யும் கலந்து தீர்ப்பு வழங்கும் போதுதான், அவர்களின் அதிகா ரம் கடவுளின் அதிகாரத்தைப் போல மாறுகிறது. அதாவது, நீதியைக் காட்டிலும் கருணை க்கு முக்கியத்துவம் கொடுப்ப வரே கடவுளுக்கு நெருக்கமா னவராக மாறுகிறார்.
CSI.சென்னை பேராயர் அறிவர் 
பால் பிரான்சிஸ் இரவிச்சந் திரன் அவர்கள்,“நீதி இல்லாத சமாதானம் பயனற்றது” —  “Peace without Justice is Futile.”
என்கிறார். அமைதி என்கிற
சமாதானம் என்பது சண்டை இல்லாத நிலை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதரும்சமஉரிமை யுடனும், கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் வாழும் நிலை யே உண்மையான சமாதானம். என்கிறார்.
மனிதர்களாகிய நாம் அனைவ ரும் தவறுகள் செய்யக்கூடியவ ர்கள். கடவுள் வெறும் 'நீதியை' (Strict Justice) மட்டுமே பார்த் தால், நம்மில் யாருமே ஆன்ம விமோசனமோ அல்லது தப்பி ப்பிழைப்பதோ சாத்தியமில்லை. நாம் ஒவ்வொரு நாளும் கடவுளி டம் நமது பாவங்களுக்காகக் கருணையைத்தான் வேண்டு கிறோம் (We do pray for mercy). எனவே, நாம் கடவுளிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே சக மனிதர்களுக்கும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
சுருக்கமாகக் கூறின், ஷேக்ஸ்பியரின் பார்வையில் கருணை என்பது மனிதனை கடவுளின் நிலைக்கு உயர்த் தும் ஒரு உன்னதமான குணம் ஆகும்.
1.அல்லலுற்றவர்களே திடன் கொள்ளுங்கள்.Be strong, those who are in suffering.ஏசாயா 35:1-10.
அன்பர்களே! இஸ்ரவேல் மக்கள் நீண்டகாலமாகச் சிரமங்களை யும், வேதனைகளையும், நம்பிக் கையற்ற நிலையையும் எதிர் கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் தளர்ந்தும், முழங்கால் கள் பலவீனமடைந்தும் இருந் தன. அப்போது கடவுள் தந்த வாக்குறுதிதான் இந்தப் பகுதி. "உன் கடவுள் வருவார்... உன்னை இரட்சிக்க வருவார்" என்ற ஆறுதலான செய்தி இதன் மையப் பகுதியாகும்.
பிரபலமான இறையியலாளரும் விவிலிய அறிஞருமான வில்லியம் பார்க்லே (William Barclay) தனது விளக்கவுரைத் தொடரில், ஏசாயா 35:1-10 பகுதியை ஒரு மிகச்சிறந்த நம்பிக்கை மற்றும் மீட்பின் கீதம் என்று விவரிக்கிறார்.
 பார்க்லே, வனாந்தரம் மலர்வ தை வெறுமனே ஒரு இயற்கை நிகழ்வாக மட்டும் பார்க்காமல், அது மனிதனின் அவநம்பிக்கை யான நிலை நம்பிக்கையாக மாறுவதைக் குறிக்கிறது என்கிறார்.வறண்ட நிலம் லெபனானின் எழிலையும் கர்மேலின் மேன்மையையும் பெறுவது போல, பாபிலோனிய அடிமைத்தனத்தில் ஒடுக்கப்பட்டிருந்த யூத மக்கள், கடவுளுடைய கிருபையால் தங்களின் இழந்த மகிமையை யும் ஆன்மீகச் செழிப்பையும் மீண்டும் பெறுவார்கள் என்பதை இது காட்டுகிறது.
லெபனானின் எழில் என்றால் என்ன? What is the glory of Lebonan?
அன்பர்களே!
ஏசாயா 35:1-2 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள "லெபனா னின் எழில்" (Glory of Lebanon) என்பது, வறண்ட பாலைவனம் போன்ற மனித வாழ்வில் கடவுள் கொண்டு வரும் பிரம்மாண்ட மான மாற்றத்தையும் செழிப்பையும் குறிக்கும் ஒரு உன்னதமான உவமையாகும்.
விவிலிய காலத்தில், லெபனான் தேசம் அதன் உயர்ந்த, கம்பீர மான கேதுரு மரங்களுக்கும் (Cedars of Lebanon), அடர்ந்த பசுமையான காடுகளுக்கும், வற்றாத நீர் ஊற்றுகளுக்கு ம்புகழ்பெற்றது.  லெபனான் என்றாலே அது கம்பீரம், வலிமை மற்றும் அழியாத அழகின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. வறண்டு, வெடித்து, பாழடைந்து கிடக்கும் ஒரு பாலைவனம், திடீரென்று லெபனான் காடுகளைப் போல உலகிலேயே மிக அழகான, பசுமையான தேசமாக மாறும் என்று இறைவாக்கினர் ஏசாயா  இறைவாக்கு உரைக்கிறார்.
ஆனால், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் காரணமாக 2026 மார்ச் மாதம் முதல் லெபனானில் தீவிரமடைந்த மோதல்களாலும், இஸ்ரேலின் தரைவழித் தாக்கு தல்களாலும் தெற்கு லெபனான் பகுதிகள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன.மோதல்கள் காரணமாக லெபனானில் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாகத் தற்காலிக முகாம்களிலும் பள்ளிகளிலும் தங்கியுள்ளனர்.
 கார்மல், சாரோனின் அலங்காரம்.The glory of Carmel and Sharon" .
அன்பர்களே! கார்மேல் ஒரு மலை, சாரோன் ஒரு சமவெளி.
லெபனானின் எழிலோடு சேர்த் து, இறைவாக்கினர் ஏசாயா,  கார்மல் மற்றும் சாரோன் ஆகிய இடங்களையும் குறிப்பிடுகிறார்:
கார்மல்: இது அடர்ந்தபழத்தோட் டங்களுக்கும், பசுமையான புல்வெளிகளுக்கும் பெயர் பெற் ற மலைப்பகுதி,செழிப்பின் அடையாளம்.
 சாரோன்: இது வசந்த காலத் தில் விதவிதமான காட்டுப் பூக்க ள் (குறிப்பாக ரோஜா மற்றும் லீலி மலர்கள்) பூத்துக் குலுங்கும் ஒரு அழகான சமவெளி இது அழகின் அடையாளம்.இந்த எழிலைக் கொடுப்பது மனிதன் அல்ல, மாறாக இது "கர்த்தருடை ய மகிமையையும், நமது கடவுளு டைய கம்பீரத்தையும்" வெளிப் படுத்தும் அற்புதமாகும்.இந்த மாபெரும் செழிப்பையும், விடுத லையையும் கடவுள் தரப் போவ தால், "தளர்ந்த கைகளைத் திடப் படுத்தி, தள்ளாடும் முழங்கால்க ளைப் பலப்படுத்துங்கள்" என்று மக்களுக்கு ஆறுதல் கூறப்படு கிறது. 
"தளர்ந்த கைகளைத் திடப்படுத் துங்கள்" என்ற வார்த்தைகளு க்கு பார்க்லே தரும் விளக்கம் என்னவென்றால், சோதனையா ன காலங்களில் மக்கள் ஒருவரு க்கொருவர் நம்பிக்கையூட்டும் சமூகமாக செயல்பட வேண்டும் என்பதாகும்.கடவுள் பழிவாங்க வருகிறார் என்பது மனிதர்க ளைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக வரலாற்றில் உள்ள தீமைகளை அழித்து, பாதிக்கப்ப ட்ட தங்களது மக்களுக்கு நீதி யையும் பாதுகாப்பையும் வழங்கவே அவர் வருகிறார்.
புதிய ஏற்பாட்டுடன் இணைப்பு: 
அன்பர்களே!பார்க்லே இந்த வசனங்களை இயேசு கிறிஸ்து வின் அற்புதங்களோடு நேரடியா க இணைக்கிறார். மத்தேயு 11 மற்றும் லூக்கா 7 ஆகிய அதிகாரங்களில் திருமுழுக்கு யோவான் ஸ்நானகன் இயேசு விடம் ஆட்களை அனுப்பி, "வரப்போகிறவர் நீர்தானா?" என்று கேட்கும்போது, இயேசு ஏசாயா 35-ல் உள்ள இந்த வசன ங்களையே ("குருடர் பார்க்கிறார் கள், சப்பாணிகள் நடக்கிறார் கள்") ஆதாரமாகக் கூறித் தான் தான் மெசியா என்பதை உறுதிப் படுத்துகிறார்.
குருடு, செவிடு, ஊமை போன்ற குறைபாடுகள் நீங்குவது என்ப து, மெசியாவின் வருகையால் மனித குலத்தின் ஆன்மீக குருட் டுத்தன்மையும், பாவத்தினால் வந்த முடக்கமும் நீங்கி புதிய வாழ்வு பிறப்பதன் அடையா ளமாகும்.
இறுதியாக, 
 அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று எருசலேமுக் குத் திரும்பும் மக்களுக்கு கடவுள் ஒரு "நெடுஞ்சாலை யை" (The Highway) ஏற்படுத்து கிறார். இது வரலாற்று ரீதியாக பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பிய 'புதிய விடுதலைப் பயணத்தை' (New Exodus) குறிக்கிறது.
இந்த வழி தூய்மையானது. அங்கே தீய சக்திகளோ, கொடூர விலங்குகளோ (அச்சமூட்டும் சக்திகள்) இருக்காது.இந்தச் சாலையில் பயணிப்பவர்கள் துக்கத்தையும் பெருமூச்சையும் கடந்து, தங்கள் தலைகளில் நித்திய மகிழ்ச்சி என்னும் கிரீடத்தைச் சூடி சீயோனுக்குள் நுழைவார்கள்.
கடவுள், தம் மக்களை ஒரு போ தும் கைவிடுவதில்லை. வனாந்தரம் போன்ற இருண்ட சூழ்நிலையிலும் அவர் ஒரு புதிய பாதையை உருவாக்க வல்லவர். அவரிடம் திரும்பும் எவருக்கும் நித்திய ஆனந்தம் நிச்சயம் உண்டு" என்ற நடை முறை வாழ்க்கைக்குரிய நம்பிக்கையை முன்வைக்கிறார்.
எனவே, அல்லலுற்றவர்களே திடன் கொள்ளுங்கள்.
2.முள்ளும், கிருபையும் கடவுளின் கருணை.Thorns and grace are God's mercy." 2.கொரிந் தியர் 12:1-10.
அன்பர்களே!
 பார்க்லே (William Barclay) எழுதிய விளக்கத்தின்படி,
கொரிந்திய சபையில் சில கள்ள ப் போதகர்கள் (யூதமார்க்கக் கோட்பாட்டாளர்கள் / Judaizers) திருதூதர்பவுல் அடிகளாரின்  அந்தஸ்தையும் அதிகாரத்தையு ம். கேள்விக்குள்ளாக்கினர். 
அவர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு, பவுல் உண்மையான திருதூதர் அல்ல என்று குறை கூறினர்.
 பவுல் தன் சொந்தப் பெருமைக ளைப் பற்றிப் பேச விரும்பவில் லை என்றாலும், திருச்சபையை க் காக்க வேண்டிய கட்டாயத்தா ல் தன் விண்ணரசின் அனுபவங் களைச் சொல்கிறார்.பவுல் மூன் றாம் வானத்திற்கு எடுத்துக்கொ ள்ளப்பட்டு, சொல்ல முடியாத ரகசியங்களைக் கேட்ட அனுபவ த்தைப் பற்றிப் பேசுகிறார்.
பெருமைபாராட்டஇடமில்லை:
அன்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் தனக்குக் கிடைத்த மிக உன்னதமான ஆன்மீக அனு பவங்களைக் கொண்டிருந்தும், ஏன் பெருமைபாராட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்
இதற்கான மூன்று முக்கிய காரணங்கள்:
1  பவுல் மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்ட அனுப வம், தரிசனங்களை விவரிக்கும் போது, அதைத் தன் சொந்தப் பெருமையாகச் சொல்லவில் லை. அது கடவுளால் அவருக்குக் காண்பிக்கப்பட்ட கிருபை. எனவே, அதில் சுய பெருமைக்கு இடமில்லை."பெருமை என்பது சிறந்த ஆவிக்குரிய பணியாளரு க்குஆபத்தானது"என்று  ஜான் கால்வின் வலியுறுத்துகிறார்
2 சதையில் ஒரு முள் (வசனம் 7): பவுல் தனக்குக் கிடைத்த வெளிப்பாடுகளின் மிகுதியினி மித்தம் தன்னை உயர்த்தாதபடிக் கு (பெருமையடையாதபடிக்கு), சாத்தானுடைய தூதனாகிய ஒரு முள் அவர் சதையிலே கொடுக்கப்பட்டது. இது அவரை த் தாழ்த்தி, எப்போதும் கடவு ளைச் சார்ந்திருக்க வைத்தது.
3 வலுவின்மையே கிறிஸ்து
வின் பலம் :
 கடவுளுடைய கிருபை மனித னுடைய பலவீனத்தில் தான் பூரணமாய் விளங்கும். மனிதன் தன் சொந்த பலத்தைக் குறித் துப் பெருமைபாராட்டும் போது, அங்கு கடவுளுடைய வல்லமை கிரியை செய்ய முடியாது. எனவே, பவுல் தன் பலவீனங்க ளையே மேன்மை பாராட்டுகி றார்.தன் பலம் ஒடுங்கும் போது தான் கிறிஸ்துவின் வல்லமை தன்மீது முழுமையாகத் தங்கு கிறது என்பதை பவுல் புரிந்துக் கொள்கிறார்.
 அந்த சாத்தானின் முள் தன்னை விட்டு நீங்க வேண்டும் என்று ஆண்டவரிடம் பவுல் மூன்று முறை மன்றாடினார்.
ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்ல மை நிறைவாய் வெளிப்படும்" என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டு வேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும் என்கிறார்.
3.அல்லலுற்ற மக்களுக்கு கடவுளின் கருணை.God's mercy upon the suffering people."
 யோவான் 9:1-7
அன்பர்களே!
இயேசு எருசலேம் தேவாலயத்தி லிருந்து புறப்பட்டுச் செல்லும் போது அதன் அருகில் இந்தச் சம்பவம் நடக்கிறது. அது ஓய்வு நாளில் நடக்கிறது என்பதால் பரிசேயர்களுடன் கடுமையான விவாதம் வெடிக்கிறது.அந்தக் காலத்தில், ஒருவருக்கு வரும் கடுமையான ஊனங்கள், நோய் கள் அவர்கள் செய்த அல்லது அவர்களின் பெற்றோர் செய்த குறிப்பிட்ட பாவத்தின் விளைவு என்ற தவறான பாரம்பரியப் புரிதல் யூதர்களிடையே இருந் தது.
இந்தப் பகுதியில் இயேசு பிறவி யிலேயே குருடனாக இருந்த ஒருவனைக் குணமாக்குகிறார். இந்த நிகழ்வின் மூலம் பாவம், துன்பம், கடவுளுடைய செயல் கள், கிறிஸ்துவின் வல்லமை ஆகியவற்றைப் பற்றி நாம் கற்று க்கொள்கிறோம்.
 பிறவிக் குருடன் இயேசு வழியா கச் சென்றபோது பிறவியிலேயே குருடனாக இருந்த ஒருவனைக் கண்டார்."ரபி, இவர் பார்வை யற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள்அவரி டம் கேட்டார்கள். துன்பங்களை மனிதக் கணக்கீடுகளின்படி தீர்ப்பது தவறு என்பதையும், எல்லாக் கஷ்டங்களையும் ஒருவரின் நேரடிப் பாவத்துடன் இணைத்துப் பேசுவது மனிதர் களின் பலவீனம் என்பதையும் இறையியளாளர் ஜான் கால் வின் விவரிக்கிறார்.
ஆனால் இயேசு "இவனும் பாவ ம் செய்யவில்லை, இவனைப் பெற்றவர்களும் பாவம் செய்ய வில்லை; கடவுளுடைய கிரியை கள் இவனிடத்தில் வெளிப்பாடே இப்படி ஆயிற்று" என்றார்.
இது ஒருவரின் பிறவிக் குறை பாடு அல்லது துன்பம் கூடஇறை வனுடைய வல்லமையையும், இரக்கத்தையும், மீட்பின் கிரியை களையும் மனிதர்களுக்கு வெளிப்படுத்த ஒரு கருவியாக மாற்றப்படலாம் என்பதை இது காட்டுகிறது.
பகலும் இரவும் இறைப் பணி யின் காலம்:
அன்பர்களே! பகலாயிருக்கை யில் என்னை அனுப்பினவரு டைய கிரியைகளை நாம் செய்யவேண்டும்" என்று இயேசு கூறுவதை, தமது பூமிக்குரிய ஊழியக் காலம் குறுகியது என்பதையும், ஒவ்வொரு விசு வாசியும் தனக்குக் கிடைத்த காலத்தில் இறைப்பணியைச் செய்ய வேண்டும் என்பதை யும் குறிப்பதாக கால்வின் குறிப்பிடுகிறார்.இயேசு தம்மை "உலகத்திற்கு ஒளியாக" அறிவி ப்பதன் மூலம், ஆன்மீகக் குருட் டுத்தன்மையை நீக்கக்கூடியவர் அவரே என்பதை வலியுறுத்து கிறார்.இயேசு தமது உமிழ்நீரால் சேறுண்டாக்கி அவனுடைய கண்களில் பூசி, சிலோவாம் குளத்தில் போய் கழுவச் சொன் னது அவரது இறையாண்மை யைக் காட்டுகிறது.
சீலோவாம் குளம் (Pool of Siloam):
அன்பர்களே!சீலோவாம் என்பது எருசலேமில் உள்ள ஒரு வரலாற் று மற்றும் விவிலிய முக்கியத்து வம் வாய்ந்த இடமாகும். சீலோ வாம்' என்ற எபிரேய வார்த்தை க்கு "அனுப்பப்பட்டவன்" என்று பொருள்.எருசலேமில் உள்ள இக்குளம், எருசலேமின் முக்கிய நீராதாரமான 'கிஹோன்' நீரூற்றிலிருந்து, எசேக்கியா மன்னரால் வெட்டப்பட்ட புகழ்பெற்ற நிலத்தடி சுரங்கக் கால்வாய் (Hezekiah's Tunnel) வழியாக இந்தக் குளத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.  இந்த உண்மையான பழங்கால சீலோவாம் குளம் 2004-ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 70 மீட்டர் நீளம் கொண்டது.பண்டைய யூதர்களி ன் கூடாரப் பண்டிகையின் போது, (Sukkot) ஆசாரியர்கள் இந்தக் குளத்திலிருந்து ஒரு தங்கக் குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று தேவாலயத் தின் பலிபீட த்தில் ஊற்றிச் சடங் குகளை நடத்துவது வழக்கமாக இருந்தது.எருசலேம் தேவாலயத் திற்கு வழிபடச் செல்லும் யாத்ரீ கர்கள், தங்களைச்சுத்திகரித்துக் கொள்ளும் ஒரு புனித சடங்கு குளியல் (Mikveh) குளமாகவும் இது பயன்பட்டது.
ரோமானிய பேரரசர் General Titus, எருசலேம் அழிக்கப்பட்ட போது கி.பி 70 வரை இக்குளம் பயன் பாட்டில் இருந்தது. 
ஏன் இயேசு களிமண்ணை பூசி குணப்படுத்த விரும்பி னார்,Why should Jesus use Clay to heal the blind?
அன்பர்களே! இயேசு நினைத்தி ருந்தால் வெறும் வார்த்தையி னாலேயே அவனுக்குப் பார்வை அளித்திருக்க முடியும், ஆனால் அவர் இந்த குறிப்பிட்ட வழியை க் கையாண்டதற்கான முக்கிய காரணங்கள் இதோ:
1.புதிய சிருஷ்டிப்பின் அடை யாளம். A symbol of New Creation.
தொடக்கநூல் 2:7-ன் படி, கடவுள் மனிதனை பூமியின் மண்ணி னாலேயே உருவாக்கினார். இங்கு பிறவியிலிருந்தே கண் பார்வை இல்லாத அந்த மனித னுக்கு, இல்லாத ஒரு புதிய உறுப்பை (பார்வையை) இயேசு உருவாக்க வேண்டியிருந்தது. எனவே, தான் உலகைப் படைத்த ஆதி படைப்பாளி (Creator) என்ப தை வெளிப்படுத்த, மீண்டும் அதே மண்ணைக் குழைத்து அவன் கண்களில் பூசினார்.
2 கீழ்ப்படிதலையும் விசுவாசத் தையும் சோதித்தல்:
இயேசு சேற்றைக் கண்ணில் பூசியவுடன் அவனுக்கு உடனடி யாகப் பார்வை கிடைக்கவில் லை. களிமண் பூசப்பட்ட கண் களோடு அவன் சீலோவாம் குள ம் வரை நடந்து செல்ல வேண் டியிருந்தது. "இயேசு சொன்ன தைச் செய்தால் எனக்குப் பார் வை கிடைக்கும்" என்ற கீழ்ப்படி தலையும் விசுவாசத்தையும் அந்த மனிதன் கொண்டிருக்கி றானா என்பதைச் சோதிக்கவும், அவனது விசுவாசத்தை உலகி ற்கு வெளிப்படுத்தவுமே இயேசு அவனைக் கழுவச் சொன்னார்.
3. "சீலோவாம்" என்பதன் தீர்க்கதரிசன அர்த்தம்: 
யோவான் 9:7-ல் குறிப்பிட்டுள்ளபடி, 'சீலோவாம்' என்ற வார்த்தைக்கு 'அனுப்பப் பட்டவன்' என்று அர்த்தம். தந்தையாகிய கடவுள் இந்த உலகிற்கு 'அனுப்பப்பட்ட' உண்மையான வாழ்வு தரும் தண்ணீர் இயேசுவே என்பதை அந்தப் பெயர் அடையாளப்படுத் தியது. அனுப்பப்பட்ட குளத்தில் கழுவியபோது அவனுக்குச் சரீரப் பார்வை கிடைத்தது போல, அனுப்பப்பட்டவராகிய இயேசு வை விசுவாசிக்கும்போது மனிதர்களுக்கு ஆன்மீகக் கண் திறக்கும் என்பதை இது குறிக் கிறது.
4, யூதர்களின் பாரம்பரிய சட்ட ங்களை உடைக்க:
யூதர்களின் ஓய்வுநாளில் (Sabbath) களிமண் குழைப்பது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது என்ற கடுமையான பாரம்பரிய விதிகள் பரிசேயர் களால் கடைப்பிடிக்கப்பட்டு வந் தன. இயேசு வேண்டும் என்றே ஓய்வுநாளில் களிமண்ணைக் குழைத்து, நன்மை செய்வதற் கும் குணப்படுத்துவதற்கும் ஓய்வுநாளில் தடை இல்லை என்பதையும், தான் ஓய்வுநாளு க்கும் ஆண்டவர் என்பதையும் நிரூபிக்கவே இவ்வாறு செய்தார்.
இறுதியாக, 
கடவுளின் கருணை எல்லையற் றது மற்றும் சக்தி வாய்ந்தது.
நாம் துன்பப்படும்போது அல்லது சோதனைகளில்இருக்கும்போது, கடவுளின் கருணை நம்மைத் தாங்கிப் பிடிக்கிறது.கடவுளின் கருணை என்பது மனிதர்கள் செய்யும் தவறுகளுக்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்காமல், அவர்கள் மீது காட்டும் அளவற்ற அன்பும் இரக்கமும் ஆகும். 
அல்லலுற்ற நம் வாழ்வில் கடவு ளின் கருணை நம்மை என்றும்
வழிநடத்தும்.அவ்வாறு இருக்க
ஆண்டவர் அருள் புரிவாராக.
ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511.
  





Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.