தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை ஞாயிறு. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை: ஒடுக்கப்பட்டோரோடு பயணிக்கும் கடவுள் (301) From bondage to Freedom.God walks with the oppressed. இணைச் சட்டம் 26:5-11, பிலமோன் 1:1-10, திருப்பாடல் 146, யோவான் 4:5-14.

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"அடிமைத்தனத்திலிருந்து விடுதலை: ஒடுக்கப்பட்டோரோடு பயணி க்கும் கடவுள்"
அன்பர்களே!
தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை ஞாயிறு நம்திருச்சபை கள் கொண்டாடுவது, மிக சிறப் பான செயலாகும்.இந்தியாவின்
வர்ணாசிரம பிரிவில் பிராமண ர், சத்திரியர், வைசியர்கள், சூத்திரர்கள் போன்ற நான்கு பிரிவுகளிலும் இடம் பெறாத ஒதுக்கப்பட்ட இனமாக தலித்  மற்றும் ஆதி வாசிகளை தீண்டதகாதவர்கள் என ஒதுக்கி வைத்தது இந்து சமயத்தின் 2500 ஆண்டுகளுக்கு மேலான அநீதி யாகும்.
இந்தியாவின் 146 கோடி மக்கள்
தொகையில், 3-7 கோடி கிறித்த வர்கள் அதாவது 3% உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு
பங்கு கிறித்தவர்கள் தலித் மற்றும் ஆதிவாசிகள். கிறித்தவம் இந்தியாவின் மூன்றாவது பெரிய மதமாகும்.
தென்னிந்திய திருச்சபையில் 45 லட்சம் கிறித்தவர்கள் உள்ளனர்.
இவர்களில் 60% தலித், ஆதிவாசி களாவர்.
இந்தியாவில் தலித் மற்றும் ஆதிவாசி (பழங்குடியின) கிறிஸ்தவர்கள் எதிர்கொள் ளும் முக்கியப் பிரச்சனைகள்.
அன்பர்களே! இந்தியா ஒரு மத
சார்பற்ற நாடாக இருந்தாலும்,
இந்து மதத்தின் சாதிய ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை பெறவும், சமத்துவத்தை அடைய வும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய போதிலும், அவர்களின் நிச வாழ்க்கையில் சவால்கள் குறைந்தபாடில்லை.
1.கிறிஸ்தவக் கோட்பாடுகள் சமத்துவத்தை போதித்தாலும், நடைமுறையில் சில திருச்சபை களில் சாதியப் படிநிலைகள் தொடர்கின்றன.
2. இந்திய கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பேராயர்கள் (Archbishops), ஆயர்கள் (Bishops) மற்றும் முக்கியப் போதகர்கள் போன்ற உயர் பதவிகளில் தலித் கிறிஸ்தவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவ தில்லை என்ற குற்றச்சாட்டும் வலுவாக உள்ளது.
3.சில கிராமப்புறப் பகுதிகளில் தலித் கிறிஸ்தவர்களுக்குத் தனி மாதா கோயில்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் இறந்தவர்க ளை அடக்கம் செய்யத் தனிப் பாதைகள் அல்லது தனி மயான ங்கள் (கல்லறைகள்) பயன்படு த்தப்படும் தீண்டாமை கொடுமை கள் இன்றும் நீடிக்கின்றன.
4. எஸ்சி (SC) அந்தஸ்து இழப்பு: இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை 1950-ன் படி, இந்து, சீக்கி யர் மற்றும் பௌத்த மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு மட்டுமே பட்டியலிடப்பட்ட சாதி (SC) அந்தஸ்து மற்றும் அதற்கான இடஒதுக்கீடு சலுகைகள் வழங் கப்படுகின்றன.
5. தலித் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போது, அவர் கள் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பி னர்' (BC அல்லது OBC) பட்டியலு க்கு மாற்றப்படுகிறார்கள். இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தங்களுக்குக் கிடை க்க வேண்டிய  எஸ்சி இடஒதுக் கீட்டையும், தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்பையும் அவர்கள் இழக்கிறார்கள்.
6 பெருநிறுவனங்களின் சுரங் கத் திட்டங்கள் மற்றும் காடழிப்பு காரணமாக ஆதிவாசி மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களை இழந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.
7. சில பகுதிகளில் இவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவ தாகக் கூறி, வலதுசாரி அமைப்பு களால் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதுடன், இவர்கள் மீதும் வன்முறைகள் ஏவப்படுகி ன்றன.
8 தாய் மதம் திரும்புதல்' (கர் வாப்சி) என்ற பெயரில் கட்டா யமாக மறுமதம் மாற்றும் அழுத் தங்களுக்கும் உள்ளாகிறார்கள்
9.மத ரீதியாகப் பார்த்தால் அவர்கள் தலித்துகளாக/ஆதி வாசிகளாகவே நடத்தப்படுகிறா ர்கள்; ஆனால் சட்ட ரீதியாகப் பார்த்தால் அவர்கள் கிறிஸ்தவர் கள் எனக் கூறி சலுகைகள் மறுக்கப்படுகின்றன". இந்த இரட்டைத் தன்மையே அவர்க ளக்கு பேரிழிப்பாக உள்ளது.
 அடிமைத்தனத்திலிருந்து விடுதலை.Liberation from Slavery:
அன்பர்களே: நம் திருவிவலியத் தை தலித் இறையியல், விடுத லை இறையியல் என்ற கண் ணோட்டத்தில் தியானிக்கும். போது, அவ்வாறே திருவிவலி யம் இருப்பதை நமக்கு உணர்த் தும். உ.ம்:தலித் இறையியல் தனது விவிலிய நம்பிக்கையை லூக்கா நற்செய்தியில் உள்ள இயேசுவின் "நாசரேத் அறிக் கை"யில் (Luke 4:18) காண்கிறது. "ஏழைகளுக்கு நற் செய்தியை அறிவிக்கவும், சிறை ப்பட்டவர்கள் விடுதலைப் பெற வும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் நான் அனுப்பப் பட்டேன்" என்ற இயேசுவின் வரிகளைத் தங்களின் முதன்மை ஆதாரமாகக் கொள்கிறது.
அவ்வாறே, விடுதலை இறையி யல் எகிப்தின் அடிமைதனத்திலி ருந்து இஸ்ரவேல் மக்கள் விடுத லையை முதன்மை படுத்துகிறது
விடுதலை இறையியல் என்பது "மரணத்திற்குப் பிந்தைய விண் ணக வாழ்வை மட்டும் பேசாமல், மனிதர்கள் வாழும் இந்த உலகிலேயே ஏழ்மை மற்றும் ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்று, நீதியான சமூகத்தை அமைப்பதே இறை வனின் விருப்பம் என்று பிரக டனம் செய்கிறது.
இது 1960 மற்றும் 1970-களில் லத்தீன் அமெரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபையின் பின்னணியில் உருவான ஒரு புரட்சிகரமான சமூக-ஆன்மீக இயக்கமாகும்.
அன்பர்களே! முற்பிதாக்களின்
தந்தையான ஆபிரகாம், ஆகார்
என்ற எகிப்திய அடிமை பெண் ணை மணந்திருந்தார்.இது அவரின் மனித மான்பை காட்டு
கிறது.ஆனால்,அவரின் வழி
பேரன்கள், சுமார் 4,000 வருடங்க ளுக்கு முன்பு, பருவ வயதில் இருந்த யோசேப்பை அவனு டைய அண்ணன்கள் அடிமை யாக விற்றார்கள். எகிப்தில் புகழ்பெற்ற ஒரு வீட்டில் யோசே ப்பு அடிமையாக இருந்தான். இதனால், இந்த வம்சம் 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமை களாக இருந்தனர்.இதனைத்
தொடர்ந்து இஸ்ரவேலர் பாவத் தினிமித்தமாகவும், கீழ்படியா மையினால், மெசபடோமியர், மோவாபியர்,கானானியர்,மீதியானியர்,அம்மோனியர், பாலஸ் தீனியர்களிடம் அடிமைகளாக
வீழ்ந்தனர். இதனைத் தொடர் ந்து, அசீரியர்கள், பாபிலோனி யர், பெர்சியர், கிரேக்கர் மற்றும்
ரோமானியர்களிடம் அடிமையா
க இருந்தனர்.ஒவ்வொரு கால
கட்டத்திலும் கடவுள் அவர்களை
மன்னித்து விடுவித்தார்.கடவுள்
அடிமைப்பட்ட இஸ்ரவேலரை மீட்க மோசஸ் என்ற மாபெரும் மனிதரை தேர்வு செய்தார், ஒடுக்கப்பட்டோரை இந்தியா வில் விடுவிக்க பீமா ராவ் அம்பேத்கர் என்ற அறிவு ஜீவியை ஏறபடுத்தினார். இந்திய விடுதலைக்கு மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்க இனவெறியைவேரறுக்க  நெல்சன் மன்டேலாவை ஏற்படுத்
தினார்.மார்ட்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King Jr.,  ஐக்கிய அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சிவில் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடிய மாபெரும் தலைவர் ஆவார்.
ஒடுக்கப்பட்டோரோடு பயணி க்கும் கடவுள் விடுதலையை மனிதர்கள் மூலமே நடுத்து கிறார். .
ஒடுக்கப்பட்டோரோடு பயணி க்கும் கடவுள்God walks with the oppressed.
அன்பர்களே
கிறித்தவ இறையியலில், குறிப்பாக பழைய ஏற்பாட்டின் விடுதலைப் பயணம் (Exodus) நூலில், எகிப்தில் அடிமைகளாக ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்க ளுடன் உடன் பயணித்த கடவுள் மிகமுக்கியமானவர்.  ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்களை க் கண்டு, அவர்களின் அழுகு ரலைக் கேட்கும் கடவுள்.
அவர் களத்தில் இறங்கி நம் மோடு உடன் பயணிப்பவர். தூரத்திலிருந்து வேடிக்கை பார் க்காமல், மக்களுடன் வனாந்தரப் பயணத்தில் மேகத்தூணா கவும் நெருப்புத்தூணாகவும் உருவெடுத்து அவர்களோடு நேரடியாகப் பயணித்தவர்.
 ஒடுக்குமுறையின் சங்கிலிக ளை உடைத்து, அடிமைத்தனத் திலிருந்து விடுதலைப் பாதை யை நோக்கி வழிநடத்துபவர். 
கடவுளின் விடுதலை இரண்டு விதமானது ஒன்று உலக அரசி யல்,சமூக அடிமைத்தனத்திலி ருந்தும், பாவங்கள், நோய்களிலி ருந்து விடுதலை மற்றொன்று  விண்ணரசுக்கு செல்லும் ஆன்மீக வாழ்க்கைக்கான விடு தலை இந்த இரண்டு விடுதலை யும் நமக்கு தேவைப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
1.நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்"
Forget the past, let the future be bright.இணைச் சட்டம் 26:5-11.
அன்பர்களே! இஸ்ரவேலர் தங்கள் கடந்த காலத் அடிமை த்தன வாழ்க்கையையும், கசப்பான நிகழ்வுகளையோ மறந்துவிட்டு, எதிர்காலத்தை நம்பிக்கையோடு வரவேற்க வேண்டும் என விரும்பும் நாம்,
இஸ்ரவேலர்களின் எகிப்தின் அடிமைத்தனத்தை மறக்க வேண்டுமா?
அன்பர்களே!
இல்லை, இல்லவே இல்லை. இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தை மறக்கக் கூடாது. மாறாக, அதை அவர்கள் எப்போதும் நினைவில் வைத் திருக்க வேண்டும் என்பதே திரு விவிலியத்தின்  கட்டளையாகு ம். இதனை திருவிவலியம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வலியுருத்துகிறது.
இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
• கடவுளின் விடுதலையை நினைவுகூரும், தங்களை எகிப் தின் கொடுங்கோல் அடிமைத் தனத்திலிருந்து எப்படிப்பட்ட மகா வல்லமையோடும், அற்புத ங்களோடும் விடுவித்தார் என்ப தை அவர்கள் தலைமுறை தலை முறையாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த விடுதலையைக் கொண் டாடுவதற்காகவே பஸ்கா பண்டிகை (Passover) நியமிக்கப் பட்டது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவா க நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியம மாக இருப்பதாக! (விடுதலைப் பயணம் 12:14)கூறப்பட்டுள்ளது.
 தாங்களும் ஒரு காலத்தில் அந்நியராகவும், அடிமைகளா கவும் இருந்ததை நினைவில் கொள்வதன் மூலம், தங்களுக்கு ள் பெருமை வராமல் தாழ்மை யோடு இருக்கஇதுஉதவியது.
 துன்பத்தை வைத்து, தங்கள் மத்தியில் வாழும் ஏழைகள், திக்கற்ற பிள்ளைகள், விதவை கள் மற்றும் அந்நியர்களை அன்போடு நடத்த வேண்டும் என்று கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
இதை மனதில் வைத்து இஸ்ர வேலர் பாலஸ்தீனர்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். பாலஸ்தீனம் என்ற ஒரு தனிநாட்டை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்.
அன்பர்களே!
இணைச் சட்டம் 26:5-11 வரையி லான விவிலியப் பகுதிக்கு, புகழ் பெற்ற சீர்திருத்தவாத இறையி யலாளர் ஜான் கால்வின் (John Calvin) வழங்கியுள்ள விளக்க வுரையின் (Commentary) படி,
அரமேயரான என் தந்தைஇங்கு இஸ்ரயேலர்கள் தங்கள் வம்சா வளியை ஆபிரகாமிலிருந்து தொடங்காமல், யாக்கோபிலிரு ந்து இவர் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிரியா/அராமில் நாடோடிகளாக கழித் ததால்,தொடங்குகிறார்கள். 
 இஸ்ரயேலர்கள் கானான் தேசத் தை தங்களுடைய சொந்த பலத் தினாலோ, பரம்பரை உரிமையி னாலோ பெறவில்லை என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. அவர்களின் தந்தை யாக்கோபு அலைந்து திரிந்த ஒரு பரதேசி யாகவும், அந்நியராகவும் இருந்தார். கடவுள் தங்களுக்குக் கொடுத்த கானான் தேசத்தின் செழிப்பை அனுபவிக்கும் போது, அவர்கள் தங்களின் தாழ்மை யான மற்றும் எளிய ஆரம்பத்தை மறந்து விடக்கூடாது என்பதற் காகவே கடவுள் இந்த வரலாற் றுப் பின்னணியை நினைவூட்டு கிறார்.
இஸ்ரயேலர்கள் எகிப்தில் ஒடுக் கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட போது, அவர்கள் கடவுளை நோக் கி முறையிட்டனர்; கடவுள் அவர் களின் கூக்குரலைக் கேட்டு, தமது ஓங்கிய புயத்தினாலும், பலத்த கரத்தினாலும் அவர்க ளை விடுவித்தார்.
இதனை நன்றியுடன் நோக்க, கானான் தேசத்தின் முதற்கனிக ளைக் கொண்டுவந்து படைக்கும் போது, ஏதோ கடமைக்காகச் செய்யும் சடங்காக (Cold exercise of piety) அது மாறிவிடக் கூடாது. தாங்கள் அனுபவிக்கும் ஒவ் வொரு நன்மையும், எகிப்தின் கொடூரமான அடிமைத்தனத்தி லிருந்து கடவுள் தங்களை அற்பு தமாக மீட்டெடுத்த கிருபையினா ல் வந்தது என்பதை அவர்கள் முழு மனதோடு உணர்ந்து சாட்சி யிட வேண்டும்.
இறுதியாக,
வாக்குறுதியளித்தப்படி, பாலும் தேனும் வழிந்தோடும் வளமான தேசத்திற்கு அவர்களைக் கூட்டி வந்து சேர்த்தார். அதற்கு நன்றி யாக நிலத்தின் முதற் கனிகளை க் கூடையில் கொண்டுவந்து பலிபீடத்தின் முன் வைக்கவேண் டும்.  முதற்கனிகளைப் படைப் பது என்பது, அந்த ஆண்டின் முழு விளைச்சலையும் கடவுளு க்குப் படைப்பதை (Consecrated)  குறிக்கிறது. 
கடவுள் தங்களுக்குக் கொடுத்த நன்மைகளைத் தாங்கள் மட்டும் அனுபவிக்காமல், லேவியர்க ளோடும் தங்களுடன் தங்கியிரு க்கும் அந்நியர்களோடும் சேர்ந் து மகிழ வேண்டும்.
2 அடிமைத்தனத்திலிருந்து விடுதலை.Freedom from slavery.பிலமோன் 1:1-10, 
அன்பர்களே!
பிலமோன் திருமுகம் (Epistle to Philemon) என்பது புதிய ஏற்பாட் டில் உள்ள மிகச்சிறிய மற்றும் மிகவும் தனித்துவமான ஒரு நிருபம் ஆகும். திருதூதர் பவுல் அடிகளார், பிலமோன் என்ற தன் நண்பருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதமே இதுவாகும்.
புகழ் பெற்ற இறையியலாளர் ஜான் வெஸ்லி மெத்தடிஸ்ட் (Methodist) சபையினைத் தோற்றுவித்த முக்கிய ஆன்மீகத் தலைவர் ஆவார்.இவர் இந்த நிருபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, "இந்த ஒற்றை நிருபமா னது உலகிலுள்ள அனைத்து ஞானங்களையும் விட அளவி ட முடியாத அளவுக்கு மேலா னது" என்று புகழ்கிறார்.
யார் இந்த பிலமோன்,?
அன்பர்களே!
 பிலமோன் (Philemon) என்பவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு செல்வந்தரான ஆரம்பகால கிறிஸ்தவர். மற்றும் திருதூதர்  பவுலின் நெருங்கிய நண்பர் ஆவார். புதிய ஏற்பாட்டில் உள்ள 'பிலமோன் திருமுகம்' என்ற கடிதம் இவருக்குத்தான் எழுதப் பட்டது• பிலமோன் தற்போதைய துருக்கி நாட்டில் உள்ள கொலோசெ (Colossae) என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தார்.
பிலமோன் என்பவரிடம் ஒநேசி மு (Onesimus) என்ற அடிமை இருந்தான். அவன் தன் எசமா னான பிலமோனிடமிருந்து ஏதோ திருடிக்கொண்டு அல்லது தப்பி ஓடி, உரோமை நகருக்கு வந்தான். அங்கே சிறையிலிருந் த திருதூதர்பவுலைச் சந்தித்த ஒநேசிமு, நற்செய்தியைக் கேட்டு மனமாற்றம் அடைந்து கிறிஸ்தவனானான்.
சிறையிலிருந்த பவுலுக்கு ஒநேசிமு மிகவும் உதவியாக இருந்தான். எனினும், சட்டப்படி அவன் பிலமோனுக்குச் சொந்த மானவன் என்பதால், பவுல் அவனை மீண்டும் பிலமோனிட மே திருப்பி அனுப்ப முடிவு செய் தார். ஒநேசிமுவைத் தண்டித்து விடாமல், அவனை ஒரு அடிமை யாக அல்லாமல், கிறிஸ்துவுக்
குள் அன்பான சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி பிலமோ னிடம் பவுல் வேண்டும் கடிதமே இத்திருமுகம்.
புதிய ஏற்பாட்டில் பவுல் எழுதிய கடிதங்களிலேயே இதுதான் மிகச் சிறிய கடிதம் (ஒரே ஒரு அதிகாரம், 25 வசனங்கள் மட்டுமே கொண்டது).
இது சபைகளுக்கு எழுதப்பட்ட பொதுவான கடிதம் அல்ல; ஒரு தனிநபருக்கு எழுதப்பட்ட தனிப்பட்ட நிருபம் ஆகும்.
அன்பர்களே!
இறையியலாளர் ஜான் வெஸ்லி
கூறுவது, திருதூதர் பவுல் அடி களார் இந்த கடிதத்தை ஒரு கட்டளையாக எழுதாமல், அன்பின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்பதை வெஸ்லி சுட்டிக்காட்டுகிறார். முதல் இரண்டு வசனங்களில், திருதூதர் பவுல் தன்னை "கிறிஸ்து இயேசுவினிமித் தம் கைதியாயிருக்கிற பவுல்" என்று அறிமுகப்படுத்துகிறார்.
(பவுல் ரோம நகரில் கி.பி. 60–62 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப் பட்ட காலத்தில் முதன்முறையாக வீட்டுக்காவலில் (House Arrest) வைக்கப்பட்டிருந்தபோது இக்க டிதத்தை எழுதினார்• இக்கடிதம் பவுலின் "சிறைச்சாலை நிருப ங்களில்" (Prison Epistles) ஒன்றா கும். எபேசியர், பிலிப்பியர், மற்றும் கொலோசெயர் ஆகிய கடிதங்களுடன் சேர்த்து இக்கடி தத்தையும் அவர் சிறையிலிரு ந்தே எழுதினார்.)
திருதூதர் பவுல் அப்பியாளைக் குறிப்பிடும் போது, அவளைப் பிலமோனின் மனைவி என்று கூறுகிறார். ஒநேசிமுவின் காரியத்தில் அவளுக்கும் பங்கு (அதிகாரம்) இருந்ததால் பவுல் அவளையும் வாழ்த்துகிறார்.
அன்பு பிலமோனே! உமது விசுவாசம் மற்றவர்களுக்கு திறம்பட கடத்தப்பட வேண்டும் (Effectually communicated). உமது பக்தி மற்றும் தர்மசிந்தனையை மற்றவர்கள் பார்த்து, அதை அறிந்துகொள்ளும் படி அது அமைய வேண்டும் என்று பவுல் அவருக்காக இறைவேண்டல் செய்கிறார்.பிலமோனின் இந்த நற்செய்திகளை, நற்குணங் களை பவுல் அநேகமாக ஒநேசி முவின் மூலமாகவே கேள்விப் பட்டிருக்க வேண்டும்.
பிலமோனின் இல்லம் எப்போது ம் பரிசுத்தவான்களுக்கு  திறந்தி ருந்தது என்பதை இது காட்டு கிறது.கடவுள் தனக்குக் கொடுத் த அப்போஸ்தல அதிகாரத்தின் மூலம் பிலமோனுக்குக் கட்டளை யிட பவுலுக்கு முழு உரிமை இருந்தும்,.பவுல் எவ்வளவு அழகான முறையில் தன் அதிகா ரத்தை ஒதுக்கி வைக்கிறார் பாருங்கள்! கட்டளையிடும் அதிகாரத்தை ஒரு நொடியில் கைவிட்டு, தன் வயோதிபத்தை யும், கிறிஸ்துவுக்காகத் தான் படும் சிறைத்துன்பத்தையும் காட்டி, ஒரு நண்பனாக பிலமோ னிடம் கெஞ்சி வேண்டுகிறார். அதுவும் யாருக்காக?, ஒநேசிமு
என்ற அடிமை பணியாளனுக் காக,திருதூதர் பவுல் சிறையில் இருக்கும் போது ஒநேசிமுவை விசுவாசத்திற்குள் வழிநடத்தி னார்.
பவுல் ஒநேசிமுவை "என் முது மையின் மகன்" (The son of my age) என்று அழைக்கிறார். சிறைத்தளத்தின் வேதனை யிலும் ஒரு ஆன்மாவை ஆதாயப்படுத்திய பவுலின் ஆன்மீகத் தந்தைத்துவத் தை இறையியளாளர் வெஸ்லி இங்கே வியக்கிறார்.என் கட்டுக ளிலே நான் பெற்ற மகன் என்கி றார்.
இறுதியாக,ஒரு மனிதன் நல்ல மனிதனாக அதாவது கடவுளு டைய பிள்ளையாக மாறும் முன்பு, அவன் ஒரு நல்ல ஊழி யக்காரனாக/பணியாளனாக இருக்க முடியாது". கிறிஸ்துவுக்குள் ஒநேசிமு அடைந்த மாற்றமே அவனை பிலமோனுக்கும் பவுலுக்கும் பயனுள்ளவனாக மாற்றியது.
கிறிஸ்துவுக்குள் அடிமை என்றும் எசமான் என்றும் வேறு பாடு இல்லை; அனைவரும் சமமான சகோதரர்கள் என்பதை இது வலியுறுத்துகிறது.
3.ஒடுக்கப்பட்டோரோடு உறவாடும் கடவுள்.The God who fellowships with the oppressed. 
யோவான் 4:5-14.
அன்பர்களே! இயேசு யூதேயா விலிருந்து கலிலேயாவிற்குச் செல்ல சமாரியா வழியாகப் பயணம் செய்கிறார். நண்பகல் வேளையில் (ஆறாம் மணி நேரம்) சீகார் என்ற ஊரிலிருந்த யாக்கோபின் கிணற்றருகே களைப்போடு அமர்கிறார்.
இயேசு காட்டிய இந்த "களைப் பு" அவருடைய உண்மையான மனிதத்தன்மையை (Humanity) வெளிப்படுத்துகிறது. அவர் நம்மைப் போலவே பசி, தாகம், உடல் சோர்வு ஆகியவற்றை உணர்ந்தார். மனித பலவீனங் களை அறிந்த ஒருவரே நமக்கு உண்மையான இரட்சகராக இருக்க முடியும் என இறையிய
ளாளர் வில்லியம் பார்க்ளே கூறுகிறார்.
சமாரியப் பெண் தண்ணீர் மொள்ள வரும்போது, இயேசு அவளிடம் இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார். 
அச் சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. 
அன்பர்களே!இயேசுவின் இந்த ஒரு கேள்வி அக்காலத்தின் மூன்று பெரிய சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந் தது என்கிறார் பார்க்ளே.
1. இனப் பாகுபாடு (Racial Barrier): யூதர்களுக்கும் சமாரியர்களுக் கும் இடையே பல நூற்றாண்டு களாகத் தீராத பகை இருந்தது. யூதர்கள் சமாரியர்களைத் தீட்டுள்ளவர்களாகக் கருதினர்.
 2. பாலினப் பாகுபாடு (Gender Barrier): அக்கால கடுமையான ரபிமார்களின் (போதகர்களின்) விதிகளின்படி, பொது இடத்தில் ஒரு பெண்ணோடு பேசக்கூடா து. ரபிமார்கள் தெருவில் பெண் களைப் பார்த்தால் சுவர்களில் முட்டிக்கொள்ளும் அளவுக்குக் கண்களை மூடிக்கொண்டு நடப் பார்கள் (அவர்களை 'காயம்பட்ட பரிசேயர்கள்' என்பார்கள்).
 3. பாவிகளுக்குப் புகலிடம்: அவள் ஒரு ஒழுக்கக்கேடான பின்னணி கொண்ட பெண் எனத் தெரிந்தும் இயேசு அவளோடு பேசினார்.இயேசு மனிதர்கள் உருவாக்கிய சமூக, மத, இன எல்லைகளைக் கடந்து, தேடிச் சென்று அன்பு செலுத்து பவர்.
இயேசு அப்பெண்ணைப் பார்த் து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் "குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந் தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப் பார்" என்றார். 
"வாழ்வு தரும் தண்ணீர்' என்ற வார்த்தைக்கு இரு அர்த்தங்கள் உண்டு. உலகப் பிரகாரமாக அது "ஓடுகின்ற நதிநீர்" (Running water). கிணற்று நீரை விட நதிநீரே சிறந்தது என்பதால் அந்தப் பெண் குழம்புகிறாள். ஆனால் இயேசு குறிப்பிட்டது ஆன்மீக வாழ்வுத்தரும்தண்ணீர்.
உலகக் கிணற்றின் தண்ணீர் தற்காலிகத் தாகத்தை மட்டுமே தீர்க்கும்; மீண்டும் தாகம் எடுக் கும். ஆனால் இயேசு தரும் தண்ணீர், மனிதனின் ஆன்மாவி ற்குள் பாய்ந்து, அவனை என்றெ ன்றைக்குமாய் திருப்திப்படுத் தும் ஒரு நித்திய ஊற்றாக மாறும்.
இறுதியாக, 
மனிதன் தன் தாகத்தைத் தீர்க்க செல்வம், இன்பம், புகழ் என உலகக் கிணறுகளைத் தேடி அலைகிறான். ஆனால் நம் ஆண்டவர் இயேசு மட்டுமே மனித இருதயத்தின் ஆழமான ஆன்மீகத் தாகத்தை முழுமை யாகத் தீர்க்கும் ஒரே நித்திய வாழ்வு தரும் ஊற்று என்பதை
நாம் ஏற்று விசுவாசிக்க வேண்டும். அவ்வாறு இருக்க
ஆண்டவர் நமக்கு  அருள் புரிவாராக.
ஆமேன்.  

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com








தென்னிந்திய திருச்சபை - சென்னை பேரராயம் தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை வாரியம், அருளுரைஞர்கள் ஐக்கியம் ,& சபை ஊழியர்கள் ஐக்கிய துறைகள் சார்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி 2026 அன்று லைட் அரங்கில் ,
கிறிஸ்தவ தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமை வலியுறு த்தும் கருப்பு நாள் கருத்தர ங்கு நடத்தப்பட்டது.
சென்னை பேராயர் பேரருள் பணிஅறிவர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் மாநில முன்னாள் சிறுபான்மை ஆணையர் அருட்தந்தை அறிவர் ஜோ அருண் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



தென்னிந்திய திருச்சபை - சென்னை பேரராயம் தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை வாரியம்.







Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.