சீர்திருத்த ஞாயிறு. சீர்திருத்தம்: புதுமையடைய ஓர் அழைப்பு.(302) Reformation: A call for Renewal. 2 அரசர்கள் 23:1-8. தீத்து 3:3-8, திருப்பாடல் 119:25-32, லூக்கா 5:36-39.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வாரம் "சீர்திருத்த ஞாயிறு" தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"சீர்திருத்தம்: புதுமையடைய ஓர் அழைப்பு" என்பதாகும்.
சீர்திருத்த ஞாயிரை திருச்ச பைகள் ஏன் கொண்டாட வேண்டும்?. Why should the Churches celebrate Reformation Sunday?
அன்பர்களே! திருச்சபைகள் சீர்திருத்த ஞாயிற்றை (Reform ation Sunday) ஏன் கொண்டாட வேண்டும் என்றால், இது வெறு ம் ஒரு வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல; கிறித்துவ விசுவாசத்தின் தூய்மையைப் பாதுகாக்கவும், விவிலிய சத்தியங்களை மீண் டும் உறுதிப்படுத்தவும் உதவும் ஒரு முக்கியமான நாளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை சீர்திருத்த ஞாயிறாகக் கொண்டாடப்ப டுகிறது. இது கி.பி. 1517 அக் 31 அன்று மார்ட்டின் லூதர் ஜெர்ம னியின் வித்தன்பர்க் Witten
berg தேவாலயக் கதவில் '95 கொள்கைகளை'(95Theses) பொருத்தி, திருச்சபை சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கி வைத் தார்.
திருச்சபைகள் இந்த நாளைக் கொண்டாட வேண்டியதற்கான முக்கிய காரணம்;
1.ஐந்து முக்கிய தூண்களை (Five Solas (மட்டும்) நினைவுகூர வேண்டும்; இந்த நாள் வேதாகம த்தின் அடிப்படை உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறது
1.Sola Scriptura (வேதவசனம் மட்டுமே): மனித பாரம்பரியங்க ளை விட வேதவசனம் மட்டுமே ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை க்கும், போதனைக்கும் மற்றும் விசுவாசத்திற்கும் மிக உயர்ந்த, மாறாத இறுதி அதிகாரமாகும்.
2.Sola Fide (விசுவாசம் மட்டு மே): • மனிதர்கள் செய்யும் நற் செயல்களினாலோ, சடங்குகளி னாலோ அல்லது பணத்தினா லோ இரட்சிப்பை (மீட்பை)விலை க்கு வாங்க முடியாது. இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த தியாகத்தை மனதார விசுவாசி ப்பதன் மூலம் மட்டுமே ஒரு மனிதன் கடவுளுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுகிறான்.
3.Sola Gratia (கிருபை மட்டுமே): இரட்சிப்பு என்பது முழுக்க முழுக்க கடவுளின் இலவசக் கிருபையாகும்.தகுதியற்ற நமக்கு கடவுள் தன் அன்பினால் இலவசமாகத் தரும் அருள் (கிருபை) மட்டுமே ஆகும். நாம் பாவிகளாய் இருக்கும்போதே கடவுள் நமக்கு அளித்த வரமே இந்த கிருபை.
4. Solus Christus (கிறிஸ்து மட்டு மே): மனிதனுக்கும்,தந்தைக்கும் இடையே உள்ள ஒரே மத்திய ஸ்தர் இயேசு கிறிஸ்து மட்டுமே.
5. Soli Deo Gloria (கடவுளுக்கே மகிமை): நம்முடைய வாழ்வும் இரட்சிப்பும் கடவுளின் மகிமைக் காக மட்டுமே.
2. விவிலியம் அனைவருக் கும் கிடைக்கப் பெற்றதை கொண்டாட:
அன்பர்களே! சீர்திருத்தத்தி
ற்கு முன்பு, வேதாகமம் சாதார ண மக்களுக்குப் புரியாத மொழி யில் (லத்தீன்) மட்டுமே இருந் தது. சீர்திருத்தவாதிகள் திரு விவிலியத்தை மக்களின் தாய் மொழிகளில் மொழிபெயர்த் தனர். இன்று நாம் நம்முடைய சொந்த மொழியில் திருவிவிலி யத்தை வாசிக்க முடிகிறது என்றால், அதற்கு இந்தச் சீர்திரு த்தமே அடித்தளம்.
இதன் அடிப்படையில்தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பார்த்தலோமேயு சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg) என்பவ ரே முதன்முதலில் திருவிவிலி யத்தை தமிழில் மொழிபெயர்த் தவர் ஆவார்.
3. "தொடர் சீர்திருத்தம்" (Always Reforming) என்ற விழிப்புண ர்வு:
இலத்தீன் மொழியில் ஒரு புகழ்பெற்ற பழமொழி உண்டு: "Ecclesia Reformata, Semper Refor manda" – அதாவது, "சீர்திருத்தப்பட்ட திருச்சபை, எப்போதும் சீர்திருத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண் டும்". சபை இந்த உலகில் இருக் கும் வரை, காலப்போக்கில் புகுந் துவிடும் தவறான போதனைகள் மற்றும் உலகக் கலாச்சார பாரம் பரியங்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தொடர்ந்து சீர்திருத்தம் அவசியம் என்பதை இந்நாள் உணர்த்துகிறது.
4. கிறிஸ்துவில் உள்ள சுதந் திரத்தை பிரகடனப்படுத்த:
மன்னிப்புச் சீட்டுகள் (Indulgen ces) வாங்குவதன் மூலமோ அல்லது பணம் கொடுப்பதன் மூலமோ பாவ மன்னிப்பைப் பெற முடியாது என்றும், கிறிஸ் துவின் சிலுவை மரணத்தின் வழியாய் நமக்குக் கிடைத்துள்ள உண்மையான ஆன்மீக சுதந்திரத்தையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
5. சபையின் வழிபாட்டு முறை மாற்றங்கள்:
சீர்திருத்தத்திற்குப் பிறகுதான் வழிபாடுகளில் சபை மக்கள் அனைவரும் இணைந்து பாடும் பாடல்கள் (Congregational Singing) மற்றும் விவிலிய அடிப்படையி லான பிரசங்கங்களுக்கு முக்கி யத்துவம் தரும் முறைகள் வழக் கத்திற்கு வந்தன.
எனவே, இந்த சீர்திருத்த ஞாயி ரை கொண்டாடுவது நமது ஆன் மீகப் பாரம்பரியத்தை மதிக் கவும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும் சபைகளுக் கும், நமக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
திருச்சபையில் சீர்திருத்தம்:
Reformation in Churches.
அன்பர்களே! "Charity begins at home" என்ற வார்த்தையின்படி,
சீர்திருத்தம் நம் திருச்சபையி லும், நம்மிலும் முதலில் தொட ங்க வேண்டும். சுமார் 500 ஆண் டுகளுக்கு முன்பு தொடங்கபட்ட
திருச்சபையின் சீர்திருத்தம், தொடர்ந்து நடந்தே வருகிறது.
Reformation is a continuous process.சீர்திருத்தம் ஒரு தொடர்
நிகழ்வு. சீர்திருத்தம் இல்லாமல்
வளர்ச்சி இராது.பழையன கழிதலும் புதியன புகுதலும்" உலக நியதி. திருச்சபை சீர்திரு த்தம் என்பது அதன் பாரம்பரி யத்தை அழிப்பது அல்ல; மாறாக, அதன் பாரம்பரியத்தின் ஆன்மா வைத் தக்கவைத்துக்கொண்டு, அதன் செயல்பாடுகளை நவீன ப்படுத்துவதாகும்.மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது கிரேக்கத் தத்துவஞானி ஹெராகிளிடஸ் (Heraclitus) என்பவரால் கூறப்பட்ட ஒரு புகழ்பெற்ற பொன்மொழியாகும் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும், இயற்கையும், மனித வாழ்க்கையும் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் மாறிக் கொண்டே இருக்கும் என்பதே இதன் பொருள்.எனவே, திருச்சபையில் மாற்றம் என்ற
சீர்திருத்தம் தவிர்க்க முடியாதது.
அன்பர்களே!
1.உலகம் தொழில்நுட்ப ரீதியாக வும், செயற்கை நுண்ணறிவும்( AI), சிந்தனை ரீதியாகவும் வேக மாக மாறிவருகிறது. மாறிவரும் இந்த உலகில் இளைய தலை முறையினரை ஆன்மீகப் பாதை யில் தக்கவைக்க, திருச்சபை யின் அணுகுமுறைகளில் மாற்றம் தேவை.
2 சீர்திருத்தம் என்பது புதிய கோட்பாடுகளை உருவாக்குவது அல்ல; மாறாக, கிறிஸ்துவின் உண்மையான போதனைகளான அன்பு, எளிமை, மற்றும் சேவை ஆகியவற்றின் அடிப்ப டைக்கே திருச்சபையை மீண்டும் அழைத்துச் செல்வதாகும்.
3. திருச்சபையில் சாதி, வர்க்க பேதங்களைக் கடந்து, ஏழை-எளியோருக்கும், ஒதுக்கப்பட் டோருக்கும் முன்னுரிமை அளிக் கப்பட வேண்டும். சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று அன்பு செய்யும் புதுமை ப் பார்வை வேண்டும்.
4.திருச்சபையின் முடிவெடுக்கும் அதிகாரங்களிலும், செயல்பாடு களிலும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிகப் பொறு ப்புகளும், சம வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
5.இன்றைய உலகின் மிகப் பெரிய சவாலான பருவநிலை மாற்றத்திற்கு எல்நினோக்கு El-Nino எதிராக, திருச்சபை குரல் கொடுக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது இறைவனின் படைப்பைப் பாதுகாப்பதற்குச் சமம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
6 வறுமை, வேலையின்மை, மன அழுத்தம், குடிக்கு அடிமை Alcohol addict". போன்ற நவீன காலப் பிரச்சினைகளால் அவதி ப்படும் மக்களுக்கு ஆன்மீக ஆறுதலோடு, வாழ்வியல் உதவி களையும் வழங்கும் மையமாக திருச்சபை மாற வேண்டும். இதுவே, திருச்சபைகள்
புதுமையடைய ஓர் அழைப் பாகும்.
1.சீர்திருத்த உடன்படிக்கை. The Covenant of Reformation. 2.அரசர்கள் 23:1-8.
அன்பர்களே! கி.மு ஏழாம் நூற்றா ண்டில் யோசியா அரசன் யூதா வை ஆண்டான். இவன் பதவி யேற்கும்போது இவனுடைய வயது 8. யூதா தேசம் முழுவதும் ஆன்மீக ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் முற்றிலும் சீர்கெட் டுப் போயிருந்தது. காரணம்
யோசியாவின் மூதாதையர்க ளான இவன் பாட்டனார் மனாசே யூதாவை 55 ஆண்டு
ஆட்சி செய்தான், இவன் தந்தை
ஆமோன் 22 வயதில் அரசனாகி
இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.மனாசே,யூதாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான விக்கிரகாராத னை ஆட்சியை நடத்தினான்.
அவன் ஆண்டவருடைய இல்லத்திற்குள்ளேயே பாகால், அஸ்தரோத் மற்றும் வானத்தின் படைத்திரள் அனைத்திற்கும் பலிபீடங்களைக் கட்டினான். தன் சொந்தக் பிள்ளைகளையே தீக்கடக்கப் பண்ணி பலி கொடு த்தான். குறிசொல்லுதலையும் சூனியங்களையும் ஆதரித்தான்.
அவனுக்குப் பின் வந்த யோசி யாவின் தகப்பன் ஆமோனும் அதே விக்கிரகாராதனை வழியையே பின்பற்றினான். ஆமோன் படுகொலை செய்யப் பட்ட பிறகு, யோசியா தனது 8 வது வயதில் யூதாவின் அரசராக பொறுப்பேற்றான். அவன் சிறுவனாக இருந்தாலும்,அவன்
தன் தந்தை மனாசே மற்றும் ஆமோனின் வழிகளைப் பின் பற்றாமல், கர்த்தருக்குப் பிரிய மான வழிகளில் நடக்கத் தொடங்கினான்.
யோசியாவின் ஆட்சியின் 18-வது வருடத்தில், அவன் ஆண்ட வரின் இல்லத்தை பழுதுபார்க் கும்படி கட்டளையிடுகிறான்.
அப்போது, மகா ஆசாரியனாகிய இல்க்கியா ஆலயத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த "உடன்படிக்கை புத்தகத்தை" (The Book of the Law --நியாயப் பிரமாணமாகிய இணைச்சட்டம்) கண்டெடுக்கிறான்.
மனாசேயின் நீண்டகால விக்கி ரகாராதனை ஆட்சியின் காரண மாக, கடவுளுடைய வார்த்தை முற்றிலும் மறக்கப்பட்டு, புறக் கணிக்கப்பட்டிருந்தது.
அந்தப் புத்தகம் அரசருக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, யூதா ஜனங்கள் கடவுளுடைய உடன்படிக்கையை எவ்வளவு தூரம் மீறியிருக்கிறார்கள் என்பதையும், அதற்காக வரவி ருக்கும் தேவகோபத்தையும் யோசியா உணர்கிறான். அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, உண்மையான மனந் திரும்புதலுக்கு நேராகத் திரும் புகிறான்.
ஒரு உண்மையான சீர்திருத்தம் அல்லது ஆன்மீக எழுப்புதல் என்பது மனித எண்ணங்களி ன்படி அல்ல, மாறாக கடவுளு டைய வார்த்தையின் வெளிப் பாட்டின் (Scripture) அடிப்படையி லேயே தொடங்க வேண்டும் என்று சீர்திருத்த இறையிய ளாளர் ஜான் கால்வின் வலியுறுத்துகிறார்.
தலைவர்கள், ஆசாரியர்கள் யோசியாபோல, ஆன்மீகக் காரியங்களில் முன்மாதிரியா கத் திகழ வேண்டும். பயத்தினா லோ அல்லது கடமைக்காகவோ அல்லாமல், கடவுள் மீதுள்ள தூய்மையான அன்பினாலும் அவருடைய இறையாண்மையை ஏற்றுக்கொள்வதினாலும் மட்டுமே இந்த உடன்படிக்கை அமைய வேண்டும். அரசர்கள், ஆசாரியர்கள், இறைவாக்கினர் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் கடவுளுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவர்களே என்பதை இது காட்டுகிறது.
விக்கிரகாராதனையை வேரோடு ஒழித்த யோசியா:
அன்பர்களே! நாட்டில் இருந்த அனைத்துப் பாகால் மற்றும் அசேரா வழிபாட்டுச் சின்னங்க ளையும் மிகத் தீவிரமாக அழித் தார்.பாகால் வழிபாட்டுப் பொரு ட்கள்,சிலைகளைத் தூளாக்கி விக்கிரகத் தூண்களை உடைத் து, அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினான், பாகாலுக்கும் சூரியன், சந்திரன், நட்சத்திரங் களுக்கும் தூபம் காட்டிவந்த விக்கிரகப் பூசாரிகளை அகற்றி னான், சாலமோன் அரசன் பிற நாட்டுத் தெய்வங்களான அஸ்த ரோத், காமோஸ், மில்கோம் போன்றவற்றுக்காகக் கட்டியிரு ந்த விக்கிரகத் தொழுகை மேடு களை அழித்தான்.
இஸ்ரவேலரைப் பாவம் செய்யப் பண்ணின யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடத்தை இடித்து, தூளாக்கிச் சுட்டெரித்தார்.
அன்பர்களே!
விக்கிரகாராதனையை ஒழிப்ப தில் யோசியா காட்டிய வேகம், கடவுள் மீதுள்ள பரிசுத்த வைரா க்கியத்தைக் (Holy Zeal) காட்டுகி றது.ஆண்டவர், மோசேக்கு கொடுத்த கட்டளைப்படி,"மேலே விண்வெளியில், கீழே மண்ணு லகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையை யோ ஓவியத்தையோ நீ உருவா க்க வேண்டாம். "(விடுதலைப் பயணம் 20:4) என்ற விசுவாசத் தின் கட்டளையை மீறுவது, "
நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரிய வோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள் ளமாட்டேன்; என்னைப் புறக்க ணிக்கும் மூதாதையரின் பாவங் களைப் பிள்ளைகள் மேல் மூன் றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
(விடுதலைப் பயணம் 20:5) என் பது நமக்கு எச்சரிக்கை.
இறையியளாளர் கால்வின் தனது இறையியலில், மனித இதயம் ஒரு "விக்கிரகத் தொழிற்சாலை" (The human heart is a permanent "factory of idols" (idolorum fabrica).என்று குறிப்பிடுகிறார். எனவே, விக்கிரகங்களை மேலோட்டமாக நீக்காமல், அதன் வேர்களை (பொருட்கள், பலிபீடங்கள், படங்கள், தவறான வழிபாடு ) முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற யோசியாவின் செயல்பாடு உண்மையான மனந்திரும்புத லுக்கு அடையாளம் என்கிறார். யோசியா விக்கிரங்களை முற்றி லும் ஒழித்த பிறகுதான் கடவுளு க்கு மிக நேர்த்தியான பாஸ்கா பண்டிகையை கொண்டாடினார்.
அதனால்;
இவரைப் போல் (யோசியா), தம் முழு இதயத்தோடும் முழு உள்ள த்தோடும் முழு ஆற்றலோடும் மோசேயின் சட்ட நூலுக்கேற்ப ஆண்டவர்பால் திரும்பிய அரசர் அவருக்குமுன் இருந்ததில்லை; அவருக்குப்பின் தோன்றியது மில்லை. (2 அரசர்கள் 23:25) என
பாரட்டப்படுகிறார்.
2.இரட்சிப்பே கிருபையின் பரிசு. Salvation is the gift of Grace".தீத்து 3:3-8.
அன்பர்களே! தீத்து என்பவர் பிற
இனத்து கிறித்தவர்.அவர் திருத் தூதர் பவுல் அடிகளாருடன் அந்தியோகியாவிலிருந்து,மூத்த திருத்தூதர்களான பேதுரு, , யாக்கோபு, யோவானை காண எருசலேம் சென்றனர்.
பவுலும் தீத்துவும் (அவர்களோடு பர்னபாவும்) எருசலேமுக்குச் சென்றது, கிறிஸ்தவ நற்செய்தி யில் யூதர்கள்-புற இனத்தார் என்ற பாகுபாடின்றி அனை வரு ம் கிறிஸ்துவின் கிருபையினால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார் கள் என்ற உன்னத உண்மையை எருசலேம் திருச்சபையின் தலை வர்களோடு இணைந்து அதிகார ப்பூர்வமாக நிலைநாட்டவே ஆகும்.சபைக்குள் பிரிவினை யைத் தவிர்க்க பவுல் எருசலேம் சென்றார்.
அந்தக் காலகட்டத்தில், யூத கிறித்தவர்களில் சிலர், "புற இன த்தார்கள் இயேசுவை விசுவாசி த்தாலும், அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனம் செய்துகொண் டால் ஒழிய இரட்சிக்கப்பட முடியாது" என்று தவறாகப் போதித்து வந்தனர். இந்த "யூதம யமாக்கல்" (Judaizing) போதனை க்கு முற்றுப்புள்ளி வைக்கவே பவுல் எருசலேம் சங்கத்தைக் கூட்ட இந்த விவாதத்தைக் கொண்டு சென்றார்.மிக முக்கிய
மாக தீத்து - ஒரு வாழும் உதார ணம் (Titus as a Living Example)
இந்த விவாதத்தில் தீத்து ஒரு முக்கிய சாட்சியாக பவுலால் கூட்டிக்கொண்டு செல்லப்பட் டார்.
தீத்து ஒரு கிரேக்கர் (யூதரல்லாத புறஜாதியார்).எருசலேமில் இருந்த தீவிர யூத சட்டவாதிகள் வற்புறுத்தியபோதிலும், தீத்து விருத்தசேதனம் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை பவுலும் எருசலேம் திருத்தூதர்களும் திட்டவட்ட மாக நிலைநாட்டினர்.
இதன் மூலம், ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு கிறித்தவனா வதற்கு இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் மட்டு மே போதுமானது, புறம்பான யூத சடங்குகள் தேவையில்லை என்பதற்கு தீத்து ஒரு வாழும் சான்றாகத் திகழ்ந்தார்.
அன்பர்களே! தீத்து, கிரேத்து
தீவின் ஆயர். பவுலால் நியமி க்கப்பட்டவர்.அப்பொழுதுதான்
இத்திருமுகம் எழுதப்பட்டது.
பவுலின் காலத்திய கிரேத்த தீவு, The island of Crete in Paul's time":
அன்பர்களே! கிரேத்த தீவு
மத்திய தரைக்கடலின் (Medite rranean Sea) ஐந்தாவது பெரிய தீவு. கி.மு. 67-இல் இந்தத் தீவு ரோமர்களால் கைப்பற்றப்பட் டது. பவுலின் காலத்தில் ரோம பேரரசின் ஒரு மாகாணமாக, கோர்ட்டின் (Gortyn) என்ற நகர த்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கியது.
பவுலின் காலத்தில் கிரேத்து தீவு மக்கள் மத்தியில் ஒழுக்கக் குறைபாடுகள் அதிகமாகக் காணப்பட்டன கிரேக்க தத்துவ ஞானியான எபிமெனிடிஸ் (Epimenides) என்பவரின் கூற் றைச் சுட்டிக்காட்டி திருத்தூதர் பவுல், "கிரேத்தர் எப்பொழுதும் பொய்யர், கொடிய மிருகங் கள், சோம்பேறிகளான பெருந்தீனிக்காரர்" என்று குறிப்பிடுகிறார் (தீத்து 1:12).
சட்டங்களுக்குக் கட்டுப்படாத, சுயநலமும் ஏமாற்று வித்தையும் நிறைந்த ஒரு "முரட்டுத்தனமா ன" சமூகம் அங்கே நிலவியது.
அப்படி இருந்தும், எருசலேமில் நடந்த பெந்தெகொஸ்தே நாளின்போதே கிரேத்து தீவைச் சேர்ந்த யூதர்கள் அங்கிருந்தனர் (திருதூதர் பணிகள் Acts:2:11).
திருத்தூதர் பவுல் கைதியாக ரோம் நகரத்திற்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டபோது, புயல் காற்றின் காரணமாக கிரேத்து தீவின் "அழகான துறைமுகம்" (Fair Havens) என்ற இடத்தில் சில காலம் தங்கியிரு ந்தார் (திருத்தூதர் பணிகள் அப்போஸ்தலர்: 27:7-8).
ரோம சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு (கி.பி. 62-64 வாக்கில்), பவுல் கிரேத்து தீவுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து பல சபைகளை நிறுவினார்.
சபைகளைச் சீர்படுத்தவும், தவறான போதனைகளை எதிர் க்கவும் தனது விசுவாசமான சக ஊழியரான தீத்துவை பவுல் கிரேத்து திருச்சபையின் ஆயரா க விட்டுவந்தார்.
அன்பர்களே! இதுவரை நாம்
கிரேத்த தீவின் திருச்சபை வரலாற்றை நாம் பார்த்தோம்.
விசுவாசிகள் தங்களைச் சுற்றியுள்ள அவிசுவாசிகளைக் கண்டு பெருமைகொள்ளக் கூடாது என்பதற்காகவே பவுல் இந்த கடந்த கால நிலையை நினைவுபடுத்துகிறார் என்று சீர்திருத்தவாத இறையியலா ளரான கால்வின் கூறுகிறார்.
கடவுள் நம்மிடம் அன்பு செலுத் துவதற்குத் தகுதியான எதையும் நம்மிடம் ஒருபோதும் காண மாட்டார்" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். இரட்சிப்பு முற்றிலும் கடவுளின் இறையா ண்மையுள்ள தயவினால் மட்டுமே உண்டாகிறது. இரட்சிப்பு கிருபையின் பரிசா கும்.இரட்சிப்பைப் பெறுவதிலோ அல்லது அதற்குத் தகுதிபெறுவ திலோ மனிதனுடைய "நீதியின் கிரியைகளுக்கு" எந்தப் பங்கும் இல்லை என்பதை பவுல் மிகத் தெளிவாக இங்கு மறுக்கிறார்
கிறிஸ்துவின் நீதி நம் கணக்கில் சேர்க்கப்படுவதன் மூலம், நாம் தகுதியற்றவர்களாய் இருந்தும் கடவுளின் முன்னிலையில் குற்றமற்றவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறோம்.
ஒரு மனிதன் மாற வேண்டும் எனில், முதலில் தனது பழைய தவறான வாழ்க்கையையும், சமூகத்திற்குப் புறம்பான குணங்களையும் (பொறாமை, பகை, சுயநலம்) விட்டுவிட வேண்டும். கடந்த கால பலவீன ங்களை உணர்வதே தனிமனித ஒழுக்கச் சீர்திருத்தத்தின் முதல் படியாகும்.
இறுதியாக,
தற்காலிக உலக இச்சைகளுக்கு அடிமையாக இருந்த மனிதன், இப்போது "நிலைவாழ்வு மற்றும் "நீதி" என்ற உயர்வான ஆன்மீக இலக்குகளை நோக்கித் தன் வாழ்க்கைப் பாதையை மாற் றியமைக்க வேண்டும்.
வெறும் விசுவாசம் மட்டும் போதாது, அது பிறருக்குப் பயன்படும் நற்கிரியைகளாக (நல்ல செயல்களாக) மாற வேண்டும். நாம் செய்யும் காரி யங்கள் சமுதாயத்திற்குப் "பிர யோஜனமாக" (Beneficial to socie ty) இருக்க வேண்டும் என்ற சமூ கப் பொறுப்புணர்வை இந்த வச னம் மிக ஆழமாக விதைக்கிறது.
3.நற்செய்தி சீர்திருத்தத்தின்
புதிய ஆடை. The Gospel is the new Garment of Reformation."
லூக்கா 5:36-39.
அன்பர்களே! ஒருநாள் பரிசேயர் களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் இயே சுவிடம்,"பரிசேயர்களும், அவர் களின் சீடர்களும், யோவானு டைய சீடர்கள் போல, "உம்முடைய சீடர்கள் ஏன் உபவா சிப்பதில்லை?" என்று இயேசு விடம் கேள்வி கேட்டனர்.
இதற்கு இறையியலாளர் ஜான் கால்வின், இது சீடர்களின் ஆரம்பகட்ட ஆன்மீக பலவீனத் தோடு தொடர்புபடுத்துகிறார். They are the beginners. Just joined as Disciples.இவர்கள் இன்னும் ஆன்மீக முதிர்ச்சி அடையாத, மென்மையான நிலையில் இருந்தனர்.
இந்த நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டு சடங்குகளுக்கும், புதிய ஏற்பாட்டு கிருபைக்கும் உள்ள முரண்பாடாகப் பார்க்கப் படுகிறது. இயேசுவின் சீடர்கள்
பழைய கிழிந்த ஆடையில் புதிய துணியை வைத்தால் ஆடை இன்னும் அதிகமாகக் கிழியும்; பழைய துருத்தியில் புதிய ரசத் தை ஊற்றினால் அது வெடித்துப் போகும்.
அதுபோல, ஆரம்ப நிலையிலு ள்ள சீடர்கள் மேல் கடுமையான உபவாசச் சட்டங்களையும், பார மான மதச் சடங்குகளையும் (பரிசேயர்களைப் போல) திணி த்தால், அவர்கள் ஆன்மீக ரீதி யில் சோர்ந்து பின்வாங்கிவிடு வார்கள் என்று கால்வின் விளக்குகிறார்.
பழைய ரசத்தைக் குடித்தவுடனே ஒருவனும் புது ரசத்தை விரும்ப மாட்டான்; பழைய ரசமே நல்ல தென்று சொல்லுவான்" என்று இயேசு கூறுகிறார்.
இதற்கு கால்வின், மனித இயல் பு எப்போதும் பழைய பழக்க வழக்கங்களையும் (Customs) பாரம்பரியங்களையும் எளிதில் விட விரும்புவதில்லை.
பரிசேயர்கள் தங்கள் பாரம்பரிய சடங்குகளிலேயே பழகிவிட்ட தால், கிருபையின் அடிப்படை யிலான இயேசுவின் புதிய போதனையை (புது ரசம்) அவர்களால் உடனடியாக ஏற் றுக்கொள்ள முடியவில்லை.
வெளிப்பகட்டான சடங்குகள் இல்லாத இயேசுவின் எளிமை யான வழியே ஆன்மாவிற்கு உண்மையான பலன் தருவது என்பதை அவர்கள் உணரவில் லை என்று கால்வின் குறிப்பிடு கிறார்.
மனிதர்கள் தங்களின் சொந்த கிரியைகள் மற்றும் சடங்குகள் (Legalism) மூலமாக இரட்சிப்பைப் பெற முயற்சிப்பதையே பரிசேயர்களின் உபவாசம் காட்டுகிறது.ஆனால் இயேசு கொண்டு வந்த கிருபையின் நற்செய்தியை இந்த பழைய சட்டவாத அமைப்போடு கலந்து "ஒட்டுப்போட" முடியாது
நற்செய்தி என்பது முற்றிலும் புதிய ஆடை; அதை பழைய சுயநீதியோடு இணைக்கக் கூடாது.
இறுதியாக;பழைய மார்க்க சடங் குகளையும், இயேசு கொண்டு வந்த புதிய கிருபையின் நற் செய்தியையும் ஒன்றாகக் கல க்க முடியாது;புதிய வாழ்க்கைக் குப் புதிய இருதயமும் புதிய சிந்தனையுமே தேவை" என்பதாகும். சீர்திருத்தம் என்பது,இயேசு இங்கே பழைய ஆடைக்கு புதிய துண்டு துணி யை இணைப்பதையும், பழைய தோற்பைகளில் புதிய திராட்சர சத்தை ஊற்றி வைப்பதையும் உவமைகளாகக் கூறுகிறார்.
மனிதர்கள் இயல்பாகவே பழைய பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் விரும்புகிறார் கள் ("பழைய ரசமே நல்லது" என்பார்கள்). ஆனால், கிறிஸ்து வழங்கும் புதிய வாழ்வை ருசித்துப் பார்க்க அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் அதுவே சீர்திருத்தம்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
Note: The Sermon has been prepared to deliver at CSI.Rev E.O Shaw Memorial Church, on 25/10/2026.at Tribal Hamlets, Pazhaveli, Chengalpet. A branch Church of CSI Andrews Church, Chengalpet.
The Andrews Church is a century old Church, established by the Church of Scotland, now under the Diocese of Madras. It always walks on the path of the St Matt:25:40, "Verily ,verily I say unto you, in as much as you have done it unto one of the least of these my brethren, you have done it unto me"
The Church cares for them both materially, spiritually and socially with equality. They are still on economically weaker society. The church pays much attention to uplift them as the prime duty and a continuous process.
Martin Luther. The father of Reformation.
Comments
Post a Comment