அனைத்து ஆன்மாக்களின் திரு நாள் All Souls Day. எசாயா 25:6-9, 2 கொரிந்தியர் 5:1-10, திருப்பாடல் 117:14,15,17-21. யோவான் 11:21-25.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார, தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"அனைத்து ஆன்மாக்களின் திரு நாள்".
அன்பர்களே! இந்திய கலாச்சா ரத்தில் அனைத்து மதங்களிலும் மறைந்த முன்னோர்களை (Ancestors) நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு புனிதமான வழிபாட்டு முறையைக் குறிக்கிறது.
மறைந்த பெற்றோர்கள் அல்லது முன்னோர்களின் ஆன்மா சாந்தி யடைந்து, அவர்கள் விண்ணுல கில், மகிழ்வோடு இருக்கவும், அவர்களின் ஆசி குடும்பத்திற்கு கிடைக்கவும் இது செய்யப்படு கிறது.
இந்த நாளில் தகுதியானவர்களு க்கு அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பது (அன்னதானம்) மற்றும் ஆடை தானம் (துணி வழங்குவது) மிக முக்கியமாக கருதப்படுகிறது.காக்கைக்கு உணவிடுவதும் மரபு.
அவ்வகையில், நாம் கொண்டா டவில்லை என்றாலும், நாம் நம்
ஆன்மா நிலைவாழ்வு பெற இத்திருநாளை கொண்டாடி வரு
கிறோம்.
அன்பர்களே!
நாம் முதலில் அனைத்து புனிதர் கள் திருநாளுக்கும், அனைத்து ஆன்மாக்கள் திருநாளுக்கும்
உள்ள வேறுபாட்டை காண் போம்.
What's the difference between All Saints Day and All Souls Day?
அனைத்து புனிதர்கள் தினம் என்பது,"புனிதமான வாழ்க்கை வாழ்ந்து புனிதத்துவம் அடைந் தவர்கள், கிறிஸ்துவுக்காக விசு வாசத்தினிமித்தம் கொல்லப்ப ட்டவர்கள்,அறியப்பட்ட மற்றும் அறியப்படாத அனைத்து புனித ர்கள், முறையாகப் புனிதர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், கிறித் துவுக்காக வாழ்ந்து, தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர் கள் மட்டுமல்லாமல், விண்ணுல கில் உள்ள அனைவரையும் , நினைவுகூரும் நாளாக கொண் டாடுவதே அனைத்து புனிதர்கள் தினமாகும். இதை திருச்சபை கள் நவம்பர்,1 ல் கொண்டாடப்
படுகின்றன.புனிதர்களின் வாழ் வை நினைவுகூர்ந்து, அவர்களி ன் பரிந்துரை வேண்டியும், அவர் களைப் போல வாழ தூண்டுதல் பெறவும்கொண்டாடப்படுகிறது.
அனைத்து ஆன்மாக்கள் திருநாள் (All Souls Day) என்பது,
கிறித்துவ சபைகளால், மரித்த (இறந்த) விசுவாசிகளின் ஆன்மாக்களை நினைவுகூர்ந்து இறைவேணாடுதலுக்காக, அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித நாளாகும். தமிழகத்தில் இது பொதுவாக "கல்லறைத் திரு நாள்" என்று அழைக்கப்படு கிறது.
கி.பி. 998 இல், பிரான்ஸ் நாட்டின் குளூனி (Cluny) மடாலயத்தின் தலைமைத் துறவியான புனித ஒடிலோ (St. Odilo) என்பவர் நவம்பர் 2 ஆம் தேதியை உத்த ரிப்பு நிலையில் (Purgatory) இருக்கும் ஆன்மாக்களுக் காக இறைவேண்டல் செய்யும்
நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.மக்கள் கல்லறை களுக்குச் சென்று, அவற்றை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கல்லறைத் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து, இறந்தவர்களை நினை வு கொள்வர்.
நண்பர்களே! உத்தரிப்பு நிலை (Purgatory) என்பது தூய்மை பெறும் நிலையாகும். கத்தோ லிக்க திருச்சபையின் நம்பிக் கையின்படி சாகும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் இறந்தும் விண்ண கம் செல்ல முழு தகுதியற்றவர் களாக இருப்பவர்கள், சிறிது காலம் காத்திருந்து தூய்மை பெற்று முதிர்ச்சியடைய கடவு ளால் அளிக்கப்படும் வாய்ப்பு ஆகும்.
கடவுளின் இருப்பிடம் மற்றும் விண்ணகம் என்பது முழுமை யான பரிசுத்தமும் தூய்மையும் நிறைந்தது. எனவே, அந்தப் பரிபூரண தூய்மைக்குள் நுழை வதற்கு இந்த ஆன்மாக்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட காலம் வேதனைப்பட்டுச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உத்தரிப்பு நிலையில் இருக்கும் ஆன்மாக்கள் அனைவரும் ஒரு நாள் தங்களது தூய்மைப்படுத் துதலுக்குப் பின் கட்டாயம் விண் ணகம் செல்வார்கள் என்பது உறுதி. அவர்கள் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள்.
இதற்கு ஆதாரமாக,
விவிலியத்தின்படி(லூக்கா16:19-31 இல் இயேசு கூறிய செல்வ ந்தன் மற்றும் லாசர் உவமை), ஏழை லாசரும் விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாமும் மரணத்திற்குப் பிறகு இருந்த இடம் ஆபிரகாமின் மடி (Bosom of Abraham) என்று அழைக்கப்ப டுகிறது.
யூத மற்றும் ஆரம்பகால கிறித் தவ பாரம்பரியத்தின்படி, இரண்டு இடங்கள். ஒன்று,
"நீதியாளர்களின் தங்கு மிடம்"Habitation of Justice, எபிரேய (Hebrew) பெயர் நெவே செதெக் (Neve Tzedek) என்றும் இது மரணத்திற்குப் பிறகு நீதிமான்கள் மற்றும் இறைப்பற்றுள்ளவர்களின் ஆன்மாக்கள் இறுதித் தீர்ப்பு நாள் வரை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் காத்திருக்கும் ஒரு தற்காலிக இடமாகக் கருதப் பட்டது.
இரண்டாவது,பாதாளத்தின் ஒரு பகுதி (Sheol/Hades): பண்டைய யூத நம்பிக்கையி ன்படி, இறந்தவர்களின் ஆன்மா க்கள் செல்லும் பொதுவான இடமான 'பாதாளத்தின்' ஒரு பிரிவாக இது இருந்தது. ஆனால், இது செல்வந்தன் வேதனைப்பட்ட நரகப் பகுதி யிலிருந்து ஒரு "பெரிய பிளவி னால்" பிரிக்கப்பட்டிருந்தது. செல்வந்தன் நரக நெருப்பில் வேதனைப்பட்டபோது, லாசர் ஆபிரகாமின் மடியில் அணைக் கப்பட்டு ஆறுதலும் நிம்மதியும் அடைந்ததாக விவிலியம் விவரிக்கிறது.
கிறிஸ்தவ இறையியலின்படி, இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இந்த ஆபிரகாமின் மடி யில் காத்திருந்த நீதிமான்களி ன் ஆன்மாக்கள் அனைவரும் இயேசுவினால் விண்ணகத் திற்கு அழைத்துச் செல்லப்பட்ட னர் என்று நம்பப்படுகிறது.
1.உலகளாவிய மெசியானிய விருந்து (The Messianic Banquet).எசாயா 25:6-9.
அன்பர்களே! இறைவாக்கினர்
ஏசாயா 25ம் அதிகாரம், "ஏசாயா வின் அப்போகாலிப்டிக் (Apocal yptic கடவுளின் வெளிப்பாடு) அல்லது உலகளாவிய இறை வாக்கினப் பகுதி" என்று அழைக்கப்படுகின்றன.
சீர்திருத்த இறையியியலாளர் ஜான் கால்வின் இப்பகுதியை "ஒரு கிறிஸ்தவ மைய (Chris tocentric) இறைவாக்காக" பார்க்கிறார்.
இறையியலகளர் வில்லியம் பார்க்ளேயின் பார்வையில், ஏசாயா 25:6-9 என்பது, வெறும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு இறைவாக்கு மட்டுமல்ல, அது தற்காலத்தில் துன்பப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் தரும் மாபெரும் நம்பிக் கை (Hope) ஆகும். என்கிறார்.
இஸ்ரவேல் மற்றும் உலக நாடு கள் பலவிதமான துன்பங்கள், ஒடுக்குமுறைகள் மற்றும் போரா ட்டங்களை எதிர்கொண்டிருந்த காலக்கட்டத்தில், கடவுளுடைய நியாயத்தீர்ப்பும் அதன் பின்
வரும் மீட்பும் இதில் வெளிப்படு த்தப்படுகிறது.
சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையில் சகல மக்களுக்கும் ஒரு மாபெரும் விருந்தை ஆயத் தம்பண்ணுவார் என்று இந்தப் பகுதி கூறுகிறது. சர்வவல்லமையுள்ள கர்த்தர் இந்த மலையில் எல்லா மக்களு க்கும் ருசியான பண்டங்கள் மற்றும் சிறந்த திராட்சை இரசத் தினால் ஆன ஒரு விருந்தை ஆயத்தம் செய்கிறார். இறை யியாளர் ஜான் கால்வின், இந்த
விருந்து, "கடவுளின் கிருபை"
என்கிறார்.இந்த விருந்து அனை வருக்குமானது, அவர்களின்
தடைகளை தகர்த்தெறிந்து,
பிற இனத்தாரின் துன்பங்கள்
தூக்கியெறியும் ஐக்கிய திரு
விருந்தாகும்.
அனைத்தினங்களை மூடியிருக்கிற "மூடுதிரை அல்லது முக்காடு" என்பது உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மரண பயம், துக்கம் மற்றும் ஆன்மீக அறியா மையைக் குறிக்கிறது.
கடவுள் தம்முடைய அன்பிலும் மீட்பின் திட்டத்திலும் எவரையும் புறக்கணிப்பதில்லை; அது உலகளாவிய எல்லைகளைக் கொண்டது என்பதற்கு இது ஒரு ஆரம்பகால சான்றாகும்.
இறையியளாளர் கால்வின்,
சகல மக்களுகளுக்கும்" (For all people) என்ற வார்த்தை, இரட் சிப்பு யூதர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவுக்குள் உலகிலுள்ள அனைத்து இனங்களுக்கும், விரிவுபடுத்தப்படும் என்கிறார்.
இறையியளாளர் வில்லியம் பார்க்ளே, மரணத்தின் மீதான இறுதி வெற்றி என்பதை புதிய ஏற்பாட்டோடு (1 கொரிந்தியர் 15:54 மற்றும் திருவெளிப்பாடு 21:4) இணைத்துப் பார்க்கிறார். மனிதனால் வெல்ல முடியாத ஆகப்பெரிய எதிரி மரணம் மட்டுமே. ஆனால், ஆண்டவரே, அந்த மரணத்தை என்றென்றை க்குமாக விழுங்கிப்போடுவார் (Swallow up death forever). இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலில் தொடங்கி, அவரது இரண்டாம் வருகையில் முழுமை யடையும் இறுதி வெற்றியைக் குறிக்கிறது.
கண்ணீரைத் துடைக்கும் கடவுள்.
அன்பர்களே! திருச்சபைகள்
இந்த உலகத்தில் பலவிதமான துன்பங்கள், நிந்தனைகள் மற்றும் உபத்திரவங்களைச் சந்தித்தாலும், கடவுள் தம்முடை ய மக்களின் கண்ணீரைத் துடை த்து, அவர்களின் அவமானங்க ளை முற்றிலும் நீக்கிப்போடு வார்என்றநித்தியநம்பிக்கை யை விசுவாசிகளுக்கு ஜான் கால்வின் இதன் மூலம் நினை வூட்டுகிறார்."காத்திருந்தோம்" (We have waited) என்ற வார்த் தைக்கு கால்வின் அதிக முக்கி யத்துவம் கொடுக்கிறார். விசு வாசிகள் உலகத்தின் சோதனை களுக்கு நடுவிலும்கடவுளுடைய வாக்குத்தத்தங்களை நம்பி பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்பதை இது காட்டு கிறது.
அந்த விசுவாசக் காத்திருப்பு வீண்போகாது. வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ள வர் என்பதால், "அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களி ப்போம். " என்று விசுவாசிகள் வெற்றிக் கீதம் பாடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இறுதியாக,
தீமை, துக்கம் மற்றும் மரணம் ஆகியவை தற்காலிகமானவை; கடவுளுடைடைய அன்பும், மகிழ்ச்சியும், நித்திய வகழ்வுமே இறுதியானவை என்பதை இப்பகுதி பறைசாற்றுகிறது
2.பூமியிலுள்ள உடல் கூடார மும் விண்ணக வீடும்.Our earthly body is a temporary tent; our heavenly home is eternal." 2 கொரி ந்தியர் 5:1-10.
அன்பர்களே!
திருதூதர் பவுல் அடிகளார், கொரிந்து நகர சபைக்கு எழுதிய வரலாற்று மற்றும் கலாச்சாரச் சூழலில் இருந்து பிறந்தது இந்தப் பகுதி. பவுல் தனது ஊழியத்தில் சந்தித்த கடுமை யான எதிர்ப்புகளும், மரண பயத் தை உண்டாக்கிய துன்பங்களு ம், மாற்றுத் தத்துவ சிந்தனைக ளுமே இந்த வசனங்களின் பின்னணியாக அமைகின்றன
இந்த நிருபத்தை எழுதுவதற்கு முன்பாக ஆசியாவில் அதாவது எபேசுவில், பவுல் சந்தித்த உபத் திரவங்கள் மிகக் கடுமையா னவை. சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின; எங்களால் தாங்க முடி யாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக் கையே இல்லாமல் போயிற்று. (2 கொரிந்தியர் 1:8) என்று என்னி னோம்.
திருதூதர் பவுல் அடிகளார்,
ஒரு கூடாரம் தைக்கும் தொழி லாளி (Tentmaker). எனவே, 5-ம் அதிகாரத்தின் தொடக்கத்தில், அழியக்கூடிய மனித உடலை எளிதில் கிழிந்துபோகும் 'பூமிக் குரிய கூடாரம்' என்ற உருவகத் தோடு ஒப்பிட்டுப் பேச அவரது தொழில் பின்னணியும் ஒரு காரணமாகும்.
உலக புகழ் பெற்ற சீர்திருத்த இறையியளாளர் ஜான் கால் வின் இந்த உலக வாழ்க்கையை ஒரு 'கூடாரம்' (Tent) என்று பவுல் குறிப்பிடுவதை விளக்குகையி ல், மனித உடல் பலவீனமானது, தற்காலிகமானது மற்றும் எளிதில் அழியக்கூடியது என்பதை வலியுறுத்துகிறார்.நம் உடல் மண்ணிலானது.எனவே, நிலையற்றது. விசுவாசிகள் இந்த பூமியிலுள்ள உடலை விட் டுப் பிரியும்போது, கடவுளால் அருளப்பட்ட அழியாத, நித்திய மான வீடு (Heavenly dwelling) நமக்காகக் காத்திருக்கிறது என்பதில் விசுவாசிகள் உறுதி யான அறிவைக் கொண்டுள்ள னர் என்கிறார் கால்வின்.
விசுவாசிகள் இந்த உலக வாழ்க் கையில் பாடுகளாலும் பலவீன ங்களாலும் தவிக்கிறார்கள் (Groan), ஆனால் இது வாழ்க்கை யை வெறுப்பது அல்ல; மாறாக அழியாமையால் சூழப்பட வேண் டும் என்ற ஏக்கம் என்று கால்வி ன் விளக்குகிறார்.
கடவுள் நம்மை இந்த நோக்கத் திற்காகவே பொருத்தி, தமது தூய ஆவியை அச்சாரமாக (உறுதிமொழியாக) நமக்குத் தந்துள்ளார். இந்த ஆவியின் ஒத்தாசையே விசுவாசிகளுக்கு தைரியத்தைத் தருகிறது.
நாம் கண்களால் காண்பதை நம்பி வாழாமல், கண்ணுக்குத் தெரியாத கடவுளின் வாக்குறு திகளை நம்பி நடப்பவர்கள் (Walk by faith, not by sight) என்று கால் வின் குறிப்பிடுகிறார். நாம் சரீரத்தில் இருக்கும்போது கர்த் தரைவிட்டுத் தூரமாயிருக்கி றோம் என்பதையும், சரீரத்தை விட்டுப் பிரிவது கர்த்தரோடிரு ப்பது என்பதையும் விசுவாசிகள் தைரியத்தோடு எதிர்கொள்கின் றனர்.
கிறிஸ்துவின் நடுவர் இருக் கை (The Judgment Seat of Christ)
அன்பர்களே! பத்தாம் வசனம் கிறிஸ்துவின் நடுவர் இருக்கை ப்பற்றி குறிப்பிடுகிறது. இங்கு அனைவரும் நிற்க வேண்டும். இந்த"நடுவர் இருக்கை" என்பது கிரேக்க மொழியில் 'பீமா' (Bema Seat) என்று அழைக்கப்படுகிற து.அக்காலத்தில், ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் நடுவர் கள் ஒரு உயர்ந்த மேடையில் (Bema) அமர்ந்து, போட்டியில் வென்ற வீரர்களுக்குப் பரிசு களை வழங்குவார்கள்.எனவே, இந்த நியாயத்தீர்ப்பு என்பது விசுவாசிகளை தண்டிப்பதற் கான இடம் அல்ல; மாறாக, அவர் கள் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை யை மதிப்பிட்டு, அதற்கேற்ற வெகுமதிகளையும் (Rewards) பரிசுகளையும் வழங்கும் இடம் ஆகும்.
நாம் உடலோடு வாழ்ந்தபோது என்ன செய்தோம் (What we did while in the body),நாம் இவ்வுல கில் நாம் உயிரோடு வாழும் காலம் மட்டுமே நமக்கு நல்லதை
செய்ய வாய்ப்பாகும், மரணத் திற்குப் பிறகு நம் செயல்களை மாற்ற முடியாது, நாம் எண்ணிய எண்ணங்கள், பேசிய வார்த்தை கள், இரகசியமாகச் செய்த காரியங்கள் என அனைத்துமே கடவுளுக்கு முன்பாக வெளிச் சத்திற்கு வரும். மறைவானது எதுவுமே அங்கு மறைந்திருக் காது.
நன்மை தீமைக்குக் கைம்மாறு (Recompense for Good or Bad)
நம் நற்செயல்கள், கடவுளுக்குப் பிரியமாகவும், பிறருக்கு அன்பா கவும் நாம் செய்த நன்மைகளு க்குக் கடவுள் தகுந்த பலனையும் மகிமையையும் தருவார். அவ்வாறே, நம் தீய செயல்கள் சுயநலத்தோடும், கடவுளுக்கு எதிராகவும் நாம் செய்த காரி யங்கள் அங்கீகரிக்கப்படாது. இதனால், நாம் பெற வேண்டிய ஆன்மீகப் பரிசுகளை இழக்க நேரிடும்.
இந்தத் தற்காலிக உடலில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்ற ஆன்மீகத் தணிக்கை (Spiritual Audit) நடக்கும் என்பதை இந்த வசனம் நினைவூட்டுகிறது. மண்ணுலகில் வாழும் ஒவ்வொ ரு நாளையும் விழிப்புணர்வோ டும், பொறுப்போடும், கடவுளுக் குப் பிரியமாகவும் வாழ வேண் டும் என்று ஊக்கப்படுத்துவதற் காக எழுதப்பட்டது.
3.ஆண்டவரே, நீர் இங்கேயிரு ந்திருந்தால்!Lord, if you had been here!"யோவான் 11:21-25 .
அன்பர்களே!
ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தி ருந்தால்..." என்ற வார்த்தை ஒரு கலவை வாக்கியம். A complex sentence in English Grammar. மார்த்தா மற்றும் மரியாளின் இந்த வார்த்தைகள், மனிதனின் ஆழமான வேதனை, ஏக்கம் மற்றும் விசுவாசத்தின் கலவையாகும்.
புகழ்பெற்ற சீர்திருத்தவாத இறையியலாளர் ஜான் கால் வின் (John Calvin) மற்றும் பொது வான விவிலிய இறையியலி ன்படி, இந்த ஒற்றை வரியின் ஆழமான ஆன்மீக விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மார்த்தாவும் மரியாளும் பெத் தானியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் இயேசுவின் வல்லமை யை முழுமையாக நம்பினார்கள். ஆனால், அதை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இடத்திற்குள்) சுருக்கிவிட்டார்கள்.
இயேசு நேரில் இருந்தால் மட்டும் தான் அற்புதங்களைச் செய்ய முடியும், அவர் தூரத்தில் இருந் தால் செய்ய முடியாது என்று அவர்கள் நினைத்ததே இவர்க ளின் பலவீனம்.
இயேசுவின் வார்த்தைக்கும், அவரது தெய்வீகத் தன்மைக்கும் தூரம் ஒரு தடையல்ல என்ப தை அவர்கள் அந்தத் துக்கத்தி ன் மத்தியில் மறந்துவிட்டார்கள் என்று ஜான் கால்வின் சுட்டிக் காட்டுகிறார்.
"நீர் இங்கேயிருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டா ன்" என்று கூறும்போது, இயேசு தங்களை நாடி வரத் தாமதித்து விட்டார் என்ற ஒரு மறைமுக மான ஆதங்கம் அந்த வார்த்தை களில் வெளிப்படுகிறது.
கடவுள் நம்முடைய இறைவேண் டல்களுக்கு நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் பதில் அளிக்காத போது, நமக்குள் எழும் அதே ஏமாற்றத்தையும், "ஏன் ஆண்ட வரே இன்னும் வரவில்லை?" என்ற கேள்வியையும் இந்த வசனம் பிரதிபலிக்கிறது.
மார்த்தா, மரியாள் இருவருமே இயேசு நோய்களைக் குணமாக் குபவர் என்பதைப் பார்த்திருக் கிறார்கள். ஆனால், மரணத்தி ற்குப் பிறகும் அவரால் கிரியை செய்ய முடியும் என்பதை அவர் கள் யோசிக்கவில்லை.
லாசர் இறந்துவிட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற மனித ரீதியான முடிவுக்கு (Finality of Death) அவர்கள் வந்து விட்டதை இந்த வார்த்தை காட்டு கிறது.
அன்பர்களே! மனிதர்களாகிய நமக்கு, நம்முடைய சோதனை கள் அல்லது இழப்புகள் "முற்று ப்புள்ளி" போலத் தோன்றும். ஆனால், இயேசுவுக்கு அது ஒரு "காற்புள்ளி" (Comma) மட்டுமே.
மார்த்தா மற்றும் மரியாளின் இந்த விரக்தியான வார்த்தை க்குப் பிறகுதான், இயேசு அவரி டம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ் வார். என்றார்.என்ற உன்னத மான உண்மையை வெளிப்ப டுத்தி, லாசரவை உயிரோடு எழுப்பினார்.
இயேசு இங்கேயில்லாமல் போனதற்குக் காரணம், லாசரவை குணமாக்குவதை விடப் பெரிய அற்புதத்தைச் செய்து, கடவுளின் மகிமையைத் துலங்கச் செய்வதற்கே ஆகும்.
இறுதியாக,
நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் சோதனைகள் வரும்போது, "ஆண்டவரே, நீர் என் குடும்பத்தில் / என் தொழிலில் / என் வாழ்வில் இருந்திருந்தால் எனக்கு இந்த நஷ்டமோ வேதனையோ வந்தி ருக்காதே" என்று நாம் புலம்புவ துண்டு. ஆனால், நம் வாழ்வில் ஏற்படும் தற்காலிக இழப்புகள் அல்லது தாமதங்கள், கடவுள் தன் வல்லமையை இன்னும் பெரிய அளவில் நம் வாழ்வில் வெளிப்படுத்துவதற்கான ஒரு ஆயத்தமே என்பதை இந்த வசனம் நமக்குக் கற்றுத்தரு கிறது.
இந்த, நவம்பர் 2, அனைத்து ஆன்மாக்களின் திருநாள் உயிரோடு வாழும் மனிதர்க ளுக்கு ஒரு முக்கிய ஆன்மீகப் பாடத்தைக் கற்பிக்கிறது. மண் ணுலக வாழ்வு நிலையற்றது என்பதையும், நேரிய வாழ்க்கை வாழ்ந்து ஆன்மீகப் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.இந்த நாள் இறப்புடன் உறவுகள் முடிந்து விடுவதில்லை என்பதை நினை வூட்டுகிறது. மண்ணுலகில் வாழ் பவர்கள், உத்தரிக்கும் ஆன்மா க்கள், விண்ணகப் புனிதர்கள் ஆகிய மூவருக்கு இடையே உள்ள ஆன்மீகத் தொடர்பை (Communion of Saints) இது உறுதி ப்படுத்துகிறது.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com

Comments
Post a Comment