தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள். CSI Formation Day.தெ இ தி ஒன்றிப்பு: பணியாற்ற ஒன்றிணைதல்.(298) CSI Union: United to Serve. நெகேமியா 2:17-20, 1 கொரிந் தியர் 3:1-15, திருப்பாடல் 28, லூக்கா 9:10-17.


முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள். CSI Formation Day.தெ இ தி ஒன்றிப்பு: பணியாற்ற ஒன்றிணைதல்."
தென்னிந்தியத் திருச்சபை (CSI) தென்னிந்தியாவில் உள்ள பல கிறிஸ்தவப் பிரிவுகளின் ஒன்றி யமாக, 1947 செப்டம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, ஆங்கிலிக்கன், பிரஸ்பிடீரியன், காங்கிரகேஷனலிஸ்ட் மற்றும் மெதடிஸ்ட் திருச்சபைகள் ஒன்றாக ஒருங்கிணைந்த அமை ப்பாக ஒன்றிணைந்ததைக் குறித்தது. இத்தகைய ஒன்றியத் திற்கான யோசனை, இந்தியா வில் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்த வத் திருச்சபையை உருவாக்கக் கனவு கண்ட திருச்சபைத் தலைவர்களை ஒன்றிணைத்த, 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தரங் கம்பாடி மாநாட்டில் முதன் முதலில் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. 28 ஆண்டுகளாக, அப்பகுதி முழு வதும் வெவ்வேறு மறைப்பணிச் சங்கங்களால் நிறுவப்பட்டிருந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த திருச்சபைகளிடையே விரிவான கலந்துரையாடல்கள் நடை பெற்றன. இறுதியாக, 1947-ல், இந்தியா சுதந்திரம் பெற்ற உடனேயே, இந்தத் திருச்சபைக ளின் பிரதிநிதிகள் ஒன்றிணை ந்து தென்னிந்தியத் திருச்சபை யை உருவாக்கஒப்புக் கொண் டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட தேவாலயத்தின் தொடக்க விழா, மெட்ராஸில் (தற்போது சென் னை)  உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது. திருவிதாங்கூர் மற்றும் கொச்சி ஆங்கிலிக்க மறைமாவட்டத்தின் ஆயரான மேதகு சி.கே. ஜேக்கப் அவர்கள் இந்த ஆராதனைக்குத் தலைமை தாங்கினார். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு, இந்தியக் கிறிஸ் தவ வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாகும்.
கருப்பொருள்:
"எல்லாரும் ஒன்றாய் இருப் பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன் றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் (யோவான் 17:21)
தென்னிந்திய திருச்சபை யின் சின்னம்.
 

இந்த சின்னத்தில் உள்ள தாம ரையின் இதழ்களும் சிலுவை யின் கரங்களும் பரிசுத்த ஆவி யின் அனல் பறக்கும் நாவுக ளுடன்  பிணைந்துள்ள செயல்.  மக்கள் இறைவனுடன் கொண் டுள்ள ஐக்கியத்தின் ஒரு உண் மையான இந்திய வெளிப்பா டாகும்.தாமரை திருவிவலியத்
தில் இணைந்தது அல்ல.
இச்சின்னத்தில் சிலுவை கம்பீர மாக மையத்தில் அமைந்திரு ப்பது, சிலுவையில் இயேசு செய்த அயராத, தன்னலமற்ற உன்னத தியாகமே திருச்சபை க்கும் அதன் விசுவாசத்திற்கும் அடிப்படை என்ற கருத்தை உணர்த்துகிறது.
'அவர்கள் எல்லாரும் ஒன்றாயி ருக்க வேண்டும்; தந்தையே, நீர் என்னிலும், நான் உம்மிலும் இருப்பதுபோல, அவர்களும் நம்மில் ஒன்றாயிருக்க வேண்டும்...... (யோவான் 17:21) என்பது, கிறிஸ்துவே தலையா கவும், திருச்சபை அவருடைய உடலாகவும் இருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டும் மற்றும் அனைவரையும் உள்ளட க்கிய உறுதிமொழியாகும்.
ஆயர் மன்றம் Synod:
தென்னிந்திய திருச்சபையின் 
தலைமை அலுவலகம் சினாட்
பேராயங்களை நிர்வகிக்கும்
உரிமை பெற்றது.ஆனால், அது அதிகமாக அதன் செயல்பாடு கள் விவாதத்திற்குறியதாக
இருப்பதும், அதன் நம்பகத்தன் மை நீதிமன்றங்களை நாடி
செல்வது, 'எல்லாரும் ஒன்றாயி ருக்க வேண்டும்; " என்ற அடிப்
படை கொள்கைக்கு எதிரானது.
தவறு செய்பவர்களை கடவுள் 
மன்னிப்பாராக.தற்சமயம் CSI 45 இலட்சம் விசுவாசிகளை கொண்டு 25 பேராயங்களுடன் இயங்குகிறது.
1. எழுந்து கட்டுவோம் (Let us rise up and build): நெகேமியா 2:17-20.
அன்பர்களே! யூதர்கள் பாபிலோ னில் 70 ஆண்டுகள் அடிமைத்த னத்திற்குப் பிறகு எருசலேமு க்குத் திரும்பினர். எஸ்றாவின் காலத்தில் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டாலும், அவர்களின் மூதாதையர்களின் கல்லறைகள் இருக்கும் எருசலேமின் பாதுகா ப்பற்ற சுவர்கள் எரிந்து இடிந்த நிலையில் கிடந்தன.  
இந்நிலையில் கி.மு 465 to கி.மு 425 .. பாரசீகப் பேரரசர் அர்தசஸ்தாவின் I (Artaxerxes I)
(அர்தசஷ்டா(Artaxerxes I) என்பது பாரசீகத்தின் அச்செமனிட் (Achaemenid) பேரரசை கிமு 465 முதல் கிமு 424 வரை ஆட்சி செய்த ஐந்தாம் பாரசீகப் பேரரசர் ஆவார். இவர் முதலாம் செர்க்ஸுன் (Xerxes I) மூன்றாம் மகன் ஆவார்.இவரின் பெயர்க் காரணம்: இவரின் வலது கை இடது கையைவிட நீளமாக இருந்ததாகக் கூறப்படுவதால், கிரேக்கத்தில் இவரை "நீளக் கை அரசர்" (Long-handed / Macrocheir) என்றும் அழைத்தனர். திருவிவி லியத்தில் உள்ள எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களில் இவரைக் குறித்தான குறிப்புகள் உள்ளன)
இவரின் அரண்மனையில் திராட்சரசப் பரிமாறுபவராகப் (Cupbearer) பணியாற்றிய நெகே மியா, எருசலேமின் இடிந்த நிலை பற்றிக் கேள்விப்பட்டு மனம் உடைந்து. பல மாதங்கள் உபவாசித்து ஜெபித்தபின், அரச ரிடம் அனுமதி பெற்று எருசலே முக்கு வந்தார். நெகேமியா, யாருக்கும் தெரியாமல் இரவில் எழந்து மதிலின் இடிபாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யூதத் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் மக்களிடம் பேசி, "நாம் படும் பாட்டைப் பாருங்கள்; எருசலேம் பாழாயிருக்கிறது, அதின் வாசல்கள் நெருப்பினா ல் சுடப்பட்டுப் போயின; நாம் இனி நிந்தைக்குள்ளாகாதபடிக் கு, எருசலேமின் மதிலைக் கட்டு வோம் வாருங்கள்" என்று கூறி அவர்களை ஒன்றுதிரட்டினார். மேலும் கடவுள் தம் மீது கிருபை யாக இருந்ததையும் அரசரின் வார்த்தைகளையும் அவர்களிடம் விளக்கினார்.
நெகேமியா தன்னை மக்களிட மிருந்து தனிமைப்படுத்தாமல், "நாம்", "நமக்கு" (We, Us) என்று பேசி அவர்களின் துன்பத்தில் தானும் பங்கெடுப்பதாகக் காட்டுகிறார்.
"எல்லாரும் ஒன்றாய் இருப் பார்களாக!" என்ற இறை வார்த் தை திருச்சபைகள் மக்களிடம்
இணைந்து பணியாற்றுவதை
நெகேமியா நமக்கு நினைவு
படுத்துகிறார்.
எருசலேமின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி, தேவனுடைய நகரத் தின் பெருமையை மீட்டெடுக்க மக்களை அன்போடு ஏவுகிறார்.
கடவுளின் நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் மதிலைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி...அந்த நல்ல வேலைக் குத் தங்கள் கைகளைத் திடப் படுத்தினார்கள்"  
இறையியலாளர் ஜான் வெஸ்லி தனது குறிப்பில், இந்த வார்த்தைகளுக்கு "மிகுந்த வீரியத்துடனும், விடாமுயற் சியுடனும், உறுதியான தீர்மானத் துடனும் காரியத்தில் இறங்கு வது" என்று பொருள் கூறுகிறார். பாதியில் கைவிடாமல், அந்த வேலையை முழுமையாக முடித் தே தீருவது என்ற வைராக்கிய த்தை இது குறிக்கிறது.அவர்கள் தங்களுடைய கைகளையும், ஒருவருக்கொருவர் கைகளை யும் திடப்படுத்திக் கொண்டார் கள் என்று வெஸ்லி விளக்குகி றார். அதாவது, கூட்டுப் பொறுப் போடும் (Mutual Encouragement) ஒற்றுமையோடும் தேவனுடைய பணிக்காக கைகோர்த்தார்கள்.
கடவுளின் பணி என்றாலே தடைகள் வரும்.
அன்பர்களே! உலகில் தடைகள்
இல்லாமல் நற்செயல்கள் நடை
பெறாது.
 ஓரோனியனான சன்பலாற் றும் அரச அலுவலனும் அம்மோ னியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். "நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா?" என்று கேட்டனர். இவர்கள் எருசலேம் சுவர் எழுப்பப்படுவதை விரும் பாத அயல்நாட்டுத் தலைவர் கள்.
அரசருக்குவிரோதமாகக் கலகம் பண்ணுகிறீர்களா?" என்று பெர்சிய அரசருக்கு எதிராகத் துரோகம் செய்வதாகப் பொய் குற்றம் சாட்டினர். இது யூதர்களி ன் மனதை உடைத்து, பயமுறுத் தும் ஒரு தந்திரம் ஆகும்.
நாம் எங்கு நற்செய்கைகளை யோ அல்லது கடவுளின் சித்தம் சார்ந்த காரியங்களையோ செய்ய முற்பட்டாலும், எதிர்ப்பு களும் விமர்சனங்களும் வருவ து இயல்பு.
நெகேமியா தனது சொந்த பலத் தையோ அல்லது அரசரின் அதிகாரப்பூர்வ ஆணையையோ முன்னிறுத்தாமல், அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகி றோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை" என்றார்.
அவ்வாறே! திருச்சபையை அவமானப்படுத்ததுகிறவர்களு க்கும், பதவி, பண ஆசை பிடித்த வர்களுக்கும், விண்ணரசில் பங்கில்லை.
அன்பர்களே! கடவுளுடைய பணி க்கு ஒற்றுமை, சோர்ந்துபோகா த விடாமுயற்சி, மற்றும் மனிதர் களின் எதிர்ப்பைக் கண்டு அஞ் சாமல் கடவுள் மீது வைக்கும் முழுமையான நம்பிக்கை ஆகிய வை மிக அவசியமானவை. கடவுளுடைய கரம் நம்மோடு இருக்கும்போது, நாம் எழுந்து கட்ட ஆரம்பித்தால் அவர் காரிய ங்களை நிச்சயம் வாய்க்கப்பண் ணுவார்.
2 "ஊழியர்கள் இரட்சிப்பின் மூலாதாரம் அல்ல; அவர்கள் கடவுளால் பயன்படுத்தப்படு ம் கருவிகள்." The Ministers are not the source of salvation; they are tools used by God."ஜான் கால்வின். 1 கொரிந்தியர் 3:1-15.
அன்பர்களே! கடவுளின் ஊழியர்
கள் இரட்சிப்பின் மூலாதாரம் அல்ல; அவர்கள் கடவுளால் பயன்படுத்தப்படும் கருவிகள்.
இரட்சிப்பு என்றும், எப்போதும்
கர்த்தருடையது.
 கொரிந்திய விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்க ளாக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் இன்னும் மாம்ச த்திற்குரிய மனப்பான்மை காணப்பட்டது என்று திருதூதர் பவுல் அடிகளார் கூறுகிறார்.
இறையியலாளர் கால்வின் பார்வையில், இங்கு “மாம்சத்தி ற்குரியவர்கள்” என்பது அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதைக் குறிக்கவில்லை; மாறாக, அவர்களுடைய விசுவா சத்தில் அவர்கள் இன்னும் குழந்தைத்தனமான நிலையில் இருந்தார்கள் என்பதைக் குறிக் கிறது.அவர்களுடைய பொறா மையும், கட்சிப்பிரிவும் — “நான் பவுலுடையவன்”, “நான் அப்பொல்லோவுடையவன்” — என்ற பிரிவினை அவர்களுடை ய ஆவிக்குரிய முதிர்ச்சியின் மையை வெளிப்படுத்தியது.
 (Spiritual Immaturity)
ஊழியர்கள் கடவுளின் கருவிகள்:
அன்பர்களே! கடவுள் தம் பணி க்கென்றே அந்தந்த காலகட்டத் தில் சில மனிதர்களை தேர்ந் தெடுக்கிறார் அவர்கள் கடவுளி ன் பணி செய்யும் கருவிகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 அப்பொல்லோ என்பவன் யார்? பவுல் என்பவன் யார்?” இதை குறித்து இறையியலாளர்
கால்வின் வலியுறுத்துவது என்னவென்றால்; "ஊழியர்கள் இரட்சிப்பின் மூலாதாரம் அல்ல; அவர்கள் தேவனால் பயன்படுத் தப்படும் கருவிகள்".பவுலும் அப்பொல்லோவும் தங்களுக் குரிய புகழை எடுத்துக்கொள் ளக்கூடியவர்கள் அல்ல. ஒவ் வொருவரும் கர்த்தர் கொடுத்த பணியைச் செய்கிறார்கள்.
வளர்ச்சியைத் தருபவர் கடவுள்
“நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான்; கடவுளே விளையச் செய்தார்.”இது இந்தப் பகுதியின் முக்கியமான கருத்து.
பவுல் = விதைப்பவர்,
அப்பொல்லோ = நீர்ப்பாய்ச்சு பவர். கடவுள் = வளர்ச்சியை அளிப்பவர்.
இறையியலாளர் கால்வின்
அவர்கள்,மனித ஊழியத்தை கடவுளுடைய இடத்தில் வைப் பது மிகப்பெரிய தவறு. பிரசங்கியும் போதகரும் கடவுளு டைய வார்த்தையை அறிவிக்க லாம்; ஆனால் மனித இருதயத் தில் உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சியை ஏற்படுத்துவது கடவுளுடைய செயல். மற்றும்
அவர் ஊழியர்களின் நோக்கம் ஒன்று நடுகிறவனும் நீர்ப்பாய்ச் சுகிறவனும் வேறுபட்ட பணிக ளைச் செய்தாலும், அவர்கள் ஒரே நோக்கத்திற்காக உழைக் கிறார்கள்.
எனவே கிறிஸ்தவ ஊழியத்தில் போட்டி அல்ல, ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
திருத்தூதர் பவுல்இரண்டு உருவ கங்களைப்(Metaphors)பயன்படுத் துகிறார்:
கடவுளுடைய வயல் மற்றும்  
கடவுடைய கட்டிடம்.
சபை மனிதர்களுடைய சொத்து அல்ல. அது கடவுளுடையது.
 அடித்தளம் கிறிஸ்து. 
பவுல் தன்னை “திறமையான கட்டிடக்காரன்” என்று கூறினா லும், அவர் வைத்த அடித்தளம் இயேசு கிறிஸ்து.
இதை குறித்து கால்வின் முக்கியமாக வலியுறுத்துவது,
சபையின் உண்மையான அடித்தளம் கிறிஸ்துவே.
மனித தத்துவம், மனித புகழ், தனிப்பட்ட ஊழியம், அல்லது ஒரு குறிப்பிட்ட போதகர் சபையின் அடித்தளமாக இருக்க முடியாது.
“ஏற்கெனவே போடப்பட்டிருக்கிற அடித்தளத்தை தவிர வேறொரு  அடித்தளத்தை யாரும் போட முடி யாது; அதுஇயேசுகிறிஸ்துவே.”
 ஒவ்வொருவருடைய கட்டுமா னமும் சோதிக்கப்படும் பவுல் பலவிதமான பொருட்களைச் சொல்கிறார்:
பொன்
வெள்ளி
விலையுயர்ந்த கற்கள்
மரம்
புல்
வைக்கோல்
இதை கால்வின் விளக்கத்தில், இவை ஊழியத்தில் அல்லது சபைக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் போதனை யின் தரத்தையும் பணியின் தன்மையையும் சுட்டிக்காட்டு கின்றன.
ஒருவர் கிறிஸ்துவின் அடித்தளத்தின் மீது கட்டினாலும், அவர் கட்டும் விதம் பரிசோதிக் கப்படும்.
“அந்த நாள் அதை வெளிப்படு த்தும்.”அதாவது, கடவுளுடைய நியாயத்தீர்ப்பில் மனித ஊழிய த்தின் உண்மையான மதிப்பு வெளிப்படும்.
கட்டியது நிலைத்தால் வெகுமதி.
ஒருவருடைய பணி நெருப்பின் சோதனையைத் தாங்கினால், அவர் வெகுமதி பெறுவார்.
கால்வின் இதை மனிதர்களிட மிருந்து கிடைக்கும் புகழாக அல்ல, கடவுளிடமிருந்து கிடை க்கும் கிருபையான வெகுமதி யாக பார்க்கிறார்.
இறுதியாக, 
பணி எரிந்தாலும் மனிதன் இரட் சிக்கப்படலாம்.ஆனால்,“அவனு டைய வேலை எரிந்துபோனால், அவன் நட்டத்தை அடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அப்படியிருந்தும் தீயினால் தப்பி னவனைப்போல இருப்பான்.”
கால்வினின் விளக்கத்தில், இங்கு மனிதனுடைய இரட்சிப்புக்கும் அவனுடைய ஊழியத்தின் தரத்திற்கும் வேறுபாடு காட்டப்படுகிறது.
ஒரு ஊழியக்காரன் தவறான அல்லது தரமற்ற முறையில் கட்டியிருக்கலாம். அவனுடைய பணி கடவுளுடைய சோதனை யில் நிலைக்காமல் போகலாம். அதனால் அவன் பெற்ற வெகும தியை இழக்கலாம். ஆனால் கிறிஸ்துவில் அவனுடைய இரட்சிப்பு உண்மையானதாக இருந்தால், அவன் இரட்சிக்கப்ப டுவான்.
“சபை கிறிஸ்துவுக்குச் சொந்த மானது; ஊழியர்கள் கடவுளு டைய கருவிகள்; வளர்ச்சியை அளிப்பவர் கடவுள்; ஆகையால் மனித ஊழியர்களைப் பற்றிப் பெருமைப்படாமல், கிறிஸ்து வின் அடித்தளத்தின் மீது உண்மையுடன் கட்ட வேண்டும்.”
 “யார் கட்டுகிறார் என்பதைக் காட்டிலும், எந்த அடித்தளத்தில் எவ்வாறு கட்டுகிறார் என்பதே முக்கியம்.”
3.நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.” — Feed them yourself. லூக்கா 9:10–17.
(This part of Sermon has been extracted from John Calvin's Commentary on a Harmony of the Evangelists.
அன்பர்களே! இயேசு பன்னிர ண்டு சீடர்களை நற்செய்தி அறிவிக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் அனுப்பியிரு ந்தார். அவர்கள் திரும்பி வந்து தாங்கள் செய்த ஊழியங்களை ப்பற்றி இயேசுவிடம்விளக்கினர். சீடர்கள் ஓய்வு எடுக்கவும், தனித் திருக்கவும் இயேசு அவர்களை பெத்சாய்தா நகருக்கு அருகில் உள்ள ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஊழியக்காரர்கள் தங்களுடைய பணிக்குப் பிறகு ஓய்வும் புதுப்பி ப்பும் பெற வேண்டும். ஆனால் அவர்களுடைய ஓய்வு மக்களின் தேவைகளைப் புறக்கணிப்ப தாக இருக்கக்கூடாது.
மக்கள் இயேசுவைப் பின்தொடர் ந்து வந்தபோது, அவர் அவர்க ளைத் தள்ளிவிடவில்லை.
“அவர்களை ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய அரசை பற்றி அவர்களுக்குப் போதித்து, சுகமி ல்லாதவர்களைச் சுகப்படுத்தி னார்.”
கால்வின் பார்வையில், இங்கு கிறிஸ்துவின் இரக்கமும் அன் பும் வெளிப்படுகின்றன.அவர் முதலில் மக்களின் ஆவிக்குரிய தேவையை சந்தித்தார். கடவு ளுடைய அரசை போதித்தார். பின்னர் அவர்களின் உடல் தேவையையும் கவனித்தார்.
சீடர்கள், மக்களை அனுப்பிவிட வேண்டும் என்று கூறினர்.
ஆனால் இயேசு:“நீங்களே அவர்களுக்கு உணவு கொடு ங்கள்.” என்று கூறினார். ஆனால் சீடர்களிடம் இருந்தது ஐந்து அப்பமும் இரண்டு மீனும் மட்டுமே.கால்வின் இதை சீடர்களின் விசுவாசப் பயிற்சி யாகக் காண்கிறார். அவர்களுடைய குறைவைக் காட்டி, தங்களுடைய சொந்த வளத்தை நம்பாமல் கிறிஸ்து வை நம்ப வேண்டும் என்பதை இயேசு அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
 ஐந்து அப்பமும் இரண்டு மீனும் 
மனித பார்வையில் அது போது மானதாக இல்லை. ஆனால் கிறிஸ்துவின் கையில் கொடுக் கப்பட்ட சிறிய வளம் போதுமா னதாகிறது.
நம்மிடம் இருப்பது சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதை கிறிஸ்துவின் கைகளில் ஒப்படைக்கும்போது, அவர் தமது சித்தத்திற்காக அதைப் பயன் படுத்த முடியும்.
இது “சிறியதை கொடுத்தால் கடவுள் எப்போதும் பொருளா தார ரீதியாகப் பெருக்குவார்” என்ற வாக்குறுதி அல்ல. மாறாக, கடவுளுடைய வல்லமை மனித வளத்தின் அளவால் கட்டுப்படுத் தப்படுவதில்லை என்பதே கருத்து.
ஐம்பது ஐம்பதாக உட்காரச் செய்யுங்கள்” — இயேசு கூட்டத் தை ஒழுங்காக அமரச் செய்தார்.
இதில் கடவுளுடைய செயல் குழப்பமானதல்ல; ஒழுங்கானது என்பதையும் பார்க்கலாம்.
சீடர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தனர்; பின்னர் கிறிஸ்து தமது வல்லமையால் தேவை யை நிறைவேற்றினார்.
அன்பர்களே மிக முக்கியமாக
நாம் கவனிக்க வேண்டியது
 இயேசு ஆசீர்வதித்து, உடைத்து, கொடுத்தார்.இங்கே நான்கு செயல்கள் முக்கிய மானவை:
எடுத்தார் → ஆசீர்வதித்தார் → உடைத்தார் → சீடர்களிடம் கொடுத்தார்.
பின்பு சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். இதனால் ஊழி யத்தின் ஒரு முக்கிய உண்மை வெளிப்படுகிறது:
கிறிஸ்துவிடமிருந்து பெற்றதை யே ஊழியக்காரன் மற்றவர்களு க்குவழங்குகிறான். ஊழியத்தின் ஆதாரம் ஊழியக்காரனின் திறமை அல்ல; கிறிஸ்துவின் கிருபை.
எல்லாரும் சாப்பிட்டு திருப்திய டைந்தார்கள் —
இது கடவுடைய முழு பராமரிப் பைக் காட்டுகிறது.அவர்கள் சிறிதளவு மட்டும் பெறவில்லை; “எல்லாரும் திருப்தியடைந் தார்கள்.”
மீதமிருந்த துண்டுகள் பன்னி ரண்டு கூடை நிறைந்தன.
இங்கே கிறிஸ்துவின் வல்லமை மட்டுமல்ல, அவருடைய மிகுதி யான பராமரிப்பும் வெளிப்படு கிறது.
இறுதியாக, அன்பர்களே! நம் ஆண்டவர் மக்களின் ஆவிக்கு ரிய தேவையை முதலில் கவனி க்கிறார்.ஊழியத்தின் வளம் மனிதனிடமிருந்து அல்ல, கிறிஸ்துவிடமிருந்து வருகிறது.
யார் ஊழியக்காரன்?
ஊழியக்காரன் என்பவன் கிறிஸ்துவிடமிருந்து பெற்று, மக்களுக்குக் கொடுப்பவன்.
நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பது இறுதி விடயம் அல்ல; நம்மிடம் இருப்பதை கிறிஸ்து வின் கைகளில் ஒப்படைக்கி றோமா என்பதே முக்கியம்.
4 தென்னிந்திய திருச்சபை (CSI) உருவான நாளில் நம் கடமைகள் என்ன?  What are our duties on the day the Church of South India was formed? "
 அன்பர்களே! 
தென்னிந்திய திருச்சபை (CSI) உருவான நாள் (செப்டம்பர் 27, 1947) என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும். பல்வேறு சபைப் பிரிவுகள் இணைந்து ஒரே திருச்சபையாக மாறிய இந்த நாளில், ஒரு விசுவாசியாக நம்மிடம் சில முக்கிய கடமைகள்எதிர்பார்க்கப் படுகின்றன. முதலில் நாம் ஒருமைப்பாட்டைக் காத்து ஒற்று மையை வளர்த்தல் வேண்டும். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் இணைந்து உருவானதே இந்த சபை. எனவே, சண்டைகள் மற்றும் பிரிவினைகளைத் தவிர்த்து, சபைக்குள் அன்பையும் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டும். மொழி, இனம்,சாதி கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து, கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும்.கடந்த பல ஆண்டுக ளாக இந்தத் திருச்சபையை வழிநடத்தி வரும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
பிரதம பேராயர், பேராயர்கள்,
ஆயர்கள் மற்றும் சபைப் பொறு ப்பாளர்கள் இறைவழியில் சபையை நடத்த நாம் இறை வேண்டல்  செய்ய வேண்டும்.
சபையின் முக்கிய நோக்கங்க ளில் ஒன்றான ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னே ற்றத்திற்காக உழைக்க வேண் டும்.மிக முக்கியமாக கிறிஸ்து வின் அன்பையும், சமாதானத் தின் செய்தியையும் நம்முடைய நற்செயல்களின் மூலமாகப் பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும்.ஒரு ஆயர் தன் சுய முயற்சி மூலம் வருடத்திற்கு
ஒரு பத்து பேரையாவது கிறித் துவின் மந்தையில் சேர்க்க வேண்டும்.ஒரு பேராயர் வருடத் திற்கு பத்து புதிய ஆலயங்களை
ஆலயம் இல்லாத ஊரில் கட்ட 
வேண்டும்.சபையின் எதிர்கா லமான இளைஞர்களுக்கும் பிள்ளைகளுக்கும் முறையான ஆன்மீக மற்றும் நற்பண்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
தென்னிந்திய திருச்சபை உருவானதன் நோக்கத்தையும் அதன் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
5,தென்னிந்திய திருச்சபை க்கு (CSI) எதிராக நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ள வழக்குகள்.Pending court cases against the Church of South India (CSI)."    
அன்பர்களே! மிக வருத்தமான
செயல் என்ன வெனில்,
தென்னிந்திய திருச்சபைக்கு (CSI) எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 
அதன் சொத்துக்களை நிர்வகிக் கும் CSI Trust Association (CSITA) ஆகியவற்றுக்கு எதிராக இந்தி யா முழுவதிலும் உள்ள பல் வேறு மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்க ணக்கான வெவ்வேறு வழக்கு கள் தொடரப்பட்டு வருகின்றன.
1. சொத்து மற்றும் நில மோசடி வழக்குகள்.
மதுரை சொத்து விற்பனை வழக்கு: மதுரை தல்லாகுளத்தில் ஆதரவற்ற பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 31 ஏக்கர் அரசு நிலத் தை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான புகாரில், சிபிஐ (CBI) விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2.ஆந்திரா நில விவகாரம்: ஆந்திரப் பிரதேசத்தின் அனந்த பூரில் போலிப் பத்திரங்கள் மூலம் 7.75 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை அங்கீகரிக்கப்படாத வகையில் விற்பனை செய்தது தொடர்பான குற்றவியல் வழக்குகளை அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் புத்துயிர் பெறச் செய்துள்ளது.
3.. நிதி முறைகேடு மற்றும் அமலாக்கத்துறை (ED) வழக்கு கள்.
கேரளா மருத்துவக் கல்லூரி மோசடி: கேரளாவில் உள்ள CSI மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணம் (Capitation fee) பெற்றதாகக் கூறப்படும் குற்றச் சாட்டின் பேரில், அமலாக்கத் துறை (ED) விசாரணை நடத்தி வருகிறது.
4. ROC விசாரணை: CSI டிரஸ்ட் அசோசியேஷனின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து நிறுவனங்களின் பதிவாளர் (ROC) புதிய விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
5. உட்பூசல்கள் மற்றும் தேர்தல் நிர்வாக வழக்குகள்மாடரேட்டர் தேர்தல் சர்ச்சை: 2020-ல் நடை பெற்ற பிரதம பேராயர்    மாடரேட்டர் தேர்தல் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், பிஷப்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான திருத்தங் களையும் முடக்கியுள்ளது.
6.நிர்வாக முடக்கம்: தற்போதைய தேர்தல் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரண மாக, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, அமைப்பின் அன்றாட முக்கிய முடிவுகளை எடுப்பதில் கடுமை யான கட்டுப்பாடுகளும், தற்காலிக நிர்வாகிகளின் தலை யீடுகளும் நீதிமன்ற மேற்பார் வையில் தொடர்கின்றன.
7 ரிட் அதிகார வரம்பு: மிக முக்கியமாக, தனியார் மத அமைப்பாக இருந்தாலும், CSI நடத்தும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பொதுக் கடமை யை ஆற்றுவதால், அவை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 226-ன் கீழ் உயர் நீதிமன்றத்தின் ரிட் (Writ) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு பேராயத்திலும் (Diocese) உள்ளூர் அளவில் சொத்துக்கள், பள்ளிகள் மற்றும் பேராலய நிர்வாகம் தொடர்பாக தனித் தனியாகப் பல சிவில் வழக்கு கள் (Civil suits) நிலுவையில் உள்ளதால், ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.  
எனவே, நம் ஆண்டவர் நீதியரசர் 
நம் தெ இ தி. வெகுவிரைவில் 
நீதியோடும், திருவிவலிய வழி காட்டுதலின்படி நடக்க ஆண்டவ ர் இந்த 80வது தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாளில் அருள்புரிவராக.
ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511.








1947, செப்டம்பர் 27, தெ.இ.தி அன்று ஒன்றிணந்த 14
 பேராயர்கள். இடம: சென்னை கத்திட்ரல், பேராலயம்.

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.