இறை மக்கள் ஞாயிறு, அனைத்து அங்கத்தினரும் அருட் பணியாளரே (299) Every Member a Minister. எண்ணிக்கை : 11: 24-30, திருத்தூதர் பணிகள் 6: 1-7, திருப்பாடல்கள் 92, யோவான்: 15:12-19.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"அனைத்து அங்கத்தினரும் அருட்பணியாளரே".
இறைமக்கள் ஞாயிறு என்றால் என்ன? Laity Sunday.
இறைமக்கள் ஞாயிறு" கிறித் தவத் திருச்சபைகளில், 'இறைமக்கள்' (Laity or People of God) என்பவர்கள் ஆயர்கள்,(Priests) , திருமுழுக்கு (Baptism) பெற்ற சாதாரணப் பொது நிலைக் விசுவாசிகளைக் குறிக் கும்.
கிறித்தவ விவிலிய அடிப்படை யிலும் திருச்சபை போதனைகளி ன்படியும், இறைமக்கள் (People of God) என்பது கடவுளால் தேர்ந் தெடுக்கப்பட்டு, அவரோடு உடன் படிக்கை செய்துகொண்ட மக்க ளைக் குறிக்கிறது.
பழைய ஏற்பாட்டின்படி, கடவுள் ஆபிரகாம் மற்றும் அவரது வழித் தோன்றல்களான இஸ்ரயேல் மக்களை தனது சொந்த மக்களா கத் தேர்ந்தெடுத்து அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண் டார்.
புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு, திருமுழுக்கு (Bapti sm) பெற்று, அவரது போதனைக ளைப் பின்பற்றும் அனைத்து கிறிஸ்தவர்களும் இறைமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இது இயேசு கிறிஸ்துவின் வழி யிலான புதிய உடன்படிக்கை.
இது இனம், மொழி, நாடு கடந்து உலகெங்கிலும் உள்ள விசுவா சிகளை உள்ளடக்கியது.
திருச்சபை (Church) என்பது வெறும் ஒரு நிறுவனம் அல்ல; அதுவே உலகெங்கும் பயணி க்கும் "இறைமக்கள் கூட்டம்" ஆகும்.சென்னை சி.எஸ்.ஐ. பேராயர் அறிவர் பால்பிரான் சிஸ், அவர்கள் " திருச்சபை தாய் என்றால்,கிறித்துவே அதன் தந்தை " என்ற அன்பின் உறவை வெளிப்படுத்துகிறார்.
அதன்படி,
கடவுளின் அன்பை ஏற்றுக் கொண்டு, அவருடைய கட்டளை களின்படி வாழ்ந்து, பிறருக்கு அன்பு காட்டும் ஒவ்வொரு விசுவாசியும் இறை மக்கள் ஆவர். இந்த இறை மக்களே திருச்சபையின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும், விரிவாக்கத்திற் கும், அருள் பணிக்கும் மிகப் பெரிய பங்களிப்பு அளிக்கும் இறை மக்கள் ஆவார் இவர்கள் இல்லையேல் திருச்சபை இல்லை.
அருட்பணியாளர் யார்?
அன்பர்களே! அருட்பணியாளர்
என்பவர்,“கிறிஸ்துவின் அன்பையும் நற்செய்தியை யும் மக்களிடையே வெளிப்படு த்தி, திருச்சபைக்காக அர்ப் பணிப்புடன் பணியாற்றும் அனைவரும்அருட்பணியாளர்.”ஆவார்.திருச்சபையில் ஊழியம் என்பது ஆயர், போதகர், அருட் பணியாளர் போன்ற நியமிக்கப் பட்ட பணியாளர்களுக்கு மட்டும் உரியது அல்ல. ஒவ்வொரு விசுவாசியும் தமக்குக் கொடுக் கப்பட்ட வரங்கள், திறமைகள், நேரம் ஆகியவற்றின் மூலம் கிறிஸ்துவின் பணியில் பங்கே ற்க அழைக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஊழியத்தி ற்கான பொறுப்பு உண்டு. திருச்சபை உறுப்பினர் என்பது வெறும் பெறுபவர் அல்ல; பங்கெடுப்பவர்.
1.ஆவியின் ஆளுமையே அருட்பணி. The personality of the Holy Spirit is Ministry. எண்ணிக் கை : 11: 24-30,
அன்பர்களே! இஸ்ரவேல் மக்கள் வனாந்தரப் பயணத்தின் போது இறைச்சி கேட்டுக் மோசேவிற்கு எதிராக போராடினார்கள்.மோசே யும் தனக்கு ஏற்பட்ட பெரும் சுமையைக் குறித்து கடவுளிடம் முறையிட்டார். மக்களின் சுமை யை மோசே தனித்துத் தாங்க முடியாது என்பதால், இஸ்ரவே லின் மூப்பர்களில் 70 பேரைச் சந்திப்புக் கூடாரத்திற்கு அழை த்து வருமாறு கடவுள் மோசே யிற்குக் கட்டளையிட்டார்.
மோசேயின் மீது இருந்த ஆவியில் கொஞ்சத்தை எடுத்து அந்த 70 மூப்பர்கள் மீது கொடுத் தார்; அவர்கள் ஆவியினால் ஏவப்பட்டுத் இறைவாக்குரைத் தார்கள். இச்சூழ்நிலையில்,
எல்தாத் (Eldad) மற்றும் மேதாத் ( Medad) சந்திப்புக் கூடாரத்திற்கு செல்லாமல், (எல்தாத்" என்பத ற்கு " "கடவுளின் நண்பன்" என்று பொருள். "மேதாத்" என்ப தற்கு "அன்பானவர்" என்று பொருள்.)
பாளயத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் இருவர் மீதும் ஆவி இறங்க அவர்களும் இறைவாக் குரைத்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்தும் படி யோசுவா கேட்டபோது, "கர்த்தருடைய ஜனங்கள் எல்லா ரும் இறைவாக்குரைத்தார்கள். கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள் எல்லாரும் மேல் இறங். கப்பண்ணினால் நலமாயிருக் குமே" என்று மோசே பெருந்தன் மையோடுகூறினார்.ஆவியின் பகிரிந்தளிப்பினால் மோசேக் குள்ளிருந்த ஆவியின் நிறைவு அல்லது வல்லமை குறைந்து விடவில்லை.
•இறையியளாளர் கால்வின், மூப்பர்களுக்கும் சமமான அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்குவதற்காக கடவுள் நடத் திய ஒரு செயலாகும்.
மூப்பர்கள் ஆவியைப் பெற்றவு டன் "இறைவாக்கு சொன்னார் கள், ஆனால் அதன்பின் அப்படிச் செய்யவில்லை". அவர்கள் நிரந் தர இறைவாக்கினராக மாற்றப் படவில்லை, மாறாக அவர்கள் கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை மக்கள் கண்டுகொள்ளும் பொருட்டு கடவுள் கொடுத்த தற்காலிக அடையாளமே அது என கால்வின் குறிப்பிடுகிறார்.
கடவுளுடைய ஆவி நிறுவன அமைப்புகளுக்கு அப்பாற் பட்டது.
அன்பர்களே! நாம் ஒரு முக்கி யமான விசயத்தை இங்குகவனி க்க வேண்டும்.
எல்தாதும் மேதாதும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு வராமல் பாளைய த்திலேயே தங்கிவிட்டனர். கால் வினின் கூற்றுப்படி, இவர்கள் ஒருவேளை அழைப்பைத் தாம தமாகப் பெற்றிருக்கலாம் அல்லது தங்களின் தகுதியின் மையைக் கருதி (தாழ்மையின் காரணமாக) பாளையத்திலேயே தங்கியிருக்கலாம். அவர்கள் கூடாரத்திற்கு வராவிட்டாலும், கடவுளுடைய ஆவி அவர்களைப் பாளையத்திற்குள்ளேயே தேடிச் சென்று கிரியை செய்தது. இதன் மூலம், கடவுளுடைய கிருபையும் ஆவியின் வல்லமை யும் மனிதர்களால் ஏற்படுத்தப் படும் எல்லைகளுக்கோ அல்லது குறிப்பிட்ட இடங்களு க்கோ (நிறுவன அமைப்புகளு க்கு) கட்டுப்பட்டது அல்ல. என்பதை கடவுள் நிரூபித்தார்.
யோசுவாவின் பொறாமை:
அன்பர்களே,எல்தாதும் மேதா தும் பாளையத்தில் தீர்க்கதரிச னம் சொல்வதை அறிந்து, யோசுவா அதைத் தடுக்க முற்ப டுகிறார். யோசுவா தீய எண்ணத் துடன் இதைச் செய்யவில்லை, மாறாக மோசேயின் தனித்துவ மான தலைமைத்துவ அதிகாரத் திற்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அதீத அக்கறையினாலும், தவறான பக்தியினாலுமே அவ்வாறு கூறினார் என்று கால்வின் கருதுகிறார்.
மோசே யோசுவாவை நோக்கி, "நீ எனக்காகப் பொறாமைப்ப டுகிறாயோ?" என்று கேட்கிறார். தன் மீதான புகழை விட கடவுளு டைய மகிமையே முக்கியம் என்று மோசே கருதினார்.
பெந்தெகொஸ்தே நாளின் முன்னோடி (Precursor to Pentecost): அன்பர்களே "கர்த்த ருடைய மக்கள் எல்லாரும் இறைவாக்கினர்களாக உருவெ டுக்க வேண்டும்" என்ற மோசே யின் வாஞ்சை, புதிய ஏற்பாட்டில் ஆவியானவர் எல்லார்மேலும் ஊற்றப்படும் பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதத்திற்கு ஒரு தெளிவான நிழலாட்டம் (முன்னோடி) என்று ஜான் கால்வின் தனது இறையியல் நிறுவனங்கள் (Institutes) நூலில் விவரிக்கிறார். பழைய ஏற்பாட் டில் ஆவியானவரின் கிரியை சில துளிகளாகத் தெளிக்கப்ப ட்டது, புதிய ஏற்பாட்டிலோ அது பெருமழையாக ஊற்றப்பட்டது.
எனவே,
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தைக் குவிக்கும் இடமல்ல, அது கடவுளின் பக்தி யோடு சுமக்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு என்பதை இப்பகுதி உணர்த்துவதாக கால்வின் முடிக்கிறார்.
பழைய ஏற்பாட்டில் மோசே தேர்வு செய்த 70 பேருக்கும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தேர்வு செய்த 70 சீடர்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடுகள்:
அன்பர்களே! வனாந்தரத்தில் இஸ்ரவேல் மக்களை வழிநடத் தும் பாரத்தையும், நியாயந்தீர்க் கும் பொறுப்பையும் மோசேயால் தனியாகச் சுமக்க முடியாத போது, அவனுக்குத் துணையாக இருக்க கடவுள் இந்த ஏற்பாட் டைச் செய்தார்.
புதிய ஏற்பாட்டில், (லூக்கா 10:1-17).இயேசு தேர்வு செய்த 70 பேர், "அறுப்பு மிகுதி, வேலை யாட்களோ குறைவு" என்று கூறி, தமக்கு முன்பாகச் சென்று நற்செய்தி பணிகளைச் செய்ய இயேசு இவர்களை நியமித்தார்.
இவர்கள், பன்னிரண்டு திருத் தூதர்களைத் தவிர, மற்ற சீடர்களிலிருந்து இந்த 70 பேரை (சில மொழிபெயர்ப்புகளில் 72 பேர்) இயேசு தெரிவு செய்தார்.
இயேசு இவர்களை இரண்டு இரண்டு பேராகத் தமக்கு முன்ன மே அனுப்பினார். இவர்களுக்கு விண்ணரசின் வருகைக்கும்,
நோயாளிகளைக் குணமாக்க வும், பிசாசுகளைத் துரத்தவும் அதிகாரம் அளிக்கப்பட்டது
2.ஏழைகளின் பொறுப்பாள ர்கள் அருட்பணியாளர்கள்.The care takers of the poor are the Ministers.திருத்தூதர் பணிகள் 6: 1-7.
அன்பர்களே!சீர்திருத்தக் கால இறையியலாளர் ஜான்கால்வின் (John Calvin), இந்தப் பகுதியை விளக்குகிறார்.எபிரேய மொழி பேசுவோருக்கும் கிரேக்க மொழி பேசுவோருக்கும் இடையே ஏற்ப ட்ட இந்த முறுமுறுப்பு, திட்டமிட்ட தீய நோக்கத்தால் உருவானது அல்ல, மாறாக சபை நிர்வாகக் குறைபாட்டால் ஏற்பட்டது என்று கால்வின் குறிப்பிடுகிறார்.
ஆரம்பகால திருச்சபையில் ஏழு உதவிப்பணியாளர்கள் (Deacons/திருத்தொண்டர்கள்) தேர்ந் தெடு க்கப்பட்ட நிகழ்வை விளக்கு கிறார்.
திருச்சபை வளர்ந்து பெருகும் போது, இத்தகைய எதிர்பாராத நிர்வாகத் தவறுகளைப் பயன் படுத்தி, விசுவாசிகளிடையே பிரிவினையையும் கசப்பையும் உண்டாக்க சாத்தான் எப்போ தும் முயல்கிறான் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது.
திருத்தூதர்கள் பந்தியில் பரிமா றுவதை (நிர்வாக மற்றும் ஏழை எளியோர் பராமரிப்புப் பணி களை) தட்டிக்கழித்தது அவர் களது பெருமையினால் அல்ல. "இறைவார்த்தை ஊழியம் என்பது ஒரு மனிதனின் முழு உழைப்பையும், நேரத்தையும் கோரக்கூடியது"
இறைவார்த்தை ஊழியமும், இறைவேண்டலும் தடைபடாமல் இருக்கவும், அதே நேரத்தில் ஏழைகளின் தேவைகள் புறக்க ணிக்கப்படாமல் இருக்கவும் இந்த வேலைப்பகிர்வு அவசிய மானது.(Division of Labour).
திருத்தொண்டர்கள் (Deacons) என்பவர்கள் சபையின் ஆன்மீக ப் போதகர்கள் அல்ல, மாறாக அவர்கள் "ஏழைகளின் பராமரி ப்பாளர்கள் மற்றும் சபையின் நிதிப் பொறுப்பாளர்கள்" என்ற சீர்திருத்தக் கொள்கையை கால்வின் உறுதிப்படுத்துகிறார்.
திருத்தூதர்கள் தன்னிச்சையாக யாரையும் நியமிக்காமல், சபை யின் பொதுவான சம்மதத்துடன் தகுதியானவர்களைத் தேர்ந் தெடுக்கச் செய்தனர். இது சர்வாதிகாரத்திற்கும் (Tyranny) எல்லையற்ற தன்னிச்சை சுதந் திரத்திற்கும் (Confused liberty) இடைப்பட்ட ஒரு முறையான சபை ஆட்சிமுறைக்கு (Presbyt erian/Reformed Church order) சிறந்த முன்மாதிரி என்கிறார் கால்வின்.
அடிப்படையில்,
முறையானதேர்தலாக கைகளை ஊன்றி இறைவேண்டல் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர், ஏழைகளுக்குச் செய்யும் இந்த நடைமுறை நிர்வாகச் சேவையும் கூட ஒரு சாதாரணமான வேலை அல்ல, அது "தூய ஆவியான வரால் செய்யப்படும் ஆன்மீக ஊழியம்" என்பதை திருச்சபை க்கு வெளிப்படுத்துகிறது.
இறுதியாக,
சபைப்பிரிவினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, தகுதியானவர்களி டம் பொறுப்புகள் ஒப்படைக்கப்ப ட்டதால், இறைவார்த்தை வேக மாகப் பரவியது. சடங்கு முறைகளில் ஊறிப்போயிருந்த யூதக் குருக்கள் பலரும் இந்த நற்செய்திக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்திற்குள் வந்தனர். எந்தவொரு உலக அதிகாரமும் இன்றி, தூய ஆவியின் வல்ல மையால் மட்டுமே இது சாத்திய மானது.
ஜான் கால்வினின் பார்வையில், திருச்சபையின் போதகர்கள் போதனை மற்றும் இறைவேண் டலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், ஏழைகள் மற்றும் நிர்வாகப் பணிகளை கவனிக்க தகுதி யான தனி அதிகாரிகள் (Deacons) நியமிக்கப்பட வேண் டும் என்பதையும் வலியுறுத்தும் ஒரு அடிப்படை சபை ஒழுங்கு முறை சட்டமாகும்.
3.அன்பாய் இருப்பவரே அருட்
பணியாளர்.யோவான்: 15:12-19.
அன்பர்களே! இயேசு "நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல" என்று கூறும்போது, தம்மையே ஒரு முன்மாதிரியா கக் காட்டுகிறார். கிறிஸ்து தமக்காக எதையும் எதிர்பார்க் காமல், முற்றிலும் பாவம் நிறை ந்த, தமக்கு விரோதமாக இருந்த மனிதர்களுக்காகத் தம்வாழ்வை கொடுத்தார். அதேபோன்ற தியா க மற்றும் சுயநலமற்ற அன்பை விசுவாசிகள் ஒருவருக்கொரு வர் காட்ட வேண்டும். நான் உங்க ளில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென் பதே என்னுடைய கற்பனையாயி ருக்கிறது..."அன்பே முதன்மை யான கட்டளை.நான் உங்களுக் குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்..."
கால்வினின் இறையியலின்படி, நாம் கீழ்ப்படிவதால் கிறிஸ்து நம்மை நேசிப்பதில்லை; மாறாக, அவருடைய அன்பின் விளைவா கவே நமக்குக் கீழ்ப்படியும் இருத யம் உண்டாகிறது. விசுவாசிகளி ன் கீழ்ப்படிதல் என்பது இரட்சிப் பிற்கான தகுதி அல்ல, அது கிறிஸ்துவோடு கொண்டுள்ள உண்மையான ஐக்கியத்தின் அடையாளம் (Fruit of Love).
கடவுளுடைய இறையாண்மை மற்றும் தெரிந்துகொள்ளுதல் என்பது,"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண் டேன்..."
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களுக்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்..."பகைக்கான காரணம்: விசுவாசிகள் உலகத் தால் பகைக்கப்படுவதற்கு அவர்கள் செய்யும் தவறுகள் காரணமல்ல; அவர்கள் உலக த்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத தே காரணம். கடவுள் அவர்களை உலகத்திலிருந்து பிரித்தெடுத் துத் தம்முடையவர்களாக மாற் றியதால், உலகம் அவர்களைத் தங்களுக்கு அந்நியர்களாகப் பார்க்கிறது.
இறுதியாக,
உலகம் ஏன் கிறிஸ்துவின் உபதேசங்களையும் விசுவாசிக ளையும் எதிர்க்கிறது என்பதற்கு, கால்வின் "கடவுளைப் பற்றிய அறியாமை மற்றும் குருட்டுத் தனம்" (Blind ignorance) தான் காரணம் என்கிறார். அவர்கள் இரட்சிப்பின் வழியையே எதிர் க்கும் அளவுக்குப் பாவத்தில் இருண்டு போயிருக்கிறார்கள்.
உலகம் நம்மைப் பகைக்கும் போது, அது விசுவாசிகளுக்கு ஒரு பெரிய ஆறுதலாக மாற வேண்டும். ஏனெனில், அந்தப் பகை நாம் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் (கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்) என்பதற்கான சான்றாகும். நம் போதகராகிய கிறிஸ்துவே உலகத்தின் பகையைச் சந்தித்தி ருக்கும்போது, அவருடைய சீடர்களாகிய நாமும் அதைச் சந்திப்பது இயல்பானதே.ஆக கடவுளிடத்தில் அன்பாய் இருத் தல் என்பது மற்றவர்களிடமும்
அன்பாய் இருப்பதே.
நற்செய்தியை அறிவிப்பதும், இறைப்பணியாற்றுவதும் ஒரு சிலருடைய கடமை மட்டுமல்ல; திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருடைய கூட்டுப் பொறுப்பாகும்.திருமுழுக்கு (Baptism) பெற்ற அனைத்துக் கிறித்தவர்களும் இறைவனின் பிள்ளைகள் மற்றும் திருச்சபை யின் சமமான அங்கத்தினர்கள் ஆவர்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511.
Comments
Post a Comment